பிராரம்பா 2026′ நிகழ்வில் இந்தியாவின் புதிய ஆற்றல் தளமாகத் தனது 4680 பாரத் செல் – ன் விரிவாக்கத்தை அறிவிக்கும் ஓலா எலக்ட்ரிக்
4680 பாரத் செல் தளத்தை போக்குவரத்து மற்றும் குடியிருப்பு வீடுகளுக்கான ஆற்றல் சேமிப்பிற்கும் அப்பால் விரிவுபடுத்துவதாக அறிவிப்பு – வணிக நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் (புத்தொழில்) நிறுவனங்களுக்கு 4680 பாரத் செல்கள் மற்றும் 1.5kWh 4680 பாரத் செல் பேட்டரி பேக்குகளின் விற்பனையைத் தொடங்கியுள்ளது. 4680 பாரத் செல்களால் ஆற்றல் பெறும் ஓலா சக்தி, இந்தியாவின் முதல் வீட்டு உபயோக BESS (பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு) சாதனமாகும். ஓலா நிறுவனத்தால் உள்நாட்டிலேயே முழுமையாக வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இதன் விற்பனை தொடங்கப்பட்டிருக்கிறது. ரோட்ஸ்டர் X+ (9.1kWh) டெலிவரி துவக்கம் – 4680 பாரத் செல்லால் இயங்கும் இது, 500 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. S1 Pro+ 5.2kWh வாகனங்களின் டெலிவரி அதிகரிப்பு – 4680 பாரத் செல்லால் இயங்கும் இந்த வாகனத்தின் விநியோகம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு, ஜனவரி 14, 2026: ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், இன்று ‘பிராரம்பா 2026’ (Prarambh 2026) நிகழ்வில் தனது 4680 பாரத் செல் தளத்தின் விரிவாக்கத்தை பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது. இந்த 4680 பாரத் செல் தளம் மூலம், வணிகங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இப்போது 4680 பாரத் செல்களையோ அல்லது 1.5kWh 4680 பாரத் செல் பேட்டரி பேக்குகளையோ நேரடியாக வாங்கலாம். இவற்றை வாகனங்கள், மனித உருவம் கொண்ட ரோபோக்கள், ட்ரோன்கள் மற்றும் கையடக்க மருத்துவ உபகரணங்கள் போன்ற பல்வேறு உபயோகங்களுக்குப் பயன்படுத்தலாம். இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட புதிய ஆற்றல் சேமிப்புத் தீர்வுகளைக் கொண்டு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் வணிகங்களும் புத்தாக்க செயல்பாடுகளில் ஈடுபடவும் மற்றும் விரைவாக தங்களது செயற்பரப்பை விரிவுபடுத்தி வளர்ச்சி காணவும் இந்த அறிவிப்பின் மூலம் ஓலா வழிவகை செய்கிறது.
மேலும், தனது வீட்டு உபயோக பேட்டரி ஆற்றல் சேமிப்பு சாதனமான (BESS) ‘ஓலா சக்தி’ இப்போது விற்பனைக்குக் கிடைப்பதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. ‘ஓலா சக்தி’ 6kW/9.1kWh மாடலின் விநியோகம் ஜனவரி 2026 இறுதியிலும், ‘ஓலா சக்தி’ 3kW/5.2kWh மாடலின் விநியோகம் பிப்ரவரி 2026 நடுப்பகுதியிலும் தொடங்கும். இதுதவிர, 4680 பாரத் செல்லால் இயங்கும் தனது முதன்மை மோட்டார் சைக்கிளான ரோட்ஸ்டர் X+ 9.1kWh (Roadster X+) டெலிவரியையும் இந்நிறுவனம் தொடங்கியுள்ளது; இது, ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ வரை செல்லும் திறனுள்ளது. அத்துடன், S1 Pro+ 5.2kWh வாகனத்தின் விநியோகத்தையும் இந்தியா முழுவதும் ஓலா நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது.
4680 பாரத் செல், இந்த தயாரிப்புகளின் மைய அம்சமாக திகழ்கிறது. ஓலா நிறுவனத்தால், சுயமாக அதன் தொழிலகத்திலேயே உருவாக்கப்பட்ட நிறுவனத்தின் ஆற்றல் செயல்தளமாகும். இது இப்போது நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் மற்றும் ‘ஓலா சக்தி’ ஆகிய இரண்டிற்கும் ஆற்றல் அளிக்கிறது – அதாவது ‘ஒரு செல், ஒரு செயல்தளம், இந்தியாவிற்காக உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்புத் தொகுப்பு’ (one cell, one platform, one portfolio). நவீன இந்திய வீடுகள், விவசாயப் பண்ணைகள் மற்றும் வணிகங்களுக்காக வடிவமைக்கப்பட்ட, எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு ஆதார வளமாக ‘ஓலா சக்தி’ திகழ்கிறது. ஆற்றல் ஆதாரத்தை அணுகுவது, கட்டுப்படுத்துவது மற்றும் நுகர்வது ஆகிய செயல்பாடுகளில் இந்திய மக்களுக்கு ஒரு அடிப்படையான மாற்றத்தை வழங்கும் ஒரு நவீன வளர்ச்சியை ஓலா சக்தி பிரதிபலிக்கிறது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறியதாவது: “4680 பாரத் செல் என்பது எங்களின் நிறுவனத்திலேயே உருவாக்கப்பட்ட ஆற்றல் மற்றும் போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பின் மைய அம்சமாகும். நுகர்வோர் வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோகத்திற்கான மின்ஆற்றல் என்பதையும் கடந்ததாக இந்த தளத்தை நாங்கள் இப்போது விரிவுபடுத்தி வருகிறோம். 4680 பாரத் செல் தளத்தை வணிகங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்வதன் மூலம், மனித உருவம் கொண்ட ரோபோக்கள் மற்றும் ட்ரோன்கள் முதல் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் கையடக்க மருத்துவ இயந்திரங்கள் வரை பலதரப்பட்ட பயன்பாடுகளுக்கு நாங்கள் வழிவகுத்திருக்கிறோம். வணிக நிறுவனங்கள் 4680 பாரத் செல்லை நேரடியாக வாங்கலாம் அல்லது எங்களின் 1.5kWh 4680 பாரத் செல் பேட்டரி பேக்கைப் பயன்படுத்தி தங்கள் தயாரிப்புகளை விரைவாக உருவாக்கலாம் மற்றும் விரிவுபடுத்தலாம். போக்குவரத்து, ஆற்றல் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்கு உதவும் ஒரே செல் மற்றும் அளவை உயர்த்தக்கூடிய ஒரே தளத்தை அறிமுகம் செய்திருப்பதன் மூலம் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட எதிர்காலத்திற்கு ஏற்ற ஆற்றல் அடித்தளத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம்,” என்றார்.
‘ஓலா சக்தி’ (Ola Shakti) இப்போது இரண்டு அளவீடுகளில் கிடைக்கிறது. 3kW/5.2kWh மாடல் ₹1,49,999 என்ற விலையிலும், 6kW/9.1kWh மாடல் ₹2,49,999 என்ற விலையிலும் கிடைக்கிறது. இந்த சாதன அமைப்பு ஏர் கண்டிஷனர்கள், ஃப்ரிட்ஜ்கள், இண்டக்ஷன் குக்கர்கள், விவசாய பம்புகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை இயக்கும் ஆற்றலை வழங்குகிறது. இது விரைவாக சார்ஜ் ஆகும் திறன் கொண்டது மற்றும் முழுமையான சார்ஜில் 1.5 மணிநேரம் வரை பேக்கப் ஆற்றலை வழங்கக்கூடியது. இத்தயாரிப்பை ஓலா எலக்ட்ரிக் இணையதளம் மற்றும் ஓலா எலக்ட்ரிக் ஸ்டோர்களில் வாங்கலாம். 9.1kWh மாடலின் விநியோகம் ஜனவரி 2026 இறுதியிலும், 5.2kWh மாடலின் விநியோகம் பிப்ரவரி 2026 நடுப்பகுதியிலும் தொடங்கும்.
₹1,89,999 விலையில் கிடைக்கும் ரோட்ஸ்டர் X+ 9.1kWh (Roadster X+), 4680 பாரத் செல்லுடன் கூடிய 9.1kWh பேட்டரி மற்றும் 11kW மோட்டாரைக் கொண்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ வரை தூரம் வரை செல்லும்; மற்றும் மணிக்கு 125 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. மேலும், இது வெறும் 2.7 வினாடிகளில் 0-40 கி.மீ வேகத்தை எட்டுகிறது.
₹1,90,338 விலையில் கிடைக்கும் S1 Pro+ 5.2kWh, 4680 பாரத் செல்லுடன் கூடிய 5.2kWh பேட்டரி மற்றும் 13kW மோட்டாரைக் கொண்டுள்ளது. S1 Pro+ ஒரு முறை சார்ஜ் செய்தால் 320 கி.மீ (IDC range) தூரம் வரை செல்லும் மற்றும் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் செல்லும். இது வெறும் 2.1 வினாடிகளில் 0-40 கி.மீ வேகத்தை எட்டுகிறது.
இந்திய சினிமாவில் சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் பிரம்மாண்டமான திரைப்படம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்கள் ஒன்றிணையும் இந்த கனவு கூட்டணி, ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான திரையனுபவத்தை வழங்கும் என பெரும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
பவர்ஃபுல் வீடியோவுடன் இந்தப் பிரம்மாண்டமான திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் ( Mythri Movie Makers) நிறுவனம் பன்னி வாஸ் ( Bunny Vas ) உடன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம், அறிவிப்பு வெளியான தருணத்திலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, இப்படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தப் பிரம்மாண்ட முயற்சிக்கு தலைமையேற்கும் முன்னணி தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி ( Naveen Yerneni ) மற்றும் ரவி சங்கர் ஆகியோருடன் இணைந்து, பன்னி வாஸ் (Bunny Vas) இணைத் தயாரிப்பாளராகவும், நட்டி, சாண்டி, ஸ்வாதி ஆகியோரும் தயாரிப்பு குழுவில் இணைந்துள்ளனர்.
அறிவிப்பு வீடியோ வெளியானதிலிருந்து, படத்தின் பிரம்மாண்டம் மற்றும் கதையின் தன்மை குறித்து ரசிகர்கள் மத்தியில் தீவிரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
தனித்துவமான ஸ்டைல், மின்னல் வேக நடனங்கள், மாஸ் ஆக்ஷன் மற்றும் வலுவான திரை நடிப்பு என பான்-இந்தியா ஸ்டார்டம் கொண்ட அல்லு அர்ஜுன், தனித்துவமான கதை சொல்லல் மற்றும் மாறுபட்ட மாடர்ன் மேக்கிங் மூலம் கமெர்ஷியல் சினிமாவை மறுவரையறை செய்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் — இந்த கூட்டணி தான் இப்படத்தின் மிகப்பெரிய பலம். மேலும், ராக் ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என்பதும் எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது.
AA23 (தற்காலிக தலைப்பு) என அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 2026ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜின் வேகமான, மாறுபட்ட இயக்கத்தில், அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் இதுவரை ரசிகர்கள் காணாத ஒரு முற்றிலும் புதிய, அதிரடி தோற்றத்தில் (இதுவரை காணாத வேடத்தில்) நடிக்கவுள்ளதாக கூறப்படுவதால், இது சமீப காலத்தில் மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்பட நிகழ்வாக உருவெடுத்துள்ளது.
Icon Star Allu Arjun x Lokesh Kanagaraj: A Mammoth Project by Mythri Movie Makers
The monumental project featuring Icon Star Allu Arjun in an epic collaboration with blockbuster filmmaker Lokesh Kanagaraj was announced today. This highly anticipated project brings together two of the most celebrated names in Indian cinema, promising a spectacular experience.
The project was announced with a powerful video content and it raises hype to the next level on this project backed by the prestigious Mythri Movie Makers in association with BV works. It has already captured the imagination of fans nationwide.
The project is spearheaded by ace producers Naveen Yerneni and Ravi Shankar, with producer Bunny Vas joining as co-producer along with Nutty, Sandy, and Swathi. The official announcement video took social media by storm, with discussions about the scale and tone of this ambitious venture.
Allu Arjun, a phenomenon known for his unparalleled style, electrifying screen presence, and pan-India stardom with Lokesh Kanagaraj, a director celebrated for redefining commercial cinema with his gritty narratives and high-impact filmmaking. Along with them, the rockstar Anirudh joined the team.
With sensational composer Anirudh Ravichandran scoring the music and the film scheduled to commence shooting in August 2026, the anticipation continues to soar. Tentatively titled AA23, the film is expected to present Allu Arjun in a never-seen-before avatar under Lokesh Kanagaraj’s dynamic direction, making it one of the most awaited cinematic events in recent times.
தயாரிப்பு: ஸ்டூடியோ கீரின் இயக்கம்: நலன் குமரசாமி நடிப்பு: கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிர்த்தி ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத் ஒளிப்பதிவு: ஜார்ஜ் இசை: சந்தோஷ் நாராயணன் வெளியான தேதி: ஜனவரி 14, 2026 நேரம்: 2 மணி 09 நிமிடங்கள் ரேட்டிங்: 3.5 / 5
ராஜ்கிரண், தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர் எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரை நேரில் சென்று பார்க்க முடியாது என்ற காரணத்தால் தான் ஊரில் உள்ள திரையரங்கில் எம்ஜிஆர் படத்தை நண்பர்களுடன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது திரையரங்க உரிமையாளர்கள் மூலமாக மக்கள் திலகம் எம்ஜிஆர் இறந்த செய்தி ராஜ்கிரனுக்கு தெரிய வர சோகத்தில் திரையரங்கு வாசலில் அமர்ந்திருக்கும் பொழுது அவருக்கு எம்ஜிஆர் இறந்த அதே நேரத்தில் அவருக்கு ஆண் பேரக்குழந்தை பிறக்கிறது அதனைத் தொடர்ந்து அந்த குழந்தை எம்ஜிஆரின் மறுபிறப்பு என்று ராஜ்கிரண் நேர்மையான வழியில் வளர்த்து வருகிறார் ராஜ்கிரண் நடிகர் கார்த்திக்கு வா வாத்தியார் படத்தின் ராமு என்ற பெயர் வைத்து சமுதாயத்தில் எம்ஜிஆர் போன்ற நேர்மையான மனிதராக வளர்த்து கார்த்தி போலீஸ் துறையில் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார் பின்பு சமுதாயத்தில் கெட்ட மனிதர்களுடன் சேர்ந்து நம்பியாரை பார்த்து ராமு என்கிற கார்த்திக் நண்பர் ரசிகராக மாறி சமுதாயத்துக்கு எதிரான செயல்களை செய்து வருகிறார் ராமு ..
இன்ஸ்பெக்டர் கார்த்தி அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் “மஞ்சள்முகம்” என்ற ஹாக்கர் கும்பல் பிடித்தால் நல்ல பணம் கிடைக்கும் என்று நினைத்து, கார்த்தி அந்த கும்பலை பிடிக்க முயற்சி செய்கிறார். அதே நேரத்தில், கார்த்தியின் உண்மை முகம் ராஜ்கிரணுக்கு தெரிய வருகிறது.
எம்ஜிஆர் ரசிகரான ராஜ்கிரண் கனவை கார்த்தி நிறைவேற்றினார்? இன்ஸ்பெக்டர் கார்த்தி நம்பியார் ரசிகராக காரணம் என்ன? ராமு உடலில் எம்ஜிஆரின் ஆவி நுழைந்ததின் காரணம் என்ன? மக்கள் திலகம் எம்ஜிஆரின் ஆவி எவ்வாறு மக்களை காப்பாற்றுகிறது? இது போன்ற கேள்விக்கு பதில் வா வாத்தியார் திரை
வா வாத்தியார் திரைப்படத்திலிருந்து வில்லனாக சத்யராஜ் எம்ஜிஆர் ரசிகனாக ராஜ்கிரன், எம்ஜிஆர் ரசிகராக ஆனந்தராஜ், கீர்த்தி செட்டி ஆகியோர் தங்களது நடிப்பினை சிறையில் ரசிக்க வைத்துள்ளனர்.
திரைப்படத்திற்கு பக்கபலமாக ஒளிப்பதிவு மற்றும் இசை திரைக்கதையுடன் திரையில் காண்பவரை ரசிக்க வைத்துள்ளது.
உலகளாவிய திரைப்பட தளமான Letterboxd தளத்தின் டாப் டென்னில் இடம்பிடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் !!
சர்வதேச திரைப்பட விமர்சன தளமான Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய Highest Rated Comedy Films of 2025 தரவரிசைப் பட்டியலில், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் Top 10 பட்டியலில் 6-ஆம் இடத்தை பிடித்துள்ளது. உலகளாவிய அளவில் வெளியாகியுள்ள இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ் திரைப்படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரும் சர்வதேச அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
Letterboxd என்பது உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் பயன்படுத்தும் முன்னணி திரைப்பட விமர்சன தளமாகும். பயனர்களின் மதிப்பீடுகள், விமர்சனங்கள் மற்றும் பார்வை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வெளியிடும் இந்த தளம், சர்வதேச அளவில் பெரும் நம்பகத்தன்மை பெற்றுள்ளது. அந்த வகையில், காமெடி எண்டர்டெயினர் பிரிவில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பெற்றுள்ள உயர்ந்த இடம், உலக ரசிகர்களிடையே இப்படம் ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.
இலங்கை மக்களின் வலியை அவர்களின் வாழ்வினை, குடும்பத்தோடு அனைவரும் ரசிக்கும் வகையில் காமெடி–கமர்ஷியல் கலவையுடன் சொல்லியிருப்பதே ‘டூரிஸ்ட் ஃபேமிலி’யின் பெரிய பலமாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். வலுவான கதை அமைப்பு, எளிமையான ஆனால் தாக்கமுள்ள திரைக்கதை, மனிதநேய உணர்வுகள் ஆகியவை பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்தின் அசத்தலான இயக்கம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. Letterboxd வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டின் டாப் டென் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய அறிமுக இயக்குநர் என்பதும், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மூலம் அபிஷன் ஜீவிந்த் பெற்றுள்ள சர்வதேச அங்கீகாரத்தை பெருமைகொள்ள வைக்கிறது.
2025 ஆம் ஆண்டில் வெளியான முக்கியமான தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, வரும் காலங்களில் தேசிய மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களில் மேலும் பல விருதுகளை வெல்லும் என்ற நம்பிக்கையை திரை ஆர்வலர்களிடையே உருவாக்கியுள்ளது. குறிப்பாக இயக்குநர் அபிஷன் ஜீவிந்திற்கு குவியும் பாராட்டுகள், அவரை எதிர்கால தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக அடையாளப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவுக்கு காமெடி எண்டர்டெயினர் வகையில் கிடைத்த இந்த சர்வதேச அங்கீகாரம், ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணமாக அமைந்துள்ளது.
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் ஜப்பானில் ஜனவரி 16 அன்று ‘புஷ்பா குன்ரின்’ என்ற பெயரில் வெளியாகிறது.
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘புஷ்பா 2: தி ரூல்’ தற்போது ஜப்பானிலும் வெளியாக தயாராக உள்ளது. இந்திய பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த இந்த படம் இந்திய ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டமாக மாறியது. படத்தின் தொடக்கத்தில் புஷ்பாவின் அறிமுக சண்டைக்காட்சி ஜப்பானில் படமாக்கப்பட்டது மட்டுமல்லாது, அதில் அல்லு அர்ஜுன் ஜப்பானிய மொழியிலும் சரளமாக வசனம் பேசும்படியும் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
ஜனவரி 16ஆம் தேதி ஜப்பானில் படம் வெளியாகவுள்ள நிலையில், குடும்பத்துடன் டோக்கியோ சென்றுள்ள நடிகர் அல்லு அர்ஜூன் தனது ஆக்ஷன் எண்டர்டெயினர் படத்தை புரமோட் செய்து வருகிறார். டோக்கியோ நகரத்தின் அழகிய ஸ்கைலைன் இடம்பெற்ற புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் அல்லு அர்ஜூன்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் உடன் இணைந்து, இந்தப் படத்தை ஜப்பானில் ’புஷ்பா குன்ரின்’ என்ற பெயரில் கீக் பிக்சர்ஸ் மற்றும் சோசிகு நிறுவனங்கள் வெளியிடுகின்றன. சுமார் 250 திரையரங்குகளில் இந்த படம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்திய சினிமாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களுக்கு ஜப்பான் ரசிகர்கள் ஏற்கனவே காட்டி வரும் பேராதரவை கருத்தில் கொண்டு, இந்தப் படமும் அங்கு பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.
சுகுமார் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜப்பான் தியேட்டர்களில் ’புஷ்பா குன்ரின்’ என்ற பெயரில் ஜனவரி 15, 2026 அன்று படம் ப்ரீமியர் ஆகிறது. போலீஸ் அதிகாரியாக ஃபஹத் ஃபாசில் நடித்திருக்க, நாயகியாக ராஷ்மிகா மந்தானா நடித்துள்ளார். இந்தப் படத்தை நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ளனர்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”.
இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக உலகமெங்கும் ஜனவரி 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில்
கலை இயக்குநர் கிரண் பேசியதாவது..,
எனக்கு பிடித்த இயக்குநர் நலன், அவரது இரண்டாவது படத்தில் என்னை நடிக்க வைத்தார் அவர் இப்படத்தில் ஆர்ட் டைரக்டராக வேலை செய்யச் சொன்னார். இந்தக்கதை கேட்ட போது எப்படி இப்படத்தில் கார்த்தி நடிக்கப்போகிறார் என்று தான் தோன்றியது. நான் ரஜினி ரசிகன், என் அம்மா எம் ஜி ஆர் ரசிகர். ஷீட்டிங்கில் கார்த்தியைப் பார்த்த போது அவர் முகம் எம் ஜி ஆர் போட்டோவுடன் அப்படியே மேட்ச் ஆனது. அப்போதே இந்தப்படம் பெரிய வெற்றி பெறும் என நலனிடம் சொன்னேன். கண்டிப்பாக இப்படம் உங்கள் அனைவரையும் கவரும் நன்றி.
நடிகர் GM சுந்தர் பேசியதாவது..,
எம் ஜி ஆர் பற்றி பேச எனக்குத் தகுதியில்லை, பரம ரசிகர் சத்தியராஜ் சார் முன் எம் ஜி ஆர் பற்றி எதாவது தகவல் தப்பாகக் கூறி விடுவோம் என பயமாக உள்ளது. அவர் அவ்வளவு தீவிரமான ரசிகர். கார்த்திக்கின் சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு ஐகானிக் இமேஜை மீண்டும் திரையில் கொண்டு வருவது மிக கடினமான விசயம். எம் ஜி ஆராக நடிக்க கார்த்தி நிறைய ஹோம் ஒர்க் பண்ணியிருக்கிறார். அவரது பாடி லாங்குவேஜு எல்லாம் மிகவும் நன்றாக இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். முழு அர்ப்பணிப்புடன் உண்மையாக உழைத்தால் தான் அந்த மாதிரி விஷயங்கள்லாம் வெளிவரும். கார்த்தி மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். கிருத்தி ஷெட்டி வெல்கம் டு தமிழ் சினிமா. நான் ஆனந்தராஜனோட கிளாஸ்மேட் ஃபிலிம் இனஸ்டிட்யூட்டில். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. இயக்குநர் நலன் அவரது காதலும் கடந்து போகும் படம் போலவே, இந்த படத்திலேயே எனக்கு ஒரு நல்ல ரோல் கொடுத்திருக்கார். அவருக்கு ரொம்ப நன்றி. இந்தப்படம் வெளிவருதற்குத் தயாரிப்பாளர் ஞானவேல் சார் மற்ற எல்லா நடிகர்களும் ஆர்டிஸ்ட் எல்லாருமே சேர்ந்து எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியும். மிகக்கஷ்டபட்டு இந்த படத்தைப் பொங்கலுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். நிச்சயமாகச் சத்தியமாக இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.
நடிகை ஷில்பா மஞ்சுநாத் பேசியதாவது..,
முதலில் எனக்கு மாலினி என்ற கதாபாத்திரத்தைக் கொடுத்ததற்காக, எங்கள் இயக்குநர் நலன் குமாரசாமி சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. ஒரு கதையை எழுதும்போது, ஒரு கேரக்டர்க்கும் ஒரு ஆர்க் இருக்கும். ஆனால் ஒரு நடிகையா, எனக்கும் ஒரு ஆர்க் வேண்டும், எல்லா விதமான கதாபாத்திரங்களையும் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுவேன். அதனால் தான் இப்படத்தில் இந்த மாதிரி ஒரு ரிஸ்க் எடுத்தேன். அந்த ரிஸ்க் எடுக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதனால தான் மாலினி இவ்வளவு அழுத்தமான ஒரு கேர்கடராக மாறியிருக்கிறாள். இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இருவரின் முயற்சியையும் உழைப்பையும் முதலில் பாராட்ட வேண்டும். இந்த படம் பெரிய சிக்கல்களைச் சந்தித்தது. எங்கள் இயக்குநர் நலன் குமாரசாமி சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. இந்த மாதிரி ஒரு பெரிய மேடையில், இந்த அளவுக்கு இந்த படம் நிற்கிறது என்றால், அதற்கு முழுக் காரணமும் அவர்கள்தான். படக்குழுவிற்கு நன்றி. எனக்கு வரும் படங்கள் ஏதாவது ஒரு காரணமாகத் தான் வரும். இந்தப் படம் ஒரு ஸ்டார் படம். தமிழ்நாட்டில் இது ஒரு பெரிய திருவிழா வெளியீடாக இருக்கும், அதனால் இதுபோன்ற ஒரு படத்தைத் தேர்வு செய்வது ரொம்ப சிக்கலான விஷயம். ஆனா எனக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருக்கிறது. இந்த படம் மிக நன்றாக வந்திருக்கிறது. நீங்க எல்லாரும் இந்த படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும் நன்றி.
நடிகர் ஆனந்த்ராஜ் பேசியதாவது..,
இந்த படம் ஒரு நல்ல படம். நீங்களும் பார்த்தாலே அது உங்களுக்குப் புரியும். நாளைக்கு இந்த படம் வெளியாகப் போகிறது. அதுவும் ஒரு நல்ல நாளில், ஒரு நல்ல நேரத்தில் வெளியாகிறது. நான் தயாரிப்பாளர் ஞானவேல் சார்கிட்ட கூட “சார், முன்னாடி சொன்ன தேதியை விட, நாளைக்கு ரிலீஸ் ஆகுற தேதியே ரொம்ப நல்ல தேதிங்க” என்று சொன்னேன். நாளை போகி பண்டிகை. பழசுகளை எல்லாம் எரிச்சிட்டு, புதுசா ஆரம்பிக்கிறதுதான் நம்ம கலாச்சாரம். அதனால் நாளைக்கு நம்ம மனசில் இருக்கிற எல்லா பழைய விஷயங்களையும் விட்டுவிட்டு, ஒரு புதுசா ஆரம்பிக்கிற படம்தான் ‘வா வாத்தியார்’. இன்று காலை நானும், கார்த்தி சாரும், சத்யராஜ் சாரும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் சமாதிக்கு போயிருந்தோம். அங்க போனப்போ ஒரு சந்தோஷம், ஒரு மன நிறைவு இருந்தது. அவர் சமாதியை நேரில் போய் பார்த்து, எங்களோட கண்ணீர் அஞ்சலியை செலுத்திட்டு, இந்த படத்தை உங்களுக்குக் கொண்டு வர்றதுல எனக்கு ஒரு பெருமை இருக்கிறது. உங்களால முடிந்தவரை இந்த படத்தை அவருக்கான மரியாதையா நினைச்சு, எங்களுக்கும் கொஞ்சம் ஆதரவு தாருங்கள். இந்த படம் நன்றாக வெற்றி பெறும் என்று எங்களுக்கு முழு நம்பிக்கை இருகிறது .இந்த படத்தில் நடித்த கார்த்தி சார், சத்யராஜ் சார் கிட்ட இருந்து தான் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டார். அவர் ஒரு சீனியர், ஒரு அண்ணன் மாதிரி. இந்த படத்தோட இயக்குநர் நலன் சார் – ரொம்ப பெரிய, அனுபவம் வாய்ந்த இயக்குநர். அவர் கதையை நேரில வந்து சொன்னபோதே “சார், நீங்க சொல்லவே வேண்டாம்… நான் செய்கிறேன்”என்று உடனே சொன்னேன். இந்த படம் மிக நன்றாக இருக்கும். புரட்சித் தலைவரை மீண்டும் திரையில் பார்க்கவேண்டுமென்று ஆசைப்பட்டால், இந்த படத்தைக் கண்டிப்பா பாருங்க. அனைவருக்கும் நன்றி. நடிகர் சத்யராஜ் பேசியதாவது..,
எம் ஜி ஆர் பற்றிப் பேசினால் அது தனியா ஒரு கதையாக போய் வ்டும். இந்த படத்தோட தயாரிப்பாளர் தம்பி ஞானவேல் ராஜா பற்றி ஒரு விஷயம் சொல்லவேண்டும். அவருடைய அப்பா ஒரு தீவிரமான எம் ஜி ஆர் ரசிகர். அவர் 110 தடவை நாட்டோடி மன்னன் படம் பார்த்ததாக சொன்னார். அவ்வளவு தீவிர ரசிகர். அப்படிபட்ட தயாரிப்பாளருக்கு அவர் இந்தப்படம் அமைந்தது மகிழ்ச்சி. கார்த்திக்கு முதல் படமே மிக சவாலான படம். வெளிநாட்டில் படிச்சிட்டு வந்து, அந்த மாதிரி ஒரு கிராமத்துக் கதாபாத்திரம் பண்ணுறது எளிமையானது இல்லை. ஆனால் அதைவிட கஷ்டமான விஷயம் இந்த வாத்தியார் கதாபாத்திரம். ஏனென்றால் இது ஒரு தலைவரின் பெயரோட சம்பந்தப்பட்ட கதாபாத்திரம். ஆனால் அதைத்தாண்டி இந்தப்படத்தில் எம் ஜி ஆர் பாடி லாங்குவேஜை கொண்டு வந்து அசத்திவிட்டார். கிருத்தி ஷெட்டி, ஷில்பா, தம்பி ஆனந்த்ராஜ், தம்பி சுந்தர் எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஐம்பது வருடம் முன் கோவையிலிருந்து வந்த போது, பல் பெரிதாக இருக்கிறது என சிவக்குமார் அண்ணன் சிபாரிசில் டாக்டரிடம் சென்று பல்லைக் குறைத்தேன். ஆனால் நலன் இப்படத்தில் உங்கள் கதாப்பாத்திரம் வித்தியாசமாக வேண்டுமென பல் வைக்க வைத்து விட்டார். இப்படத்தில் நான் வில்லனாக நடித்துள்ளேன். எம் ஜி ஆரின் பொங்கல் படம் படம் போல இந்தப் பொங்கலுக்கு வா வாத்தியார் வருகிறது அனைவரும் கொண்டாடுங்கள் நன்றி.
நடிகை கிருத்தி ஷெட்டி பேசியதாவது..,
ஒரு பேட்டியில் நலன் சார் ஒரே விஷயத்தை “இது ஒரு பெஸ்டிவல் படம். பல குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து வந்து பார்க்கிற படம்”என்று சொன்னார். இப்போது அது அப்படியே நடந்துள்ளது. குடும்பமா, நண்பர்களோடு, எல்லாரும் சேர்ந்து படம் பார்க்கிற மாதிரி இந்த படம் மாறியிருக்கிறது. அதுக்கு நான் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுறேன். இந்த படம் தாமதமானது பற்றி நிறைய பேர் என்கிட்ட கேட்டார்கள். அந்த நேரத்தில் எனக்கும் கொஞ்சம் வருத்தமா தான் இருந்தது. ஆனால் நான் ஒன்று நம்புகிறேன் – நல்ல விஷயம் நடக்கவேண்டுமானால், அதுக்கு ஒரு சரியான நேரம் இருக்கும். கடவுள் நம்மளை காத்திருக்க வைக்குறார்னா,அதுக்குப் பின்னால் ஒரு பெரிய திட்டம் இருக்கும்னு நம்புறேன். அதனால இப்போ எல்லாம் சரியா நடந்ததுக்கு நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறேன். இந்தப்படத்தில் என்னைச் சேர்த்ததுக்காக நலன் சார், மற்றும் ஞானவேல் சார் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நலன் சார் இந்த படத்திற்காக எவ்வளவு கடினமா உழைத்திருக்கார்னு நான் நேரில பார்த்திருக்கேன். அவர் வெற்றியைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். கார்த்தி சாரின் தீவிர ரசிகை நான், ஆனால் அவரை நேரில சந்திச்ச பிறகு, நான் இன்னும் பெரிய ரசிகையா மாறிவிட்டேன். ‘வா வாத்தியார்’ கதாபாத்திரம் – பெரியதாக இருந்தாலும், அதை அவரைவிட சிறப்பாக யாராலும் செய்ய முடியாது. கார்த்தி மனதளவில் மிகச்சிறந்த மனிதர். அது அவரது கதாப்பாத்திரங்களிலும் பிரதிபலிக்கிறது, வா வாத்தியார் ஒரு நல்ல மனசு கொண்ட கேரக்டர் அது அவருக்குள்ள இயல்பாகவே இருக்கிறது. நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இப்படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதாவது..,
சில படங்கள் சரியாகப் போகவில்லை, அதனால் நெகடிவிட்டி, நிறையக் செய்தி பரவி விட்டது. ஆனால் நான் இங்கு தான் இருக்கிறேன். அவருக்கு அவ்வளவு கடன் இருக்கிறது எனச் சொல்லுகிறார்கள். ஆனால் இண்டஸ்ட்றியில் கடனே இல்லாத தயாரிப்பாளர் நான் தான். நான் நன்றாகத் தான் இருக்கிறேன். முக்கியமாகச் சிலருக்கு நன்றி சொல்ல வேண்டும். முதலில் சூர்யா அண்ணாவுக்கு நன்றி. பல நண்பர்கள் மேடையில் ஆதரவாக பேசி விட்டு, காணாமல் போய் விடுவார்கள். ஆனால் சூர்யா அண்ணன் எப்போதும் எதுவானாலும் என்னுடன் இருந்து, என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் அண்ணாவுக்கு நன்றி. KVN அண்ணா, அவர்களின் ஜனநாயகன் படம் பெரிய புக்கிங் ஆகியிருந்தது, விஜய் சாரின் கடைசிப்படம் ஆனால் அது வருவது தாமதமாகியுள்ளது. ஆனால் இப்படம் வெளிவருவதில் எனக்கு அவர் எனக்கு பெரிய துணையாக இருந்தார். அவருக்கு என் நன்றிகள். பென் மூவிஸ் ஜெயந்திலால் காடா சாருக்கு நன்றி. சக்தி பிலிம்ஸ் சக்திவேலனுக்கு நன்றி. பல நண்பர்கள் உறுதுணையாக இருந்தார்கள் அனைவருக்கும் நன்றி. TTT படம் வருகிறது கண்ணன் ரவி சார் இப்படத்திற்கும் பெரிய உதவிகள் செய்தார் அவர் படமும் பெரிய வெற்றி பெறட்டும். இப்படத்தில் எல்லோரும் மிகச்சிறந்த நடிப்பைத் தந்துள்ளார்கள். படம் 2 மணி நேரம் 9 நிமிடங்கள் தான், தீயாகப் பறக்கும். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
நடிகர் கார்த்தி பேசியதாவது..,
கடந்த வருடம், பெரிய செலிப்ரேஷனோட இந்த படத்தை வெளியிட நாங்கள் திட்டமிட்டோம். ஆனால் அது தள்ளிப்போய்விட்டது. எனது முதல் படமும் இது போல தள்ளிப்போனது. அடுத்த படம் தள்ளிப்போனது. அதனால தாமதம் என்கிறது எங்களுக்கு புதுசு இல்லை – பழகிவிட்டது. இந்த சூழ்நிலையில், நான் ஞானவேல்ராஜா சார்கிட்ட எப்போதும் ஒரு விஷயத்தை மட்டும் தான் சொன்னேன். “நீங்கள் நான் என்ன நினைக்கிறேனென்று நினைக்கவே வேண்டாம். உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றேன். நாம் போராட்டத்தில் உடலைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம்.
சின்ன வயதில் என் அப்பா ஒவ்வொரு அரிசியிலும் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்களுக்குத்தான் அது கிடைக்கும் என்பார். அது போல் சினிமாவில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்களுக்குத்தான் அது கிடைக்கும். அவர் சொன்னது அப்போது புரியவில்லை இப்போது புரிகிறது
ஞானவேல்ராஜா சார் சொன்ன மாதிரியே,நான் நிறைய பேருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன். முக்கியமாக சூர்யா அண்ணா. அவரோட சப்போர்ட் இல்லாமல் இந்த படம் இப்படி ரிலீஸ் ஆகி இருக்க முடியாது. அதே மாதிரி பைனான்ஸியர்ஸ், டிஸ்ட் ரிபியூட்டர்ஸ், எக்ஸிபிட்டர்ஸ், டெக்னீஷியன்ஸ் எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி. 48 மணி நேரம், 50 மணி நேரம், தூங்காம வேலை செய்து, இந்த படத்தை நம்ம கைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். எல்லா தொழிலாளர்களுக்கும் நான் மனதார நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
நலன் சார் எல்லாருக்கும் பிடிச்ச ஒரு இயக்குநர். ரசிகர்களுக்கு மட்டுமல்ல ஆர்டிஸ்ட்களுக்கும், இயக்குநர்களுக்கும் பிடித்த இயக்குநர். அவர் இந்த கான்செப்ட் கொண்டு வந்தப்போ, எனக்கு ரொம்ப பயமா இருந்தது. இந்த கேரக்டருக்கு ஒரு தனி டிரெய்னிங் வேண்டும். ஆனால் நான் டிரெய்னிங் எடுத்து வரவில்லை. On-set-ல கற்றுக்கொண்டேன், மிகவும் சின்சியராக பண்ண முயற்சி செய்துள்ளேன்.ஒவ்வொரு நாளும், எம் ஜி ஆர் சாரோட படங்களைத் திரும்பத் திரும்ப பார்த்து, அவரோட close-ups பார்த்து, “என்னோட முகத்துல அதை எப்படி கொண்டு வரலாம்?”ன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். எனக்கு என்னோட முகத்தையே சரியா பார்க்க முடியாத பயம் இருந்தபோது, அவரோட முகத்தை screen-ல கொண்டு வரணும்னு நினைத்ததே ரொம்ப பயமாக இருந்தது. ஆனால் நலன் மாதிரி ஒரு இயக்குநர், ஜார்ஜ் மாதிரி ஒரு கேமராமேன், அந்த முழு குழுவின் சப்போர்ட் இருந்ததால “இத பண்ண முடியும்”ன்னு ஒரு நம்பிக்கை வந்தது. அது படத்தில் சாத்தியமாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் அவர்களின் இசை இந்த படத்தை இன்னொரு லெவலுக்கு கொண்டு போயிருக்கிறது.
எம் ஜி ஆர் திரையில் மட்டுமில்லை நிஜத்திலும் ஒரு ஹீரோவாக இருந்திருக்கிறார். அதை மாடர்னாக ரசிக்கக்கூடிய கமர்ஷியல் படமாக செய்தது ரொம்ப பெரிய விஷயம். காலை அவர் சமாதிக்கு போய் கும்பிட்டு வந்தோம். அங்க நின்னப்போ உணர்வு வேற மாதிரி இருந்தது. நாற்பது வருஷமா அவர் இல்லை. ஆனா இன்னும் அவரை நினைக்கிறோம். இன்னும் அவரைப் பற்றி படம் எடுக்க ஆசைப்படுகிறோம். அங்கிருந்து திரும்பி வரும்போது, இந்த எல்லா விஷயங்களும் சரியாக அமைந்ததுக்கு அவரோட ஆசிர்வாதம் கண்டிப்பாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். குழந்தைகளோடு, குடும்பமா, எல்லாரும் சேர்ந்து பார்த்து ரசிக்ககூடிய ஒரு ஜாலியான படம் இது. இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுற, ரிலீஸ் ஆகப்போகுற எல்லா படங்களும் மக்களைச் சந்தோஷப்படுத்தி பெரிய வெற்றி பெறவேண்டுமென்று மனசார வாழ்த்துகிறேன். நன்றி.
இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்த்ராஜ், கருணாகரன், ரமேஷ் திலக், பி எல் தேனப்பன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்.
பெரும் பொருட்செலவில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா இந்தத் திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்.
இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த ‘திரௌபதி 2’ திரைப்படம் 14 ஆம் நூற்றாண்டின்தென்னிந்தியாவில்
வேரூன்றிய காலகட்டக் கதையை திரையில் பிரம்மாண்டமாக கொண்டுவரவுள்ளது. இயக்குநர் மோகன் ஜியின் வரலாற்று ஆக்ஷன் கதையான ’திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். பலமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய நடிகர் YG மகேந்திரன், “இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சிறியது என்றாலும் கதை கேட்ட போதே வைப் நன்றாக இருந்தது. படத்தின் பாடல்களையும் ட்ரைலரையும் தற்பொழுது பார்க்கும் பொழுது மோகன் படத்தை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றுள்ளார் என தெரிகிறது. ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்தக் கதை இன்னொரு ‘பாகுபலி’. இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சரித்திர சான்றுகளோடு அற்புதமாக எடுக்கப்பட்ட படம் இது. தேசிய உணர்வோடு பாரம்பரியத்தையும் இந்த கதை சொல்லும். ராம நாமி என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். நிறைய ஆராய்ச்சி செய்து மோகன் இந்த படத்தை எடுத்திருக்கிறார் படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.
மும்பை எம்.எல்.ஏ. கேப்டன் தமிழ்ச்செல்வன் சகோதரர் மோகன், “என் அண்ணன் தான் இந்த படத்தை பூஜை போட்டு ஆரம்பித்து வைத்தார், அதன் பிறகு படத்திற்கு வந்த சின்ன சின்ன பிரச்சனைகளை இயக்குநர் மோகன் ஜி சமாளித்து படத்தை வெற்றிகரமாக முடித்தார். நிதின் தேசாய் ஸ்டுடியோவில் என் அண்ணனும் மோகன் ஜிக்கு பக்கபலமாக இருந்தார். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
எடிட்டர் தேவராஜ், “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. படம் நன்றாக வந்திருக்கிறது. உங்கள் அனைவரது ஆதரவும் தேவை”.
கலை இயக்குநர் கமல், “நாங்கள் எதிர்பார்க்காத பல விஷயங்களை கதையில் கொண்டு வந்து பிரம்மாண்டமாக இயக்குநர் எடுத்திருக்கிறார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
ஒளிப்பதிவாளர் பிலிப் கே சுந்தர், “இந்த வாய்ப்பு கொடுத்த மோகன் சாருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. பத்து வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு ‘திரெளபதி2’ மூலம் வந்திருக்கிறேன். நன்றி”.
வசனகர்த்தா பத்மா சந்திரசேகர், “கதைக்கு நாங்கள் எடுத்துக்கொண்ட காலக்கட்டம் கொஞ்சம் குழப்பமான காலக்கட்டம். அதற்கு முன்பும் பல போர்கள் நடந்திருந்தாலும் நம் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடந்தது இந்த காலக்கட்டத்தில்தான். இதில் வேலை பார்க்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் என் வசனத்தை பேசிய நடிகர்கள் என அனைவருக்கும் நன்றி”.
நடன அமைப்பாளர் தணிகா டோனி, “இது என்னுடைய முதல் படம். இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. முதல் படம் என்பதால் கொஞ்சம் பயத்தோடுதான் சென்றேன். ஆனால், இயக்குநர் மிகவும் ஆதரவு கொடுத்தார். அனைவருக்கும் நன்றி”.
பாடலாசிரியர் செல்வ மீரா, “எம் கோனே பாடலுக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. பாடலுக்கு கிடைத்த அதே ஆதரவு படத்திற்கும் கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.
’வீர வல்லாள மகாராஜா’ புத்தகத்தின் எழுத்தாளர் ஆறு அண்ணல் கண்டார், “என் கனவை மோகன் வாயிலாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். மோகனைப் போன்ற தன்னம்பிக்கையான ஒருவரை நான் பார்த்தது கிடையாது. அருணாச்சல புராணம் என்ற சமஸ்கிருத நூலை எள்ளப்பநாதர் தமிழ்ப்படுத்தினார். அதில் ஒன்றுதான் வல்லாள மகாராஜாவின் சரிதம். அவரது ஆட்சியில் தர்மம் மேலோங்கி இருந்தது. இருந்தாலும் தனக்கு பின்னால் நாடு என்னவாகும் என சிவ பெருமானுக்கு மனக்குறை இருந்தது. இதனால் சிவனடியாராக பூமிக்கு வல்லாள மகாராஜாவிடம் வருகிறார். சிவனடியாரின் மனக்குறையை வல்லாள மகாராஜா தீர்த்து வைக்க அவருக்கே பிள்ளையாகிறார் சிவன். இந்தக் கதையை இன்னும் விரிவாக படத்தில் நீங்கள் பார்ப்பீர்கள்” என்றார்.
நடிகை ஜெயந்தி மாலா, “எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி. வெற்றி பெற போகும் இந்த படத்தில் நான் விருதாம்பாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படத்தில் எல்லோருமே அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். படம் நிச்சயம் வெற்றி பெறும்”.
நடிகர் கணேஷ், “மோகன் சார் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இதுபோன்ற படம் வருவது அரிதானது. அதில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள். நன்றி”.
நடிகர் ஆல்பர்ட், “படத்தில் எனக்கு முக்கியமான ராஜா கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் மோகன் ஜிக்கு நன்றி. படத்தில் பணிபுரிந்துள்ள நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். என்னுடன் சேர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக கஷ்டப்பட்ட மேக்கப் மேனுக்கும் நன்றி. படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்”.
நடிகர் மாருதி, “இந்தப் படம் நடக்க முக்கிய காரணம் தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்தி சார்தான். இந்தக் கதையை எடுப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதனை நம்பிக்கையோடு மோகன் ஜி எடுத்துள்ளார். மும்பையில் பல பெரிய படங்கள் எடுத்த ஸ்டுடியோவில்தான் இந்தப் படமும் படமாக்கப்பட்டுள்ளது. சிஜி இந்தப் படத்தில் அதிகம் இருக்காது. பெரும்பாலும் லைவ் லொகேஷனில்தான் எடுத்திருக்கிறோம். செட் வொர்க்கும் அற்புதமாக வந்துள்ளது. விஎஃப்எக்ஸ் பணியும் அற்புதம். படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் மிகக் கடுமையாக உழைத்துள்ளார். படம் பார்க்கும்போது அது உங்களுக்குத் தெரியும்”.
நடிகர் அருணோதயன், “இந்தப் படத்திற்கு மோகன் ஜி கடுமையான உழைப்பைக் கொடுத்துள்ளார். படத்தில் பணிபுரிந்த அனைவரின் உடல் மற்றும் மனதை புரொடக்ஷன்ஸ் நிறைவாக வைத்திருந்தது. என்னை ஸ்டண்ட் செய்ய வைத்த இயக்குநர், ஸ்டண்ட் மாஸ்டருக்கு நன்றி. ரிச்சர்ட் சார் மிக எளிமையாக நடந்து கொண்டார். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.
நடிகர் தினேஷ் லம்பா, “இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இந்தப் படம் சொந்தமானது. படம் நன்றாக வந்துள்ளது”.
நடிகர் பரணி, “வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. என்னை வேறொரு ஜானரில் மோகன் ஜி காட்டியிருக்கிறார். இந்தப் படத்தை எல்லோரும் பெரிதாக கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன். மோகன் ஜியின் கடுமையான உழைப்பிற்காகவே படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். நன்றி”.
நடிகை திவி, “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த மோகன் சாருக்கு நன்றி. உடன் நடித்த அனைவருக்கும் நன்றி”.
நடிகை தேவயாணி ஷர்மா, “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த மோகன் சாருக்கு நன்றி. நான் மும்பையில் இருந்து வருகிறேன். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். படத்தை தியேட்டரில் பாருங்கள்”.
இயக்குநர் சரவண சுப்பையா, “மோகன் ஜியுடன் நான் ஏற்கனவே வேலை பார்த்திருக்கிறேன். கடுமையான உழைப்பாளி. இசையமைப்பாளர் ஜிப்ரானும் எனர்ஜிடிக்கான இசையை கொடுத்துள்ளார். உங்களை மிரள வைக்கும் பல காட்சிகள் படத்தில் உள்ளது. எல்லோரும் கடுமையாக இந்தப் படத்திற்காக உழைத்துள்ளனர். வாழ்த்துக்கள்”.
நடிகர் சிராக் ஜானி, “தமிழ் கலாச்சாரத்துடன் இந்தப் படம் தொடர்புடையது. உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மோகன் ஜிக்கு நன்றி. யாருக்கும் அதிகம் தெரியாத வீர வல்லாள மகாராஜா பற்றி மோகன் படமாக எடுத்துள்ளார். தமிழ்நாடு என்பது பண்பாடு, அடையாளம், மண்ணுடைய வீரம், வரலாறு, அன்பு இதெல்லாம் உள்ளடக்கியது. இதுபோன்ற கதை மீது நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. என்னுடைய கதாபாத்திரம் மிகவும் வலிமையானது. துக்ளக் கதாபாத்திரத்தை மிகவும் சின்சியராக நடித்திருக்கிறேன். ரிச்சர்ட் சாருக்கு நன்றி. தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். நல்ல கதைகளுக்கு ரசிகர்கள் எப்போதும் வரவேற்பு கொடுப்பீர்கள் என நம்பிக்கை உள்ளது” என்றார்.
இயக்குநர் முத்தையா, “’திரெளபதி2’ மோகனின் ஐந்தாவது படம். தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இது முக்கியமான படம். பெரும் வெற்றி பெற்று அனைவருக்கும் படம் பிடித்தமானதாக வர வாழ்த்துக்கள். நன்றி”.
நடிகர் வேல ராமமூர்த்தி, “மோகன் ஜி சினிமா துறைக்கு வந்ததில் இருந்து அவரது படங்களில் எப்போது நடிப்போம் என்ற தீ எனக்குள் இருந்தது. ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் வாய்ப்பு வந்தது. ஆனால், அது கொரோனா நேரம் என்பதால் நடிக்க முடியாமல் போனது. நான் சினிமாவுக்கு வந்து இத்தனை ஆண்டுகளில் நடித்திருக்கும் முதல் சரித்திர படம் இது. துணிச்சலாக சரித்திர வரலாற்று படத்தை மோகன் ஜி எடுத்துள்ளார். பல எதிர்ப்புகள் வந்தபோதிலும் அதை எல்லாம் தைரியமாக எதிர்கொண்டு இந்தப் படத்தை முடித்துள்ளார். தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்த வருடத்தின் முக்கியமான படத்தில் சிறப்பான இசையை ஜிப்ரான் கொடுத்துள்ளார். இது ‘திரெளபதி’ பொங்கல். திருவண்ணாமலையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வீர வல்லாள தேவராயரின் சரித்திர கதை இது. ‘திரெளபதி2’ மிகப்பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
நடிகர் நட்டி, “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்தக் கதை மூலமாக வரலாற்றை தெரிந்து கொண்டேன். படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் கடின உழைப்பைக் கொடுத்துள்ளனர். குறைந்த நாட்களில் இந்த படத்தை முடிப்பது சாதாரண விஷயம் கிடையாது. ஜிப்ரான் இசையில் எம் கோனே பாடல் அருமை. படத்திற்காக பிரம்மாண்டமாக செலவழித்திருக்கிறார் தயாரிப்பாளர். இந்தப் படத்திற்காக ரிச்சர்ட் கொடுத்த உழைப்பு மிகப்பெரியது. படத்தின் வில்லன்கள் எல்லோரும் நேரில் பார்க்க ஹீரோ மாதிரி உள்ளார்கள். ஹீரோயின்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. நன்றி”.
இசையமைப்பாளர் ஜிப்ரான், ”ஒரு படத்தின் இயக்குநருடன் பயணம் செய்யும் அந்த நேரம் பயனுள்ளதாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அது மோகன் ஜியுடன் நன்றாக செட் ஆனது. அவருக்குள் ஒரு குழந்தை உள்ளது. தெளிவும் நம்பிக்கையும் அவரிடம் நிறைய உள்ளது. இந்தப் படத்தில் எனக்கு நிறைய புது அனுபவங்கள் கிடைத்தது. எம் கோனே போன்ற ஒரு மெலோடி பாடலை ஓகே செய்ததற்கு நன்றி. ’திரெளபதி’ என்பதற்கு பின்னால் நிறைய சர்ச்சைகளும் இருந்தது. ஆனால், அதை எல்லாம் தாண்டி அவசியம் சொல்லப்பட வேண்டிய இந்த வரலாற்றை எடுக்க முன் வந்த தயாரிப்பாளருக்கு நன்றி”.
நடிகை ரக்ஷனா இந்துசூடன், “நெருப்பில் இருந்து பிறந்தவள் திரெளபதி. அந்தப் பெயரை ‘திரெளபதி2’ படத்தில் எனக்கு கொடுத்த இயக்குநர் மோகன் சாருக்கு நன்றி. இந்த கதை 14 ஆம் நூற்றாண்டில் நடந்தது. என்னை நம்பிய மோகன் சாருக்கு நன்றி. இந்த கதாபாத்திரத்திற்குள் வருவதும் வந்த பின்பு அதை விட்டு வெளியே போவதும் எனக்கு கடினமான ஒன்றாகதான் இருந்தது. நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள். தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி சாருக்கும் ரிச்சர்ட் ரிஷி சாருக்கும் நன்றி. படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக உழைத்துள்ளனர். இந்த கதாபாத்திரத்திற்காக எடை கூடியுள்ளேன். இயக்குநருடைய தெளிவான திட்டமிடல் மூலம்தான் படத்தை இவ்வளவு குறைந்த நாட்களுக்குள் முடிக்க முடிந்தது. பல தடைகளை தாண்டி பொங்கலுக்கு தமிழ் வரலாற்றை பற்றிய படமாக ‘திரெளபதி2’ திரையரங்குகளில் வரவிருக்கிறது. உங்கள் அனைவருடைய ஆதரவும் தேவை”.
நடிகர் ரிச்சர்ட் ரிஷி, “இந்தப் படத்திற்கு சிறப்பான உழைப்பை நாங்கள் கொடுத்துள்ளோம். கதையை நம்பிய தயாரிப்பாளருக்கும் கடின உழைப்பு கொடுத்த மோகனுக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.
தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி, “பல வருடங்களாக கதை எடுக்கலாம் என்ற யோசனையில் இருந்தபோது சரியான கதையோடு மோகன் சார் வந்தார். 31 நாட்களில் படத்தை முடித்துள்ளார் இயக்குநர் மோகன். காலை 9 மணிக்கு ஆரம்பித்து இரவு வரை படப்பிடிப்பு நடக்கும். எங்களுக்கு ஆதரவு கொடுத்த ஊடகங்களுக்கும் நன்றி”.
இயக்குநர் மோகன் ஜி, “பீரியட் படம் இது என்பதால் முதல் படம் போலவே சின்சியராக வேலை பார்த்தேன். அதற்கு பெரும்பலமாக இருந்த தொழில்நுட்பக்குழுவினருக்கு மிகப்பெரிய நன்றி. அவர்கள் இல்லாமல் இந்த பட்ஜெட்டில் 31 நாட்களுக்குள் படம் எடுப்பது சாத்தியமே இல்லை. ரிச்சர்ட் சார் இல்லாமல் ‘திரெளபதி2’ இல்லை. இந்தப் படத்திற்காக இன்னும் ஒரு ரூபாய் சம்பளம் கூட அவர் வாங்கவில்லை. குதிரை பயிற்சி, கத்தி சண்டை என ஒரு வருடமாக இந்தப் படத்திற்காக ஒரு நாளில் 16 மணி நேரம் உழைத்துள்ளார். நான் சொன்ன பட்ஜெட்டை விட கொஞ்சம் அதிகமாய் போயிருந்தாலும் கதை மீது நம்பிக்கை வைத்து ஆதரவு கொடுத்த தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி சாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நன்றி. படத்தின் முக்கியமான நபர் ஒளிப்பதிவாளர் சுந்தர். நான் எதிர்பார்த்ததை போலவே சிறப்பான தரமான பணியைக் கொடுத்துள்ளார். அவருக்கு இணையான உழைப்பை கலை இயக்குநர் கொடுத்துள்ளார். இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றால் பலருக்கும் உந்துதலாக இருக்கும்.
25 ஹீரோயின்களை பார்த்த பிறகு ரக்ஷனாவை தேர்ந்தெடுத்தேன். மிகவும் தைரியமானவர். திறமையான நடிப்பை கொடுத்துள்ளார். அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பரணி அண்ணனுடன் முதல் படத்திலேயே வேலை செய்ய வேண்டியது. ஐந்தாவது படத்தில்தான் அது கைகூடியுள்ளது. அவர் பேசும் வசனம் படத்தில் முக்கியமானது. சிராக் ஜானி சார், தினேஷ் லம்பா சார் இரண்டு பேரும் மும்பையை சேர்ந்தவர்கள். இரண்டு பேரின் நடிப்பும் நிச்சயம் பேசப்படும். மற்ற இரண்டு ஹீரோயின்களுக்கும் தமிழ் தெரியாது என்றாலும் புரிந்து கொண்டு நடித்துள்ளனர். நட்டி அண்ணனுக்கு சிறப்பான உடல்மொழி உள்ளது. அவருடைய கரியரில் இந்த கதாபாத்திரம் நிச்சயம் மணிமகுடமாக இருக்கும். வேல ராமமூர்த்தி சாரின் நடிப்பும் குரலும் சிங்கம் கர்ஜிப்பதுபோல இருக்கும். தென்மாவட்டத்தை சார்ந்த நல்ல கதை அவரிடம் இருந்து எனக்கு வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.
எழுத்தாளர் பத்மாவை பெண் சாண்டில்யன் என சொல்வார்கள். நிறைய புது தமிழ் வார்த்தைகளை இந்த தலைமுறைக்கு அறிமுகம் செய்திருக்கிறார். அருமையான பல கதைகள் வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் அவருக்கு உண்டு. அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலையால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய ஒரு கதை எடுப்பதுதான் முதலில் எங்கள் திட்டம். அந்த சமயத்தில் காசி சென்றிருந்தேன். நான் சிவபக்தர். அங்கு ஒரு கோயிலுக்கு சென்றபோது அங்கிருந்த நந்தி, நம் இஸ்லாமிய மக்கள் வழிபடும் ஞானவாபி மசூதியை பார்த்தார்போல இருந்தது. அதை பற்றி விசாரித்தபோது ஒளரெங்கசீப் அங்கிருந்த கோயிலை நோக்கி மசூதி உருவாக்கிய வரலாறு தெரியவந்தது. அது தமிழ்நாட்டுடனும் கனெக்ட் ஆகிறது. அதைப்பற்றி விரிவாக படித்தவுடன் இதுதான் நான் பண்ண வேண்டிய படம் என முடிவு செய்தேன். ’சாவா’ படம் பார்த்தபிறகு என் நம்பிக்கை இன்னும் அதிகமானது. ஜிப்ரான் சார் இந்தப் படத்திற்குள் வந்ததும் இந்தப் படம் இன்னும் பெரியதானது. எம் கோனே பாடல் இப்போது பத்மலதா மேடம் குரலில்தான் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அவருக்கு நன்றி. பல இடங்களில் அவரது இசை உணர்வுப்பூர்வமாக உள்ளது.
நம்முடன் சகோதரர்களாக வாழ்ந்து வரும் இந்திய இஸ்லாமியர்களை இந்தப் படம் எந்தவகையிலும் காயப்படுத்தவில்லை. அவர்களின் தொடக்கம் எது என்று இந்தப் படம் புரிய வைக்கும். மற்றபடி கமர்ஷியலான படம்தான் இது. வீரபாண்டிய கட்டபொம்பன், சிறை, மதரசாப்பட்டிணம் போன்ற படங்களில் பிரிட்டிஷ்காரர்களை காட்டும்போது மத, அடையாளங்கள் இல்லாமல் அவர்களை பிரிட்டிஷ்காரர்களாக மட்டுமே எப்படி ஏற்றுக்கொண்டீர்களோ அதேபோல இந்தப் படத்தை துருக்கியில் இருந்து நம் நாட்டை கைப்பற்ற வந்த அந்நியர்களாக எண்ணிதான் கதையை நான் எழுதியுள்ளேன். அவர்களின் வாழ்க்கையை மத அடையாளங்களோடு தொடர்புபடுத்தி பார்க்காதீர்கள். இந்த நாட்டை அடிமைப்படுத்த துருக்கியில் இருந்து படை எடுத்து வந்தவர்கள் பற்றிய கதை. மூன்று வில்லன்கள் படத்தில் உள்ளனர். ஐந்து மொழிகளில் இந்தப் படம் உருவாகியுள்ளது. நல்லபடியாக பொங்கலுக்கு படம் வெளியாகிறது. என்னை நம்பிய தயாரிப்பாளர்களுக்கு இதுவரை நஷ்டம் வந்ததில்லை. வீர வல்லாள மகாராஜா வரலாற்றை வெளியே கொண்டு வருவது எனக்கு பெருமை. உங்கள் அனைவரையும் ‘திரெளபதி2’ திருப்திப்படுத்தும்” என்றார்.
, சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவித்து விருது வழங்கும் விழா சிறப்புடன் நடைபெற்றது.
1.திரையுலகில் தொடர்ந்து 50 ஆண்டுகள் சாதனை புரிந்து வரும் நம்பிக்கை நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களை கௌரவப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்.
தமிழ்த் திரையுலகில் 50 ஆண்டுகளாக திரைக்கதை அமைப்பதில் தனி முத்திரை பதித்து வரும் முடிசூடா மன்னன் திரு கே.பாக்யராஜ் அவர்களுக்கு சிறந்த திரைக்கதை மன்னன் விருது.
3.முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் விருது – இயக்குனர் ஆர். பார்த்திபன் .
“லயன் லேடி” புரட்சித்தலைவி டாக்டர் அம்மா விருது – மிஸ். கௌதமி
புரட்சி தலைவர் எம்ஜி.ஆர் விருது- இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்
நடிகர் திலகம் சிவாஜி விருது – இயக்குனர் திரு பி. வாசு
ஏவி.எம் சரவணன் சாதனையாளர் விருது – இயக்குனர் எஸ்பி. முத்துராமன்
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் விருது – திருமதி நளினி
9.பிரான்ஸ் நாட்டின் சசெவாலியர் விருதினை பெற்ற பிரபல கலை இயக்குனர் திரு.தோட்டா தரணி அவர்களை பாராட்டி விருது
தியாகச்செம்மல் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாற்று படமான “தேசிய தலைவர்” படத்தை திறம்பட இயக்கிய இயக்குனர் ஆர்.அரவிந்தராஜ் அவர்களுக்கு விருது.
11.பிறந்தநாள் வாழ்த்து படத்தில் நடித்த அப்பு குட்டி க்கு சிறப்பு விருது.
ஆணிரை படத்திற்காக ஈவி.கணேஷ் பாபு, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா, ஒளிப் பதிவாளர் செல்லயா – அவர்களுக்கு சிறப்பு விருது
டெக்கன் கிரானிக்கல் என்டர்டைன்மென்ட் ஆசிரியர் திருமதி அனுபமா வின் 25 ஆண்டு கால சேவையை பராட்டி சிறப்பு விருது..
1.சிறந்த நடிகர் – விக்ரம் பிரபு – சிறை
சிறந்த நடிகர் சிறப்பு விருது சண்முக பாண்டியன் – கொம்பு சீவி
2.சிறந்த நடிகை – பிரிகிடா சகா- மார்கன்
சிறந்த நடிகை சிறப்பு பரிசு – சேஷவிதா
3.சிறந்த படம் – சத்யஜோதி பிலிம்ஸ் தலைவன் தலைவி-சத்யஜோதி தியாகராஜன்
சிறந்த படம் சிறப்பு பிரிவு டூரிஸ்ட் ஃபேமிலி…மகேஷ் ராஜ்
4சிறந்த இயக்குனர் சிறப்பு பிரிவு – திரு. பொன்ராம். கொம்பு சீவி
5.சிறந்த கதை – குடும்பஸ்தான் – பிரசன்னா பாலசந்திரன் –
6 சிறந்த திரைக்கதை ஆசிரியர் – திரு. ஸ்ரீ கணேஷ்.. 3பி ஹெச்.கே – த
சிறந்த இசையமைப்பாளர் – நிவாஸ் கே. பிரசன்னா – பைசன்
சிறந்த ஒளிப்பதிவாளர் – திரு எம். சுகுமார் – தலைவன் தலைவி
சிறந்த எடிட்டர் – பரத் விக்ரமன்- டூரிஸ்ட் பேமிலி
சிறந்த கலை இயக்குனர் திரு.பி.சண்முகம். தேசிய தலைவர்
சிறந்த லிரிஸிஸ்ட் – விஷ்ணு எடவன் – கூலி
சிறந்த பின்னணி பாடகர் திரு ஹரிச்சரன் – வீரதீர சூரன்
13.சிறந்த நடன இயக்குனர் சேண்டி மாஸ்டர் – கூலி
15.சிறந்த ஸ்டண்ட் இயக்குனர் – திலீப் சுப்பராயன் – பைசன்
மற்றும் பலர்
வந்து வாழ்த்தியவர்கள் …பிரபு, கலைப்புலி.எஸ். தாணு,வி, சி.குகநாதன், காற்ற கட பிரசாத், கங்கை அமரன், விக்ரமன், டி. சிவா, ஆர். கே செல்வமணி, ஆர். வி. உதயகுமார், எழில், மன்சூர் அலிகான்
நடிகர் ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!
கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணை தயாரிப்பில் நடிகர் ஜீவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பப்லு அஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி, இணை தயாரிப்பாளர் தீபக் ரவி தயாரித்திருக்கிறார்கள்.
ஜனவரி 15 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் துணை தயாரிப்பாளர் முத்துக்குமரன், சண்டை பயிற்சி இயக்குநர் பிரபு ஜாக்கி, நடிகர்கள் சர்ஜின், சஷ்டி, சரத், ராஜேஷ், ஹிதேஷ், சுபாஷ் , சுப்ரமணி, ஜெய்வந்த், தம்பி ராமையா, ஜீவா, நடிகைகள் பிரார்த்தனா நாதன், மணிமேகலை, இணை இயக்குநர் லிபின் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் துணை தயாரிப்பாளர் முத்துக்குமரன் பேசுகையில்,
”தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் ஜனவரி 30 ஆம் தேதி அன்று தான் வெளியாக இருந்தது. ஆனால் தற்போது நாங்கள் அதற்கு முன்னதாக ஜனவரி 15 ஆம் தேதி அன்று வெளியிடுகிறோம். தலைவர் தலைமையில் ஒரு படம் வெளியாக இருந்தது. தற்போது தலைவர் தம்பி தலைமையில் ஒரு படம் வெளியாகிறது. இந்த படத்தின் பிரீ புரொடக்ஷன் வேலைகளை ஏப்ரல் மாத தமிழ் புத்தாண்டு தினத்தன்று தொடங்கினோம். தை திருநாள் அன்று வெளியிடுகின்றோம். இதற்கு இந்த படக்குழுவினர் முழுமையாக அர்ப்பணிப்புடன் உழைத்தனர். நடிகர் ஜீவா காலை 7 மணிக்கு முதல் காட்சி என்றால் 6:55 க்கு தயாராக படப்பிடிப்பு தளத்தில் இருப்பார். படப்பிடிப்பு தளத்தில் படக் குழுவினர் அனைவரும் ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் ஒன்றிணைந்து பணியாற்றினர். படப்பிடிப்பு தளத்தில் வருண பகவானின் ஆசியும் எங்களுக்கு கிடைத்தது. 45 நாட்களில் ஜீவாவின் 45 ஆவது திரைப்படமான ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் படப்பிடிப்பு அவருடைய தலைமையில் சிறப்பாக நிறைவடைந்தது. படத்தின் வெளியீடு திட்டமிட்ட தேதிக்கு முன்னதாக வெளியாவதால்.. படத்தின் இறுதி கட்டப் பணிகளை இயக்குநர் – படத்தொகுப்பாளர் – இசையமைப்பாளர்- ஆகியோர் பணியாற்றி வருவதால்.. அவர்களால் இந்த நிகழ்விற்கு வர இயலவில்லை. படம் மிகச் சிறப்பாக இருக்கிறது” என்றார்.
நடிகர் ஜெய்வந்த் பேசுகையில்,
” டி டி டி ( TTT) என்றால் தி டைம் ஃபார் டிவிஸ்ட் என சொல்லலாம். ஜனவரி 30 வெளியீடு என்று சொல்லிவிட்டு, 15ஆம் தேதியே வெளிவருவது மிக்க மகிழ்ச்சி. எந்த ஒரு கலைஞனுக்கும் தான் நடித்த படம் பண்டிகை தினங்களில் வெளியானால் அது மகிழ்ச்சியை தரும். அந்த வகையில் இந்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என சொல்வார்கள். அந்த வகையில் இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் படம் மிகவும் கேளிக்கையான படம். ஃபீல் குட் படம் என்றும் சொல்லலாம். 45 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பு தருணம் முழுவதும் அனைவரும் குடும்பமாக மகிழ்ச்சியாக பணியாற்றினோம். படப்பிடிப்பு தளத்தை நடிகர் ஜீவா எப்போதும் உற்சாகமாகவே வைத்துக் கொண்டிருப்பார். அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டிற்கான முதல் ஃபேமிலி என்டர்டெய்னர் படம் இது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
நடிகை பிரார்த்தனா நாதன் பேசுகையில்,
” தலைவர் தம்பி தலைமையில் எனும் இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலானது. 2025 என்றால் எனக்கு இந்த படத்தின் நினைவுகள் தான் அதிகம். மேற்குத் தொடர்ச்சி மலையின் அருகில் ஒரு அருமையான இடத்தில் நாங்கள் அனைவரும் தங்கி இருந்தோம். 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. நிறைவடைந்த தருணத்தில் எனக்கு மகிழ்ச்சியாக இருந்து பிரிகிறோமே ..! என்ற கவலை தான் அதிகம் ஏற்பட்டது. அந்த அளவிற்கு அனைவரும் ஒரு குடும்பமாக ஒன்றிணைந்து சந்தோஷமாக பணியாற்றினோம். இந்தப் படத்தில் நான் சௌமியா எனும் கதாபாத்திரத்தில் மணப்பெண்ணாக நடித்திருக்கிறேன். என்னுடைய திருமணத்திற்கு முதல் நாள் நடைபெறும் உணர்வு பூர்வமான மற்றும் அனைத்து விதமான உணர்வுகளையும் சார்ந்தது தான் இந்த திரைப்படம். இதுபோன்ற அழுத்தமான வேடத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
நடிகர் தம்பி ராமையா பேசுகையில்,
” இந்த ஆண்டின் கிளீன் ‘யு’ சர்டிபிகேட் உடன் திரையரங்கத்திற்கு குடும்பத்தினர் அனைவரும் வருகை தந்து ரசிக்கும் வகையிலான தகுதி படைத்த படமாக ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் அமைந்திருக்கிறது. அதில் எனக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்பதால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
கடந்த ஒரு சில ஆண்டுகளாக நான் எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. கடந்த ஆண்டுகளில் நடித்து சிறிதளவு நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறேன். அதை கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை.
இப்படத்தின் இயக்குநர் நிதிஷ் கதையை விவரிக்கும் போதே அதில் நடிக்க வேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டது. உயிர்ப்புள்ள கதை தனக்குத் தேவையானதை தானே தேடிக் கொள்ளும் என்பதைப் போல இந்த படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குநர் ஃபாசிலுக்கு பிறகு… இயக்குநர் சித்திக் -லாலுக்கு பிறகு.. இயக்குநர் நிதிஷ் ஒரு பீல் குட் ஃபேமிலி என்டர்டைனரை வழங்கி இருக்கிறார். அவருடைய முதல் தமிழ் படத்தில் நானும் பங்களிப்பு செய்திருக்கிறேன் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி.
இந்த படத்தின் ஜட்ஜ்மெண்டை நடிகர் ஜீவா தீர்மானிக்கிறார். இயக்குநர் நிதிஷ் ஜீவாவை சந்தித்து கதையை சொல்லும் போது.. ஒரு மிகப்பெரிய தயாரிப்பாளரின் மகன்… ஏராளமான வெற்றி படங்களை வழங்கிய நடிகர்.. ஆகிய அனுபவங்களை தனக்குள் வைத்துக் கொண்டு, இந்த கதைக்குள் தனக்கான பங்களிப்பு என்ன? என்பதை விட… தயாரிப்பாளரின் கோணத்தில் இருந்து இந்த படத்தின் கதையை முழுவதுமாக கேட்டு நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜீவா. வெற்றி பெறும் படத்தில் நான் கதாநாயகனாக இருக்கிறேன் என்று உறுதியாக தீர்மானித்து இப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படித்தான் இந்த திரைப்படம் உருவானது அனைவருக்கும் திரையில் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கி அதில் தன்னுடைய இருப்பையும் நிலைநிறுத்திக் கொண்ட ஜீவாவை நான் மனதார பாராட்டுகிறேன். இந்த எண்ணம் அனைத்து ஹீரோக்களுக்கும் இருந்தால் ஓடாத படங்களின் எண்ணிக்கை குறைந்து, ஓடும் படங்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும். அந்த வகையில் இந்த 2026 ஆம் ஆண்டு தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் நாயகனாக ஜீவா வெற்றி பெறுவார்.
கல்யாணம் தொடர்பான காட்சிகள் எத்தனையோ படங்களில் இடம் பிடித்திருக்கும். இருந்தாலும் இதில் ஒரு புது வகையான திரைக்கதையில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் துபாயில் அமர்ந்து கொண்டு படத்தின் அனைத்து பணிகளையும் ஜீவாவிடம் ஒப்படைத்து விட்டார்.
இந்தப் படத்தின் காட்சிகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் படமாக்கப்பட்டது. அதன் போது எனக்கு ‘மைனா’ திரைப்படம் தான் நினைவுக்கு வந்தது. நானும், பங்காளி இளவரசும் படம் நெடுக வரும் கதாபாத்திரத்தை அனுபவித்து ரசித்து நடித்திருக்கிறோம். ஜனவரி 15ஆம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இந்தப் படத்தை பார்த்துவிட்டு யாரும் எந்த ஒரு சிறிய குறையையும் சொல்லிவிட முடியாது. இப்படி ஒரு திரைப்படம் வரவேண்டும் என அனைவரும் கொண்டாடுவார்கள்.
நகைச்சுவை நடிகர்களாக நடிப்பவர்கள் கதையின் நாயகர்களாக அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது நகைச்சுவை நடிப்பிற்கான வெற்றிடம் உருவாகிறது. அதனை நிரப்புவதற்காக பல்வேறு தளங்களில் பிரபலமாக இருக்கும் இவர்கள்…(மேடையில் இருக்கும் அறிமுக நடிகர்கள்) இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது” என்றார்.
நடிகர் ஜீவா பேசுகையில்,
” தலைவர் தம்பி தலைமையில் உண்மையில் ஒரு மேஜிக் தான். நடிகரும், நண்பருமான வி டி வி கணேஷ் ஏப்ரல் மாதத்தில் வீட்டிற்கு வந்து மலையாளத்தில் வெளியான ஃபாலமி எனும் திரைப்படத்தைப் பற்றி எடுத்துச் சொன்னார். அந்தத் திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யலாம் என அப்படத்தின் தயாரிப்பாளர் என்னிடம் முன்பே கேட்டிருந்தார். சில காரணங்களால் அது நடைபெறவில்லை. அந்தப் படத்தின் இயக்குநரும் , இசையமைப்பாளரும் என்னை தொடர்பு கொண்டனர். அந்தப் படத்தின் பாடல்களுக்காகவும், பின்னணி இசைக்காகவும் இசையமைப்பாளர் விஷ்ணு விஜய்க்கு நான் பாராட்டு தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பியதுடன் தமிழிலும் பணியாற்றுங்கள் என கேட்டுக் கொண்டேன். அதன் பிறகு இயக்குநர் ஒருநாள் என்னை சந்தித்து கதையை சொன்னார். அக்கம் பக்கத்தில் உள்ள இரண்டு குடும்பம்… அவர்களுக்குள் ஏற்படும் ஒரு பிரச்சனை… நீங்கள் நடுவராக இருந்து அந்தப் பிரச்சனைக்கு எப்படி தீர்வை கொடுக்கிறீர்கள்? என்பதுதான் கதை என்றார். அவர் சொன்ன விதம் எனக்கு உடனே பிடித்திருந்ததாலும் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என திட்டமிட்டிருந்ததாலும் நடிக்க ஒப்புக்கொண்டேன். அவரது இயக்கத்தில் வெளியான ஃபாலமி எனும் திரைப்படத்தில் நடிகர் பசில் ஜோசப் முதன்முறையாக ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பிறகு பசில் ஜோசப் வெற்றிகரமான நாயகனாக உயர்ந்தார்.
இந்த இயக்குநர் மற்றும் அவருடைய குழுவினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருந்தது. முதலில் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டோம். அதன் பிறகு படப்பிடிப்பு தளத்தை கம்பம் பகுதிக்கு மாற்றினோம். அங்கே அரங்கம் அமைத்து 45 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினோம். இந்தப் படத்தில் தண்ணீர் தொட்டி ஒரு கதாபாத்திரமாக இடம் பிடித்திருக்கிறது. அதனையும் உருவாக்கினோம். சிறிய பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டு ஆனால் தயாரிப்பாளரின் விருப்பத்தினால் தாராளமான செலவில் படம் உருவாகி இருக்கிறது. என்னுடைய 45 ஆவது படத்தில்.. 46 நடிகர்களுடன் நடித்த அனுபவம் எனக்கு கிடைத்தது. இந்தப் படத்தில் நடித்திருக்கும் புது முகங்கள் அனைவரும் ஏற்கனவே யூட்யூப் மூலமாக பிரபலமானவர்கள். அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய பங்களிப்பும் நன்றாக இருக்கிறது. இயக்குநர் அவர்களுக்கு ஏற்ற வகையிலும் திரைக்கதையும், வசனங்களையும் அமைத்திருக்கிறார். ஒட்டு மொத்தமாக இந்த படத்தில் ஏராளமான யங் எனர்ஜி இருக்கிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நாளில் அனைவருடைய கண்களிலும் கண்ணீர். நடிகர்கள் மட்டுமல்லாமல் இப்படத்தில் நடித்திருந்த அந்த ஊர் மக்களும் கண்ணீர் விட்டனர். படக்குழுவினரை அவர்கள் வாழ்த்தி விடை கொடுத்தனர்.
இயக்குநர் நிதிஷ் எழுதிய இந்த கதையில் எங்கள் அனைவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. நாங்கள் திரையில் கதாபாத்திரத்தை உணர்த்து தீவிரமாக நடித்துக் கொண்டிருப்போம். ஆனால் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருப்பார்கள். படத்தைப் பார்க்கும்போது ரசிகர்கள் ‘இப்படி எல்லாம் நடக்குமா..! ‘ என ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள்.
தம்பி ராமையா, இளவரசு என எல்லோரும் இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள். மகிழ்ச்சியாக பணியாற்றி இருக்கிறார்கள். இந்த படத்தில் பணியாற்றிய போது என்னுடைய சின்ன சின்ன ஆலோசனையும் இயக்குநருக்கு வழங்கினேன். அத்துடன் இந்த படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லோரும் ஒன்றிணைந்து ஒரு புது முயற்சி.. ஒரு புது ட்ரீட்மென்ட்… புது வகையிலான நெரேட்டிவ்…வருணன் தலைவர் தம்பி தலைமையில் படத்தை உருவாக்கியிருக்கிறோம். இது தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். தமிழில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ளவர்களுக்கு இதை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். உண்மையாக உழைத்து இருக்கிறோம். இதற்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
ஜனவரி 30 ஆம் தேதி தான் இந்த திரைப்படம் வெளியாக இருந்தது. ஆனால் எங்களுக்கு ஜனவரி 15ஆம் தேதி வெளியிடுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஜனநாயகன் படம் வெளியாகாதது குறித்து எங்களுக்கும் வருத்தம் இருக்கிறது. இருந்தாலும் அதற்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். நடிகர் விஜய் ஏராளமான தயாரிப்பாளர்கள்- தொழில்நுட்ப கலைஞர்கள்- நடிகர்களுக்கு- பெரிய ஆதரவாக இருந்திருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளில் எங்களது தயாரிப்பு நிறுவனம் ஏழு எட்டு திரைப்படங்களை தயாரித்து இருக்கிறது. அதனால் எங்களுடைய ஆதரவு எப்போதும் அவருக்கு இருக்கிறது. அதனால் நாங்கள் எப்போதும் போல் விஜயின் ஜனநாயகன் படத்திற்காக ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறோம். அதேபோல் இந்தப் படத்திற்கும் வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறேன்.
தயாரிப்பாளர் கண்ணன் ரவி அவர்களை துபாய் தமிழ் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுவதற்காக என்னுடைய தந்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சௌத்ரியை தேர்வு செய்திருந்தார்கள். அந்த தமிழ் சங்கத்திற்கு தயாரிப்பாளர் கண்ணன் ரவி விளம்பரதாரர் என்பதால்.. அவரை நேரில் சந்தித்தோம். அந்தத் தருணத்தில் இளம் திறமைசாலிகள் கொண்ட குழு இருக்கிறது. அவர்களை வைத்து இப்படி ஒரு காம்பாக்ட் பட்ஜெட்டில் படம் தயாரிப்பதற்கு விருப்பமா? எனக் கேட்டோம். உடனே அவர் தாராளமாக செலவு செய்து நல்லதொரு படத்தை உருவாக்குங்கள் என மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார். அவருக்கும் அவருடைய வாரிசு தீபக் ரவி அவர்களுக்கும் இந்த தருணத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிறுவனம் தற்போது பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.
Tourism Malaysia Chennai Concludes 2025 as South India’s Most Active Tourism Office, Paving the Way for an Unforgettable 2026
Chennai, India – 29 December 2025
Get ready, India! Tourism Malaysia Chennai has wrapped up 2025 with a bang, executing an incredible 234 high-impact activities across South India, cementing Malaysia’s position as a top international destination. With 125 strategic meetings, 42 promotional initiatives, 31 public relations programmes, and 36 brand visibility efforts, Tourism Malaysia Chennai has set the stage for an unforgettable Visit Malaysia Year 2026 (VMY 2026).
South India, you’re the key to Malaysia’s heart. With 148 direct flights and 25,668 weekly seats, Malaysia is closer than ever. Whether it’s leisure travel, MICE, group tours or a quick getaway, seamless access makes Malaysia an easy and attractive choice.
“Our commitment to the Indian market is unwavering,” said Mr. Hishamuddin Mustafa, Director, Tourism Malaysia Chennai. “With visa-free travel extended until December 2026 and robust air connectivity, we are targeting 2 million Indian visitors in 2026. The momentum is strong, and we are ready to welcome Indian travellers in greater numbers.”
From B2B initiatives, cycling events, consumer fares to roadshows and digital campaigns, the energy surrounding VMY 2026 continues to build. With strong partnerships across South India and Sri Lanka, Tourism Malaysia Chennai has already taken a decisive head start towards delivering a successful campaign year.
THE TIME IS NOW – SURREAL EXPERIENCE, VISIT MALAYSIA YEAR 2026!
Tourism Malaysia Chennai extends its sincere appreciation to the Consul General of Malaysia, Chennai, Mr. K. Saravana Kumar and the Home-Based Staff (HBS) of the Consulate General of Malaysia, Chennai, for their continued guidance and valuable support.
With strong partnerships, sustained momentum, and shared commitment, Tourism Malaysia Chennai looks forward to delivering a successful and impactful Visit Malaysia Year 2026.