Author: admin

  • தமிழகத்தில் தொடரும் ஆதரவு- விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

    டெல்லி: இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இத்தடை 2 ஆண்டுகள் அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகின்றன.
    இதேபோல் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பல நாடுகள் தீவிரவாத இயக்கத்தின் பட்டியலில் சேர்த்தன. கடந்த 2006-ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியனும் தீவிரவாத இயக்கப் பட்டியலில் இணைத்தது. இதனால் ஐரோப்பிய நாடுகள் அந்த இயக்கங்களுக்கு தடை விதித்தன.
    இதை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2017-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

    இலங்கை: முஸ்லிம்கள் மீது கொடூர தாக்குதல்- வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரை- சொத்துகள் சூறை!
    அதில் 2009-ம் ஆண்டுக்குப் பிறகு விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்பதால் அந்த அமைப்பிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக தீர்ப்பளித்தது. எனினும் இந்தியாவில் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கப்படவில்லை.
    இந்த நிலையில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் அதாவது 2024-ம் ஆண்டு வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் விடுதலை புலிகளுக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது.
    தமிழகத்தில் விடுதலை புலிகள் ஆதரவை பெருக்க முயற்சிகள் நடக்கின்றன. விடுதலைப் புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கின்றன. இதனால் வரும் 2024-ஆம் ஆண்டு வரை ஊபா (Unlawful Activities (Prevention) Act- UAPA) சட்டத்தின் கீழ் விடுதலை புலிகள் இயக்கத்தின் தடை நீட்டிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    Indian Government extended ban of LTTE for 5 more years .

  • ராகவா லாரன்ஸ் மக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில்

    சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியின்றி வாழ்பவர்கள் இந்த உலகில் மிகவும் குறைவு. அந்த குறைவானவர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அவர் செய்து வரும் அறம் சார்ந்த சேவைகள் எல்லாம் பலபேர்களை வாழ்வில் கரம் பிடித்து தூக்கி விட்டிருக்கிறது.

    தன் அன்னைக்கு கோவில் கட்டியதோடு இல்லாமல் கடந்த அன்னையர் தினத்தன்று தாய் அமைப்பு என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதிய தெய்வங்களை காக்கும் பொருட்டு சில பலமான முன்னெடுப்புகளை துவங்கியுள்ளார். அதைப்போலவே தன்னை நாடி வரும் மக்களுக்கு மட்டும் அல்லாமல் தான் தேடிச் சென்றும் நல்லுதவி செய்வதற்காக தற்போது ராகவா லாரன்ஸ் ஒரு திட்டத்தை வகுத்திருக்கிறார்.

    இதைப்பற்றி ராகவா லாரன்ஸ் கூறும்போது,

    “என்னுடைய ஒவ்வொரு படிகளுக்கும் அடிநாதமாக இருப்பது இளைஞர்கள் தாய்மார்கள் ஆகிய ரசிகர்களும் முக்கியமாய் குழந்தைகளும் தான். அவர்களுக்கு வெறும் நன்றி சொல்வதோடு என் கடமை முடிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் ஒவ்வொரு முயற்சிகளாக செய்து வருகிறேன். தற்போது தாய் அமைப்பு ஒன்றை நிறுவி இருக்கிறோம்.
    மக்களுக்கு சேவை செய்ய இனி எனது ஒவ்வொரு படத்தின் ரிலீஸுக்குப் பிறகும் 15-நாட்கள் மக்களை நேரடியாக சந்திக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன். காஞ்சனா சீரிஸ் படங்கள் தொடர்ந்து 100 கோடிகளுக்கும் மேல் வசூல் குவிக்கிறது என்றால் அதற்கு குழந்தைகள் தான் பெரிய காரணம். அதனால் இந்த சேவையை குழந்தைகளிடம் இருந்தே துவங்க விருப்படுகிறேன். குடும்பச் சூழல் காரணமாக கல்வி கிடைக்கப் பெறாத குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க வேண்டும் என்பதே தற்போதைய நோக்கம். மேலும் பல நல்ல யோசனைகள் உள்ளது. அவை அனைத்தையும் நடைமுறைப் படுத்த நல்லோர்கள் வாழ்த்தும் ஆண்டவன் அருளும் கிடைக்கும் என்று நம்புகிறேன்” இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

    இதன் துவக்கமாக கஜா புயலால் வீட்டை இழந்த சமூக சேவகர் கணேசனுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பில் வீடு கட்டி அதன் கிரகபிரவேசத்தை இன்று நேரில் சென்று நடத்தியுள்ளார் லாரன்ஸ்.
    கொடுப்பவர்களுக்குத் தான் தெய்வம் கொடுக்கும் என்பார்கள். லாரன்ஸ் அவர்களுக்கு  தெய்வம் ஒருபோதும் கொடுப்பதை நிறுத்தாது என்ற நம்பிக்கையை அவர் தொடர்ந்து பலப்படுத்திக் கொண்டே இருக்கிறார். வாழ்க அவரது சேவை!

  • பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன்” என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயார் மு.க.ஸ்டாலின்

    திருமதி தமிழிசை சவுந்திரராஜனோ அல்லது திரு நரேந்திர மோடியோ “மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன்” என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயார்; நிரூபிக்கத் தவறினால் அவர்கள் இருவரும் அரசியலை விட்டு விலகத் தயாரா?”

    – கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேள்வி

    “மோடியுடனும் ஸ்டாலின் பேசி வருகிறார். பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என தெரிந்துதான் எங்களுடன் பேசி வருகிறார்” என்று “பச்சைப் பொய்” நிறைந்த ஒரு பேட்டியை பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அளித்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோல்வியின் விளிம்பிற்கு சென்று விட்ட பா.ஜ.கவிற்கு இதுபோன்று குழப்பங்களை விதைப்பது கைதேர்ந்த விளையாட்டு. ஆனால் பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் பிறந்த திருமதி தமிழிசை சவுந்திரராஜன் இப்படியொரு “பொய்” பேட்டியை அளிப்பதற்காக தன்னை இந்த அளவிற்கு தரம் தாழ்த்திக் கொண்டு விட்டாரே என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்.

    காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தியை முதன்முதலில் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது திராவிட முன்னேற்றக் கழகம்தான். அதே நேரத்தில் ஐந்தாண்டு காலத்தில் மக்களுக்கு சொல்லொணாத் துயரத்தை அளித்த பிரதமர் திரு நரேந்திர மோடியை “பாசிஸ்ட்” “சேடிஸ்ட்” “சர்வாதிகாரி” என்று முதன்முதலில் விமர்சித்தது மட்டுமின்றி, “மீண்டும் இந்தியாவின் பிரதமராக திரு நரேந்திர மோடி வரவே கூடாது” என்று சென்னையில் மட்டுமல்ல- கல்கத்தாவிலும், டெல்லிலும் மாறி மாறி பிரச்சாரம் செய்தவனும் அடியேன்தான். தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியிலும் அதே பிரச்சாரத்தை செய்திருக்கிறேன். நடைபெறவிருக்கின்ற நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் மே 23 ஆம் தேதியுடன் பிரதமர் திரு மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்பதை உறுதியாகவும், இறுதியாகவும் பேசி வருகிறேன்.

    இதைப் பொறுக்க முடியாத பா.ஜ.க. மேலிடத் தலைவர்கள் கடைந்தெடுத்த அரசியல் கயமைத்தனம் மூலம் அ.தி.மு.கவை மிரட்டி கூட்டணி வைத்தது போல், இட்டுக்கட்டிய பேட்டிகளை கற்பனைக் குதிரைகள் போல் தட்டி விட்டு தி.மு.க.வை வம்புக்கு இழுக்க முயற்சிக்கிறார்கள். தி.மு.க.வின் வெற்றியும், அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றியும் அந்த அளவிற்கு பா.ஜ.க.வை மிரட்டி விட்டது. பிரதமர் திரு நரேந்திர மோடி உள்ளிட்ட மேலிடப் பா.ஜ.க. தலைவர்களின் சுயநலனுக்கு திருமதி தமிழிசை சவுந்திரராஜன் கடைசிக்கட்டமாக பகடைக்காயாக ஆக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா முதல்வர் திரு சந்திரசேகர் ராவ் அவர்கள் இப்போது முதன்முதலாக என்னை வந்து பார்க்கவில்லை. இதற்கு முன்பும் வந்து சந்தித்து விட்டுச் சென்றிருக்கிறார். இந்த முறை அவர் சந்தித்து விட்டுச் சென்றவுடனையே “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்று தி.மு.க. தலைமைக் கழகத்திலிருந்து தெளிவான பத்திரிக்கைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குழப்பவாதிகள் அப்போதாவது குறிப்பறிந்திருக்க வேண்டும். ஆனாலும் “மரியாதை நிமித்தமான சந்திப்பிற்கு” காது மூக்கு வைத்து, பூச்சூடி பொட்டு வைத்து வெளியில் விட்டால் தி.மு.க.விற்கு விழும் சிறுபான்மையின வாக்குகளை இந்த நான்கு இடைத்தேர்தல்களில் தடுத்து விடலாம்- சிதறடித்து விடலாம் என்றும், மக்களவைத் தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவிருக்கின்ற நிலையில் திரு ராகுல் காந்தி அவர்களை பிரதமராக முன்னிறுத்திய தி.மு.க.வின் பிரச்சாரத்தை முனை மழுங்கச் செய்து விடலாம் என்றும் “தப்புக் கணக்கு”ப் போட்டு திருமதி தமிழிசை இந்த பேட்டியை திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு கொடுத்திருக்கிறார். குறிப்பாக அ.தி.மு.க அமைச்சர் திரு ஜெயக்குமார் சொன்னதை திருமதி தமிழிசை சவுந்திரராஜன் வழி மொழிந்திருக்கிறார் என்றால் ஊழல் அ.தி.மு.கவை எப்படியாவது இந்த நான்கு இடைத் தேர்தலிலாவது தோல்வியடைய விட்டுவிடக் கூடாது என்று “போகாத ஊருக்கு பொய்யான வழி தேடியிருக்கிறார்”! “உனக்கு நான்”, “எனக்கு நீ” என்று ஊழல் அ.தி.மு.கவும், மதவாத பா.ஜ.க.வும் கச்சை கட்டிக் கொண்டு “தி.மு.க தலைமையிலான” கொள்கைக் கூட்டணிக் குளத்தில் கல் எறியும் இந்த முயற்சி படு தோல்வியடையும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    திராவிட முன்னேற்றக் கழகம், “அ.தி.மு.க- பா.ஜ.க” போல் திரைமறைவில் “தரகு” பேசும் கட்சியல்ல. கொள்கையை பகிரங்கமாக அறிவித்து- யார் பிரதமர் என்பதை முன்கூட்டியே மக்களிடம் எடுத்துக் கூறி- யார் பிரதமராகக் கூடாது என்பதை இன்னும் தெளிவாக எடுத்துரைத்து தேர்தலைச் சந்தித்து வருகின்ற கட்சி. அந்த வகையில்தான் இந்த மக்களவைத் தேர்தலையும் திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்துள்ளது. மத்தியில் பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகக்கூடாது என்பதிலும் தி.மு.க. உறுதியாக இருக்கிறது. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் மதசார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதிலும், திரு ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதிலும் அதைவிட இரட்டிப்பு மடங்கு உறுதியுடன் இருக்கிறது. ஆகவே, கழகத் தலைவராக பொறுப்பேற்ற போது நான் உறுதியளித்தது போல், இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசை மே 23- ஆம் தேதிக்குப் பிறகு மாற்றிக்காட்டுவோம்! முதுகெலும்பில்லாத இந்த அ.தி.மு.க அரசைத் தூக்கியெறிவோம்!

    திருமதி தமிழிசை சவுந்திரராஜனோ அல்லது அவர் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று ஆசைப்படும் திரு நரேந்திர மோடியோ “மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன்” என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயாராக இருக்கிறேன். அப்படி இருவரும் நிரூபிக்கத் தவறினால் திரு நரேந்திர மோடியும், மாநில பா.ஜ.க. தலைவராக இருக்கும் திருமதி தமிழிசை சவுந்திரராஜனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?

  • சீனாவின் 5 ஜி மொபைல் வசதி கொண்ட பஸ்கள்

    அறிமுகப்படுத்தப்பட்டிருக்குது . அதி நவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள 5 ஜி சேவையால், மேப் வசதி, வீடியோ கான்பரன்சிங், நேரடி ஒளிபரப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பயணிகள் பெறமுடியுமாம் . 4k தொழில்நுட்பத்தில் இயங்கும் அகன்ற திரைகொண்ட தொலைக்காட்சிகள் பொருத்தப்பட்டு உள்ளதால், நிகழ்ச்சிகளை தங்கு தடையின்றி பயணிகள் கண்டுகளிக்கலாம் எனவும் இதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவிச்சிருக்குது. விரைவில் நூறு 5 ஜி சேவை நிலையங்கள் நிறுவப்பட உள்ளதால், 5 ஜி பேருந்துகளில் கூடுதல் வசதியும் ஏற்படுத்தப்படலாம் எனவும் கூறப்படுது.

  • திருப்பதி மலையில் மழை வேண்டி இன்று துவங்கி ஐந்து நாட்கள் யாகம்!!!

    திருப்பதி: மழை வேண்டி திருப்பதி மலையில் இன்று துவங்கி ஐந்து நாட்கள் வரை காரீரி இஸ்ட்டி யாகம்,திருப்பதியில் உள்ள கபிலேஷ்வரர் கோவிலில் வருண ஜபம், ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் நாத நீராஞ்சனம் மேடையில் அமிர்தவர்ஷ்னி ராக ஆலாபனை நடைபெறுகிறது.

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு.

    தமிழ்நாடு,ஆந்திரா,தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பிரபல வேத விற்பன்னர்கள் மற்றும் தேவஸ்தான வேத பண்டிதர்கள் ஆகியோர் நடத்துகின்றனர்.

    நாட்டில் குறிப்பாக தென் இந்தியாவில் வறட்சி தாண்டவமாடும் தற்போதைய நிலையில் மழை வேண்டி திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று துவங்கி 18 ம் தேதி வரை ஐந்து நாட்கள் திருப்பதி மலையில் உள்ள பாரிவேட்டை மண்டபத்தில் மழையை வரவழைக்க நடத்தப்படும் காரீரி இஸ்ட்டி யாகம் என்ற பெயரிலான யாகத்தையும்,திருப்பதி மலை அடிவாரத்தில் இருக்கும் கபிலேஷ்வர சாமி கோவிலில் வருணஜபத்தையும்,ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் நாத நீரச்ஞ்சனம் மேடையில் மழையை வரவழைக்கும் அமிர்தவர்ஷினி ராக ஆலாபனை நிகழ்ச்சியையும் நடத்துகிறது.


    இந்த நிலையில் இன்று காலை திருப்பதி மலையில் உள்ள பாரிவேட்டை மண்டபத்தில் காரீரி இஸ்ட்டி யாகம் துவங்கியது.தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால்,இனை நிர்வாக அதிகாரி லட்சுமி காந்தம் ஆகியோர் தம்பதி சமேதர்களாக காரீரி இஸ்ட்டி யாகத்தில் கலந்து கொண்ட நிலையில் உடல் முழுவதும் கருமை நிறம் கொண்ட கருப்பு குதிரை,கருப்பு ஆடு ஆகியவற்றை யாக சாலை முன் நிறுத்தி காஞ்சி காமகோடி பீடத்தின் ஏற்பாட்டில், தமிழ்நாடு, ஆந்திரா,தெலங்கானா,கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து வந்திருந்த வேதவிற்பன்னர்கள், தேவஸ்தான வேத பண்டிதர்கள் ஆகியோர் யாகம் வளர்த்து காரீரி இஸ்ட்டி யாகம் நிர்வகித்தனர்.


    அதேபோல் திருப்பதி மலை அடிவாரத்தில் இருக்கும் கபிலேஷ்வரசுவாமி கோவிலில் வருண ஜபம் நடத்தப்பட்டது. ஏழுமலையான் கோவிலில் இருக்கும் நாத நீராஞ்சனம் மேடையில் இசைக்கலைஞர்கள் மழையை வரவழைக்கும் சக்தி படைத்த அமிர்த வர்ஷ்னிராக ஆலாபனை நடத்துகின்றனர்.
    இந்த நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், கடந்த 2017 ஆம் ஆண்டு வறட்சி ஏற்பட்டபோது மழை வேண்டி தேவஸ்தானம் சார்பில் காரீரி இஸ்ட்டி யாகம்,வருண ஜபம் ஆகியவை நடத்தப்பட்டன அந்த ஆண்டில் சிறப்பான முறையில் மழை பெய்து நாடு செழிப்படைந்தது.
    இந்த ஆண்டிலும் தேவஸ்தானம் நடத்தும் காரீரி இஸ்ட்டி யாகத்தைத் தொடர்ந்து சிறப்பான முறையில் மழை பெய்து நாடும்,நாட்டு மக்களும் வலம் பெறுவார்கள் என்று கூறினார்.
    இம் மாதம் 18 ம் தேதி வரை காரீரி இஸ்ட்டி யாகம்,வருணஜபம்,அமிர்தவர்ஷ்னி ராக ஆலாபனை ஆகியவை தொடர்ந்து நடை பெறும்.

  • K PRODUCTION சார்பில் அர்கா மீடியா நிறுவனத்திற்கு கண்டனம்

    ARKA MEDIA WORKS ENTERTAINMENT LLP தீங்கிழைக்கும் நோக்கில் K PRODUCTION மற்றும் இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் மீது வியாபார ரீதியில் பரப்பியுள்ள தவறான குற்றச்சாட்டுக்களுக்கு நங்கள் எங்கள் நிறுவனம் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ARKA MEDIA WORKS ENTERTAINMENT அவர்கள் சொல்லும் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது.

    ARKA MEDIA WORKS ENTERTAINMENT சார்பில் எங்களுக்கு எதிராக நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் (04.05.2019 ) அன்று ஹைதராபாத் நகர சிவில் நீதி மன்ற 24 வது கூடுதல் தலைமை நீதிபதி மற்றும் வணிக நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் எங்களுக்கு எதிராக எந்த தடையும் இல்லை என்று அறிவித்துள்ளது.

    நாங்கள் ARKA MEDIA WORKS ENTERTAINMENT LLP எந்த வித பணமும் செலுத்த தேவையில்லை. அதன் விளைவாக அவர்கள்தான் எங்கள் K PRODUCTION நிறுவனத்திற்கு பல கோடிகள் தரவேண்டியுள்ளது.

    நாங்கள் ARKA MEDIA WORKS ENTERTAINMENT LLP மீது சட்ட ரீதியாக எங்கள் பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

    இதன் மூலமாக அனைவரிடமும் நாங்கள் கேட்டுக்கொள்வது என்வென்றால் ARKA MEDIA WORKS ENTERTAINMENT LLP கூறியுள்ள தவறாக செய்தியை பரப்புவதை பார்த்து அதை யாரும் பின்பற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

  • விஜய்64 படத்தை இயக்கப்போவது யார் ????????

    தளபதி 63 படத்துக்கு பிறகு அடுத்த படத்தை இயக்குனர் மோகன்ராஜா தான் இயக்குவார் என்று நம்பி இருந்த நமக்கு மிக பெரிய ஏமாற்றம் ஆம் ஒரு புதுமுக இயக்குனர் தான் இயக்கப்போகிறார் இதற்கு ஒரு படம் ஆனால் மிக பெரிய வெற்றி படத்தை இயக்கியவர் யாருன்னு தானே வாங்க பாக்கலாம்.

    சர்கார் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். விஜய் உடன் நயன்தாரா, விவேக், யோகிபாபு, கதிர், ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட பலர் நடிக்க, ரஹ்மான் இசையமைக்க, ஏஜிஎஸ்., நிறுவனம் தயாரிக்கிறது.

     

    கால்பந்தாட்ட கதையில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் கால்பந்தாட்ட வீரராகவும், பயிற்சியாளராகவும் இரண்டு விதமான மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்பட்டாத இப்படத்தை தற்காலிகமாக விஜய் 63 என்றே அழைத்து வருகின்றனர்.

    இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் விஜய்யின் 64வது படம் குறித்த செய்தி வெளியாக தொடங்கி உள்ளது. இப்படத்தை இயக்குநர் மோகன் ராஜா இயக்கப்போவதாக தகவல் வெளியான நிலையில், இப்போது இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜின் பெயரும் அடிபடுகிறது.

    மாநாகரம் எனும் படத்தை இயக்கிய இவர், முதல்படத்திலேயே அனைவரையும் ஈர்க்க வைத்தார். இவர் சொன்ன கதை விஜய்க்கு பிடித்து போய், தனது அடுத்தப்படத்தை இவருக்கே கொடுத்துவிட்டதாக சொல்கிறார்கள். ஆகையால் விஜய்யின் 64வது படம் லோகேஷ் இயக்கலாம் என கூறப்படுகிறது. இருந்தாலும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை

  • மிஸ்டர் லோக்கல் யாருடன் பார்க்கவேண்டிய படம்– சிவகார்த்திகேயன்

    குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோ சிவகார்த்திகேயன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Mr.லோக்கல். ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா மிக பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் கோடை விருந்தாக வரும் மே 17ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றியும், தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
    கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் வியாபாரம் எனக்கு தெரியும். 2 மடங்கு லாபம் கொடுத்த ஒரு படம். அதில் இருந்து அவரின் ஒவ்வொரு படத்தின் வியாபாரத்தையும் கவனித்து வருகிறேன், மிகப்பெரிய உயரத்துக்கு போயிருக்கிறார். குழுந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு மிகவும் பிடித்த ஆல் செண்டர் ஹீரோவாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். சிவா சார் படம் எப்போ ரிலீஸ் பண்ணாலும் ஹிட் அடிக்கும், இது உச்சக்கட்ட கோடையில் வெளியாகிறது, இந்த கோடையில் இந்த படம் ஆட்சி செய்யும் என்றார் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன்.
    ராஜேஷ் முதல் படத்திலிருந்து நான் அவருடன் இணைந்து எல்லா படத்திலும் பணியாற்றி வருகிறேன். ஹிப் ஹாப் ஆதியிடம் பேசும்போது பல்லவி, சரணம் எல்லாம் எனக்கு தெரியாதுனு சொல்வார், ஆனால் பாடல்கள் எல்லாம் செம்மயா இருக்கும். சிவகார்த்திகேயன நடிச்ச எல்லா படங்களிலுமே நான் ரெண்டு, மூணு பாடல்கள் பண்ணிருவேன். 2011ல சிவாவ நான் எப்படி பார்த்தேனோ, அப்படியே இருக்கார், மாறாமல் அப்படியே இருக்கிறார் என்றார் நடன இயக்குனர் தினேஷ்.
    என் பெயர் லக்‌ஷ்மி நாராயணன். ஆனால் ஓகே ஓகேவில் நடிச்சவர்னு தான் எல்லோருக்கும் என்னை தெரியும். அந்த பெயரை வாங்கி கொடுத்த ராஜேஷ் சாருக்கு நன்றி, இந்த படம் ரிலீஸ் ஆனப்புறம் மிஸ்டர் லோக்கல்ல நடிச்சவர்னு பேர் வாங்கி தரும் என்றார் நடிகர் லக்‌ஷ்மி நாராயணன்.
    ராஜேஷ் சார் படம் என்றாலே குடும்பத்தோடு ரசித்து பார்க்கும் படமாக இருக்கும். சிவாவை அப்போ எப்படி பார்த்தோமோ அப்படியே இருக்கார். ஒவ்வொரு காட்சியிலும் மற்ற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க ஒரு பெரிய மனசு வேண்டும். அவர் நடனத்திலும் மிகப்பெரிய உயரத்தை தொட்டிருக்கிறார். ஹிப் ஹாப் ஆதி இளைஞர்கள் அனைவரையும் ஈர்த்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்றார் நடிகர் ரோபோ சங்கர்.
    மிஸ்டர் லோக்கல் படத்தில் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன், ஆதி அவர்கள் இசைக்கு பாடல் எழுதுவது ரொம்ப ஈஸி. ட்யூன் போடும்போது அவரே பாதி பாடலை எழுதி விடுவார். இந்த ஒரு குழுவில் பணிபுரிந்தது மிகப்பெரிய அனுபவம் என்றார் பாடலாசிரியர் மிர்ச்சி விஜய்.
    ஞானவேல்ராஜா சாருடன் இன்று நேற்று நாளை படத்தில் தான் எனக்கு அறிமுகம் கிடைத்தது. அவருடன் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்திருக்கிறேன். இயக்குனர் ராஜேஷ் சாரின் அணுகுமுறையே வித்தியாசமாக இருக்கும், இந்த படத்துக்கு 9 பாடல்கள் இசையமைத்தோம், அதில் 4 பாடல்கள் தான் படத்தில் இருக்கும். அவருடன் வேலை பார்த்தது மிக நல்ல அனுபவம். சிவகார்த்திகேயன் அவர்களுக்கு முதன்முறையாக இசையமைக்கிறேன். இந்த படத்தில் அனிருத் பாடியிருப்பது எனக்கு ஸ்பெஷலான ஒரு தருணம். இது முழுக்க முழுக்க நகைச்சுவையான ஒரு படம், ஹீரோ ஸ்தானத்திலுருந்து இறங்கி செம்ம லோக்கலா காமெடியில் கலக்கியிருக்கிறார் சிவா என்றார் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி.
    கேடி பில்லா கில்லாடி ரங்கா சமயத்தில் எப்படி அவரை சந்தித்தேனோ, அதே மாதிரி தான் இன்றும் இருக்கிறார் சிவகார்த்திகேயன். எவ்வளவு பெரிய படத்தையும் தன் தோள்களில் தாங்கக் கூடிய ஒரு ஹீரோவாக இன்று மாறியிருக்கிறார். வழக்கமாக விநியோகஸ்தர்கள் தான் எப்போ ரிலீஸ் எப்போ ரிலீஸ்னு கேட்பாங்க. ஆனால் இந்த படத்துக்கு குழந்தைகள், குடும்பங்கள் எப்போ ரிலீஸ்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க. ராஜேஷ் ஒரு எளிமையான இயக்குனர். எந்த சூழ்நிலையிலும் கூலாக இருப்பவர். டி.ராஜேந்தர் சாருக்கு அடுத்து அதிகப்படியான துறைகளில் வித்தகர் ஹிப் ஹாப் ஆதி தான். ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நயன்தாரா. முழுநீள பொழுதுபோக்கு திரைப்படமாக வந்திருக்கிறது. என் வாழ்வில் மிக முக்கியமான, சிரமமான காலகட்டத்தில் எனக்கு இந்த படத்தை பண்ணி கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இதை எக்காலத்திலும் மறக்க மாட்டேன் என்றார் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா.
    சிவகார்த்திகேயன், ஞானவேல்ராஜா சாருடன் இந்த படத்தை நான் செய்கிறேன் என்ற பேச்சுவார்த்தை வந்த உடனேயே எனக்கு பெரிய ஹிட் படமா கொடுத்துருங்க என்றார் ஞானவேல்ராஜா சார். குடிக்கிற காட்சிகள், குடித்து விட்டு பாடுற பாடல், பெண்களை திட்டி பாடுற பாடல் என எதுவும் வேண்டாம் சார் என்றார் சிவகார்த்திகேயன். அப்படி எதுவும் இந்த படத்தில் இருக்காது, கிளீன் படமாக இருக்கும். சிவா சார் தொலைக்காட்சியில் இருந்த காலத்தில் இருந்தே நான் அவரின் ரசிகனாக இருக்கிறேன். இந்த படத்தில் இவ்வளவு நடிகர்கள் வந்ததற்கு முக்கிய காரணமே சிவா சார் தான். அத்தனை பேரையும் ஒரே படத்தில் கொண்டு வந்தது தான் சவாலான விஷயம், அதை சிறப்பாக செய்து கொடுத்தார் ஞானவேல்ராஜா. ராதிகா மேடம் இத்தனை வருடங்களாக நடித்து வருபவர், அவரின் அனுபவம் எங்களுக்கு ஒரு பாடம். நான் நெகடிவ்வான விஷயங்களை விரும்புவதில்லை, ஆதியும் அது போலவே இருந்ததால் எங்கள் முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் செட்டானது. அவர் பாடல்களும், இசையும் சிறப்பாக வந்திருக்கிறது. சிவாவுக்கு சமமான கதாபாத்திரம் நயன்தாராவுடையது. நயன்தாராவிடம் கதை சொன்னவுடன் அவருக்கும் மிகவும் பிடித்து போனது. அவரும் படத்தின் மிகப்பெரிய பலம். கோடையில் குடும்பத்துடன் போய் ரசிக்கும் வகையில் ஒரு படமாக இருக்கும் என்றார் இயக்குனர் ராஜேஷ்.
    இது மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம். டிவியில் இருந்த காலத்தில் இருந்தே ராஜேஷ் சாருடன் பணிபுரியும் ஆசை எனக்கு இருந்தது. எஸ்எம்எஸ் படத்தில் ஒரு சின்ன இடத்தில் நான் டப்பிங் பேசியிருக்கிறேன். அதன் பிறகு ராஜேஷ் சார் முயற்சி எடுத்து அமைச்சு கொடுத்த படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். என் கேரியரில் மிக முக்கியமான படம். அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடந்தது, எப்படியாவது அவருடன் ஒரு படம் பண்ணிடனும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. அந்த ஆசை இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. நல்ல ஒரு குழு அமைந்தது தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். நயன்தாரா உடன் இரண்டாவது படம். வேலைக்காரன் படத்தில் பெரிய அளவில் அவருக்கும் நடிக்க வாய்ப்பு கொடுக்க முடியாமல் போய் விட்டது. இந்த படத்தில் அவர் படம் முழுக்க வருவார். இசையமைப்பாளர் ஆதி படத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக கொடுக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். இந்த படத்தை மிகவும் கலர்ஃபுல்லாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். சினிமாவில் வெளியில் சொல்ல வேண்டிய விஷயங்களை யாரும் இங்கு பேசுவதில்லை. ஞானவேல்ராஜா சார் அதை வெளிப்படையாக பேசுவது பெரிய விஷயம். இனிமேல் 6 மாதத்துக்கு ஒரு முறை நல்ல நல்ல படங்கள் மூலம் உங்களை சந்திப்பேன். இது எனக்கு ஒரு புதுமையான விஷயமாக இருக்கும். ரசிகர்கள் தான் என் பலம், நீங்கள் கொடுக்கும் ஊக்கம் தான் என்னை மேன்மேலும் உயர்த்துகிறது என்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.
  • சென்னை சத்யா ஸ்டுடியோவில் நடிகர் ஐசரி வேலனின் 33ம் நினவு அஞ்சலி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

    புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் உற்ற நண்பனாக விளங்கியவரும், அவரது அமைச்சரவையில் அறநிலையத்துறை துணை அமைச்சராகவும் இருந்த ஐசரி வேலன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு மற்றும் மறைந்த ஜேகே ரித்தீஷ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சென்னை அடையாரில் உள்ள சத்யா ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


    பிறருக்கு தர்மம் செய்ய வேண்டும் என்ற ஒரு விஷயத்தை தான் ஐசரி வேலன் தன் வாழ்நாள் குறிக்கோளாக கொண்டிருந்தார். என்னுடைய மிக நெருங்கிய நண்பன். மாணவர்களாக இருந்தபோது நட்பாக பழகினோம், பிறகு உறவினராக பழகினோம். கடைசி காலம் வரை நட்பாகவும், உறவாகவும் பழகினோம். புரட்சி தலைவரின் செல்லப்பிள்ளையாக வளர்ந்த ஐசரி வேலன், ஒரு நாடகம் நடத்துவதற்காக எம்ஜிஆர் கொடுத்த வேனில் நாகர்கோவில் போகும்போது கூட கடைசியாக வண்ணாரப்பேட்டை வந்து என்னை ஒரு முறை பார்த்து விட்டு போனார். அப்படி ஊர் ஊராக போய் நாடகம் நடத்தும்போது விருதுநகரில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது உயிர் பிரிந்தது. பெற்ற பிள்ளைகளை மிக சிறப்பாக வளர்த்திருக்கிறார்.

    தன் பிள்ளைகளுக்கு அவர் கற்றுக் கொடுத்தது கடின உழைப்பு. யார் என்ன உதவி கேட்டாலும் அதை எப்பாடுபட்டாவது செய்பவர். அப்பா என்ன நினைத்தாரோ, ஆசைப்பட்டாரோ அதை மகன் நிறைவேற்றி இருக்கிறார். அவர் ஆசைப்படி மிகப்பெரிய அளவில் கல்விச்சேவை ஆற்றி வருகிறார் ஐசரி கணேஷ். சினிமா மிகவும் நலிந்து இருக்கும் இந்த நிலையிலும் தன் தந்தை விரும்பிய சினிமா துறையிலும் மிக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். மறைந்த ஜேகே ரித்தீஷ் அவர்களுக்கும் நினைவஞ்சலி செலுத்தும் ஒரு நல்ல மனது ஐசரி கணேஷ்க்கு இருக்கிறது. ஐசரி வேலன் இறக்கும்போது 2,70,000 கடன் தான் இருந்தது. எம்ஜிஆர் அதை அறிந்து கடனை அடைத்து 30,000 பணத்தை ஐசரி வேலன் குடும்பத்துக்கு கொடுத்தார். அது தான் முதலீடு, அதன் பிறகு எல்லாமே ஐசரி கணேஷின் கடின உழைப்பில் வந்தது. தற்போது எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார் கணேஷ் என்றார் தயாரிப்பாளர் கே.ராஜன்.
    இந்த நிகழ்வுக்கு வந்தபோது ஐசரி வேலன் அவர்களின் புகைப்படத்துடன் ஜேகே ரித்தீஷ் அவர்களின் புகைப்படமும் இங்கு வைக்கப்பட்டுருந்ததை பார்க்கும் போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. நாடக கலைஞர்களின் வாரிசுகள் நாடக கலைஞர்களாக தான் இருப்பார்கள் என்று இல்லை. மிகப்பெரிய அளவில் சாதித்து வருகிறார்கள். நாடக நடிகர்களின் குடும்பங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்து வருகிறார் ஐசரி கணேஷ். அதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் பூச்சி முருகன்.

    என்னுடைய ரோல் மாடல் ஐசரி கணேஷ் அவர்கள் தான். நடிகர் சங்க கடனை அடைத்து கட்டிடம் இந்த அளவுக்கு வளர ஐசரி கணேஷ் அவர்களின் பங்கு மிக முக்கியமானது. சங்கம் மிகச்சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ரித்தீஷ் அவர்கள் ஆசைப்பட்டார். அது நிச்சயம் நடக்கும் என்றார் நடிகர் உதயா.
    நடிகர் சங்கம் கம்பீரமாக வளர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் ஐசரி கணேஷ் தான். நாடக நடிகர்களின் வாரிசுகள் வருங்காலத்தில் சமூகத்தில் மிக முக்கிய அங்கமாக இருப்பார்கள். இன்றைக்கு இந்த நிகழ்வின் மிகச்சிறப்பான மற்றும் நெகிழ்வான விஷயம் தந்தைக்கு இணையாக, தோழனையும் வைத்து நினைவஞ்சலி நடத்தும் ஐசரி கணேஷ் அவர்களின் மிகச்சிறந்த குணம் தான். நடிகர் சங்கத்தில் நாங்கள் இந்த பொறுப்பில் இருக்க மிக முக்கிய காரணமாக இருந்தவர் ஜேகே ரித்தீஷ் என்பதை இங்கு நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறேன் என்றார் நடிகர் நாசர்.
    நடிகர் சங்க கட்டிடத்தில் தான் தந்தையின் நினைவஞ்சலி நடத்த வேண்டியது, ஆனால் கட்டிட வேலைகள் முடிவடையாததால் சத்யா ஸ்டுடியோவில் நடத்தியிருக்கிறோம். கடந்த 15 வருடங்களாக இந்த நினைவஞ்சலி நிகழ்வு நடந்து வருகிறது, கடந்த ஆண்டு நிகழ்வில் என் நண்பர் ஜேகே ரித்தீஷ் இங்கு வந்து கலந்து கொண்டிருந்தார். அவர் இங்கு இல்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். நடிகர் சங்க கட்டிடம் மிக விரைவில் உதயமாகும் என்றார் டாக்டர் ஐசரி கே கணேஷ்.
    இந்த நிகழ்வில் ஐசரி வேலன் குடும்பத்தினர் மகாலக்‌ஷ்மி, செல்வி, ஆர்த்தி, கமலக்கண்ணன் மற்றும் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி பொறுப்பாளர் குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

     

  • சிம்பு திருமணம் எப்போது என்று எனக்கு தெரியும்????????????

    டி.ராஜேந்தரின் குடும்ப நண்பரான கூல் சுரேஷ் சிம்புவின் திருமணம் குறித்து கூறுகையில் “குறளரசனின் திருமணத்தை அடுத்து டி.ராஜேந்தரிடம் அனைவரும் சிம்புவின் திருமணம் குறித்து தான் கேள்வி எழுப்புகின்றனர். சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். அவருக்கு யார் மணப்பெண். எப்போது திருமணம் என்பதெல்லாம் எனக்குத் தெரியும்” என்று கூறியுள்ளார். இந்த செய்தி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் காணொளி இணைப்பு