Blog

  • உலக உணவு தினத்தை முன்னிட்டு, உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்தார் !!

    ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனத்தின் சார்பில்,  உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவளிக்கும் அற்புதமான திட்டம், பல வருடங்களாக நடந்து வருகிறது.

    இந்தியா நாடு முன்னேறிய நாடு என்ற பெருமிதத்தை பெற்றிருந்தாலும், இன்றும் உணவில்லாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் பெருமளவில் உள்ளது. உலக பட்டினி குறியீட்டில் இன்றும் கவலையளிக்கும் நிலையில் தான் உள்ளது. இதனை மாற்றும் முனைப்பில் திரு ஆலன் அவர்கள் இந்த ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் தொண்டு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார்.

    கடந்த ஐந்து வருடங்களாக ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம், உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது.

    இந்நிறுவனத்தின் சார்பில் உலக உணவு தினத்தன்று வருடா வருடம் ஒரு நிகழ்வு நடத்தப்படுகின்றது. இந்நிகழ்வில் 5000 க்கு பேருக்கு  பிரியாணி உணவு சமைத்து காஞ்சிபுரம், செங்கல் பட்டு, சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில், 150க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவன செயல்பாட்டாளர்கள் வாகனங்கள் மூலம் நேரில் சென்று உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவளித்து வருகிறார்கள்.  

    ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நடத்திய இந்த வருட நிகழ்வினில்,  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் ஆதி, நடிகர் சந்தோஷ் பிரதாப், நடிகர் மஹத், நடிகர் மைம் கோபி, நடிகர் கண்ணா ரவி, முத்துக்குமார் ஆகியோருடன்  கலந்துகொண்டு, இந்நிகழ்வை துவக்கி வைத்தார்.

    மேலும் இந்நிகழ்வினில் ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் சார்பில் ஹோப் எனும் புதிய வெப்சைட் துவக்கப்பட்டது. இதன் மூலம் ஏழை எளியோருக்கு மாதாமாதம் மளிகை சாமான்கள் வழங்கப்படவுள்ளது. இந்த வெப்சைட்டில் மூலம், மாதம் வெறும் 35 ரூபாய்க்கு சப்ஸ்க்ரைப்சன் செய்யலாம், அதன் மூலம் பலருக்கு உதவலாம்.

    இந்நிகழ்வினில்..,

     நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது…

    ஆலன் இதை 6 வருடமாக செய்து வருகிறார். நாம் நன்றாக இருக்கும் போது, பலர் நம்மைத் தேடி வருவார்கள். ஆனால் நாம் கஷ்டத்தில் இருக்கும் போது யாரெல்லாம் வருவார்கள் என்றால் அது கேள்விக்குறிதான். ஒரு 5000 பேருக்கு பிரியாணி போட வேண்டாம் என்றால் அதற்கு எவ்வளவு செலவாகும் என தெரியும், ஆனால் பெரிய பெரிய ஆட்களிடம் அதற்காக உதவி கேட்டுப் போனபோது, யாரும் உதவ முன்வரவில்லை. இதற்காக உண்மையாக ஸ்பான்ஸர் தந்த நல்ல உள்ளங்களுக்குப் பெரிய நன்றி. உதவி செய்யும் நண்பர்கள் தான் உலகில் மிக முக்கியம், அவர்களை விட்டுவிடாதீர்கள். நான் ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷனில் ஒரு உறுப்பினர் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை. அதை நான் கர்வமாக சொல்லிக்கொள்வேன். இந்த முயற்சிக்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள். இந்த முயற்சி தொடர்ந்து நடக்க வேண்டும். இந்த மிகப்பெரிய செயல்பாட்டில் அடுத்ததாக ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் சார்பில் ஹோப் என ஒரு வெப்சைட்  துவங்கியுள்ளோம், இந்த ஆப்  உங்கள் மொபைலில் வைத்து மாதம் 35 ரூபாய் சப்ஸ்க்ரைப்சன் செய்யலாம், அதன் மூலம் பலர் பசியாறுவார்கள். நாம் அனைவரும் நம்மால் முடிந்த ஆதரவைத் தர வேண்டும். நான் என்றும் ஆலனுக்குத் துணையாக இருப்பேன் அனைவருக்கும் நன்றி.    

    நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது..,

    உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் உடைய  முயற்சி மிகச்சிறப்பானது. நம்மில் பலர்  உதவ முன்வந்தாலும் அதைச் சரியாக முன்னெடுத்துச் செய்ய எந்த ஒரு இயக்கமும் இங்கு சரியாக இல்லை.  அந்த வகையில் ஆலனின் இந்த ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் தொடர்ந்து பல வருடங்களாக, பலருக்குப் பயனளிக்கும் வகையில் இந்த உணவளிக்கும் திட்டத்தை, செயல்படுத்தி வருகிறார்கள். அது மட்டுமில்லாமல் அதை அடுத்தகட்டத்திற்கும் எடுத்து சென்று வருகிறார்கள். நான் உதவி செய்ய நினைக்கும் போதெல்லாம் ஆலன் அதற்குப் பெருந்துணையாக இருந்தார். ஆலனின் இந்த முயற்சிக்கு நானும் ஒரு சிறு துரும்பாக இருப்பது எனக்குப் பெரு மகிழ்ச்சி. இந்த திட்டம் இன்னும் பெரிய அளவில் வளர நாம் அனைவரும் உதவ வேண்டும். அனைவருக்கும் நன்றி.

    நடிகர் மஹத் பேசியதாவது.., 

    ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம் பற்றி  எனக்கு என் நண்பர் மூலம் தான் தெரியும். ஆலன் இதைப் பல வருடங்களாகச் செய்து வருகிறார் என்பது நண்பர் மூலம் தெரிய வந்தது. நான் அவரிடம் போனில் கூட பேசியது இல்லை, அவர் கேட்டவுடன் உதவி செய்தேன். என்னை நகரம் முழுக்க கூட்டிப்போய் எவ்வளவு பேர் உணவில்லாமல் தவிக்கிறார்கள் என்று காட்டியபோது, எனக்கு மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நம்மால் முடிந்த 35 ரூபாய், ஒருவருக்கு உணவளிக்கும். இதற்கு நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் நாம் செய்ய வேண்டும். இதை முன்னெடுத்து நடத்தி வரும் ஆலனின் ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷனுக்கு வாழ்த்துக்கள். இதற்கு நான் எப்போதும் துணையாக இருப்பேன் நன்றி.

    ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனர் ஆலன் பேசியதாவது.., 

    நண்பர்கள் சிரத்தையடுத்து இங்கு வந்து வாழ்த்தியதற்கு என் நன்றிகள். இந்த முயற்சி தொடர்ந்து நடப்பதற்கு என் நண்பர்கள் இந்த பிரபலங்கள் தான் காரணம். ஐஸ்வர்யா ராஜேஷ் என் நெருங்கிய நண்பர். இதை முதன் முதலில் நடத்திய போது, ஏன் என் முகத்தை அம்பாஸிடராக போட்டு, இன்னும் பெரிய அளவில் எடுத்துச்செல்லக்கூடாது எனக் கேட்டார். அது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதன் பின் இந்த முயற்சி இன்னும் பெரிதாக மாறியது. மஹத் அவர் வீட்டுக்கருகிலேயே இப்படியானவர்கள் இருப்பதைக் கேட்டு அதிர்ச்சியானர். உடனே உதவ முன் வந்தார். இதற்கு உறுதுணையாக இருக்கும் என் நண்பன் சமீருக்கு நன்றிகள். இது நடக்க முக்கிய காரணமாக இருக்கும் வாலண்டியர்ஸ்க்கு என் நன்றிகள்.  ஹோப் எனும் புது வெப்சைட் துவங்கியுள்ளோம், இதில் மாதம் நீங்கள் ஒரு முறை 35 ரூபாய் தந்தால் போதும், நீங்களும் இதில் பலருக்குப் பசியாற்றுவீர்கள். அனைவரும் இந்த ஆப் சப்ஸ்க்ரைப்சன் செய்து ஆதரவு தர வேண்டும். நன்றி.

    நடிகர் மைம் கோபி பேசியதாவது..,

    நம் நாட்டில் உணவில்லாமல் பலர் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவும், உணவளிக்கும் ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் உடைய இந்த முயற்சி மிகப்பெரியது. இதை முன்னெடுப்பதற்கு உறுதுணையாக இருக்கும் ஆலன்,  தோழி ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை மனதார வாழ்த்துகிறேன். இந்நிகழ்விற்கு என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி. இம்முயற்சிக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருப்போம். நன்றி.

    நடிகர் ஆதி பேசியதாவது..,

    என்னை அழைத்ததற்கு முதலில் மிக்க நன்றி. சகோதரி ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்னை அழைத்தார். அவருக்காக என்றும் அழைக்க மாட்டார். வேறு ஒருவருக்கு உதவவே அழைப்பார்.  இந்நிகழ்வு குறித்து இப்போது தான் தெரிந்து கொண்டேன். மொய் விருந்தை 6 வருடங்களாக நடத்தி வருகிறார்கள். நம் நாட்டில் 18 மில்லியன் மக்கள் இன்றும் பசியால் வாடுகிறார்கள் என்பது சோகம். எளியோருக்கு உணவளிக்கும் இவர்களின் முயற்சி பெரும் பாராட்டுக்குரியது. இந்த நிகழ்வில் பங்கு கொண்டதைப் பெருமையாக நினைக்கிறேன். அனைவருக்கும் நன்றி.

  • டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

    ion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

    Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படத்தின் படப்பிடிப்பு, முழுமையாக நிறைவடைந்தது.

    “டூரிஸ்ட் ஃபேமிலி” படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் இந்த புதிய படம் அறிவிக்கப்பட்ட போதே, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் ஒரே கட்டமாக மின்னல் வேகத்தில், வெறும் 35 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களைக் கவரும், அருமையான காதல் கதையாக உருவாகும் இப்படத்தை, “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய, மதன் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

    இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக, மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரம், இளைஞர்களின் கனவுக்கன்னியாகக் கொண்டாடப்படும் நாயகி அனஸ்வரா ராஜன் நடிக்கிறார்.

    தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தைத் தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.

    இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளைச் செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்கிறார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றுகிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகளைத் துவக்கவுள்ளது படக்குழு. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் பற்றிய அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

  • Actor Soori, Director Vijay Milton Launch the Title and First Look of “MAHASENHA” on Social Media

    Marudham Productions Announces Its Next Grand Venture — A Jungle Action–Thriller Rooted in Nature, Spirituality, and Forest Mythology

    After the success of its 2023 crime thriller Raakadhaan, Marudham Productions is all set to take audiences on a spectacular new journey with its next ambitious film titled “MAHASENHA.”

    The title and first look of the film were launched on social media by Actor Soori, Director Vijay Milton, instantly capturing the attention of cinema lovers and generating widespread excitement online. The first look poster, with its striking forest imagery and spiritual undertones, hints at a mystical and emotionally charged adventure.

    About the Film

    Written and directed by Dhinesh Kalaiselvan, MAHASENHA blends Nature, Spirituality, and Mythology into an enthralling Jungle Action–Thriller. The film explores the eternal conflict between divine natural forces and human greed, told through a story set deep within the forests of Gudalur, Wayanad, Kollimalai and Ooty.

    The film is designed as a visually rich cinematic experience, combining real forest landscapes, stunning CGI artistry, and a deeply emotional human narrative. With 90% of the film shot in authentic forest locations, MAHASENHA promises breathtaking visuals, a grand festival climax sequence, and a musical landscape that merges tribal rhythms with devotional melodies.

    Adding to its appeal, the film features four original songs composed by A. Praveen kumar and S.N. Arunagiri, with vocals by Vaikom Vijayalakshmi, V.M. Mahalingam, V.V. Prasanna, and Priyanka NK. The combination of sound, visuals, and storytelling aims to transport audiences into a world where spirituality and adventure meet.

    Cast

    The film features Vemal, Srushti Dange, Yogi Babu, Mahima Gupta, John Vijay, Kabir Duhan Singh, Alfred Jose, Ilakkiya, and Vijay Siyon in pivotal roles, along with Sena the Elephant, who plays a significant and symbolic part in the story.

    Technical Crew

    Story, Screenplay & Direction: Dhinesh Kalaiselvan

    Producer: Dr. Selvaraju

    Associate Producer: Rani Henry Samuel

    Music: A. Praveen kumar, S.N. Arunagiri

    Background Score: Uday Prakash (UPR)

    Cinematography: D.R. Manas Babu

    Editing: Nagooran Ramasandiran

    Stunts: Ram kumar

    Choreography: Dastha, Ameer

    Lyrics: Dinesh Kalaichelvan

    Art Direction: V.S. Dinesh Kumar

    Production Management: Rani, Ramesh, Dinesh Velmurugan

    DI: John Sriram

    VFX: i-Mate Media

    Audiography: Balaji, Raju

    Posters: Dinesh Ashok

    Public Relations: Rekha

    Director’s Note

    Speaking about the project, Director Dhinesh Kalaiselvan said:

    Mahasenha is not just a film about the jungle — it’s a story about faith, power, and the harmony between man and nature. I wanted to explore how greed disturbs this divine balance, and how spirituality restores it. Every frame of this film reflects our respect for nature and the belief that divinity exists in every living being. The forest itself is a character — alive, emotional, and powerful.

    About the Production

    With MAHASENHA, Marudham Productions continues its commitment to delivering high-quality, content-driven cinema that resonates with audiences. Following the success of Raakadhaan, the banner now steps into a new cinematic universe filled with spiritual depth, thrilling adventure, and emotional storytelling.

    MAHASENHA promises to be a captivating visual and spiritual experience — an unforgettable journey that carries the fragrance of the mountains, the rhythm of the forest, and the pulse of belief.

  • நடிகர் சூரி, இயக்குனர் விஜய் மில்டன் இணைந்து வெளியிட்ட “மகாசேனா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்;

    மருதம் புரொடக்ஷன்ஸ் புதிய படைப்பு இயற்கை, ஆன்மீகம் மற்றும் காடு புராணத்தை மையமாகக் கொண்ட அதிரடி திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு;

    2023ஆம் ஆண்டில் வெளியான க்ரைம் திரில்லர் “இராக்கதன்” படத்தின் வெற்றிக்கு பின், மருதம் புரொடக்ஷன்ஸ் தனது அடுத்த மிகப்பெரிய முயற்சியாக “மகாசேனா” என்ற புதிய படத்தை அறிவித்துள்ளது.

    இந்த படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக்கும் நடிகர் சூரி மற்றும் இயக்குனர் விஜய் மில்டன் ஆகியோரால் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன. காடு மற்றும் ஆன்மீக நிழல்களில் உருவான இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    படம் பற்றி,

    இயக்குனர் தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்கும் மகாசேனா படம், இயற்கை, ஆன்மீகம் மற்றும் புராணக் கூறுகளை இணைக்கும் ஒரு காடு சார்ந்த ஆக்சன்-திரில்லர் ஆகும்.

    மனித பேராசைக்கும், தெய்வீக இயற்கை சக்திகளுக்கும் இடையிலான நிலையான மோதலை, குடலூர், வயநாடு, கொல்லிமலை, ஊட்டி ஆகிய இடங்களில் கதையாக அமைக்கப்பட்டுள்ளது.

    படத்தின் 90% பகுதி உண்மையான காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட காட்சியமைப்புடன் கூடிய இந்த படம், திருவிழா காட்சிகளை மையமாகக் கொண்ட கிளைமாக்ஸ், பழங்குடி இசையையும் பக்தி இசையையும் இணைக்கும் புது இசை அனுபவத்தையும் தருகிறது.

    படத்திற்காக இசையமைத்துள்ளவர்கள் ஏ. பிரவீன் குமார் மற்றும் எஸ்.என். அருணகிரி.
    பாடகர்கள் — வைகோம் விஜயலட்சுமி, வி.எம். மஹாலிங்கம், வி.வி. பிரசன்னா, பிரியங்கா என்.கே.
    படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு பாடலும் காடின் உயிரோட்டத்தையும், ஆன்மீக பிணைப்பையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.

    இந்த படத்தில் விமல், ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு, மஹிமா குப்தா, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், ஆல்ஃப்ரெட் ஜோஸ், இளக்கியா, விஜய் சியோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    மேலும், படத்தின் முக்கியமும் குறியீடாகவும் யானை சேனா முக்கியமான வேடத்தில் நடிக்கிறது.

    இயக்குனர் தினேஷ் கலைசெல்வன் கூறுகையில்,

    “மஹாசேனஹா ஒரு காடு பற்றிய கதை மட்டும் அல்ல — அது மனிதன், இயற்கை, தெய்வீகம் ஆகியவற்றின் இடையிலான நம்பிக்கையையும் ஒற்றுமையையும் பற்றி பேசும் படம். பேராசை இந்த தெய்வீக சமநிலையை குலைக்கிறது. ஆன்மீகம் அதைக் காப்பாற்றுகிறது. ஒவ்வொரு ஃப்ரேமும் இயற்கைக்கான மரியாதையையும், உயிரின் தெய்வீகத்தையும் பிரதிபலிக்கிறது. இந்தக் காடு தானே ஒரு கதாபாத்திரமாக உயிருடன், உணர்வுடன், ஆற்றலுடன் உள்ளது.

    மருதம் புரொடக்ஷன்ஸ் தனது முந்தய படைப்பு “இராக்கதன்” போலவே, மகாசேனாவிலும் வலிமையான, காட்சியளவில் பிரம்மாண்டமான ஒரு திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறது. ஆன்மீகம், அதிரடி, உணர்ச்சி என இந்த மூன்றையும் இணைத்து உருவாகும் மகாசேனா படம், மலைகளின் மணமும், காடுகளின் தாளமும், நம்பிக்கையின் துடிப்பும் கொண்ட ஒரு மறக்கமுடியாத திரைப்பட அனுபவமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறோம்.

    தொழில்நுட்ப குழு விவரம்

    கதை, திரைக்கதை & இயக்கம்: தினேஷ் கலைசெல்வன்
    தயாரிப்பு: டாக்டர் செல்வராஜு
    இணை தயாரிப்பு : ராணி ஹென்றி சாமுவேல்
    இசை: ஏ. பிரவீன் குமார், எஸ்.என். அருணகிரி
    பின்னணி இசை: உதய பிரகாஷ் (UPR)
    ஒளிப்பதிவு: D.R. மனஸ் பாபு
    எடிட்டிங்: நாகூரன் ராமசந்திரன்
    ஸ்டண்ட்: ராம் குமார்
    நடன அமைப்பு: தஸ்தா, அமீர்
    பாடல் : தினேஷ் கலைசெல்வன்
    கலை இயக்கம் : V.S. தினேஷ் குமார்
    தயாரிப்பு மேலாண்மை: ராணி, ரமேஷ், தினேஷ் வெல்முருகன்
    DI: ஜான் ஸ்ரீராம்
    VFX: i-Mate மீடியா
    ஆடியோகிராபி: பாலாஜி, ராஜு
    போஸ்டர் வடிவமைப்பு: தினேஷ் அஷோக்
    P.R.O. : ரேகா

  • ஆண்டனி வர்கீஸ் அதிரடி மாஸ் லுக்கில் மிரட்டும்  “காட்டாளன்”  பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

    க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஷெரீப் முஹம்மது தயாரிக்கும் மாபெரும் ஆக்‌ஷன் திரில்லர் படமான “காட்டாளன்” படத்தின், அதிரடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னணி நடிகர் ஆண்டனி வர்கீஸுன் மிரட்டல் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.  எரியும் கண்கள், சிதறிய சிவப்பு முடி, வாயில் புகைபிடிக்கும் சிகார் — இப்படியாக ஆண்டனியின் அதிரடி லுக், ஒரு கடும் ஆற்றல் கொண்ட மாஸ் அவதாரமாக காட்சி தருகிறது. ரத்தம் பூசப்பட்ட முகம், கைகள் ஆகியவை படத்தின் அதிரடி ஆக்‌ஷன் களத்தை வெளிப்படுத்தி, இதுவரை கண்டிராத மிரட்டலான நிறைந்த தோற்றத்தை ரசிகர்களுக்கு வழங்கி விருந்தளிக்கிறது.

    பான்-இந்தியா ஹிட் ஆக்‌ஷன் திரில்லர் “மார்கோ”விற்கு பின், “காட்டாளன்” படம் க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஷெரீப் முஹம்மது தயாரிக்கும் மற்றொரு மிகப்பெரும் முயற்சியாக அமைந்துள்ளது.

    புதிய இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகும் “காட்டாளன்”, மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது. பான்-இந்தியா பிரம்மாண்டம் என்ற கான்செப்டில் உருவாகும் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் தயாராகிறது. தாய்லாந்தில் நடந்த அதிரடி காட்சிகள் படப்பிடிப்பின் போது, யானை சம்பந்தமான காட்சியில் ஆண்டனி காயம் அடைந்தார். உலகப் புகழ் பெற்ற “Ong-Bak” படத்தொடரின் ஆக்‌ஷன் இயக்குநர் கேச்சா காம்பக்டீ மற்றும் அவரது நிபுணர் குழுவே இந்த ஆக்‌ஷன் காட்சிகளை அமைத்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில், “Ong-Bak” படத்தில் புகழ்பெற்ற யானை பொங் இதிலும் நடித்துள்ளது.

    படத்திற்கான இசையை “காந்தாரா”, “மகாராஜா” போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்த B. அஜனீஷ் லோக்நாத் வழங்கியுள்ளார். இதில் தெலுங்கு நடிகர் சுனில் (Pushpa, Jailer 2), கபீர் துகான் சிங் (Marco), ராப்பர் பேபி ஜீன், தெலுங்கு நடிகர் ராஜ் திரண்டாசு (Pushpa), பாலிவுட் நடிகர் பார்த்த் திவாரி (Kill movie fame) ஆகியோர் நடிக்கின்றனர். மலையாளத் திரையுலகிலிருந்து ஜகதீஷ், சித்திக், மற்றும் VLogger-பாடகி ஹனான் ஷா இணைந்துள்ளனர்.

    திரைக்கதை ஜோபி வர்கீஸ், பால் ஜார்ஜ், மற்றும் ஜெரோ ஜேக்கப் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்; உரையாடலை உன்னி ஆர் எழுதியுள்ளார். படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்படவுள்ளது.

    தொழில்நுட்பக் குழு:

    நிர்வாக தயாரிப்பாளர் – ஜுமான்ஷெரீஃப்
    ஒளிப்பதிவு – ரெனாடிவ்
    இசை – B. அஜனீஷ் லோக்நாத்
    எடிட்டிங் – ஷமீர் முஹம்மது
    ஸ்டண்ட் – கேச்சா காம்பக்டீ, ஆக்‌ஷன் சந்தோஷ்
    புரடக்‌ஷன் டிசைன் – சுனில் தாஸ்
    கிரியேட்டிவ் புரடியூசர் – தீபில் தேவ்
    புரடக்‌ஷன் கண்ட்ரோலர் – தீபக் பரமேஸ்வரன்
    ஆடியோகிராஃபி – ராஜகிருஷ்ணன் M.R.
    சவுண்ட் டிசைன் – கிஷன், சப்தா ரெக்கார்ட்ஸ்
    உடை வடிவமைப்பு – தன்யா பாலகிருஷ்ணன்
    மேக்கப் – ரோனக்ஸ் சேவியர்
    பாடல்கள் – சுஹைல் கோயா
    ஸ்டில்ஸ் – அமல் C. சுதர்
    நடன அமைப்பு – ஷரீஃப்
    விஎஃப்எக்ஸ் – 3 டோர்ஸ்
    பிஆர் & மார்க்கெட்டிங் – வைசாக் C.வடக்குவீடு, ஜினு அனில் குமார்
    பிஆர்ஓ – சதீஷ் குமார் S2 Media, ஸ்ரீ வெங்கடேஷ் P
    டிஜிட்டல் மார்க்கெட்டிங் – ஆகாஷ்
    டைட்டில் டிசைன் – ஐடென்ட் லாப்ஸ்
    பப்ளிசிட்டி டிசைன் – யெல்லோ டூத்

    English Press Release

    Antony Varghese Pepe Ignites the Screen in a Fiery Mass Avatar; “Kattalan” First Look Out Now!

    The first look poster of the grand action thriller Kattalan, produced by *Shareef Muhammed under the banner of *Cubes Entertainments*, is out now. The poster unveils the stunning transformation of *Antony Varghese Pepe in the lead role, showcasing him in a never-seen-before rugged avatar. With flaming eyes, messy red hair, and a cigar burning between his lips, Anthony’s look radiates raw intensity and sets the tone for a thrilling mass entertainer. The blood-stained face and hands further highlight the film’s gritty action essence, portraying Antony in a fierce new light unlike anything seen before.

    Following the pan-Indian blockbuster action thriller Marco, Kaattalan marks yet another massive production venture by Cubes Entertainments and Shareef Muhammed.

    Directed by debutant Paul George, Kaattalan was launched with one of the grandest pooja ceremonies in Malayalam cinema. Conceptualized as a pan-Indian spectacle, the film is being mounted on a massive scale. Recently, during the filming of an action sequence in Thailand, the actor sustained an injury in a stunt involving an elephant. The high-voltage action sequences in Thailand are choreographed by Kecha Khamphakdee, the world-renowned action director behind the Ong-Bak series, along with his expert team. Interestingly, Kaattalan also features Pong, the elephant that gained fame through the Ong-Bak films.

    The film’s music is composed by B. Ajaneesh Loknath, the celebrated Kannada music director who rose to fame with South Indian blockbusters Kantara and Maharaja. Kaattalan features an ensemble star cast including Telugu actor Sunil (Pushpa, Jailer 2 fame), Kabir Duhan Singh (who impressed in Marco*), rapper Baby Jean, Telugu actor Raj Thirandasu(Pushpa Fame), Bollywood actor Parth Tiwari(Kill movie fame), and from Malayalam cinema — Jagadish, Siddique, and vlogger-singer Hanan Shah.

    The screenplay is jointly written by Joby Varghese, Paul George, and Jero Jacob, with dialogues by Unni R. Kaattalan will release in Malayalam, Tamil, Telugu, Kannada, and Hindi languages.


    Crew Details:
    Executive Producer – Juman Sherif
    Cinematography – Renadive
    Music – B. Ajaneesh Loknath
    Editing – Shameer Muhammed
    Stunts – Kecha Khamphakdee, Action Santosh
    Production Design – Sunil Das
    Creative Producer – Deepil Dev
    Production Controller – Deepak Parameswaran
    Audiography – Rajakrishnan M.R.
    Sound Design – Kishan, Saptha Records
    Costume Design – Dhanya Balakrishnan
    Makeup – Ronax Xavier
    Lyrics – Suhail Koya
    Still Photography – Amal C. Sudhar
    Choreography – Shareef
    VFX – 3 Doors
    PR & Marketing – Vaisakh C Vadakkeveedu, Jinu AnilKumar
    Tamil PRO – Sathish Kumar S2, Sri Venkatesh P
    Tamil Digital Marketing – Akash
    Title Design – Ident Labs
    Publicity Design – Yellow Tooth

  • உயில் (Will) திரை விமர்சனம்

    “வில்” ஒரு அழகிய நீதிமன்ற நாடகமாக உருவாகியுள்ளது. மனித, உறவு, நீதியும், விதியும் கலந்து ஒரு குடும்பத்தின் ” உயில் (Will) ” அந்த குடும்பத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை தெளிவாக திரை கதையாக இயக்குனர் கொடுத்துள்ளார்.

    சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக இருக்கிறார் சோனியா அகர்வால். பல வழக்குகளை விசாரித்து வரும் சோனியா அகர்வால், இறந்த ஒருவரின் அடுக்குமாடி குடியிருப்புக்கு சொந்தம் கொண்டாடி ஒரு பெண் வருகிறார். அந்த பெண் மீது சோனியா அகர்வாலுக்கு சந்தேகம் எழுகிறது. இதை விசாரிக்க போலீஸ் அதிகாரியான விக்ராந்திடம் சோனியா அகர்வால் நியமிக்கிறார்.

    போலீஸ் அதிகாரி விக்ரம் அந்த பெண் யார் என்பதை தேடி செல்கிறார் விக்ராந்த். இந்த தேடுதலில் அந்த பெண் பொய் சொல்லி சொத்தை அபகரிக்க உருவாக்கப்பட்ட பெண் என்பதை தெரிந்துக் கொள்கிறார் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு எதனால் அந்த பெண்ணுக்கு உயில் எழுதினார்?


    இறுதியில் சொத்துக்கு சொந்தமான பெண்ணை விக்ராந்த் கண்டுபிடித்தாரா? யார் அந்த பெண்? சொத்தை அபகரிக்க நினைக்கும் கும்பல் யார்? என்பதே வில் படத்தின் மீதிக்கதை.

  • மருதம் திரை விமர்சனம்

    வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே கிராமத்தில் விவசாயம் செய்து தனது குடும்பத்திற்கு தேவையை பூர்த்தி செய்து  மனைவி, ஒரு பிள்ளை என அளவான குடும்பம், அமைதியான வாழ்க்கை என மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் விவசாயி விதார்த். விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் விதார்த் அப்பா வாங்காத கடனுக்காக அவரது நிலத்தை வங்கி ஒன்று ஏலம் விட்டு விடுகிறது. விசயம் அறிந்து வங்கியில் முறையிடும் விதார்த்துக்கு, அவரது தந்தையின் பெயரில் நெல் அறுவடை இயந்திரம் வங்கி கடனில் வாங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.  வாய்ப்பில்லை என்பதில் உறுதியாக இருக்கும் விதார்த், இதில் ஏதோ மோசடி இருக்கிறது, என்பதை உணர்கிறார்.
     
    வழக்கறிஞரின் உதவியுடன் வங்கியில் நடந்த மோசடியை கோர்ட்டில் முறையிட்டு பின்னணியை கண்டறிந்து, நிலத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபடும் விதார்த் நிலத்தை மீட்டாரா ?  இல்லையா ? என்பதை விவசாயிகளின் வாழ்க்கை முறையில் ஏற்படும் பிரச்சனையை திரைக்கதையாக திரையில் விழிப்புணர் ஏற்படுத்தி உள்ளார் இயக்குனர்.

  • இறுதி முயற்சி திரை விமர்சனம்

    நாயகனாக  ரஞ்சித், துணிக்கடை நடத்த கடன் வாங்குகிறார் எதிர்பாராத விதமாக கடன் ஏற்பட நிம்மதி இழந்து தவிக்கும் குடும்ப தலைவன் திரைக்கதைக்கு உயிர் கொடுத்து நடித்திருக்கிறார். ஒரு பக்கம் கடனை அடைக்க பணம் புரட்ட முயற்சிப்பது, மறுபக்கம் குடும்பத்தின் நிலை எண்ணி வருந்துவது என்று காட்சி காட்சி குடும்பத்தின் அவல நிலையை தனது நடிப்பின் மூலம் திரையில் அனைவரின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளார் குடும்பத் தலைவனாக ரஞ்சித்.

    ரஞ்சித்தின் மனைவியாக நடித்திருக்கும் மெஹாலி மீனாட்சி கணவன் நிலை மற்றும் சூழல் அறிந்து நடக்கும் மனைவியாக எதார்த்தமாக நடித்து திரையில் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார்

    நாயகன் ரஞ்சித், தான் வாங்கிய கடன் தொகையை விட அதிகமாக வட்டி தொகை கட்டியும், கோடிக்கணக்கில் பணம் கேட்டு கந்துவட்டி ரவுடிகளால் மிரட்டப்படுவதோடு, அவரது குடும்பத்தை வீட்டுக்காவலில் வைத்து, கடனை வசூலிக்க அவர்களை பலவழிகளில் ரவுடிகள் தொல்லை கொடுக்கின்றனர். கடன் பிரச்சனையை சமாளிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் ரஞ்சித்துக்கு எதுவும் கைகொடுக்கவில்லை. இதற்கிடையே, சென்னையில் தொடர் கொலைகள் செய்யும் சைக்கோ கொலையாளி ஒருவர், போலீசிடம் இருந்து தப்பி ரஞ்சித்தின் வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் பதுங்கி விடுகிறார்.
    தனது இறுதி முயற்சியில் நாயகன் வெற்றி பெற்றாரா?
    தன் கடன் தொகையை நாயகன் எவ்வாறு எதிர் கொண்டார்?
    இது போன்ற கேள்விக்கு பதில் இறுதி முயற்சி திரைக்கதை .

  • பிள்ளைகளால் நிராகரிக்கப்படுகிறார்களா பெற்றோர்கள் – மனம் திறந்த வைரமுத்து

    ஜெய்ஸ்ரீ ஓம் சக்தி ஹோம் கேர் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தை வைரமுத்து திறந்து வைத்து வாழ்த்தும்போது பேசியதாவது.

    ஜெய்ஸ்ரீ ஓம் சக்தி ஹோம் கேர் என்ற நிறுவனம்,காலத்தின் அன்றாட தேவை. இதை நிறுவி இருக்கிற நிர்வாக இயக்குனர் எழிலரசு அவர்கள் காலத்தின் கட்டாயத்தை அறிந்தவர். இன்றைக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி பணிக்கு செல்வதினால் இல்லத்தை கவனிக்கவும், பிள்ளைகளை பொறுப்பேற்றுக் கொள்ளவும், முதியவர்களை பேணவும் ஆளில்லாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. மேல் நாடுகளில் ஆட்கள் இல்லாமல் ரோபோக்களை பயன்படுத்தக்கூடிய வாழ்க்கை வந்து கொண்டிருக்கிறது. நம்மூரில் நல்ல பணியாளர்கள் தொண்டு செய்கிறவர்கள் நமக்கு கிடைக்கிறார்கள்.எனவே உங்கள் இல்லத்துக்கு தேவையான பணியாளர்கள், சமையல் கலைஞர்கள் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்கிற தொண்டாளர்கள் எல்லோரையுமே உங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறது இந்த நிறுவனம். இது போன்ற நிறுவனத்தின் சேவை இல்லாமல் இந்த சமூகம் இயங்காது. இந்த நிறுவனம் தினந்தோறும் ஒவ்வொரு வீட்டுக்கும் தேவைப்படுகிறது. நிறுவனம் வளர வேண்டும்.வாழ வேண்டும்.உங்கள் தொண்டு தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை காலம் அவர்களை அந்த கட்டாயத்திற்கு தள்ளுகிறது. தன்னைப் பார்த்துக் கொள்ளவும் தன் பணிகளை பார்த்துக் கொள்ளவும் தன் நிறுவனத்தை பார்த்துக் கொள்ளவும் மனிதர்கள் நேரமில்லாமல் தவிக்கிற போது தாய் தந்தையர்களும் பல இடங்களில் கைவிடப்படுகிறார்கள். சமூகம் அந்த நெருக்கடிக்கு தள்ளப்பட்டு விட்டது. அவர்களைப் பார்த்துக் கொள்வதும் இது போன்ற நிறுவனத்தின் தேவை. மகன் செய்ய வேண்டியதையும் மகள் செய்ய வேண்டியதையும் இதுபோன்ற நிறுவனங்கள் செய்கிறது வாழ்த்துக்கள் என்று பேசினார்.
    ஓய்வு பெற்ற டிஜிபி R.சேகர் IPS இவ்விழாவிற்கு முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினர்களாக
    திரைப்பட இயக்குனர்,நடிகர் இ.வி.கணேஷ்பாபு,
    திரைப்பட இயக்குனர் சாட்டை அன்பழகன், கவிஞர் சிவராஜ், இசையமைப்பாளர் ரமேஷ்ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

    நிறுவனத்தின் சென்னை அலுவலக இயக்குனர் கவிஞர் இளங்கதிர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

  • வேடுவன்’ Z5 இணையத் தொடர் விமர்சனம்

    நடிகர்கள் : கண்ணா ரவி, சஞ்சீவ் வெங்கட், ஷ்ரவனிதா ஸ்ரீகாந்த், வினுஷா தேவி, ரேகா நாயர், லாவண்யா
    இசை : விபின் பாஸ்கர்
    ஒளிப்பதிவு : ஸ்ரீனிவாசன் தேவராஜ்
    இயக்கம் : பவன் குமார்
    தயாரிப்பு : ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் – சாகர் பெண்டெலா
    மக்கள் தொடர்பாளர் : சதீஷ் (AIM)

    இயக்குனர் பவன் குமார் எழுதி இயக்கியிருக்கும் “வேடுவன்” வித்தியாசமான இணையத் தொடர் மூலம் புதுவிதமான “காதல், ஆக்‌ஷன் , சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் அனைவரும் ரசிகம்படி Z5 இணையத் தொடராக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பவன் குமார். “வேடுவன்” Z5 இணையத் தொடர் குல் இயக்குனர் திரைப்படம் எடுக்க தொடர் தோல்வி படம் கொடுத்த நடிகர் இடம் கதை சொல்கிறார் கதைக்குள் நடிக்கும் நடிகர் என்ற கருவை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு எபிசோட் முடியும் போதும், அடுத்தது என்ன நடக்கும் ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையிலான சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் தொடரை கொடுத்திருக்கும் இயக்குநர் பவன் குமார், பிரபல நடிகரான கண்ணா ரவி தொடர் தோல்வி படங்களை கொடுத்த அவரிடம் இயக்குனர் கதை சொல்லு கதை பிடித்து போக உண்மை சம்பவ கதையை தான் நடிக்கும் கதாபாத்திரங்களில் அதீத ஈடுபாடு காட்டி நடிக்க கதைப்படி, கண்ணா ரவி ரகசிய போலீஸாக பயணித்து முன்னாள் ரவுடி ஒருவரை என்கவுண்டர் செய்ய வேண்டும். அதற்கான முயற்சியில் கண்ணா ரவி ஈடுபடும் போது, அவர் என்கவுண்டர் செய்ய உள்ள சஞ்சீவ், தனது முன்னாள் காதலி வினுஷா தேவியின் கணவர் என்பது தெரிய வருகிறது. அதே சமயம், சஞ்சீவ் ஒரு காலத்தில் ரவுடியாக இருந்தாலும், தற்போது அனைத்தையும் விட்டுவிட்டு ஊர் மக்களுக்கு நல்லது செய்யும் மனிதராக வலம் வருவதையும் கண்ணா ரவி அறிந்துக் கொள்கிறார்.ஆனால், தனது மேலதிகாரி தனக்கு அளித்த பணியை செய்து முடிப்பதில் உறுதியாக இருக்கும் கண்ணா ரவி,பிரபல ரவுடியை எதனால் என்கவுண்டர் செய்தார்? சஞ்சீவை என்கவுண்டர் செய்தாரா ? , சினிமா கதையாக இருந்தாலும், இந்த சம்பவம் கண்ணா ரவியை எந்த வகையில் பாதித்தது? அதனால் என்ன நடந்தது ? கேள்விக்கு விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் பதிலே இந்த ‘வேடுவன்’.‘வேடுவன்’ இணையத் தொடர் விமர்சனம்