

கதாநாயகன் ரஜினி கிஷன் மற்றும் கதாநாயகி திவிகா இருவரும் வீட்டுக்கு தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்கின்றனர். திவிகாவை எப்படியாவது திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிடுகிறார் அவரது மாமாவான கூல் சுரேஷ். இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்துக்கொள்வதை தெரிந்த கூல் சுரேஷ் தடுக்க முயற்சிக்கிறார். ஆனால், முனீஷ்காந்த் மற்றும் நண்பர்களின் உதவியுடன் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.
திரைப்படத்தின் இடைவேளை
பிறகு தொடங்கும் படம் ரஜினி கிஷன் திவிகாவின் கழுத்தில் கட்டியிருக்கும் தாலியில் பேய் மறைந்து இருப்பது தெரிய வருகிறது.
பேய் இருக்கும் தாலி எப்படி இவர்கள் கையில் சிக்கியது..? திவிகாவை விட்டு பேய் விரட்டியடித்தார்களா? என்பது நகைச்சுவையுடன் திரையில் ரசிக்க வைக்கும் திரைப்படமாக ரஜினி கேங் திரை படத்தின் மீதிக்கதை..
ரஜினிகாந்த் நகைச்சுவை திரைப்படமாக மொட்டை ராஜேந்திரன், முனீஷ்காந்த், கல்கி உள்ளிட்டோர் படத்திற்கு நகைச்சுவையுடன் தனது நடிப்பின் மூலம் வளம் சேர்த்துள்ளனர் .