Author: admin

  • இன்றைய தேர்தல் செய்திகள்

    மே, 16. (இன்னும் தினங்களில் தேர்தல் முடிவுகள் 22 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று ஒட்டப்பிடாரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதிகள் எதுவும் ?‍♀நிறைவேறப்போவதில்லை என அரவக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

    அ.ம.மு.க., ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதை விட, தமிழகத்தில் உள்ள துரோகிகளை ஒழித்து கட்ட வேண்டும் என்பதே முக்கியம் என ஒட்டப்பிடாரத்தில் தினகரன் தெரிவித்துள்ளார்.

    அ.தி.மு.க., தி.மு.க. செத்துப்போன கட்சிகள். எனவேதான் வாக்குக்கு பணம் வழங்குகிறார்கள். அவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று சூலூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் கூறியுள்ளார்.

  • நாயே பேயே திரைபடத்தை 25 இயக்குனர்கள் துவக்கிவைதனர்

    தனி ஒருவன், வழக்கு எண் 18/9, ஒரு குப்பை கதை போன்ற ஏராளமான வெற்றி திரைப்படங்களில் எடிட்டராக பணிபுரிந்த கோபி கிருஷ்ணாவின் கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் மற்றும் கலை தி ஆர்ட் புரொடக்ஷன்ஸ் டாக்டர். ரேவதி ரெங்கசாமி, கலையரசி சாத்தப்பன் இணைந்து தயாரிக்கும் நடன இயக்குனர் தினேஷ் நடிக்கும் “நாயே பேயே”

    எடிட்டர் கோபி கிருஷ்ணாவின் கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் என்ற புதிய
    தயாரிப்பு நிறுவனத்தை எடிட்டர் மோகன் துவக்கி வைத்தார்.

    இத்திரைப்படத்தை, பல தேசிய விருதுகள் வென்ற குறும்பட இயக்குனர்
    சக்திவாசன் எழுதி, இயக்குகிறார்.

    ‘பருத்தி வீரன்’, ‘ஆடுகளம்’, ‘இறுதிசுற்று’, ‘ஓகே ஓகே’ திரைப்படத்தின்
    மூலம் அனைவரையும் ஆட வைத்த நடன இயக்குனர் தினேஷ் நாயகனாக நடிக்கிறார். இவருடன் இணைந்து கதாநாயகியாக ஐஸ்வரியா நடிக்க, இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

    நகரத்தில் வாழும் ஒரு துடிப்பான இளைஞன், மனம் போன போக்கில் தன்
    வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். நிரந்தர வேலையில் இல்லாத அவன்,அவ்வப்போது சமயோசிதமாக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு, அதில்
    கிடைக்கும் பணத்தில் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கின்றான். இந்த
    சூழலில், அவனுக்கு ஒரு பிரம்மாண்டமான ஐடியா உதிக்க, அந்த ஒரே ஒரு
    ஜாக்பாட் திருட்டுடன், வாழ்க்கையில் செட்டிலாக முடிவு செய்கிறான்.

    நாயைக் கடத்தும் நால்வர் தவறுதலாக பேயைக் கடத்திவிடுகின்றனர். பேயை சமாளிக்க முடியாமல் சிக்கித் தவித்து சின்னா பின்னமாவதை நகைச்சுவை கலந்து, ஹாரர் எஃபெக்ட்டில் மிகவும் சுவராஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் படமாக்குகிறார் இயக்குனர்.

    நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்ய, கலை சுப்பு அழகப்பன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    என் ஆர் ரகுநந்தன் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

    தயாரிப்பு பொறுப்புகளுடன், படத்தொகுப்பையும் சேர்த்து கோபி கிருஷ்ணா
    கவனிக்க, நிர்வாக தயாரிப்புக்கு சக்கரத்தாழ்வார் ஏற்றிருக்கிறார்.

    கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சக்திவாசன்
    எழுத்து-இயக்கத்தில், நாயகனாக நடன இயக்குனர் தினேஷ் நடிக்கும் இந்த
    திகில் திரைப்படத்திற்கு கதாநாயகி, மற்றும் பிற நடிக-நடிகையர், மற்றும்
    தொழிட்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

    நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:
    நடன இயக்குனர் தினேஷ்
    ஐஸ்வரியா
    ஆடுகளம் முருகதாஸ்
    ஷாயாஜி ஷிண்டே
    ரோகேஷ்
    கிருஷ்
    ஒளிப்பதிவு: நிரன் சந்தர்
    இசை: என் ஆர் ரகுநந்தன்
    கலை: சுப்பு அழகப்பன்
    படத்தொகுப்பு: கோபி கிருஷ்ணா
    நிர்வாக தயாரிப்பாளர்: சக்கரத்தாழ்வார்
    ஆக்சன்: ஸ்டான்ட் ஜி.என்
    நடனம்: தினேஷ், தினா
    இணை இயக்குனர்: வே. செந்தில் குமார்
    ஸ்டில்ஸ்: மோதிலால்
    தயாரிப்பு மேற்பார்வை: அஸ்கர் அலி, விஜயகுமார்
    டிசைன்ஸ்: ஜோசப் ஜாக்சன்
    தயாரிப்பு: கோபி கிருஷ்ணா, கலைஅரசி சாத்தப்பன், டாக்டர் ரேவதி ரெங்கசாமி
    கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: சக்திவாசன்
    மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

  • Mr Local படத்தில் நயன்தாராவுக்கும் எனக்குமான முத்தக் காட்சிகள்!!!!!!!

    சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த ‘கனா’ வெற்றியை தொடர்ந்து நடித்திருக்கும் படம் ‘Mr.லோக்கல்’.எம்.ராஜேஷ் இயக்கியிருக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார். இதில் ஹீரோயினாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, ரோபோ சங்கர், சதிஷ், தம்பி ராமையா என பெரிய காமெடி நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

    வரும் மே 17 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டிருக்கும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது, “வேலைக்காரன் படத்தில் எனக்கும் நயன்தாராவுக்கும் குறைவான காட்சிகள் தான் இருந்தது. ஆனால், இந்த படத்தில் அப்படி இல்லாமல், படம் முழுவதும் அவங்க வெயிட்டான ரோலில் நடித்திருக்கிறார்கள்.” என்றார்.

    அப்படியானால் படத்தில் முத்தக் காட்சிகள் இருக்கிறதா?, நயன்தாராவுக்கு நீங்கள் முத்தம் கொடுத்தீர்களா? என்று நிருபர் ஒருவர் கேட்க, “இந்த படத்தில் நயன்தாராவுக்கும் எனக்குமான காமினேஷன் காட்சிகள் அதிகமாக இருக்கிறது தான். ஆனால், அவை ரொமான்ஸ் காட்சிகள் அல்ல, நாங்கள் இருவரும் மோதிக்கொள்ளும் காட்சிகள். எலியும், பூனையும் போல் படம் முழுவதுமே நாங்கள் சண்டை போட்டுக்கொண்டு தான் இருப்போம், பிறகு எங்கே முத்தம் கொடுப்பது.” என்று சிவகார்த்திகேயன் வருத்தத்தோடு பதில் அளித்தார்.

    அதே சமயம், படத்தில் வில்லன் கிடையாது. அந்த வேலையையும் நயனே பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

  • தமிழ் படங்களை நிராகரித்த சொர்ணமால்யா! – ஏன் தெரியுமா?

    தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்த சொர்ணமால்யா, மணிரத்னத்தின் ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் திடீரென்று சினிமாவில் நடிப்பதை தவிர்த்துவிட்டு, நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினார்.

    இந்த நிலையில், தான் படங்களில் நடிக்காதது எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் இல்லை, எனக்கு கிடைத்த பல வாய்ப்புகளை நானே தான் வேண்டாம் என்று நிராகரித்தேன், என்று சொர்ணமால்யா கூறியுள்ளார்.

    இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய சொர்ணமால்யா, “சினிமாவில் நடிகையாக ஜெயிக்க வேண்டும் என்று நான் என்றுமே நினைத்ததில்லை. டிவியில் பிரபலமானாலும் எனக்கு என்று நிறைய கமிட்மெண்ட் இருந்தது. பரதநாட்டியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தேன். பி.எச்.டி பட்டம் பெற்றேன். அதை தொடர்ந்து எனக்கு எதை செய்ய விருப்பமோ அதை செய்துக் கொண்டு பயணித்தேன்.

    நான் தொடர்ந்து படங்கள் நடிக்காமல் போனது எனது தோல்வியல்ல, நானாகத்தான் பல படங்களை நிரகாரித்தேன். இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், பாரதிராஜா, லிங்குசாமி, வசந்த் என பல முன்னணி இயக்குநர்கள் என்னை நடிக்க அழைத்தும் நான் முடியாது என்று கூறிவிட்டேன். இப்போதும் கே.எஸ்.ரவிகுமார் என்னை பார்த்தால், அதிகமான படங்களை நிராகரித்த நடிகை என்றால் அது சொர்ணமால்யாவாக தான் இருக்கும் என்று கூறுவார்.” என்று தெரிவித்துள்ளார்.

  • இந்து தீவிரவாதம் என கருத்து கூறிய கமல்ஹாசனை கீழ்த்தரமாக விமர்சனம் செய்த நமது அம்மா!

    இந்து தீவிரவாதம் என கருத்து கூறிய கமல்ஹாசனை கீழ்த்தரமாக விமர்சனம் செய்த நமது அம்மா!

    சென்னை: இந்து தீவிரவாதம் என கருத்து கூறிய கமல்ஹாசனை கீழ்த்தரமாக நமது அம்மா நாளிதழ் விமர்சனம் செய்தது.
    அரவக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசிய போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியிருந்தது விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில் கமல்ஹாசனை விமர்சனம் செய்து நமது அம்மா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
    இந்திய விடுதலைக்கு பிறகு, இந்திய விடுதலைக்கு பிறகு இந்துதான் முதல் தீவிரவாதி என்று உளறல் நாயகன் கமல்ஹாசன் உலகின் மூன்றாம் பெரும் சமயத்தை இழிவுபடுத்தி இருக்கிறார்.
    என்ன செய்வது…

    முடிந்து போன தனது கலையுலக வாழ்வை அரசியலை வைத்து சமன் செய்து கொள்ள அவர் செய்து வரும் பைத்தியக்காரத்தனங்களில் தலையாய ஒன்றுதான் இது போன்ற அவரது தரம் கெட்ட பேச்சும்.

    தனி ஒருவரின் தவறை ஒரு மதத்தின் தவறாக சித்தரிப்பது என்றால் குடும்பத்தோடு சென்று பார்த்து ரசிப்பதற்கு ஏதுமாக பொழுதுபோக்கோடு சமூகத்தை பழுது பார்க்கும் அறிவுசார் சாதனமாக பயன்பட்ட தமிழ் சினிமாவை சதைக்களமாக மாற்றிய இந்த சண்டாளனை என்னவென்று விமர்சிப்பது?
    என்னதிது.. சைலன்டா இருந்த ஜீயர்கள் எல்லாம் இப்படி வயலன்ட்டா பேச ஆரம்பிச்சுட்டாங்களே

    தங்கத்தை தரம் பார்த்து சொல்வதற்கு முன்னால் தாம் ஒரு உரை கல்லாக வாழ்ந்து காட்ட வேண்டுமென வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாது உன்னத தலைவர்களாக வாழ்ந்து மறைந்த புரட்சித் தலைவர் போன்றோர் கோலோச்சிய கலையுலகம் அன்று தரமான படங்களை தந்தது. கூடவே தயாரிப்பாளர்களையும் சரியாமல் பார்த்துக் கொண்டது என்றால் தன்னை வைத்து படமெடுத்த ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களையும் ஒட்டாண்டியாக்கிய இந்த கமல்ஹாசனை எப்படி விமர்சிப்பது?

    கடவுளை விமர்சிப்பது
    தாமதமின்றி தடை
    ஒரு படத்தில் கடவுளை விமர்சிப்பது, மற்றொரு படத்தில் சைவத்தையும் வைணவத்தையும் சண்டைக்கு இழுத்து விடுவது, மற்றொரு படத்தில் தீவிரவாதம் இஸ்லாமியர்களுக்கே உரியது என்பது போல் முத்திரை குத்துவது, இப்படியாக மக்களிடையே பிளவையும் மதங்களுக்கிடையே சிண்டு முடிவதையும் வைத்து தன் பிழைப்பை ஓட்ட நினைக்கும் இந்த மனநோயாளியால் நடத்தப்படும் மக்கள் அநீதி மய்யத்தை தேர்தல் ஆணையம் தாமதமின்றி தடை செய்ய வேணடும்.

    பொதுவுடைமைவாதி போல ஒரு நாள் வேஷம், பெரியாரிஸ்ட் போல மறுநாள் அவதாரம், ஆத்திரள் போலவும் அவ்வப்போது அவதாரம், நாத்திகன் போல பல நாள் பகல்வேஷம் இப்படியாக ஏறத்தாழ ஒரு முத்திப்போன பைத்திரயக்காரனாகவே தமிழகத்தை சுற்றி வரும் இந்த மொத்தமும் வில்லன் உடனடியாக இந்து மதத்தை இழிவுபடுத்தியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

    சகிப்புத்தன்மை
    பொறுப்பற்ற மனிதர்கள்
    சகிப்புத்தன்மைக்கே இவ்வுலக சான்றாகவும் இம்மையில் செய்யு்ம பாலத்துக்கு மறுமையிலும் தண்டனை உண்டு என மனித பிழைகளை சுத்திகரிக்கும் மாமருந்தாகவும் திகழ்ந்து வரும் இந்து மதம், மதங்கள் கடந்த மனிதத்தை நேசிக்க செய்யும் மகோன்னத வாழ்வியல் முறை அல்லவா, ஆனால் இந்த உன்னதங்கள் எல்லாம் பொறுப்பற்ற மனிதர்களுக்கு புரியாது.

    மக்களை பிளவுப்படுத்தி
    கொட்டி கவிழ்க்கும் பரிதாபம்
    அதேவேளையில் மக்களை பிளவுப்படுத்தி அதன்மூலம் தன் அரசியல் வாழ்வுக்கு ஆக்சிஜன் தேடும் இப்பேர் வழி தொடர்ந்து மதங்களை காயப்படுத்தும் காரியத்தை கைவிடாவிட்டால் நடிகனாக இதுநாள் வரை அவர் சேமித்து வைத்திருக்கும் பேரும் புகழையும் மொத்தமாக கொட்டி கவிழ்க்கும் பரிதாபம் விரைவில் நிகழ்ந்தே தீரும் என அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது

  • தமிழிசை வெட்கப்பட வேண்டாமா என முரசொலியில் விமர்சனம்

    அடுக்குமொழி அம்மாளு” தமிழிசை வெட்கப்பட வேண்டாமா? முரசொலியில் விமர்சனம்

    சென்னை:

    மத்தியில் ஆட்சி அமைக்கவும் அமைச்சர்கள் பதவியை பெறவும் பாஜகவுடன் திமுக பேச்சுவார்த்தை என தனக்கு தகவல் கிடைத்திருப்பதாக கூறும் செய்துள்ளனர்.
    இதுகுறித்து அந்த நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது:
    திமுக பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கப் பேச்சுவார்த்தை! பாஜகவுடன் பேச முக ஸ்டாலின் முயற்சி வருவது உண்மைதான். 5 அமைச்சர் பதவிகளை பாஜகவிடம் திமுக கேட்கிறது.
    இப்படி ஆதாரமர்ற அர்த்தமற்ற, தலைவர் கருணாநிதி அடிக்கடி கூறும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்களை சிலர் அவிழ்த்து விடுவதும், செய்தித் தாகத்தால் வறண்டு போயிருக்கும் ஊடகங்கள், இந்த சாக்கை நீரை தங்கள் தாகம் தீர்க்கும் அரும்நீராகக் கருதி பருகிக் கொண்டிருப்பதும் வேடிக்கையாக மட்டுமல்ல. வேதனை தரும் நிகழ்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    தமிழகத்தில் புற்றீசலாகக் கிளம்பிய அக்கப்போர்’ ஏடுகள்பக்கங்களை நிரப்ப, தங்களது சிந்தனைக் குதிரைகளைத்தட்டிவிட்டு, கிளப்பிவிடும் புரளிகள் தலைப்புச் செய்திகளாக,தகவல் செய்திகளாக உருவெடுக்கின்றன. அதனையொட்டிகருத்துக்கள் கேட்க, செய்தி ஊடகங்களின் நிருபர்கள்புறப்பட, கேமராக்களுக்குத் தங்கள் முகத்தைக் காண்பித்து,அதன் மூலம் தங்களை நாடறியச் செய்து கொள்ள நினைக்கும் ஜெயக்குமார் போன்ற அரசியல் பபூன்கள், அவருக்குஉறுதுணையாக ஆடும் தமிழிசை போன்ற கோமாளிகளும்ஊடகங்களுக்குச் செய்தி தர தமிழக அரசியலை கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கின்றனர்!
    மோடியின் அரசியல், மோ(ச)டி அரசியல் என முதன்முதலில் பிரகடனப்படுத்திப் பேசியவர் தி.மு.க. தலைவர் தளபதி ஸ்டாலின்!
    ராகுல் காந்தி இந்தியாவின் அடுத்த பிரதமராக வேண்டும்என காங்கிரஸ் பேரியக்கமே அறிவிக்கத் தயங்கிய நிலையில்- அதனை அறிவித்தவர் கழகத் தலைவர் ஸ்டாலின்!
    நாடு முழுவதும் பி.ஜே.பி.யையும், பிரதமர் மோடியையும்எதிர்ப்பவர்களை அழித்தொழிக்க – பி.ஜே.பி. அரசாங்கம்சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத் துறை போன்றதனது அனைத்து ஆக்டோபஸ்’ கரங்களையும் பயன்படுத்திமிரட்டிக் கொண்டிருந்த நேரத்தில், மிரளாமல், இந்தியாவின் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும், சர்வாதிகார வெறியாட்டத்துக்கு சாவு மணி அடிக்க வேண்டும் என்ற உறுதியோடு,எதற்கும் அஞ்சாமல் பி.ஜே.பி.க்கு எதிராக எதிர்ப்புக் குரல்கொடுத்த இயக்கம் தி.மு.க.! ஒத்தக் கருத்துடையவர்களை ஒருங்கிணைத்து போராட்டக் களங்களைச் சந்தித்துப்போராடியது தி.மு.கழகம்! கழக வரலாற்றை அறியாது,கழகத்தின் மீது களங்கம் சுமத்த நினைப்போருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்!
    இந்து தீவிரவாதம் என கருத்து கூறிய கமல்ஹாசனை கீழ்த்தரமாக விமர்சனம் செய்த நமது அம்மா!
    இந்தியாவின் இரும்புப் பெண்மணியான இந்திராஅம்மையார், அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி ஜனநாயகவிரோதச் செயல்களில் ஈடுபடத் தொடங்கியபோது, அதைஎதிர்த்து நின்றது தி.மு.கழகம்!
    ஆட்சியும் – பதவியும் பெரிதென்று நினைத்திருந்தால்,ஆட்சி நீடிப்போடு, கழகத்தை எதிர்த்து நின்ற கட்சிகளைஅடக்கி ஒடுக்கி இருக்க முடியும்! இருந்தும், எதிர்த்தோம்,ஆட்சியை இழந்தோம்.
    எதிர்த்தீர்களே; பின் ஏன் இணைந்தீர்கள் என எதையோகண்டுபிடித்தது போல சிலர் கேட்டுத் திரிகின்றனர்! எதிர்த்தோம்; அரசை இழந்தோம்; அடக்கு முறை தாண்டவங்களுக்குஆளானோம்; உண்மைதான்! அடுத்து ஆட்சி பீடம் ஏறியவர்கள்நடத்திய கோமாளிக் கூத்துக்களால் நாட்டில் நிலையற்ற தன்மைஏற்பட்டது! நாடு காக்கப்பட நிலையான ஆட்சி தேவை என்றநிலையில், ஆதரித்தோம். தான் செய்த தவறுக்கு தமிழகத்திற்குவந்து வெட்ட வெளியில் நின்று இலட்சோப லட்ச மக்களிடையே, பெருந்தன்மையோடு வருத்தம் தெரிவித்தார், இந்திரா காந்திஅம்மையார்.
    சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் – என்றநிலையில் நாட்டைக் காக்க ஆதரவுக் கரம் நீட்டினோம். வரலாற்று அறிவு ஆழ்ந்த நிலையில் இல்லாத சிலர், அடுத்துஎழுப்பும் கேள்வி! மதவாத இயக்கமான பி.ஜே.பி.யுடன் தி.மு.கழகம் கூட்டணிவைத்தது ஏன்? இப்படி சில அரைகுறை அரசியல் அறிவுமிக்கவர்கள்கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கின்றனர்!தமிழகத்தில் நடைபெற்ற தி.மு.கழக ஆட்சியைக் கலைக்கவேண்டுமென வற்புறுத்திய ஜெயலலிதாவின் கோரிக்கையைஏற்க மறுத்துவிட்டார், அன்றைய பாரதப் பிரதமர் வாஜ்பாய்!ஒரு ஜனநாயகப் படுகொலைக்கு உடன்பட மறுத்தார்வாஜ்பாய்!
    அதற்காக அ.தி.மு.க. அவருக்கு அளித்த ஆதரவைத் திரும்பப்பெற, ஆட்சி இழக்கும் நிலை உருவானது வாஜ்பாய்க்கு!தி.மு.கழகம் ஒரு கட்டத்தில் காங்கிரசுக்கு எதிராகவும்,இன்னொரு கட்டத்தில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாகவும்எடுத்த நிலைக்கு அடிப்படைக் காரணம்; ஜனநாயகம் காக்கப்படவேண்டும் என்பதுதான்! இதனை தெளிவாக ஆய்ந்தறிந்தால், தி.மு.கழகத்தின் கொள்கை பற்றி குறை காண இயலாது.மதச்சார்பின்மை என்று கூறிக்கொண்டு,பி.ஜே.பி.யுடன் எப்படி கூட்டு சேர்ந்தீர்கள் என்றுகேள்வி எழுப்புகின்றனர்! மேம்போக்காக, அதாவது அரசியலில் நுனிப்புல் மேய்பவர்களுக்கு இந்தக் கேள்வி நியாயமாகப்படலாம்!
    அதிலே உள்ள உண்மை நிலை என்ன?அந்தக் கூட்டணியிலும் தி.மு.கழகம் அதன்அடிப்படைக் கொள்கைகளை விட்டுக் கொடுத்துகூட்டணி சேரவில்லை! பி.ஜே.பி.தான் தனதுஅடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டு, குறைந்தபட்ச செயல் திட்டங்களோடு (Common minimum programme) கழகத்துடன் கூட்டணி கண்டது என்பது வரலாற்று வெளிப்பாடுகள்! தி.மு.கழகத்துடன் கூட்டணி அமைத்துசந்தித்த தேர்தலின்போது பி.ஜே.பி. தனக்கெனஒரு தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லைஎன்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
    அதிவேக வாழ்க்கையில் சில முக்கிய நிகழ்வுகள் மக்கள்மனதில் நிற்கும். அதன் பின்னணிக் காரணங்கள் சிறிதுசிறிதாக மறைந்துவிடும்! பி.ஜே.பி.யுடன் கூட்டு சேர்ந்ததுநினைவில் இருக்கும்!பி.ஜே.பி. தனது கொள்கையில் சமரசம் செய்து கொண்டுதி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்ததா?
    தி.மு.கழகம் கொள்கைகளை விட்டுக் கொடுக்காது, குறைந்தபட்ச செயல் திட்டத்தோடு கூட்டணி சேர்ந்ததா என்பது நினைவிலிருக்காது!மக்கள் மறதியை வைத்து அரசியல் குறுக்கு சால் ஓட்டநினைத்து பல காளான்’ தலைவர்கள் புறப்பட்டுவிட்டனர்.!விளக்கில் மோதும் விட்டில் பூச்சிகள் போல கழகத்தோடு மோதத் தொடங்கியுள்ளனர்!
    கழகத்தலைவர் தளபதி, தெளிவாக பா.ஜ.க.வுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லைஎனக் கூறியபின்னும், ஊடகங்கள் அதனைவிவாதப் பொருளாக்குகின்றன! வதந்திகளை முடக்காமல்; அவைகளை சுமந்து கொண்டு ஊர்சுற்ற விடுவது எத்தகைய ஊடக தர்மம் என்பதுநமக்குப் புரியவில்லை!
    தமிழகத்தில் தாமரையை மலரச் செய்யப் புறப்பட்டிருக்கும்அடுக்குமொழி அம்மாளு, பேட்டி ஒன்றில் பா.ஜ.க.வுடன், தி.மு.கழகம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறதுஎனக் கூறியுள்ளார்! அரைகுறைகளை எல்லாம் தலைவராக்கினால், காமிராவைப் பார்த்த உடன் இப்படித் தத்துப்பித்தென்று உளறிக் கொட்டும் என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டு தேவையா?
    உண்மையாகவே அப்படி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தால், ஒரு கட்சியின் தலைமை வகிக்கும் ஒருவர் அதனை பகிரங்கமாகக் கூறுவாரா? இவர்பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்’ என்று கூறுவதிலிருந்தே, இது அப்பட்டமான பொய் என்று தெரியவில்லையா? தமிழகத்தின் அரசியல் கட்சியோடு, தனது கட்சி பேச்சுவார்த்தை நடப்பது தமிழகத்தின் தலைவரான தமிழிசைக்கே தகவலாகத்தான் தெரியுமென்றால், அது வெட்கக்கேடல்லவா? இந்த வெட்கங்கெட்ட நிலையில், தலைவர் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள்,பாரம்பரியப் பெருமை பேசலாமா? என கேள்வி எழுப்பியுள்ளது.

  • வைகோ அதிர்ச்சி

    வரகனூரில் மீண்டும் வெடி விபத்து: 5 பேர் பலி!

    வைகோ அதிர்ச்சி

    திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் வட்டம் வரகனூர் கிராமத்தில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில், கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், ஆலை வெடித்துச் சிதறி, ஆறு தொழிலாளர்கள் உயிர் இழந்தனர். பலர் உடல் கருகியும், படுகாயமுற்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த ஆலைக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இப்போது கிடைத்துள்ள அதிர்ச்சிதரத்தக்க தகவல், நெஞ்சைப் பதறச் செய்கின்றது.

    மூடிச் சீல் வைக்கப்பட்டுள்ள அந்த ஆலையின் ஒரு பகுதி கட்டடத்திற்குள் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள், இன்று காலை வெடித்துச் சிதறியதில், ஆலைக்கு வெளியே தனியார் நிலத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த மாங்குடி கிராமப் பகுதியைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளர்களான கோபால், கனகராஜ், அர்ஜூன், குருசாமி, காமராசர் ஆகிய ஐவர் கோரமான முறையில் இறந்து விட்டனர்.

    இதில் அர்ஜூன் 17 வயது நிரம்பிய மாணவர் என்பதும், கோடை விடுமுறையில் குடும்பத்திற்கு வருவாய் ஈட்டி உதவிட கூலி வேலைக்கு வந்தவர் என்பதும் பெருந்துயரைத் தருகின்றது.

    பட்டாசு ஆலையை மூடி சீல் வைப்பதற்கு முன்பு, ஆபத்தான பட்டாசுகளோ, இரசாயனக் கலவைகளோ வெடித்ததால் உயிர்ச் சேதம் ஏற்படுத்தும் பொருட்களோ, ஆலை வளாகத்தில் இல்லை என்பதை, அரசு நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறையும் உறுதிப்படுத்தாதது ஏன்? குறைந்தபட்சம் ஆலைக்குள் ஆபத்தான பொருட்கள் உள்ளது என்பதைக்கூட அறிவிப்பு மூலம் வெளிப்படுத்தாதது ஏன்? என்ற கேள்விகள் எழுகின்றன.

    அப்பாவித் தொழிலாளர்கள் ஐவரின் உயிர் இழப்புக்குக் காரணமான தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறையின் பொறுப்பு அற்ற போக்கிற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இதற்குக் காரணமான துறை அலுவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆலையை ஒட்டுமொத்தமாக ஆய்வு செய்து, எஞ்சி இருக்கின்ற ஆபத்தான பொருட்கள் அனைத்தையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகின்றேன்.

    உயிர் இழந்த தொழிலாளர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும், உற்றார் உறவினர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

  • தமிழகத்தில் இன்றைய காலை செய்தி

     

    1.கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய தடை விதித்த முறையீட்டை விசாரிக்க மதுரைக்கிளை நீதிபதிகள் மறுப்பு

    மதுரை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க கோரி ஐகோர்ட் மதுரைகிளையில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கறிஞர் சரவணன் முறையீட்டை விசாரிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். தோத்தல் பிரச்சாரத்தில் மதஉணர்வை புண்படுத்தும் வகையில் கமல்ஹாசன் பேசி வருவதாக மனுதார் புகார் அளித்திருந்தார்.

    2.பாஜக அல்லாத காட்சிகளே அடுத்து ஆட்சியமைக்கும் :ப.சிதம்பரம்

    டெல்லி : காங்கிரஸ் உள்ளிட்ட பாஜக அல்லாத கட்சிகள் அடுத்து ஆட்சியமைக்கும் என்பது தெளிவாகியுள்ளது. 6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஆட்சியமைப்பது பற்றி தெளிவாகி உள்ளது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் தோல்வி பயத்தை மறைக்கவே 300-க்கும் அதிகமான இடங்களை வெல்வோம் எனக் பாஜக கூறிவருகிறது.
    3.இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

    மேற்குவங்கம்: இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மேற்குவங்கத்தில் ஆணையத்தால் நியாயமான தேர்தலை நடத்த முடியாது எனவும் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. நரேந்திர மோடியின் பிரச்சாரத்துக்கு பாதிப்பு இல்லாத வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்ததாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
    4. மன்னார்குடி அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு

    மன்னார்குடி : மன்னார்குடி அருகே கூத்தாநல்லூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தி கழிவு நீரில் இறங்கி விவசாயிகள் போராட்டம் ஈடுபட்டுள்ளனர்.

    5.தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஆசிரியர் வீட்டில் 24 சவரன் நகை கொள்ளை

    தஞ்சை: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அரசு பள்ளி ஆசிரியர் முருகன் வீட்டில் 24 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. மேலும் கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    6.திருத்துறைப்பூண்டி அருகே கரையோரம் கிடந்த 3000-க்கும் மேற்பட்ட ஆதார் அட்டை மீட்பு

    திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி முன்னியாற்றின் கரையோரம் கிடந்த 3000-க்கும் மேற்பட்ட ஆதார் அட்டை மீட்கப்பட்டது. கட்டிமேடு, ஆதிரங்கம், வடபாதி, கிராமத்தினரின் ஆதார் அட்டைகள் என விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. ஆதார் அட்டைகளை ஆற்றின் கரையோரம் வீசிச் சென்றவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    7. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை

    திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அப்துல்லாபுரத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. தனியார் நிறுவன ஊழியர் கார்த்திக் குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். மேலும் அவரது வீட்டின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றவர்களுக்கு போலீசார் தேடி வருகின்றனர்.
    8.திருவள்ளூரில் இருந்து தேனிக்கு 20 வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன

    திருவள்ளூர்: திருவள்ளூரில் இருந்து தேனிக்கு 20 வாக்கு இயந்திரங்களும், 30 விவிபாட் கருவிகள் கொண்டு செல்லப்பட்டுவிட்டன. மேலும் பாலசமுத்திரம், வடுகப்பட்டி ஆகிய 2 வாக்குச்சாவடிகளில் மே 19 ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் 20 வாக்கு இயந்திரங்கள் தேனிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன
    9.தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு சோனியா காந்தி கடிதம்

    டெல்லி: தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். வரும் 23-ம் தேதி மாலை டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் வரும் 23-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.

    10.சேலம் அருகே ரயிலில் தொடர் நகை பறிப்பு : 6 பேர் கைது

    சேலம் : சேலம் அருகே ரயிலில் நடைபெற்ற தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக மகராஷ்டிரா சோலாப்பூரை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    11.காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

    புல்வாமா : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதி தலிபோராவில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிருழந்துள்ளார்.

    12.திருப்பரங்குன்றம் சுயேச்சை வேட்பாளர் கடத்தல்: 2 பேர் கைது

    திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுயேச்சை வேட்பாளர் செந்தில் ராஜாவை கடத்தியதாக தினேஷ், வினோத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் பணியில் இருந்த தன்னை காரில் கடத்தியதாக செந்தில் ராஜா புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து திருப்பரங்குன்றம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    13.உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்த அரசாணை வெளியீடு:தேர்தல் ஆணையம்

    சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்த 2-வது அரசாணையை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஊரக பஞ்சாயத்து, 3-ம் நிலை பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    14.5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத் முன்கூட்டியே விடுதலை: ஆர்டிஐ

    சென்னை: 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத் முன்கூட்டியே விடுதலை என்று ஆர்டிஐ தெரிவித்துள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசால் சஞ்சய்தத் விடுதலை என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. சிறையில் உள்ள பேரறிவாளன் தாக்கல் செய்த ஆர்டிஐ ல் நிரூபணமாகியுள்ளது.

    15.கருத்து கணிப்பு: டுவிட்டருக்கு தேர்தல் கமிஷன் கோரிக்கை….

    புதுடில்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு தொடர்பான பதிவுகளை அகற்றும்படி டுவிட்டர் நிறுவனத்திற்கு தேர்தல் கமிஷன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    16.எங்கள் ஆட்சியில் 6 பெண்கள் அமைச்சர்; சுஷ்மா

    புதுடில்லி: சுதந்திரம் அடைந்த காலம் முதல் மோடி தலைமையிலான அரசில் தான் 6 பெண்களுக்கு காபினட் அந்தஸ்து அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா கூறியுள்ளார்.
    17.கோவில்பட்டி ஜவுளி கடையில் தீ விபத்து….

    கோவில்பட்டி: கோவில்பட்டி புது ரோடு பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி. இவர் அதே பகுதியில் ஷியாம் பேசன்ஸ் என்ற பெயரில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலையில் அவரது 2 தளங்கள் கொண்ட கடையில் மேல் பகுதியில் திடீரென தீ பற்றி எரிவதை கண்ட பொதுமக்கள், கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கும் கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
    இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட முயற்சி செய்தனர். ஆனால் ஜவுளிக்கடையின் ஷட்டர் திறக்க முடியாத காரணத்தினால், தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறினர்.

    ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை முற்றிலுமாக அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    18.இமாசல பிரதேசத்தில் பா.ஜ.க. தொண்டர்களை ஏற்றி கொண்டு சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 7 பேர் காயமடைந்தனர்.
    19.தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைக்க மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது.
    20. கொல்கத்தா, ;- நேற்று முன்தினம் பா.ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா பேரணியில் வன்முறை வெடித்ததில் தத்துவ மேதையும், வங்காள மறுமலர்ச்சிக்கு காரணமானவருமான இஷ்வார் சந்திரா வித்யாசாகர் சிலையை பா.ஜ.க.வினர் உடைக்கும் வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

    21.சட்டை கலையாமல் கமல்ஹாசனை அரசியலில் இருந்து தமிழக மக்கள் அப்புறப்படுத்துவார்கள் ;- தமிழிசை சவுந்தரராஜன் .
    22.மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
    23.திருவண்ணாமலை:;- வேட்டவலம் மனோன்மணி அம்மன் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்ட மரகத லிங்கத்தை குப்பையில் வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    24.பாராளுமன்ற தேர்தலுக்கான 7-வது கட்ட தேர்தலில் 9 தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 50 தொகுதிகளில் நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.

    25.தமிழகத்தில் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சூலூர் தொகுதியில் திண்ணையில் அமர்ந்து மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    26.சரித்திர உண்மை, சரித்திர உண்மை என்று கூறி கமல் தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார் ;- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி .
    27.அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜூன் மாதம் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    28.லாட்டரி வியாபாரியின் உதவியாளர் மரணம் தொடர்பான வழக்கு : சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட மறுப்பு

    சென்னை : லாட்டரி வியாபாரி மார்ட்டின் உதவியாளர் பழனிசாமி மரணத்தை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பழனிசாமியின் மகன் ரோகின்குமார் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
    29.சென்னை: அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் பள்ளிகளை விரைவில் சீல் வைத்து மூட, தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    30.லக்னோ: பிரதமர் நரேந்தர மோடி போட்டியிடும் வாரணாசியில்,பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பிரியங்கா காந்திக்கு எதிராக கோஷமிட்ட பாஜகவினரை தடியடி நடத்தி போலீசார் விரட்டி அடித்தனர்.
    31.மீண்டும் அரவக்குறிச்சியில்.. பெரும் சர்ச்சைகளுக்கு பின் இன்று பிரச்சாரம் செய்கிறார் கமல்!

    இன்று மாலை 5 மணிக்கு தென்னிலையில் திறந்தவேன் மூலம் கமல்ஹாசன் பிரச்சாரத்தை தொடங்குகிறார். பின்னர் தொப்பம்பட்டி, நொய்யல், தளவாபாளையம் ஆகிய இடங்களில் வேட்பாளர் மோகன்ராஜிக்கு ஆதரவு கேட்டு தொடர்ந்து பேசுகிறார். வேலாயுதம்பாளையம் மலைவீதியில் இரவு 8.15 மணியளவில் நடக்கிற பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்று பேசுகிறார் என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • உரிய அங்கீகாரமின்றி செயல்படும் 709 பள்ளிகள்.. விரைவில் மூட தமிழக அரசு அதிரடி முடிவ.

    உரிய அங்கீகாரமின்றி செயல்படும் 709 பள்ளிகள்.. விரைவில் மூட தமிழக அரசு அதிரடி முடிவ.

    சென்னை: அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் பள்ளிகளை விரைவில் சீல் வைத்து மூட, தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தமிழகத்தில் உரிய அங்கீகாரமின்றி சுமார் 700-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இப்பள்ளிகளை வரும் கல்வி ஆண்டிற்கு முன்னதாகவே மூட பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
    தமிழகத்தில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றுக்கு தொடர் அங்கீகாரம், ஆண்டுதோறும் புதுப்பித்து கொள்ளும் அங்கீகாரம் என இரு பிரிவுகளாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அங்கீகாரத்துக்கான கால அவகாசம் முடியும் தேதியில் மீண்டும் அதனை புதுப்பிக்க வேண்டும்.
    அந்த சமயத்தில் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யும் போது, அதிகாரிகளின் திருப்தியின்மையால் அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் அப்பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத முடியாத சூழலும், அவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்கவேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
    இப்பிரச்னைகளை தீர்க்க அனைத்து வகை பள்ளிகளும் உரிய அங்கீகாரத்துடன் இயங்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பு பள்ளிக் கல்வித்துறைக்கு வந்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளும் மாநில அரசின் அங்கீகாரம் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகளும் கணக்கெடுக்கப்பட்டுள்ளன
    அக்கா ரேவதிக்காக.. தம்பி முகிலன் பிரச்சாரம்.. வைரலாகும் புகைப்படம்!
    இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 86 பள்ளிகளும், சேலம் மாவட்டத்தில் 53 பள்ளிகளும் , திருவள்ளூர் மாவட்டத்தில் 48 பள்ளிகளும், சென்னை மாவட்டத்தில் 7 பள்ளிகள் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 709 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இயங்குவதாக தகவல் வந்துள்ளது.
    இப்பள்ளிகளை விரைவில் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அங்கீகாரம் பெறாமல் இயங்கும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ மாணவியரை வேறு பள்ளிகளில் சேர்க்கவும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

  • பெற்றோரின் ஒத்துழைப்போடுமதிய உணவில் அசத்தும் பள்ளி

    மாணவர்கள் மீதான அக்கறையும்,ஆரோக்கியத்தையும் சத்துணவில் காட்டும் பள்ளி

    தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி சாதனை செய்துள்ள பள்ளி

    தேவகோட்டை – தமிழக அரசின் மதிய சத்துணவு திட்டம் பெற்றோரின் ஒத்துழைப்போடு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதிய முயற்சிகளுடன் முழுமையாக செயல்படுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

    பள்ளியில் மதிய சத்துணவு அனைத்து மாணவர்களும் அன்பாக சாப்பிடும் வகையில் புதிய முயற்சிகளுடன் நடைபெற்று வருகிறது.இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது :

    எங்கள் பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் கூலி வேலைக்கு செல்வதால் மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல்தான் வருகிறார்கள்.இதனால் பள்ளியில் தமிழக அரசால் வழங்கப்படும் மதிய சத்துணவை விரும்பி சாப்பிடுவார்கள் .எனவே பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களையும் பள்ளியிலேயே சாப்பிடும் வைக்கும் வகையில் புதிய முயற்சிகள் எடுத்து உள்ளோம். ஒவ்வொரு மாணவரும் தூய்மையான கைகுட்டையின் மேல் சுத்தமான சாப்பாட்டு தட்டை வைத்து சிந்தாமல்,அமைதியான முறையில் உணவு சாப்பிடுகிறார்கள்.டவலில் சாப்பிட்டு சிந்தாமல் வீடுகளில் சாப்பிடும்போதும் மாணவர்கள் சுத்தமாக சாப்பிடுவதுடன் சாப்பிடும் இடத்தையும் சுத்தமாக வைத்து கொள்வதாக பெற்றோர் சொல்லி சந்தோசம் அடைந்தனர்.எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 1ம் வகுப்பு,இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை அருகில் அமரவைத்து அன்புடன் அவர்களுக்கு ஊட்டி அனைவரையும் சாப்பிட வைக்கின்றனர் .இதன் மூலம் மாணவர்களிடையே சகோதரத்துவம்வளருகிறது. ஒவ்வொரு மாணவரும் சாப்பிட்ட பின்பு தங்கள் தட்டில் உள்ள அனைத்தையும் சாப்பிட்டு முடித்து விட்டோம் என்று அங்கு பணியில் உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் காண்பித்துசெல்ல வேண்டும்.சில நாட்களில் இளம் மாணவர்கள் பெரிய வகுப்பு மாணவர்களை பார்த்து அவர்களாகவே சாப்பிட ஆரம்பித்து விடுகின்றனர்.
    ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு நாள்களில் இரண்டு பெற்றோர்களை வரவழைத்து சத்துணவு சாப்பிட செய்து தரத்தினை பள்ளியில் உள்ள சத்துணவு பதிவேட்டில் தங்களது கருத்துக்களை பதிவிடு சொல்கிறோம்.சாதம் எப்படி இருந்தது என்பதை மாணவர்களே என்னிடமும்,சத்துணவு சமைப்பவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தாமாகவே வந்து சொல்கிறன்றனர்.இது நிச்சயமாக தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தில் புதிய அனுபவமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நடைமுறைபடுத்தி வருகிறோம். இவ்வாறு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார்.

    பட விளக்கம் : தமிழக அரசின் மதிய சத்துணவு திட்டம் பெற்றோரின் ஒத்துழைப்போடு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதிய முயற்சிகளுடன் வாரம் தோறும் சத்துணவினை சாப்பிட்டு பார்க்கும் பெற்றோர்கள்.

    பள்ளியில் மதிய சத்துணவு அனைத்து மாணவர்களும் அன்பாக சாப்பிடும் வகையில் புதிய முயற்சி :

    அது என்ன புதிய முயற்சி ? தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தான் இந்த புதிய முயற்சி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தொடர்கிறார்.சமீபத்தில் பள்ளிக்கு வருகை தந்த சீனிவாச சௌந்தரராஜன் இந்திய அரசின் உதவி தலைமைக் கணக்கு தணிக்கையாளராகவும் (ஓய்வு ) மற்றும் இங்கிலாந்து நாட்டில் மக்கள் ஆலோசனை மன்றத்தில் ஆலோசகராகவும் சில வருடங்கள் பணியாற்றி உள்ள இன்னம்பூரான் என்கிற சௌந்தரராஜன் (வயது 86),

    தனது வலை தலத்தில் பள்ளியின் சத்துணவு தொடர்பாக பின் வருமாறு எழுதி உள்ளார் :

    ” தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கத்தை இந்த பள்ளியில் தமிழக அரசு வழங்கும் மதிய உணவு சத்துணவு பரிமாறுவதில் நான் கண்டேன்.ஒவ்வொரு மாணவரும் தூய்மையான கைகுட்டையின் மேல் சுத்தமான சாப்பாட்டு தட்டை வைத்து சிந்தாமல்,அமைதியான முறையில் உணவு அருந்தினார்கள்.எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 1ம் வகுப்பு,இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை அருகில் அமரவைத்து அன்புடன் அவர்களுக்கு ஊட்டி அனைவரையும் சாப்பிட வைத்தனர்.ஒவ்வொரு மாணவரும் சாப்பிட்ட பின்பு தங்கள் தட்டில் உள்ள அனைத்தையும் சாப்பிட்டு முடித்து விட்டோம் என்று அங்கு பணியில் உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் காண்பித்து சென்றனர்.இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது.மகிழ்ச்சியாக இருந்தது.
    அரசு பள்ளியில் புதிய அனுபவம் :
    ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு நாள்களில் இரண்டு பெற்றோர்களை வரவழைத்து சத்துணவு சாப்பிட செய்து தரத்தினை பள்ளியில் உள்ள சத்துணவு பதிவேட்டில் தங்களது கருத்துக்களை பதிவிடுகிறார்கள் . சாதம் சுமாராக உள்ளது என்று கருத்து தெரிவித்தால் உடனடியாக சம்பத்தப்பட்ட அமைப்பாளரிடம் தலைமை ஆசிரியர் பேசுகிறார்.மறுநாள் முதல் சரி செய்ய சொல்லி விடுகிறார்.நன்றாக இருக்கிறது என்று கருத்து பதிவிடும்போது சம்பத்தப்பட்ட அமைப்பாளரை அழைத்து பெற்றோர்களையே பாராட்ட சொல்லுகிறார்.நான் சென்றபோது ஒரு தாய் வந்து சாப்பிட்டு விட்டு நன்றாக உள்ளது என்று தெரிவித்தார் .உடன் என் முன்பாகவே சத்துணவு நோட்டில் பதிய செய்ததுடன் அமைப்பாளர்க்கும்,உணவு பரிமாறுபவர்களுக்கும் தலைமை ஆசிரியர் வாழ்த்து தெரிவித்தார்.இது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.மாணவர்களும் தைரியமாக உணவு எப்படி உள்ளது என்று தலைமை ஆசிரியர்,ஆசிரியர்களிடம் சொல்லலாம் என்கிற தகவலும் தெரிந்து கொண்டேன்.சாதம் நன்றாக உள்ள நாட்கள் எல்லாம் மாணவர்களே சத்துணவு சமைப்பவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்,ஆசிரியர்களிடம் தாமாகவே வந்து இன்று உணவு சூப்பர் என்று சொல்கிறன்றனர்.இது எனக்கு அரசு பள்ளியில் புதிய அனுபவமாக இருந்தது என்று பதிவிட்டுள்ளார்.

    அனைத்து மாணவர்களையும் சத்துணவு சாப்பிடவும்,பெற்றோர்களை தொடர்ந்து வாரம்தோறும் பள்ளிக்கு வரவழைத்து சாப்பிட சொல்லி ஆலோசனைகளை நோட்டில் பதிய செய்வது தொடர்பாகவும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் சொல்வதை காணலாம் :
    முதல் முயற்சி வெற்றி :

    எங்கள் பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் கூலி வேலைக்கு செல்வதால் மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல்தான் வருகிறார்கள்.இதனால் பள்ளியில் தமிழக அரசால் வழங்கப்படும் மதிய சத்துணவை விரும்பி சாப்பிடுவார்கள் .எனவே பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களையும் பள்ளியிலேயே சாப்பிடும் வைக்கும் வகையில் புதிய முயற்சிகள் எடுத்து உள்ளோம்.
    முதலில் அனைத்து மாணவர்களையும் சத்துணவு சாப்பிட செய்வது என்பது மிகுந்த சிரமமாகத்தான் இருந்தது.பின்பு படிப்படியாக மாணவர்களிடத்தில் சத்துணவு தொடர்பாக நல்லெண்ணத்தை ஏற்படுத்தி சாப்பிட சொன்னோம்.நானே தினமும் சாப்பிடும் இடத்தில் நின்று சாப்பாடு போடுவதை சரிபார்த்து,மாணவர்களிடம் சாப்பாடு எப்படி உள்ளது என நேரில் கேட்டு அதனை பதிவு செய்து ,அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து ,சாப்பாடு நன்றாக இல்லை என்றாலும் அது தொடர்பாக சொல்ல சொல்லி இருந்தேன்.அதன் தொடர்ச்சியாக அனைத்து மாணவர்களும் சாப்பிட ஆரம்பித்தனர்.சில மாணவர்கள் பெற்றோரை அழைத்து வந்து சாப்பாடு வேண்டாம் என்று சொல்ல சொன்னார்கள்.

    பெற்றோரையும் சாப்பிட வைக்கும் முயற்சி :
    தங்கள் பிள்ளைகள் சொல்லி சாப்பாடு வேண்டாம் என்று சொல்ல வந்த பெற்றோரையும் சாப்பிட சொன்னோம்.அவர்கள் சாப்பிட்டு விட்டு ,சாப்பாடு நன்றாகத்தானே உள்ளது, இந்த சாப்பாட்டுக்கு என்ன குறைச்சல் என்று சொல்ல அதனை உங்கள் குழந்தையிடமே சொல்லுங்கள் என்று சொல்லி சொல்ல சொன்னோம்.அதன் தொடர்ச்சியாக வாரம் தோறும் ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு பெற்றோர்களை வரச்செய்து உணவை சாப்பிட செய்து ,அவர்கள் கருத்துக்களை நோட்டில் எழுத சொன்னோம்.உணவு உப்பு கூடுதலாக உள்ளது என்றோ,அல்லது லேசாக காரமாக இருக்குது என்று சொன்னால் அதனை சரி செய்ய சொல்லி விடுவோம்.( நம் வீட்டில் கூட என்றாவது ஒரு சில நாள் உப்பு,காரம் கூடுவது இயல்புதானே என்று பெற்றோரிடம் பக்குவமாக எடுத்து சொல்வோம்.அதோடு நிற்காமல் அதனை அடுத்த நாள் முதல் சரி செய்து விடுவோம்) .சத்துணவு ஊழியர்களும் அதனை உடன் சரி செய்து விடுவார்கள்
    பாராட்டும் உண்டு :
    பெற்றோர்கள் உணவு நன்றாக உள்ளது என்று சொல்லும்போது அதனை சத்துணவு ஊழியர்களிடம் நேரடியாக சொல்ல சொல்வோம்.. மாணவர்களும் தினமும் சாப்பிட்ட உடன் ,உணவு நன்றாக உள்ளது என்று பரிமாறும் ஊழியர்களிடமே சொல்லி விடுவார்கள்.அவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செயல்பாடு அதுவாகும்.

    சாப்பிடும்போது டவல் பயன்படுத்தும் முறை :
    சாப்பிடும் இடத்தை சுத்தமாக கூட்டி ,அனைத்து மாணவர்களையும் டவல் கொண்டு வரச்செய்து அதனை விரித்து அதன் மீது தட்டை வைத்து சாப்பிட சொல்கிறோம்.உணவை சிந்தாமல் சாப்பிட வேண்டும்.சாப்பிட்ட முடித்த பின்பு சத்துணவு ஊழியர்கள் அதனை நல்ல முறையில் சுத்தம் செய்து விடுவார்கள்.முதலில் சத்துணவு சாப்பிடுவதற்கு முன்பு மாணவர்களை டவல் கொண்டு வர வைப்பது சிரமமாக இருந்தது .ஆனால் டவல் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை மாணவர்களிடம் எடுத்து சொன்னோம்.தொடர்ந்து மாணவர்களை உற்சாகப்படுத்தி அனைத்து மாணவர்களையும் அனைத்து நாட்களும் டவல் கொண்டு வர பழக்கி விட்டோம்.இதனால் வீடுகளில் சாப்பிடும்போதும் மாணவர்கள் சுத்தமாக சாப்பிடுவதுடன் சாப்பிடும் இடத்தையும் சுத்தமாக வைத்து கொள்வதாக பெற்றோர் சொல்லி சந்தோசம் அடைந்தனர்.
    சத்துணவு குழு என்று அமைத்து மாதம் ஒரு ஆசிரியை என பணிபகிர்தல் :
    சத்துணவு குழு என்று அமைத்து மாதம் ஒரு ஆசிரியை என்று பணி பிரித்து கொடுத்து ,தினசரி சமையலுக்கு எடுக்கும் பொருள்களை சரிபார்ப்பது ,காய் வாங்கி வரும்போது அதனையும் பார்வையிட்டு ( வாங்கி வரும் காய்களில் எப்போதாவது பூச்சி இருந்தால் அதனை தவிர்க்க சொல்லியும் ),அரிசியையும் நன்றாக வெந்நீரில் களைந்து ,அதனை உலை வைத்து சாதமாக்குகிறார்கள்.நானும்,மாதத்திற்கு ஒரு ஆசிரியை என்று எங்கள் பள்ளி ஆசிரியையும் பிரித்து கொண்டும் உணவை சமைத்த உடன் சாப்பிட்டு விட்டு அதன் பிறகுதான் பெற்றோர்க்கும்,மாணவர்களுக்கும் உணவை பரிமாறுவோம்.ஆசிரியர்களின் ஒத்துழைப்போடும் இதனை தொடர்ந்து செய்து வருகிறோம்.
    சாப்பிடும்போது சகோதரத்துவத்தை ஏற்படுத்துதல் :
    முதல் வகுப்பு,இரண்டாம் வகுப்பு பயிலும் சில மாணவர்களின் பெற்றோர்கள் என்னிடம் வந்து மாணவர்கள் சில நாட்கள் சாப்பிடாமல் வருவதாக சொன்னார்கள்.அதன் பிறகுதான் ,எட்டாம் வகுப்பு ,ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை கொண்டு முதல்,இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அன்புடன் ஊட்டி விட சொல்கிறோம்.இதன் மூலம் இந்த மாணவர்களிடையே சகோதரத்துவம் வளரும் என்பது உண்மை.சில நாட்களில் இளம் மாணவர்கள் பெரிய வகுப்பு மாணவர்களை பார்த்து அவர்களாகவே சாப்பிட ஆரம்பித்து விடுகின்றனர்.
    உணவை வீணாக்காமல் முழு உணவையும் சாப்பிட வைத்தல் :
    சாப்பிடும் அனைத்து மாணவர்களும் சாப்பிட்டு முடித்த பின்பு கண்டிப்பாக அனைத்தையும் சாப்பிட்டு விட்டோம் என்று தட்டை சத்துணவு ஊழியரிடமும் ,அன்றைக்கு பொறுப்பில் உள்ள ஆசிரியர்களிடம் காண்பித்து செல்ல வேண்டும்.

    ஆலோசனைகளை சத்துணவு குழுவில் இருந்து பெறுதல் :
    தொடர்ந்து சத்துணவு நல்ல முறையில் நடைபெறுவதற்கு ஏதுவாக பள்ளி ஆசிரியைகள் ,சத்துணவு அமைப்பாளர்,சமையலர்,உதவியாளர்,பள்ளி மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ முதல்வர் ,துணை முதல்வர்,மற்ற அமைச்சர்கள் ,பெற்றோர் என அனைவரிடமும் கருத்துக்கள் கேட்டு ,மாற்றங்கள் இருந்தாலும் அதனை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றோம்.அவர்களது ஆலோசனைகள் பல நேரங்களில் நல்ல உதவியாக அமைந்துள்ளது. முதலில் பெற்றோரை வரவழைப்பது சிரமமாக இருந்தாலும் தற்போது இரண்டு வருடங்களாக அனைத்து பெற்றோரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து பள்ளிக்கு வந்து சாப்பிட்டு விட்டு ஆலோசனைகளை சொல்லி செல்கின்றனர். இந்த பணி நல்ல முறையில் நடப்பதற்கு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    2017ல் கோடை விடுமுறையில் சத்துணவு:
    தமிழக அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 2017ல் கோடைகாலத்தில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் .சத்துணவுத்திட்டதின் கீழ் இயங்கும் அனைத்து சத்துணவு மையங்களில் உணவு உண்ணும் மாணவ,மாணவியர்களுக்கு பள்ளி விடுமுறை நாளன்றும் உடனடியாக உணவு வழங்க உத்திரவிடபட்டது . 2017ம் ஆண்டில் கோடை விடுமுறை விட்ட நாளன்று எங்கள் பள்ளி ஆசிரியர்களுடன் கூட்டம் நடைபெற்றபோது ,அதில் அப்போது 7ஆம் வகுப்பு பயிலும் மாணவி காவியா, நான் இங்கு நல்ல உணவு சாப்பிட்டேன்.ஆனால் விடுமுறை 40 நாளும் நான் எப்படி சாப்பிட போகிறேன் என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.கோடை விடுமுறையில் வறட்சி காலத்தில் சத்துணவு வழங்கும் திட்டம் உண்மையில் மாணவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.அப்போது காவியா போன்ற மாணவிகளுக்கு இந்த திட்டம் நல்ல உதவியாக இருந்தது.இந்த திட்டம் தொடர்பாக தகவல் கிடைத்த உடன் ஆசீரியர்கள் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் தகவல் சொல்லி மாணவர்களை சத்துணவு சாப்பிட முயற்சி எடுத்தோம் .அப்போது சத்துணவு ஊழியர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கி பல மாணவர்கள் விடுமுறை நேரத்திலும் சத்துணவு சாப்பிட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மலேசியா நாட்டு ஆங்கில பயிற்றுனர்,காகித கலைஞர்,பத்திரிகையாளர் ஆகியோர் உணவை சாப்பிட்ட பிறகு என்ன சொல்கிறார்கள் ?
    சத்துணவை பள்ளிக்கு வரும் விருந்தினர்களும் சாப்பிட்டு விட்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
    மலேசியா நாட்டை சேர்ந்த ஆங்கில பயிற்றுனர் நல்ல பெருமாள் ராமநாதன் சத்துணவை மதியம் பள்ளியில் சாப்பிட்டு விட்டு நோட்டில் எழுதி உள்ளதாவது :
    இன்று புளியோதரை ருசித்து சாப்பிட்டேன்.சுவையாக இருந்தது.சுத்தமாகவும் இருந்தது.என்று எழுதி உள்ளார்.
    தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் நுங்கம்பாடியை சேர்ந்த காகித கலைஞர் தியாக சேகர் மதிய உணவை சாப்பிட்டு விட்டு .
    எளிய ருசியான கீரை சாதம் .அருமையாக இருந்தது.மனதிற்கு மகிழ்ச்சி.என்று பதிவு செய்து உள்ளார்.
    வார இதழின் எழுத்தாளர் யுவராஜன் மதிய உணவை சாப்பிட்டு விட்டு,
    இன்று தங்கள் பள்ளியில் சாம்பார் சாதம் சாப்பிட்டேன்.மிகவும் சுவையாக இருந்தது.அந்த சுவையில் மாணவர்கள் மீதான பள்ளியின் அக்கறையும்,ஆரோக்கியமும் தெரிந்தது.வாழ்த்துக்கள் என்று பதிவு செய்து உள்ளார்.
    வாரம் தோறும் பெற்றோரும் சாப்பிட்டு விட்டு தங்களின் கருத்துக்களை தொடர்ந்து எழுதி செல்கின்றனர்.
    அரசு வழங்கும் மதிய உணவை தலைமை ஆசிரியரும்,ஆசிரியர்களும் ,சத்துணவு ஊழியர்களும்,பெற்றோர்களும் நல்ல முறையில் மாணவர்களுக்கு வழங்கி வருவதும்,அனைத்து மாணவர்களும் பள்ளியிலேயே மதிய உணவு உண்பது என்பதும்,பெற்றோர்கள் தொடர்ச்சியாக வாரா,வாரம் வந்து சாப்பிட்டு ஆலோசனைகள் வழங்குவதும் பாராட்டத்தக்க நிகழ்வு ஆகும்.