Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
இன்ஃபினிட்டி விமர்சனம்

இன்ஃபினிட்டி திரை விமர்சனம்

Posted on July 7, 2023

மென்பனி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சாய் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இன்ஃபினிட்டி’. இந்த படத்தில் நட்டி நட்ராஜ், வித்யா பிரதீப், முனீஷ்காந்த், சார்லஸ் வினோத், வினோத் சாகர், ஜீவா ரவி என பலரும் நடித்துள்ளனர். சரவணன் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் பாலசுப்ரமணியம் இசையமைத்துள்ளார்.

இன்ஃபினிட்டி படத்தில் ஆரம்பத்தில் இளம்பெண் ஒருவர் எரித்து கொல்லப்படுகிறார். இதனிடையே பாரில் ஒருவர், எழுத்தாளர் ஒருவர் என இருவர் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். இதனை விசாரிக்க சென்ற காவல்துறை அதிகாரியும் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கு சிபிஐ அதிகாரியாக உள்ள நட்டியிடம் விசாரணைக்கு வருகிறது. பல கட்ட விசாரணைக்குப் பின் எரித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கும், இந்த தொடர் கொலைக்கும் சம்பந்தம் உள்ளதை கண்டறிகிறார்.

படத்தை ஒன் மேன் ஆர்மியாக தாங்குகிறார் நட்ராஜ். ஆனால் அவரின் தோற்றம் கர்ணன் படத்தின் கொடூர பார்வையும், முக அமைப்பையும் நியாபகப்படுத்துகிறது. அதேசமயம் ஆரம்பத்தில் சாஃப்ட் ஆக வந்து வில்லியாக மாறும் வித்யா பிரதீப் இன்னும் மிரட்டியிருக்கலாம்.

படத்தில் கொலைக்கான காரணமும், அதன் பின்னால் இருக்கும் காட்சிகளும் கதைக்கு கொஞ்சம் கூட வலுசேர்க்கவில்லை. மேலும் ‘இன்ஃபினிட்டி’ படம் இரண்டாம் பாகத்துக்கான லீடை கொடுத்திருப்பதால், ஒருவேளை அடுத்த பாகம் எடுக்கப்பட்டால் முதல் பாகத்தில் இருந்த குறைகள் களையப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. பின்னணி இசை சில இடங்களில் கைக்கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் ‘இன்ஃபினிட்டி’ படம் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறது .

  • Thee Kural exciting is the opportunity it creates for emerging voices to bring their own realities, perspectives and identities to the forefront
  • நூறு கோடி வானவில் ZEE5 ஓடிடி இணைத்தொடர் விமர்சனம்
  • பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!
  • SAMANTHA RUTH PRABHU MOVED TO TEARS AS CELEBRITY MASTERCHEF TAMIL CONTESTANTS SURPRISE HER WITH HEARTFELT GIFTS AND MEMORIES!
  • சாமந்தாவைக் கண்கலங்க வைத்த போட்டியாளர்கள்… அன்புப் பரிசுகளால் நெகிழ வைத்த ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ !
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme