Author: admin

  • களவாணி – 2 படத்திற்கு ” பகுதி ” தடை மட்டும் நீங்கியுள்ளது

    களவாணி 2 படத்தை நடிகர் விமல் தயாரிப்பதாக கூறி மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலனிடமிருந்து 13.10.2017-ல் பணத்தை  பெற்று கொண்டு காப்பி ரைட் ஒப்பந்தம் செய்து கொடுத்தார். ஆனால் சொன்னபடி படத்தை தன் பெயரில் தயாரிக்காமல் இயக்குநர் சற்குணம் தயாரிப்பது போல் சித்தரித்து இருந்தார். படத்தின் காப்பிரைட் உரிமையை பெற்றிருந்த மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலன், படத்தின் தமிழக விநியோக உரிமையை தனலட்சுமி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்திடம் வழங்கி இருந்தார்.
    படத்தின் தமிழக விநியோக உரிமை தங்களிடம் தரப்படாமல் இருந்ததால் தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தை அணுகி 6 வார இடைக்கால தடை பெற்றிருந்தது. இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சிங்காரவேலன், விமல், சற்குணம், ஆகியோர் சேர்க்கப்பட்டு இருந்தனர்.
    இந்நிலையில் திடீர் திருப்பமாக மூன்றாம் எதிர்மனுதாரர் இயக்குநர் சற்குணம் நீதிமன்றத்தை அணுகி விமல் செய்து கொடுத்த ஒப்பந்தத்திற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும்,  அதனால்  தடையில் இருந்து தனக்கு மட்டும் விலக்கு அளிக்க மனு அளித்தார்.
    அவர் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் இயக்குநர் சற்குணம் மட்டும் படத்தை வெளியிட தடையில்லை எனவும், மற்றவர்கள் வெளியிட தடை  நீடிப்பதாகவும், கூடுதல் ஆவணங்களுடன் மனுதாரர் மனுதாக்கல் செய்து வழக்கை நடத்தி கொள்ளலாம் எனவும் தீர்ப்பளித்துள்ளது.
    இந்த தீர்ப்பை எதிர்த்து தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் அப்பீல் மனு செய்ய உள்ளது. வழக்கு முடியும் வரை படத்தை வெளியிட்டால், தாங்கள் செலுத்திய பணத்திற்கு நீங்கள் தான் பொறுப்பு  என்று படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கும் ஸ்கிரீன் சீன் நிறுவனத்திற்கும், கஸ்தூரி பிலிம்ஸ் நிறுவனத்திற்கும், முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், வெளிநாடு விநியோகஸ்தர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
    படத்திற்கு பகுதி தடை மட்டுமே நீங்கி  இருப்பதால் பட வெளியீட்டிற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை நீடிக்கும் நிலை உருவாகியுள்ளது.

  • அயோக்யா படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய நடிகர் பார்த்திபன்!!!

    அயோக்யா திரைப்படம் குறித்து அந்தப் படத்தில் நடித்த பார்த்திபன் விமர்சனம் செய்துள்ளார். அயோக்யா திரைப்படம் குறித்து நடிகர் பார்த்திபன் ட்விட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், 1994ஆம் ஆண்டு வெளியான ‘உள்ளே வெளியே’ படத்தை லவுட்டி தன்னையே நடிக்க வைத்தது என்ன ஒரு அயோக்கியாத்தனம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் கதை திருடியது குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி? என இயக்குநருக்கு கேள்வி எழுப்பிய பார்த்திபன், வழக்கு செய்யாமல், பெருமையுடன் பதிவிடுகிறேன் எனவும் கூறியிருந்தார்.

    நடிகர் பார்த்திபனின் இந்த ட்வீட் அயோக்யா படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் சமூகவலைதளங்களிலும் வைரலானது. இந்நிலையில் தனது ட்வீட்டின் பின்னணி குறித்து பார்த்திபன் விளக்கமளித்துள்ளார்.

    இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், ஒப்பீட்டால் ரிப்பீட்டாகும் ரசிகர்கள்! ‘அயோக்கியா’-என் பதிவு ஒரு விளம்பர யுத்தி என்பதை யாராவது கண்டுபிடித்து விடுவார்களோ என யோசித்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளை!. ‘டெம்பர்’ வரும்போது தெரியாது. தமிழாகும் போது தெரியும். இதை கூடிப்பேசி கூத்தடிப்போம் ஷூட்டிங் ஸ்பாட்டில்.

  • வெப் சீரிஸ்களை குறைசொல்ல தேவையில்லை சனம் ஷெட்டி

    தமிழில் அம்புலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, கதம் கதம், சவாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மாறிமாறி நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் மிஷ்கினிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அர்ஜுன் கலைவன் என்பவர் இயக்கிவரும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் சனம் ஷெட்டி.
    ‘பர்மா’ படத்தில் நடித்த மைக்கேல் கதாநாயகனாக நடிக்கிறார். ரிவெஞ்ச் திரில்லர் ஜானரில், அதே சமயம் ஒரு அர்த்தமுள்ள காதல் கதையாக இந்த படம் உருவாகி வருகிறது.. சாதாரண நடுத்தர வீட்டுப்பெண்ணாக நாயகனின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சனம் ஷெட்டி.
    .
    சனம் ஷெட்டி நடிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள ‘டிக்கெட்’ என்கிற ஃபேண்டஸி  படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இது தவிர தற்போது  வெப் சீரிஸ்  பக்கமும் கவனத்தைத் திருப்பியுள்ள இவர் அதிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
    படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது எதற்காக வெப் சீரியஸ் என கேட்டால், “தற்போது எல்லாமே டிஜிட்டல் மயமாகி வருகிறது. அதுமட்டுமல்ல ஒரு நடிகையாக வெப் சீரிஸ் மற்றும் சினிமா இரண்டுக்கு பெரிய வித்தியாசம் எனக்கு தெரியவில்லை. இரண்டுக்கும் ஒரே விதமான உழைப்பைத்தான் கொடுக்கவேண்டி இருக்கிறது. அவை வெளியாகும் தளங்கள் தான் வேறு. தமிழில் வெப் சீரிஸ்கள் ரொம்பவே குறைவாக வருகின்றன. ஆனால் இதற்கான பார்வையாளர்கள் நிறைய இருக்கிறார்கள்.. அதனால் அதற்கான தேவை அதிகமாக இருக்கிறது” என்கிறார்.
    வெப் சீரிஸ் என்கிற பெயரில் சென்சார் அனுமதி தராத விஷயங்களையெல்லாம் உள்ளே புகுத்துவது நியாயமா என்கிற ஒரு கேள்வியையும் அவரிடம் கேட்டால், “கதையை இயல்பான விதத்தில் சொல்ல வேண்டும் என்பதற்காக சில நேரத்தில் எதார்த்தமாக சில விஷயங்களை இணைத்திருப்பார்கள்.. அதில் நாம் தவறு கண்டுபிடித்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை” என்கிறார் சனம்ஷெட்டி.
  • சரண் இயக்கும் மார்கெட் ராஜா MBBS படத்தில் நடிகர் ஆரவ் – நடிகை நிகிஷா படேல்

    இயக்குநர் சரண் இயக்கும் படத்தில் நடிகர் ஆரவ் – உடன் இணைந்துள்ளார் நடிகை நிகிஷா படேல். இப்படத்தின்  தலைப்பு மார்கெட் ராஜா MBBS ஆகும்.
    “நான் இந்தபடத்தில் ஆரவ் உடைய காதலியாக நடித்திருக்கிறேன்  மேலும் படத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். இயக்குநர் சரண் என்னை மிகவும் ஃபேஷனான கதாபாத்திரத்தில் வடிவமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் K.V குகன் தனது வேலையை அருமையாக செய்துள்ளார்.”
     நிகிஷா படேல் தற்போது G.V. பிரகாஷ் குமார் நடித்து இயக்குநர் எழில்  இயக்கும் திகில் படத்திலும் இணைந்துள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பையும்  முடித்துவிட்டார். சமீபத்தில் தான் இவர்  T-series இந்தி இசை ஆல்பத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் நடித்த இரண்டு திரைப்படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறார்.
  • மதன் கார்க்கி உற்சாகப்படுத்தியுள்ளது எது !

    கடினமான உழைப்பு, உறுதியான அர்ப்பணிப்பு இருந்தால் வெற்றி நிச்சயம் வரும். ஆனால் அது புதுமையான விஷயத்தை முயற்சிக்கும் போது கிடைத்தால் அது மிகப்பெரிய சாதனை. பின்பற்றுவதற்கு பாதை எதுவும் இல்லாமல், ஒரு புதிய பாதையை உருவாக்கும் முயற்சி அது. DooPaaDoo என்பது இசையில் புதிய முயற்சிகளை ஊக்கப்படுத்தும் ஒரு இடம். திறமையான இசைக்கலைஞர்களை கண்டுபிடிப்பது, அவர்களுடன் இணைந்து இசையை உருவாக்குவது தான் இவர்களின் நோக்கம். இன்று, ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் முழுமையான ஆல்பத்தை உருவாக்கி, தமிழ் இசை துறையில் DooPaaDoo தன் பெயரை பதித்திருக்கிறது. DooPaaDoo சுயாதீன இசை கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வசதியான தளத்தை உருவாக்கி கொடுக்கிறது.

    பாடலாசிரியர் மற்றும் DooPaaDooவின் இணை நிறுவனருமான மதன் கார்க்கி இது குறித்து கூறும்போது, “இது என்னை மிகவும் . நான் இதை பெருமையால் சொல்லவில்லை, திறமையான சுயாதீன கலைஞர்கள் எங்கள் தளத்தின் மூலம் இசைத்துறையில் புகழ் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 2017ல் ராகவா லாரன்ஸ் மாஸ்டரை சந்தித்தபோது, ​​நாங்கள் அவருக்கு DooPaaDoo பற்றிய புதிய கருத்துகளை அறிமுகப்படுத்தினோம். புதிய முயற்சிகளை பரிசோதித்து பார்க்க எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக் கொண்ட அவர், எங்கள் ஸ்டுடியோவிற்கு வந்தார். அவரது படத்தின் கதையின் சூழ்நிலைகளை அடிப்படையாக கொண்டு பாடல்களை பட்டியலிட்டோம். நாங்கள் அவருக்கு அளித்த அனைத்து பாடல்களையும் கேட்ட அவர், ஆறு பாடல்களை தேர்ந்தெடுத்தார். மேலும் மீதமுள்ள பாடல்களை அவரது அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்துவதாக எங்களுக்கு உறுதியளித்தார். காஞ்சனா 3ல் மிகவும் தனித்தன்மையான விஷயம் என்னவென்றால், பாடலின் பின்னணியில் உள்ள எந்த பெயரையோ அல்லது கலைஞர்களின் அடையாளங்களையோ நாங்கள் வெளிப்படுத்தவில்லை. நாங்கள் நினைத்தது வெற்றியாக மாறி, DooPaaDooவை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியிருக்கிறது. கலைஞர்களின் பெயர்களை தெரிந்து கொள்ளாமலேயே காஞ்சனா 3 பாடல்களை ரசிகர்கள் ரசிப்பதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை இது விரைவில் ஒரு நடைமுறையாகவும் மாறலாம். அதாவது, ஒரு சிறந்த இசையின் வெற்றி கலைஞரின் திறமை, பாடல்களின் தரம் மற்றும் கலையின் புத்துணர்வைப் பொறுத்து இருக்குமே தவிர, அந்த இசையுடன் சம்பந்தப்பட்ட பிராண்டை ஒட்டி இருக்காது” என்றார்.

    தங்களது எதிர்கால திட்டங்கள் குறித்து DooPaaDooவின் தலைவர் & CEO கவுந்தேயா கூறும்போது, “நாங்கள் இன்னும் பல இயக்குனர்களுடன் இணைந்து செயல்பட முயற்சிக்கிறோம். சுயாதீன கலைஞர்களை இன்னும் நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்கவும், அவர்களின் புகழை விரிவுபடுத்தவும் முயற்சிக்கிறோம். ராகவா லாரன்ஸ் மாஸ்டர், DooPaaDooவை அவர் படத்துக்கு முயற்சித்ததோடு நில்லாமல், மற்ற இயக்குனர்களுக்கும் பரிந்துரை செய்வதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். DooPaaDoo காஞ்சனா 3 மூலம் 6 கலைஞர்களுக்கு வாய்ப்பை பெற்று தந்ததில் மகிழ்ச்சி அடைகிறது. மேலும் இதில் இருந்து இன்னும் பலரை அறிமுகப்படுத்த விரும்புகிறோம்” என்றார்.

  • அறிமுக இயக்குனர் பிரித்வி படத்தில் நடிகர் ஆதி

    ஒவ்வொரு படத்திலும் தொடர்ச்சியாக வெற்றியை சுவைத்து வரும் நடிகர் ஆதியின் கதை தேர்வு பாணி அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. டிராமா, திரில்லர், ஃபேண்டஸி என அனைத்த் வகை திரைப்படங்களிலும் தனது மகத்தான நடிப்பால் நட்சத்திரமாக பிரகாசித்திருக்கிறார். தற்போது அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா இயக்கும் தடகள விளையாட்டு அடிப்படையிலான முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    “நான் ஸ்கிரிப்ட்டை, கதாபாத்திரத்தை எழுதி முடித்த உடனே அந்த கதாபாத்திரத்தில் ஆதி சாரை தான் நினைத்து கற்பனை செய்து பார்த்தேன். தடகள வீரருக்கு தேவையான கட்டுமஸ்தான உடலை அவர் கொண்டிருப்பது தான் முதன்மையான காரணம். ஸ்கிரிப்ட் முடிந்ததும், நான் அவரை சந்தித்து ஸ்கிரிப்டை விவரிக்க முடிவு செய்தேன். அவரது அடுத்தடுத்த படங்கள் பெரிய அளவில் இருந்தன, இது நடக்குமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. இறுதியாக, இந்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவது என்னை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறது, மிகச் சிறப்பான படத்தை கொடுக்க முயற்சி செய்வேன். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. பிரவீன்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். அவர் முதன் முதலில் ஒளிப்பதிவு செய்த ஜீவி திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அவர் செய்த ‘மண்ணின் மைந்தர்கள்’ சிறப்பு நிகழ்ச்சி மிகவும் பிரபலம்” என்றார்.

    தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக விளையாட்டு அடிப்படையிலான திரைப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன, ஆனால் இந்த படம் அதில் இருந்து விதிவிலக்கானது என்று உறுதியளிக்கிறார் இயக்குனர் பிரித்வி. “இது ‘தடகள’ விளையாட்டு உலகில் நடக்கும் கதை, தனது கனவுகளை நிறைவேற்ற கதாநாயகன் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி பேசும் ஒரு படம்” என்றார்.

    நாயகியாக நடிக்க தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒளிப்பதிவாளர் பிரவீன்குமார் தவிர்த்து, படத்தொகுப்பாளர் ராகுல் மற்றும் கலை இயக்குனர் வைரபாலன் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐபி கார்த்திகேயன்.

    பிஎம்எம் ஃபிலிம்ஸ் மற்றும் கட்ஸ் & குளோரி ஸ்டுடியோஸ் ஜி மனோஜ், ஜி ஸ்ரீஹர்ஷா ஆகியோருடன் இணைந்து தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிறது.

  • கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பு நிறைவு – உலகெங்கும் செப்டம்பரில் வெளியீடு

    ரெதான் நிறுவனத்தின் இந்தர்குமார் ‘குற்றம்-23’, ‘தடம்’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து, தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’.
    தன் குருநாதர் சசிகுமாரை நாயகனாக வைத்து, SR.பிரபாகரன் இயக்கிய ‘சுந்தரபாண்டியன்’ வெற்றிப் படத்தை தொடர்ந்து, ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்திற்காக இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.
    1990 – 1994 கால கட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த, பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். படத்தின் நாயகன் நாயகியாக சசிகுமார், மடோனா  செபாஸ்டியன் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ் ஃபெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, தீபா ராமனுஜம், சென்றாயன்,  மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
    நவம்பர் 12-ம் தேதி காரைக்குடியில் துவங்கிய படப்பிடிப்பு ஒரே கட்டமாக இடைவிடாமல் பொள்ளாச்சி, பழனி, தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர், குற்றாலம் பகுதிகளில் நடந்து, இனிதே பொள்ளாச்சியில் நிறைவு பெற்றது.
    ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, திபு நைனன் தாமஸ் இசையில், டான் பாஸ்கோ படத்தொகுப்பில், ஸ்டன்ட் காட்சிகளை அன்பறிவ் வடிவமைக்க, மைக்கேல்ராஜ் கலையில், யுகபாரதி, மோகன்ராஜ் மற்றும் அருண்ராஜா காமராஜ் பாடல்கள் எழுத, மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனித்துக் கொள்ள, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் SR.பிரபாகரன். தயாரிப்பு – ரெதான்’ இந்தர்குமார்.
  • திகில் படத்தில் தானா நாயுடு

    கொடைக்கானல் சென்னை பாண்டிச்சேரி போன்ற இடங்களில் 45நாட்கள்  படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படத்தின் கதாநாயகி தானாநாயுடு துபாயில் பிறந்து வளர்ந்தவர் இப்போது லண்டனில் படித்துக் கொண்டிருக்கிறார்.  இந்த படத்தில் நடிப்பதற்காக 45நாட்கள் இந்தியா வந்து நடித்து முடித்து சென்றுள்ளார்.

    படம் பற்றி  இயக்குனரிடம் கேட்டோம்..

    உலகம் முழுவதும் இன்று வரை பேய் என்றால் ஒரு விதமான பயம் இருக்கத்தான் செய்கிறது

    தானாநாயுடு இப்படத்தில் ஒரு எழுத்தாளராக  நடிக்கிறார்.

    அவர் பேயை பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்து அதற்கான தேடுதலில் இறங்குகிறார்.

    பல வருடங்களாக பேய் வீடு என்று மக்களால் சொல்லப்பட்டு  பூட்டியே கிடக்கும் ஒரு வீட்டை தேர்ந்தெடுக்கிறார். அந்த வீட்டின் பிரச்சனையை ஆராயத் துவங்கும் போது ஒரு பெண்ணாக நிறைய பிரச்சனைகளை  சந்திக்கிறார். அதிலிருந்து மீண்டாரா என்பதை திகில் படமாக உருவாக்கி இருக்கிறோம்.

    இந்த  பேபி கைலா பங்கேற்ற பாடல் காட்சி ஒன்றை வித்தியாசமாக படமாக்கினோம். 

    ஐந்து லட்ச ரூபாய்க்கு பொம்மைகளை வாங்கி பாடல் காட்சியை படமாக்கினோம் என்றார் இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன்.  இவர் இண்டர்நேஷ்னல் கராத்தே பெடரேசன் அமைப்பபின்  செலக்டிவ் குருப்பில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்பது கூடுதல் தகவல்.

  • மெரினா புரட்சியை வெளிக்கொண்டு வர இயக்குனர் நடத்திய சென்சார் போராட்டம்

    கடந்த 2017ல் மெரினாவில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர். இந்த மாபெரும் போராட்டம், மெரினா புரட்சி என்ற பெயரில் படமாக தயாராகியுள்ளது. நாச்சியாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை எம்.எஸ்.ராஜ் இயக்கியுளார். யூடியூப் ‘புட் சட்னி’ புகழ் ராஜ்மோகன், மெரினா புரட்சியில் பங்கெடுத்த நவீன், சுருதி மற்றும்  பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
    இத்திரைப்படத்திற்கு, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் படத்தொகுப்பு செய்துள்ளார். அல்ருஃபியான் இசையமைத்துள்ளார். இந்தப்படம் தணிக்கை அதிகாரிகளால் சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டு, ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டு, பின் நீதிமன்ற கதவுகளை தட்டி ஒரு வழியாக சென்சார் (U) சான்றிதழ் பெற்று ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.
    இந்த வலி மிகுந்த பயணம் குறித்து இயக்குனர் எம்.எஸ்.ராஜ் பல விறுவிறுப்பான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
    “2017ல் மெரினாவில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சி போராட்டம் நடத்தினர். மெரினாவில் பல லட்சம் பேர் ஒன்று கூடினாலும், அவர்களை இங்கே ஒன்றுகூடும்படி தன்னெழுச்சியாக வரவழைத்தது வெறும் 18 இளைஞர்கள் தான். மற்றபடி நடிகர்களோ எந்த இயக்கத்தை, அமைப்பை சேர்ந்தவர்களோ அல்ல.. அந்த 18 பேருக்கும் என்ன நோக்கம், மக்களை எப்படி திரட்டினார்கள், வெற்றிகரமாக இந்த போராட்டத்தை எப்படி முடித்தார்கள் என இதில் கூறியுள்ளோம்.
    இந்த ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்டது யார், அதன்பின்னால் உள்ள அரசியல் என்ன, இந்த போராட்டத்தை ஒடுக்க என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, அதை இளைஞர்கள் சாமர்த்தியாக எப்படி முறியடித்தார்கள், கடைசி நாள் போராட்டம் வன்முறைக்களமாக மாறியதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்  என்கிற உண்மையெல்லாம் மக்களுக்கு தெரியவேண்டும் என்கிற நோக்கத்தில் தீவிரமாக புலனாய்வு செய்தே இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம்..
    இந்த ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணம் பீட்டா என்றும், நாட்டு மாடுகளை அழிப்பதுதான் பீட்டாவின் குறிக்கோள் என்றும் நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் பீட்டாவின் நோக்கம் அதுவல்ல. பீட்டா இங்கே களமிறங்கியதே இன்னொரு தீவிரமான விஷயம் ஒன்றுக்காக. அதற்காக அவர்களுக்கு பல கோடி ரூபாய் எங்கே இருந்து கிடைத்தது..? அந்த பணத்தை கொண்டு எந்தெந்த அரசியல்வாதிகளை, எந்தெந்த நடிகர் நடிகைகளை அவர்கள் விலைக்கு வாங்கினார்கள், அதன்மூலமாக அவர்களை எப்படி தூண்டிவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக இந்த தடையை வாங்கினார்கள் என்பதை இந்தப்படத்தில் புட்டுப்புட்டு வைத்துள்ளோம்
    இதன் பின்னணியில் ஒரு பிரபல நடிகை இருந்துள்ளதை இதில் அடையாளம் காட்டியுள்ளோம்…. அவரைப்பற்றிய உண்மை தெரியவரும்போது படம் பார்ப்பவர்களுக்கு இவரா அவர் என்கிற அதிர்ச்சி நிச்சயம் ஏற்படும். காரணம் ஜல்லிக்கட்டு மற்றும் பீட்டா விவகாரத்தில்  குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே நமக்கு எதிரானவர்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். ஆனால் நமக்கு நன்கு தெரிந்த இன்னும் பலர் இதன் பின்னனியில் இருப்பது வெளியே தெரியவே இல்லை. குறிப்பாக நமது ஜல்லிக்கட்டை தடைசெய்ய வேண்டும் என கூறி முக்கிய காரணமாக இருந்தவர்கள் இரண்டு தமிழர்கள் தான்.. அவர்கள் யாரென்பதை  அதை இதில் பகிரங்கப்படுத்தி இருக்கிறோம்.
    இதனாலேயே இந்தப்படத்திற்கு இங்கே சென்சார் சான்றிதழ் தரவே மறுத்தார்கள். மறு சீராய்வு குழுவிற்கு அனுப்பப்பட்டு அங்கே படம் பார்த்த நடிகை கௌதமியும் இதேபோன்று சில காரணங்களை சொல்லி கையை விரித்துவிட்டார்.
    வேறு வழியின்றி நீதிமன்றத்தின் கதவை தட்டினோம்.. இந்த வருடம் ஜனவரி 7ஆம் தேதி படத்தை பார்த்துவிட்டு சான்றிதழ் வழங்கவேண்டும் என உத்தரவிட்டது நீதிமன்றம்.
    ஆனால் ஜன-17ஆம் தேதி இரண்டாவது மறு சீராய்வு குழு நடிகை ஜீவிதா தலைமையில் படத்தை பார்த்துவிட்டு சில இடங்களில் காட்சிகளை நீக்கும்படி கூறினார்கள் ..ஆனால் இந்தப்படத்தில் உண்மை அப்படியே இருக்கட்டும்.. பொய் என எதை நீங்கள் நினைக்கிறீர்களோ அதை மட்டும் நீக்கி விடுங்கள் என உறுதியாக கூறினோம். இந்தப்படத்தை பார்த்த அதிகாரிகள் மத்திய அரசு என்கிற வார்த்தை வரும் இடங்களை எல்லாம் ம்யூட் செய்ய கூறிவிட்டனர். அப்படி சுமார் 18 இடங்களில் நாங்கள் ம்யூட் செய்துள்ளோம். ஆனால் அதன்பிறகும் உடனே சான்றிதழ் அளிக்காமல் காலம் தாழ்த்தி இதோ இப்போது மே மாதம் தான் சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
    எந்த காரணத்தை கொண்டும் மத்திய அரசையும் பீட்டாவையும் விமர்சிக்கும் இந்தப்படத்தை வெளியாகவிடாமல் தணிக்கையின்போதே தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்றுதான் சிலர் திட்டமிட்டு காய்களை நகர்த்தினார்கள். ஆனால் நீதிமன்றம் இதில் தலையிட்டதால் இனி படத்தை வெளியிடுவதை தடை செய்யமுடியாது என்பது அவர்களுக்கு தெளிவாக தெரிந்துவிட்டது.
    இதற்கிடையே அமெரிக்காவில் உள்ள தமிழனரான ஜேசு சுந்தர மாறன் என்பவர் இந்தப்படத்தை வெளியிடுவதற்காகவே ஜெ ஸ்டியோஸ் எனும் நிறுவனம் துவங்கி அதன் மூலமாக கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், உள்ளிட்ட 11 நாடுகளில் சிறப்புக்காட்சியாக இந்தப்படத்தை திரையிட்டார்.. அனைத்து இடங்களிலும் படம் பார்த்தவர்கள் எங்களுக்கு ஆதரவான குரலையே எழுப்பினார்கள். இங்கிலாந்தில் இந்தப்படத்தை திரையிடுவதற்கு பீட்டா எதிர்ப்பு தெரிவிததபோது, கருத்து சுதந்திரம் அனைவர்க்கும் உண்டு என கூறி அதை பிரிட்டன் அரசு ஏற்க மறுத்துவிட்டது.
    அதேபோல சிங்கப்பூரில் இந்தப்படத்தை இந்தவருடம் மாட்டுப்பொங்கலன்று வெளியிட்டு விடவேண்டும் என தீவிரமாக செயல்பட்டோம்.. ஆனால் இங்குள்ளா அதிகார வர்க்கத்தினர் சிங்கப்பூரில் உள்ளவர்களுக்கு அழுத்தம் கொடுத்து தமிழர்கள் மொத்தமாக ஒரே இடத்தில் ஒன்று கூடினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதை காரணம் காட்டி திரையிட விடாமல் செய்தனர்.. அப்படியும் போராடி அன்றைய தினம் ஒரு காட்சியை திரையிட்டோம்.
    எங்களுடைய நீண்ட நெடிய போராட்டத்தின் பயனாக இதோ இந்த மே மாத இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய தயாராகி வருகிறோம். 82 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப்படம் காலகாலத்திற்கும் உலகமே வியந்து பார்த்த நம் தமிழர்களின் மெரினா போராட்டம் குறித்து நினைவலைகளை அடுத்து வரும் தலைமுறையினர் மத்தியில் எழுப்பிக்கொண்டே இருக்கும்.. அப்படி ஒரு வரலாற்று பதிவாக இந்தப்படம் இருக்கும்.” என்கிறார் இயக்குனர் எம்.எஸ்.ராஜ்.