
இந்திய விமானப்படையின் துணிச்சலையும் பாரம்பரியத்தையும் கௌரவிக்கும் வகையில், கார்கில் போரின் போது நடத்தப்பட்ட உலகின் மிக உயரமான விமான நடவடிக்கையின் (Air operation) கதையைச் சொல்கிறது நெட்ஃபிலிக்ஸின் இந்தத் தொடர்.
புது தில்லி, நவம்பர் 2, 2025: கார்கில் போரில் இந்திய விமானப்படையின் முக்கிய பங்கை எடுத்து சொல்லும் வகையில் நெட்ஃபிலிக்ஸில் வரவிருக்கும் தொடரான ’ஆபரேஷன் சஃபேத் சாகர்’ இருக்கிறது. புது தில்லியில் முதன்முதலில் நடைபெற்ற செகோன் இந்திய விமானப்படை மராத்தான் 2025 (SIM-25) இல் வெளியிட்டபோது இந்தியாவின் உற்சாகம் உச்சத்தை எட்டியது. அபிஜீத் சிங் பர்மர் மற்றும் குஷால் ஸ்ரீவஸ்தவா ஆகியோரால் உருவாக்கப்பட்டு ஓனி சென் இயக்கியுள்ள இந்தத் தொடரில் சித்தார்த், ஜிம்மி ஷெர்கில், அபய் வர்மா, மிஹிர் அஹுஜா, தாருக் ரெய்னா மற்றும் அர்னவ் பாசின் உள்ளிட்ட பலர் பணியாற்றியுள்ளனர்.
புது தில்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் பணியாற்றும் அதிகாரிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல்- ஏ.பி. சிங் உள்ளிட்ட பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்திய விமானப்படையின் பெருமைக்காக ஒன்றிணைந்தனர். தேசபக்தி நிறைந்த இந்த சூழலுக்கு மத்தியில், நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்கத் துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் மற்றும் தொடர் தலைவர் தன்யா பாமி ஆகியோர் 2026 ஆம் ஆண்டில் நெட்ஃபிலிக்ஸின் மிகப்பெரிய இந்தியத் தொடராக இருக்கும் என்று உறுதியளிக்கும் இதன் டீசரை வெளியிட்டனர்.
இந்திய விமானப்படையின் ஆதரவுடன் மேட்ச்பாக்ஸ் ஷாட்ஸ் மற்றும் ஃபீல் குட் பிலிம்ஸ் தயாரித்த ’ஆபரேஷன் சஃபேத் சாகர்’ தொடர் கார்கில் போரின் அதிகம் அறியப்படாத, உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். தாய்நாட்டிற்காகப் போராடுவதற்காக துணிச்சலான மற்றும் ஆபத்தான பணியை மேற்கொள்ள தங்கள் வரம்புகளைத் தாண்டிச் சென்ற IAF விமானிகளின் கதையை சொல்கிறது. செயல்பாட்டு இந்திய விமானப்படை தளங்களில் விரிவாக படமாக்கப்பட்ட இந்தத் தொடரில் MiG விமானங்கள் மற்றும் IAF பணியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்க துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது, “போர்க்களத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கதையாக ’ஆபரேஷன் சஃபேத் சாகர்’ தொடரை இன்று வெளியிடுவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இது நமது நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க எல்லாவற்றையும் தாண்டிச் சென்றவர்களின் தைரியம், நட்பு மற்றும் தேசபக்தி பற்றியது. கார்கில் போரில் வீரர்களின் சாகசங்களையும் தியாகங்களையும் போற்றும் வகையில் இந்தத் தொடரின் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த இந்திய விமானப்படைக்கு நன்றி. மேட்ச்பாக்ஸ் ஷாட்ஸ் மற்றும் ஃபீல் குட் பிலிம்ஸ் பார்ட்னர்ஷிப் எங்களுக்கு மிகப்பெரிய பலம். மேலும் இந்திய விமானப்படையின் வலிமை, ஒழுக்கம் மற்றும் அசைக்க முடியாத மனப்பான்மையை பிரதிபலிக்கும் இந்தக் கதையை உயிர்ப்பிக்க அபிஜீத் சிங் பர்மர், குஷால் ஸ்ரீவஸ்தவா, ஓனி சென் மற்றும் மெஹபூப் பால் சிங் பிரார் போன்றவர்களுடன் பணியாற்றியது சிறப்பு!” என்றார்.
சஞ்சய் ரௌத்ரே, மேட்ச்பாக்ஸ் ஷாட்ஸின் இணை நிறுவனர் மற்றும் இயக்குநர் பகிர்ந்து கொண்டதாவது, “’ஆபரேஷன் சஃபேத் சாகர்’ தொடர் வெறும் போரைப் பற்றியது மட்டுமல்ல! தைரியம், தியாகம் மற்றும் மாற்றம் பற்றியது. உண்மையான IAF தளங்களை அரிதாகவே அணுக முடியும். ஆனால், இந்திய விமானப்படையின் அசைக்க முடியாத ஆதரவு மூலம் இதை சாத்தியப்படுத்தி, துணிச்சலுக்கு புது அர்த்தம் கொடுத்த போர் விமானிகளுக்கு சமர்ப்பித்துள்ளோம். இந்தக் கதையை எங்களிடம் கொண்டு வருவதில் கோ-கிரியேட்டர் குஷால் ஸ்ரீவஸ்தவா முக்கிய பங்கு வகித்தார். நெட்ஃபிலிக்ஸ் உடனான பார்ட்னர்ஷிப் இந்தக் கதையை மேலும் வலுவாக்கவும் உலகில் உள்ள பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கு கொண்டு செல்லவும் எங்களுக்கு உதவியது”.
ஃபீல் குட் பிலிம்ஸின் அபிஜீத் சிங் பர்மர் மற்றும் மெஹபூப் பால் சிங் பிரார் பகிர்ந்து கொண்டதாவது, “’ஆபரேஷன் சஃபேத் சாகர்’ என்பது மன உறுதி மற்றும் மனித மனங்களைப் பற்றிய கதை. நெட்ஃபிலிக்ஸ் மற்றும் இந்திய விமானப்படையுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் அந்த உணர்வை நம்பகத்தன்மையுடனும் படம்பிடிக்க முடிந்தது. இந்தக் கதையை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.
இந்திய விமானப்படையின் ஆழம், உணர்வுகள் மற்றும் நிஜ வாழ்க்கை சாகசங்களுடன் உருவாகியுள்ள ’ஆபரேஷன் சஃபேத் சாகர்’ இராணுவ கதை சொல்லலில் மைல்கல்லாகும். இதுவரை அதிகம் அறியப்படாத இந்திய கதைகளை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நெட்ஃபிலிக்ஸின் உறுதிப்பாட்டை இந்தத் தொடரை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ’ஆபரேஷன் சஃபேத் சாகர்’ 2026 இல் நெட்ஃபிலிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிறது.