Author: admin

  • கடல போட பொண்ணு வேணும்

    குழந்தை பருவத்திலிருந்தே திரைத்துறையில் இருக்கும் ஒரு சில கலைஞர்களுக்கு சினிமாவுடன் பிரிக்க முடியாத ஒரு பந்தம் இருக்கும். குழந்தை நட்சத்திரங்களாக இருந்து குடும்ப ரசிகர்களின் அன்பு மற்றும் ஆதரவை பெற்று, இறுதியாக நல்ல வரவேற்புடன் நாயகிகளாக உயர்வார்கள், அந்த வகையில் பலரையும் நாம் பார்த்திருக்கிறோம். இது நடிகை மனிஷாஜித்துக்கும் அப்படியே பொருந்தும், அவர் அடுத்த படமான “கடல போட பொண்ணு வேணும்” படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ஆர்வமாக காத்திருக்கிறார்.
    சினிமா துறையில் தனது நீண்ட கால பயணத்தை பற்றி நடிகை மனிஷாஜித் கூறும்போது, “எனது முதல் படம் கம்பீரம். அதில் சரத்குமார் சாரின் மகள் கதாபாத்திரத்தில் நடித்தேன். அதனை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக கிட்டத்தட்ட 40 படங்களில் நான் நடித்திருக்கிறேன். சஞ்சீவ் நாயகனாக நடித்த நண்பர்கள் கவனத்திற்கு படத்தில் முதன் முறையாக நாயகியாக நடித்தேன், அதனை தொடர்ந்து கமர்கட் படத்தில் நடித்தேன், அடுத்த படம் ஆண்டாள் விரைவில் வெளியாக இருக்கிறது. எனது தற்போதைய படமான “கடல போட பொண்ணு வேணும்” பற்றி சொல்வதென்றால், வித்தியாசமான கரு மற்றும் ஒரு அணுகுமுறையில் உருவாகியுள்ள ஒரு திரைப்படம். இந்த படக்குழுவில் உள்ள ஒவ்வொருவரும் அவர்கள் துறையில் திறமையானவர்கள். அசார் உடன் நடிக்கும்போது அவர் நம்மை தொடர்ந்து சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். இயக்குனர் ஆனந்த் அவருக்கு என்ன தேவை என்பதில் மிகவும் கவனமாகவும், உறுதியாகவும் இருப்பார். எங்களை போன்ற கலைஞர்கள் எப்போதும் எங்கள் பாணியில் நடிக்க முயற்சி செய்வது பொதுவான விஷயம். ஆனால் செட்டுக்குள் நுழைவதற்கு முன்பே கலைஞர்களிடமிருந்து என்ன வாங்க வேண்டும் என்பதை அவர் முடிவு செய்திருப்பார். அவர் எங்களை சிறப்பாக நடிக்க வைக்க நடித்து காட்டவும் தயங்க மாட்டார். இந்த படத்தில் பணிபுரிந்தது ஒரு அற்புதமான விஷயம். அவர்கள் என்னை ஒரு குடும்ப உறுப்பினரை போலவே நடத்தினார்கள், புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள எனக்கு அதிக இடம் கொடுத்தார்கள்” என்றார்.
  • பாகிஸ்தானை தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலும் குண்டுவெடிப்பு.. காபூலில் பயங்கரம்.. பலர் படுகாயம்

    !

    காபூல்: ஆப்கானிஸ்தானில் நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
    இன்று காலை பாகிஸ்தான் லாகூரில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். லாகூரில் தாதா தர்பார் மசூதிக்கு வெளியே மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற இருக்கிறது.

    இந்த தாக்குதலின் சுவடுகள் மறையும் முன் தற்போது ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றுள்ளது. காபூலில் உள்ள ஷார் நாவ் பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
    அங்கிருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் கட்டிடங்களை குறிவைத்து காரில் இந்த குண்டு வைக்கப்பட்டு தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்து இருக்கிறது.
    லாலு பிரசாத்துகாக யாதவர்கள் அளித்து வந்த ஆதரவு சரிகிறதா?
    இதில் சிலர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது ரம்ஜான் மாதம் என்பதால் உலகம் முழுக்க இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகிறார்கள். ஆப்கானிலும் மக்கள் ரம்ஜான் மாதத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த மோசமான தாக்குதல் நடந்துள்ளது.
    இந்த தாக்குதலுக்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தான் தாக்குதலுக்கும் இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

  • களவாணி -2 பஞ்சாயத்து விரைவில் முடிவுக்கு??????????

    விரைவில் முடிவுக்கு வருகிறது களவாணி -2 பஞ்சாயத்து..

    நடிகர் விமலுக்கும் தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்குமான பிரச்சனை, இயக்குநர் சற்குணம் தயாரிப்பாளர் சிங்காரவேலன் இடையிலான பிரச்சனையாக மாறி வருவதால், அதனைத் தீர்ப்பதற்காக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக பதவி வகித்த பட்டுக்கோட்டை மகேந்திரன் திருப்பரங்குன்றம் தேர்தல் பணியிலிருந்து உடனடியாக சென்னை திரும்பி வந்துள்ளார். நடிகர் விமலுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக இருப்பதாகவும், பணத்தை திருப்பித்தர நடிகர் விமல் தயாராகி வருவதாகவும், இன்னும் இரண்டு தினங்களுக்குள் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தரப்பு வழக்கை வாபஸ் வாங்கி விடும் என சேலத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

  • ஐஸ்வர்யா ராஜேஷ் காதலன் யார் என சொல்லுங்கள்

    என் காதலன் யார் என சொல்லுங்கள்❗ – ஐஸ்வர்யா ராஜேஷ்

    ‘கனா’ வெற்றிக்கு பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இணைந்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் காதலில் விழுந்துவிட்டதாகவும் விரைவில் அவருக்கு திருமணம் என்றும் தகவல்கள் சமூக வலைத்தளத்தில் உலா வந்தது. இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவிட்டுள்ள டீவீட்டில் “எனது காதல் கதை குறித்த வதந்திகளைக் கேட்டு கொண்டிருக்கிறேன். வதந்தி பரப்புபவர்கள் அந்த காதலன் யார். என்பது குறித்து எனக்கும் சொல்லுங்கள். அவர் யார் எனத் தெரிந்துகொள்ள நானும் ஆவலுடன் இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதுபோன்ற வதந்திகளை பரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

  • கமல்ஹாசன் நடிப்பில் தேவர் மகன் 2 படத்தை துவங்க முடிவு செய்துள்ளார்!!!!!!!!!!!!!!!!!!

    இந்தியன் 2’விற்கு பதிலாக ‘தேவர் மகன் 2’ – கமல்ஹாசன் திட்டம் ❗

    லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவிருந்த ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முதல்கட்ட படப்ப்பிடிப்புடன் நின்றுவிட்டது. இதனைத்தொடர்ந்து இந்த படத்தை லைகா நிறுவனம் கைவிட்டதாகவும், அதற்கு பதிலாக ரிலையன்ஸ் அல்லது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த கமல், தேர்தலுக்கு பிறகு ‘இந்தியன் 2’ படத்திற்கு பதிலாக ‘தேவர் மகன் 2’ . மேலும் ‘தேவர் மகன் 2’ படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் பொள்ளாச்சியில் துவங்கியுள்ளது.

  • விஷால் மீண்டும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியா???????????

    மீண்டும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியா❓ – ⭐விஷால்

    தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் மீது தொடர் புகார்கள் வந்ததையடுத்து தமிழக அரசு சங்கத்திற்கு என தனி அதிகாரியை நியமித்துள்ளது. இதனை எதிர்த்து விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விஷால் இது குறித்து கூறுகையில், மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் போட்டியிடுவது சந்தேகமே என்றும். தமிழக அரசு தனி அதிகாரி விஷயத்தில் காட்டிய அக்கறையை பைரசி விஷயத்தில் காண்பித்திருக்கலாம் என்றும் கூறினார்.

  • பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் இணைகிறார் எஸ்.ஜே.சூர்யா

    பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் இணைகிறார் எஸ்.ஜே.சூர்யா

    இயக்குநர் பா.ரஞ்சிதா தற்போது ‘இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித், எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ஒரு படத்தை தயாரிக்கவுக்கதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ளார். இதனிடையே எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ‘மான்ஸ்டர்’ திரைப்படம் வருகின்ற 17ம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • ரஜினியின் தர்பார்’ படத்தில் மற்றுமொரு பாலிவுட் நடிகர்

    ரஜினியின் தர்பார்’ படத்தில் மற்றுமொரு பாலிவுட் நடிகர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தர்பார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதைக்களம் மும்பையை பின்னணியாகக் கொண்டுள்ளது. இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர்கள் பிரதீக் பாப்பர், ஜதின் சாமா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் பாலிவுட் மூத்த நடிகர் தலிப் தாஹில் தர்பார்’ படத்தில் இணைந்துள்ளார். இவர், சூர்யா நடித்த அஞ்சான்’ படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • நடிகர் சங்க தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள்!!!!

    மீண்டும் கூடுகிறது செயற்குழு

    கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இவர்களது பதவிக்காலம் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டட பணிகள் காரணமாக 6 மாத காலத்துக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

    அந்த 6 மாதகால அவகாசம் முடிவு பெற்றிருக்கும் நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மீண்டும் அவசர செயற்குழு கூட்டம் வரும் 14ம் தேதி அன்று தி.நகரில் உள்ள விடுதியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • பாடகி சின்மயிக்கு அனுமதி மறுப்பு ??

    தலைமை நீதிபதிக்கு எதிராக போராட்டம் நடத்த சின்மயிக்கு அனுமதி மறுப்பு

    தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை உச்சநீதிமன்றம் உரிய முறையில் விசாரிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி பின்னணி பாடகி சின்மயி சென்னை காவல்துறைக்கு மனு ஒன்றை அனுப்பியிருந்தார். இந்த மனுவை பரிசீலனை செய்த சென்னை காவல்துறை

    சின்மயி போராட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் அளித்த விளக்கத்தில் “நீதித்துறைக்கே எதிராக நடைபெறும் போராட்டமாக இதனை ?கருதுவதால் இந்த போராட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது” என்று இந்த மனுவை தள்ளுபடி செய்ததாக தெரிவித்துள்ளனர்.