Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

BP 180 திரை விமர்சனம்

Posted on November 28, 2025

அரசியல் செல்வாக்குடன் சென்னையை கலக்கும் கேங்ஸ்டர் டேனியல் பாலாஜிக்கும், அரசு மருத்துவமனை மருத்துவர் ” பிரேத பரிசோதனை நிபுணர் ” தன்யா ரவிச்சந்திரனுக்கும் இடையே சமூகத்தில்  யார் மதிப்பு  மிக்கவர்  என்று மோதல் ஏற்பட அது எப்படி பழிவாங்கும் என்னமாக  மாறுகிறது என்பதே BP180 படத்தின் திரைக்கதை .
ரேடியன்ட் இன்டர்நேஷனல் மூவிஸ் மற்றும் அதுல் இந்தியா மூவிஸ் சார்பில் பிரதிக் டி சத்பர் & அதுல் எம் போசாமியா இணைந்து தயாரித்துள்ள BP180 படத்தை ஜே.பி இயக்கி உள்ளார். ராஜேஷ் தாக்கூர், பரேஷ் ஜக்தா, ஹிரேன் படேல் ஆகியோர் இணைந்து தயாரிக்க உத்ரா புரொடக்ஷன்ஸ் (ஹரி உத்ரா) இந்த படத்தை வெளியிடுகின்றனர்.

BP180 படத்தில்  “அரசு மருத்துவமனை மருத்துவர் ” பிரேத பரிசோதனை நிபுணராக  கதையின் நாயகியாக நடித்து திரையில்  ரசிக்க வைத்துள்ளார் தன்யா எஸ் ரவிச்சந்திரன் , திரையில் காண்போரை கதி கலங்க வைக்கும் கொடூர வில்லனாக மறைந்த  நடிகர் டேனியல் பாலாஜி திரையில் தனது நடிப்பின் மூலம் ரசிக்க வைத்துள்ளார் , கே.பாக்யராஜ் ஒரு பெண்ணின் பாசமுள்ள அப்பாவாக தனது நடிப்பின் மூலம் திரையில் காண்பவரை கண்கலங்க வைத்துள்ளார் இயக்குனர் நடிகர் கே பாக்யராஜ் , அருள்தாஸ் அரசியல்வாதியாக தனது நடிப்பின் மூலம்  திரையில் ரசிக்க வைத்துள்ளார்  , தமிழ், ஸ்வேதாதோரதி ஆகியோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் வைபோதா BP180 படத்திற்கு இசையமைக்க, ராமலிங்கம் ஒளிப்பதிவும், இளையராஜா சேகர் எடிட்டிங் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். 

டேனியல் பாலாஜி சென்னையில் ஒரு மிகப்பெரிய ரவுடியாக இருக்கிறார். அவரை சில கும்பல் கொலை செய்ய முயற்சி செய்கிறது. மறுபுறம் பாக்யராஜின் மகள் விபத்தில் இறந்துவிட போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் தனது மகளின் உடலை பெற முயற்சி செய்கிறார். ஆனால் மருத்துவர் தன்யா ரவிச்சந்திரன் சட்டத்தின் படி தான் என்னால் நடக்க முடியும் என்று உறுதியுடன் இருக்கிறார். இதனால் கேங்ஸ்டர் டேனியல் பாலாஜிக்கும், அரசு மருத்துவமனை மருத்துவரான தன்யா ரவிச்சந்திரனுக்கும் இடையே ஏற்படும்  மோதல் எப்படி மருத்துவரை பழி வாங்கும் வண்ணமாக  மாறுகிறது என்பதே படத்தின் கதை. இதுவரை இது போன்ற கதைக்களத்தை திரையில் புதுவிதமாக சமுதாயத்திற்கு திரைக்கதை மூலம் சாமானியருக்கும் மக்களுக்கு பணி செய்யும் அரசு அதிகாரிகளுக்கும் உள்ள அதிகாரத்தை ஒரு பெண் மூலமாக தனது திரைக்கதையை கொண்டு சிறப்பாக திரைக்கதை அமைத்து அதை திரையில்” சிந்திக்கவும்” ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர்.

ஜிப்ரானின் பின்னணி இசை திரைக்கதைக்கு காண்போரை PB 180 அதிகரிக்க முக்கிய பங்கு வகித்தது உள்ளது. ராமலிங்கத்தின் ஒளிப்பதிவும் திரையில் காண்பவரை சோர்வு ஏற்படுத்தாமல் ரசிக்க வைத்துள்ளது , இளையராஜா சேகரின் படத்தொகுப்பும் படத்திற்கு மிக பக்க பலமாக அமைந்துள்ளது மிக சிறப்பு . இயக்குனர் JP ஒரு பழிவாங்கும் கதையை திரையில் சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்து இயக்குனர் வெற்றி பெற்றுள்ளார்.

  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
  • RS INFOTAINMENT’S MANDAADI UNVEILS ELECTRIFYING PROMO SONG FEATURING SOORI’S VIRAL DANCE MOVES; CROSSES 75 MILLION+ SOCIAL MEDIA VIEWS
  • 7.5 கோடி பார்வைகளைக் கடந்த ‘மண்டாடி’ புரமோ பாடல்!
  • ஜனநாயகம் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme