பம்பர் திரை விமர்சனம்
இயக்குனர் எம். செல்வகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பம்பர். இந்த படத்தில் வெற்றி, சிவானி நாராயணன், ஜி.பி.முத்து,தங்கதுரை உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் இந்த உட்பட கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்
பணத்திற்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் வாலிபர் புலிப்பாண்டியை (வெற்றி) அறிமுகம் செய்து வைக்கிறார்கள். காந்தி ஜெயந்தி அன்று மது விற்பனை செய்தால் நிறைய சம்பாதிக்கலாம் என தன் அம்மாவிடம் கூறுகிறார் புலிப்பாண்டி.
அரசியல்வாதியின் கொலையில் புலிப்பாண்டியும், அவரின் நண்பர்களும் சிக்குகிறார்கள். அந்த கொலையை அவர்கள் செய்யவில்லை. புதிதாக வந்திருக்கும் போலீஸ் அதிகாரியிடம் இருந்து தப்பிக்க சபரிமலைக்கு செல்ல முடிவு செய்கிறார்கள். அந்த சபரிமலை பயணத்திற்கு பின் தன் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பம் ஏற்படும் என்பது புலிப்பாண்டிக்கு தெரியாது.
பம்பர் படத்தின் கதாநாயகன் வெற்றி (புலிப்பாண்டி) தன்னுடைய நண்பர்கள் மூவருடன் சேர்ந்து தூத்துக்குடியில் திருட்டு வேலை செய்து வருகிறார். இதனால் இவர்களை போலீஸ் தேடுகிறது. அதிகாரியிடம் இருந்து தப்பிக்க சபரிமலைக்கு செல்ல முடிவு செய்கிறார்கள் சபரிமலைக்கு வெற்றி தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மாலை போடுகிறார். பின் நான்கு பேரும் சபரிமலைக்கு செல்கிறார்கள். அங்கு வயதான முஸ்லிம் நபர் ஒருவர் லாட்டரி சீட்டு டிக்கெட் வாங்குகிறார் புலிப்பாண்டி. அந்த டிக்கெட்டால் தன் வாழ்க்கையில் நல்லவிதமான மாற்றம் வரப் போகிறது என்பது தெரியாமல் அதை அதே இடத்தில் தொலைத்துவிடுகிறார்.
புலிப்பாண்டி வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு ரூ. 10 கோடி பரிசு விழுகிறது. அதை அவரிடம் சொல்லி லாட்டரி டிக்கெட்டை கொடுக்க கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் முதியவரின் நேர்மை நம்மை ஈர்க்கிறது. முன்பின் தெரியாக ஒருவருக்கு உதவி செய்ய அந்த நேர்மையான லாட்டரி விற்பனையாளர் இவ்வளவு செய்வது பாராட்டுக்குரியது. திரைக்கதை மட்டும் வலுவாக இருந்திருந்தால் படத்தின் தாக்கம் அதிகமாக இருந்திருக்கும்.