Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
முந்திரிக்காடு

முந்திரிக்காடு விமர்சனம்

Posted on April 7, 2023

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், நடிகர் மற்றும் இயக்குனருமான சீமான், சாதி வெறிபிடித்த இளைஞர்களுக்கு படம் முழுவதும் அட்வைஸ் கொடுத்துக் கொண்டேயிருக்கிரார். படத்தில், போலீஸ் அதிகாரியாக வரும் இவர், கட்சி கூட்டங்களின்போது, மேடையில் பேசுவதுபோல பல காட்சிகளில் தமிழர் பெருமை-தமிழரின் பண்பு என அடுக்கு மொழியில் வசனம் பேசும் சீமான் படத்திற்கு பலம் சேர்கிறார் சீமான், கண்டிப்பாக முந்திரிக்காடு படம், பலரின் கவனத்தை ஈர்த்திருக்கும்.

படத்தின் ஹீரோ சாதி விட்டு சாதி மாறி காதலிக்கும் காதலர்களின் காதலை ஹீரோவாகவும் அவர்களை பிரிக்க இடையில் இருக்கும் சாதியை வில்லனாகவும் காண்பித்துள்ளனர். “காதல்தான் சாதியை ஒழிக்க இருக்கும் ஒரே ஆயுதம்..” என இவர்கள் கூற வரும் கருத்தினை ஏற்றுக்கொள்ள சற்று நெருடலாகத்தான் உள்ளது. கிராமப் புறங்களில் சாதி வெறிபிடித்து இருப்போரை “நகரத்துக்கு வாங்க டா..அங்க இருந்துட்டு சாதியப் பத்தி நினைக்காம செத்துப்போங்க டா..” எனக்கூறுவது ஏற்புடையதாக இல்லை. ஏனென்றால், நகரத்தில் சாதி இருப்பதை மறுப்பது போலாகிறது.

தமிழ்நாட்டில் கிராமத்தில், சாதிதான் எல்லாம். அங்கு சாதி மாற்றி காதலிக்கும் ஜோடிகளை தேடித்தேடி வெட்டிக் கொலை செய்கிறது, அவ்வூரில் உள்ள சாதிய வெறிபிடித்த கும்பல். அந்த கிராமத்தில், IAS கனவுடன் வாழும் உயர் சாதியை சேர்ந்த ‘தெய்வம்’ என்ற பெண்ணிற்கும், போலீஸ் கனவுடன் வாழும் கீழ் சாதி இளைஞன் செல்வாவிற்கும் இல்லாத காதலை இருக்கு எனக்கூறி சம்பந்தப்பட்டவர்களை சாதி பெருமை என்ற பெயரில் துன்புறுத்துகின்றனர்,சாதியவாதிகள்.

இப்படி இவர்களே ஒரு பொய்யை கிளப்பி விட, தெய்வத்திற்கும் செல்லாவிற்கும் உண்மையிலேயே காதல் வந்து விடுகிறது. இதனால். அந்த சாதி கும்பல், கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அந்த காதல் ஜோடியை அழிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். ஒரு கட்டத்தில், ‘தெய்வம்’ (நாயகியை )ஊருக்கு நடுவில் வைத்து முடியை அறுத்து மானபங்கம் செய்கின்றனர். இவ்வளவையும் தாண்டி, தெய்வம், செல்லாதான் வேண்டும் என ஒற்றை காலில் நிற்க, அவளை கொல்ல வேண்டும் என அப்பெண்ணின் சாதியை சேர்ந்தவர்கள் முடிவெடுக்கின்றனர். நாயகி கொலை செய்யப்பட்டாரா? செல்லாவும் தெய்வமும் வாழ்க்கையில் இணைந்தார்களா? போன்ற கேள்விகளுக்கு விடையாக வருகிறது திரைக்கதை.

  • அன்பால் தான் விஜய் முதல்வரானார் – ஆகாயம் பட விழாவில் தினம்தோறும் நாகராஜ்!!
  • Karthik Subbaraj’s ‘Dorothy’ Makes World Premiere at TIFF, Marks First Indian Tamil Feature at Festival in a Decade
  • இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படம் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது!
  • G.D. Naidu, which has transitioned from a steady theatrical run into an international streaming phenomenon.
  • நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவான ‘ஜி.டி.என்.’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் உலகளாவிய டாப் 10 திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme