Author: admin

  • மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் சோனியாவின் முயற்சி வெற்றி பெறுமா???

    மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23 அன்று பாஜகவிற்கு எதிரான கட்சிகளின் கூட்டத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்திருக்கிறார். அந்தக் கூட்டம் குறித்தும் அதன் பின்னால் இருக்கும் அரசியல் கணக்குகள் குறித்தும் தற்போது பார்ப்போம்.

    திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்த அடுத்த நாளே ஸ்டாலினை திமுக தலைவர் எனக் குறிப்பிட்டு கடிதம் எழுதிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள் அன்று டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதியிருக்கிறார். ஸ்டாலினுக்கு மட்டுமில்லாமல் பாஜகவிற்கு எதிரான மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. மோடியை வீழ்த்த மாநிலக் கட்சிகளோடு கை கோர்க்க சோனியா காந்தி தயாராகி விட்டாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

    தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்ற தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் முடிவுகள் வெளியாகும் அன்றே கூட்டணிக் கட்சிகளை டெல்லியில் அணிவகுக்கச் செய்யும் காங்கிரசின் முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது. கூட்டணிக்குள் புதிய கட்சிகளை சேர்க்கும் முயற்சிகளும் நடைபெறுகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

    சில நாட்களுக்கு முன்பு ஸ்டாலினை சந்தித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிடம் காங்கிரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததாக வெளியான தகவல்களை வைத்துப் பார்க்கும் போது ஆட்சி மாற்றத்திற்காகவே கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை காங்கிரஸ் கூட்டுவதாக தெரிகிறது. இப்போதைக்கு பாஜகவை வீழ்த்துவது மட்டுமே காங்கிரஸ் கட்சியின் நோக்கமாக இருப்பதால் மாநிலக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக்கவும் காங்கிரஸ் சம்மதிக்கும் என்றே தெரிகிறது. பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற காங்கிரஸ் கட்சியை சாராத ஒருவரை பிரதமராக ஏற்றுக் கொள்ளவும் அக்கட்சி தயாராக இருப்பதாக தேர்தலுக்கு முன்பே தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
    ஸ்டாலின் ராகுலைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் ஏற்கவில்லை. ராகுலின் தலைமையை ஏற்க மாநிலக் கட்சிகளுக்கு தயக்கம் இருப்பதாலேயே, மாநிலக் கட்சிகளின் ஒருங்கிணைப்பை சோனியா கையில் எடுத்திருக்கிறார் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
    மம்தா பானர்ஜி, மாயாவதி போன்ற தலைவர்கள் சோனியா தலைமையேற்ற கூட்டணியில் அங்கம் வகித்திருக்கிறார்கள் என்பதால் சோனியாவின் முயற்சி பலனளிக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
    மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் சோனியாவின் முயற்சி வெற்றி பெறுமா? மாநிலக் கட்சிகளின் ஆதரவோடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பிரதமராவாரா அல்லது மாநிலக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை காங்கிரஸ் பிரதமராக்கப் போகிறதா இல்லை பாஜகவே மீண்டும் ஆட்சியமைக்கப் போகிறதா என்பதற்கான விடை மே 23 அன்று தெரியும்.

  • இன்றைய செய்திகள்

     

    மாலை செய்திகள்

    தேர்தல் ஆணைய விதிகளின் படி மதம், சாதி குறித்து பிரசாரங்களில் பேசுவது சட்ட விரோதம்: தமிழக அரசு வாதம்

    மதுரை:

    தேர்தல் ஆணைய விதிகளின் படி மதம், சாதி குறித்து பிரசாரங்களில் பேசுவது சட்ட விரோதமாகும், அதுவும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் பேசியது குற்றமாகும் என தமிழக அரசு வாதித்தது. கமல் பேசியது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கமல் முன்ஜாமின் மனு மீதான விசாரணையில் தமிழக அரசு வாதம் செய்தது.

    முன்ஜாமின் கேட்டு கமல்ஹாசன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

    மதுரை :

    முன்ஜாமின் கேட்டு கமல்ஹாசன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. கோட்சேவை பற்றி மட்டுமே கமல் பிரச்சாரத்தின்போது பேசினார், மதங்களை பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் எதுவும் பேசவில்லை என்று கமல் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் வாதம் நடத்தினர்.

    தேர்தல் முடியும் வரை கமலின் சர்ச்சை பேச்சு குறித்து விவாதிக்க கூடாது : உயர்நீதிமன்ற கிளை

    மதுரை :

    தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், ஊடகங்கள் கமலின் சர்ச்சை பேச்சு குறித்து விவாதிக்க கூடாது’ என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கமல் முன்ஜாமின் மனு மீதான வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது.

    தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான ஆவணங்களை முன்னாள் நீதிபதியிடம் ஒப்படைத்தார் நாசர்

    சென்னை:

    தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான ஆவணங்களை ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி பத்மநாபனிடம் நடிகர் சங்க தலைவர் நாசர் ஒப்படைத்தார். இதன்மூலம் நடிகர் சங்க தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

    கோட்சே பற்றிய போபால் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங்கின் கருத்திற்கு மோடி, அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்

    போபால்:

    கோட்சே பற்றிய போபால் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங்கின் கருத்திற்கு பிரதமர் மோடி, அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என போபால் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் கூறினார். மேலும் நாதுராம் கோட்சே ஒரு கொலையாளி எனவும், அவரை போற்றுவது தேசபக்தியல்ல, தேசதுரோகம் என தெரிவித்தார்.

    கோட்சே ஒரு தேச பக்தர் என்று கூறிய பிரக்யாவுக்கு பாஜக கண்டனம்

    டெல்லி :

    நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்று கூறிய பிரக்யாவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. பிரக்யா கூறிய கருத்தை பாஜக ஏற்கவில்லை என்று செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்மராவ் விளக்கம் அளித்துள்ளார். காந்தியை கொன்ற கோட்சே இந்து தீவிரவாதி என்று அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் கூறியது குறிப்பிடத்தக்கது.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்தது. சிங்கிபுரம், பொன்னாரம்பட்டி, மன்னாயக்கன்பட்டி முத்தம்பட்டி, புதுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது

    இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் முடிந்தது

    மும்பை :

    ஒருநாள் சார்வுக்குப்பின் இந்திய பங்குச்சந்தைகள் மீட்சி பெற்று உயர்வுடன் முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 279 புள்ளிகள் அதிகரித்து 37,393 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 100 புள்ளிகள் உயர்ந்து 11,257 புள்ளிகளில் முடிந்தது.

    கோட்சே இந்து தீவிரவாதி என்று பேசியதற்கு எதிராக வழக்கு ஒத்திவைப்பு

    டெல்லி :

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வழக்கை ஆகஸ்டு 2-ம் தேதிக்கு டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது. காந்தியை கொன்ற கோட்சே இந்து தீவிரவாதி என்று அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேசியதற்கு எதிராக இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த விஷ்ணுகுப்தா எனபவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஆகஸ்டு 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கும்பகோணம் அருகே 7 குழந்தைகள் உள்பட 50 கொத்தடிமைகள் மீட்பு: வருவாய் துறை

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே தேவன்குடி பகுதியில் 3 செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக வேலைபார்த்து வந்த 7 குழந்தைகள் உள்பட 50 பேர்களை வருவாய் துறையினர் மீட்டுள்ளனர். மேலும் கொத்தடிமைகளாக வைத்திருந்தவர்கள் மீது வழக்குபதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளுக்கான நலவாரியம் : டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

    சென்னை :

    தமிழகத்தில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளுக்கான நலவாரியம் அமைக்க டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். காவல்துறை நல வாரியம் அமைப்பதற்கான அனைத்து பணிகளையும் தொடங்குவதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

    மன்மோகனுக்கு ‘சீட்’ தருமா தி.மு.க.,? : அரசியல் பரபரப்பு

    சென்னை;

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி., சீட் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ளது.

    6 எம்.பி.,சீட் :

    தமிழகத்தில், வரும் ஜூலையில் 6 ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கான தேர்தல் நடக்க உள்ளது. இதில் தி.மு.க.,விற்கு 3 எம்.பி.,சீட்கள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், அசாம் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் ராஜ்யசபா எம்.பி., பதவி காலம் ஜூன் மாதம் 14- ஆம் தேதியுடன் முடிகிறது. இவருக்கு இப்போது திமுக சார்பில் சீட் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அடுத்த வாய்ப்பு 2020 :

    தற்போது அசாமில், பா.ஜ., ஆட்சி நடப்பதால், அம்மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.,யை தேர்வு செய்யும் அளவிற்கு காங்கிரஸ் கட்சிக்கு பலம் இல்லை. தி.மு.க., மன்மோகனுக்கு எம்.பி. சீட் வழங்காவிட்டால், அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை காத்திருக்க வேண்டும்.

    ஏனெனில், வரும் 2020, ஏப்ரல் மாதத்தில் தான் 55 ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவிக்காலம் முடிகிறது. எனவே, தி.மு.க., மூலம், மன்மோகனுக்காக சீட் பெற காங்கிரஸ் தலைமை முயற்சிக்கும் என்றே தெரிகிறது.

    ஒருவேளை தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தால், மன்மோகன் எம்.பி., சீட்டையே, மத்திய அரசில் முக்கியமான இடத்தை பெறுவதற்கான பேரமாகவும் பயன்படுத்த தி.மு.க., முயற்சிக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.ஏற்கனவே, தி.மு.க., சார்பில் ம.தி.மு.க.,வுக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி.,சீட் தருவதற்கும் லோக்சபா தேர்தல் உடன்பாட்டில் தி.மு.க., ஒத்துக்கொண்டுள்ளது. எனவே, வரும் மே-23 தேர்தல் முடிவுகளை பொறுத்தே இந்த விசயத்தில் தி.மு.க., தலைமை முடிவெடுக்கும் என்று தெரிகிறது.

    புதிய அரசு அமைப்பதற்கு நிச்சயமாக நீண்ட நாள் தேவைப்படாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    கொல்கத்தா:

    மேற்குவங்கத்தில் சேதப்படுத்தப்பட்ட வித்யாசாகர் சிலையை மீண்டும் கட்டமைக்க பா.ஜனதாவின் பணம் வேண்டாம் நாங்களே சரிசெய்து கொள்கிறோம் என மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    கமல்ஹாசன் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்க… டெல்லி நீதிமன்றம் உத்தரவு.

    டெல்லி:

    மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு, 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கோட்சே இந்து தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்.. மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் பரபர ட்வீட்;….

    மும்பை:

    நாதுராம் கோட்சே ஒரு தீவிரவாதி, கொலைகாரன். அவன் ஒரு இந்துவும் கூட. இந்து தீவிரவாதத்தின் ஊற்றுக் கண்தான் கோட்சே என்று மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனான துஷார் அருண் காந்தி பரபரப்பான டிவீட் போட்டுள்ளார்.

    மேலும் கமல்ஹாசனின் கூற்றுக்கு துஷார் அருண் காந்தி ஆதரவும் தெரிவித்துள்ளார். கமல் பேசியது சரியே என்றும் அவர் ஆமோதித்துள்ளார்.

    கோட்சே குறித்து அவர் போட்டுள்ள ஒரு டிவீட்டில், நாதுராம் கோட்சே ஒரு தீவிரவாதி, கொலைகாரன், இந்து என்று பகிரங்கமாகவே சாடியுள்ளார் துஷார் காந்தி.

    அடுத்த டிவீட்டில் நாதுராம் கோட்சே, இந்து தீவிரவாதத்தின் ஊற்றுக் கண். இங்கிருந்து கிளம்பிய விஷம்தான் இன்று வரை மாலேகான், சம்ஜாதா எக்ஸ்பிரஸ் என்று பரவியது. டபோல்கர், பன்சாரே, கல்பர்கி, கெளரி லங்கேஷ் ஆகியோரைக் கொன்று குவித்தது என்று காட்டமாக கூறியுள்ளார்.

    இன்னொரு டிவீட்டில், கோட்சே, ஆப்தே கும்பல்கள் காந்தியைக் கொல்வதற்கு முன்பு 5 முறை முயற்சித்து தோல்வி அடைந்தனர். காந்தியைக் கொல்வதற்காக புனேவிலிருந்து பிராமணர்கள், சவார்க்கர் சமூகத்தவர், இந்து மகாசபா மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்தனர். அனைத்துமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மிகப் பெரிய திட்டமிட்ட தீவிரவாத சதிச் செயல் காந்தி படுகொலை என்பதை அறியலாம் என்று கூறியுள்ளார் துஷார் காந்தி.

  • புதுச்சேரியில் 9 வயது சிறு பாலியல் வன்கொடுமை

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ரீடிங் எடுக்க சென்றபோது வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுமியை மின்துறை ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி அருகே அபிஷேகப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் (வயது 26). புதுச்சேரி அரசின் மின்துறை ஊழியரான இவர் வீடு, வீடாக சென்று மின் மீட்டர் ரீடிங் கணக்கெடுத்து பில் போடும் பணியில் ஈடுபட்டு வந்தார். அதன்படி வினோத் பாகூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வீடுகளில் மீட்டர் ரீடிங் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் வினோத் மின் மீட்டர் ரீடிங் எடுத்தபோது, அந்த வீட்டில் 9 வயது சிறுமி மட்டும் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டார். இதனையடுத்து சிறுமியிடம் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று வினோத் கேட்க, அந்த சிறுமியும் தண்ணீர் எடுத்து வர வீட்டின் உள்ளே சென்றுள்ளார்.அப்போது பின் தொடர்ந்து சென்ற வினோத் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த சிறுமி கூச்சலிட்டபோது, யாரிடமாவது இது பற்றி கூறினால் கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டி விட்டு வினோத் அங்கிருந்து சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த பெற்றோரிடம் நடந்த விவரத்தை கூறி சிறுமி அழுதுள்ளார்.இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை மீட்டு ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையிலா சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பாகூர் காவல்நிலைய போலீசார் வினோத்தை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • சென்னை விமனநிலையத்தில் நிலையத்தில்தலைவர் கோ செய்தியாளர் சந்திப்பில்தெரிவித்த கருத்துகள்

    தேர்தலில் பாஜக தோல்வியை அடையும்.
    மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும்..
    மாநில சுயாட்சிக் கொள்கையை வெற்றி பெறும்.

    கொல்கத்தாவில் நரேந்திர மோடி
    4 கூட்டங்களில் பேசிய பிறகு
    மறுநாள் தேர்தல் பிரச்சாரத்திற்குத் தடை விதித்தது தேர்தல் ஆணையம்.
    இது ஒருபக்கச் சார்பு நடவடிக்கை.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு கூட்டத்திற்கு அனுமதி மறுத்தது பாசிசம்.

    இன்று மாலை தாயகத்தில்,
    முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகின்றது.
    வீரவணக்கம் செலுத்த இருக்கின்றோம்.

    சுதந்திரத் தமிழ் ஈழம் அமைய
    பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
    தமிழ் இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்.

  • சர்ச்சை- கல்வெட்டில் ஓபி.எஸ் மகன் எம்.பி என்று பொறிக்கப் பட்டதால்

    சர்ச்சை- கல்வெட்டில் ஓபி.எஸ் மகன் எம்.பி என்று பொறிக்கப் பட்டதால்.

    மதுரை: “இன்னும் புள்ளையே பொறக்கல.. அதுக்குள்ள பேர் வெக்கிறதை பத்தி பேச ஆரம்பிச்சிட்டீங்களே” என்று சும்மா ஒரு பேச்சுக்குதான் சொல்வோம்! ஆனா ஓபிஎஸ் மகன் விவகாரத்தில் இது நடந்தே போச்சு. ஆமா.. பிள்ளையின் பெயரை கோயில் கல்வெட்டிலேயே செதுக்கி வெச்சாச்சு.. அதுவும் எப்படி.. எம்.பி. என்று போட்டு!இந்த தேர்தலில் ஓ. ரவீந்திரநாத் குமாருக்கு எப்படியாவது அரசியலில் ஒரு எதிர்கால வாழ்வை உண்டாக்கி தந்துவிட வேண்டும் என்று ஒரு முடிவோடு இருப்பவர்தான் ஓபிஎஸ்! இதற்காக முதலில் எம்பி சீட்டை வாங்கி தந்துவிட்டார். கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு, மகனுக்காக குடும்பத்துடன் தேனியில் பிரச்சாரம் செய்துவிட்டு, அதுக்கு அப்புறம்தான் அதிமுகவின் மற்ற வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய கிளம்பினார்.இது அக்னிப் பரிட்சை.. அமைதியாக இருங்கள்.. அரவக்குறிச்சி தாக்குதல் குறித்து கமல் டிவிட்!பிரதமர் மோடிதமிழக பாஜக தலைவர் தமிழிசையே தூத்துக்குடியில் வேட்பாளராக நின்ற போதும், அவரது கட்சிக்காக செல்லாமல், மாற்று கட்சியில் ஓபிஎஸ் மகனுக்காக தேனிக்கு பிரச்சாரத்திற்கு சென்றார் பிரதமர் மோடி! இந்த இடத்தில் இருந்தே ஓபிஎஸ்-ன் வியூகம் தடம் மாற ஆரம்பித்தது.கோயில் கல்வெட்டுஇதன்பிறகு வாரணாசிக்கு மகனை அழைத்துபோனார். ஏன் போனார், என்ன பேசினார், என்பது இதுவரை வெளியே வரவல்லை. இவ்வளவும் மகனுக்காக தந்தை முன்னெடுத்து வரும் காரியங்கள். இதில் இன்னொரு விஷயமும் சேர்ந்துள்ளது. கோயில் கல்வெட்டிலும் மகனின் பெயர் இடம்பெற்றுள்ளது. பெயரை விட அவருக்கு எம்பி பதவியை அதற்குள்ளாகவே கோவில் நிர்வாகம் கொடுத்துள்ளதுதான் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.குச்சனூர் கோயில்தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில், சுயம்பு சனீஸ்வரபகவான் கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்திலேயே காசி ஶ்ரீ அன்னபூரணி கோயிலும் உள்ளது. நேற்று இந்தகோயிலில் கும்பாபிஷேகம். கோயிலுக்கு உதவி புரிந்தவர்களின் பெயர்களில் ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.ஜெயபிரதீப் குமார், ஓ.பி.ரவீந்திரநாத் குமார் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன.எம்பி ரவீந்திரகுமார்ஒரு குடும்பமே கோயிலுக்கு உதவி புரிந்துள்ளதால், இப்படி பெயர்களை பொறித்துள்ளார்கள் என்று எடுத்து கொண்டாலும், ரவீந்திரநாத் பெயருக்கு முன்னால் இருந்த அந்த வார்த்தைதான் எல்லோருக்கு ஷாக் தந்தது. “தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார்” என்று பொறிக்கப்பட்டிருந்தது.அதிர்ச்சிஇன்னும் தேர்தலே முழுசா முடியல, வாக்கும் எண்ண ஆரம்பிக்கல, முடிவு எப்படி இருக்க போகுதோ தெரியல, ஆனால் அதுக்குள்ள தேனி எம்பி ரவீந்திரநாத் பெயர் எப்படி போட்டார்கள், இதுக்கு கோயில் நிர்வாகம் எப்படி அனுமதி தந்தது என்றெல்லாம் தெரியாமல் தேனி மாவட்ட மக்கள் குழம்பி உள்ளனர்.

  • மக்களை அலட்சியப்படுத்தியவர்கள் மக்களாலேயே வீழ்த்தப்படுவர்.. மோடியை தாக்கிய தேஜஸ்வி

    மக்களை அலட்சியப்படுத்தியவர்கள் மக்களாலேயே வீழ்த்தப்படுவர்.. மோடியை தாக்கிய தேஜஸ்வி

    பாட்னா: மக்களவை தேர்தல் முடிவுகள் காங்கிரசுடன் இணைந்து தேர்தலை சந்தித்துள்ள மெகா கூட்டணிக்கு சாதகமாகவே இருக்கும் என லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
    தேர்தலில் மெகா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என கூறியுள்ள தேஜஸ்வி மத்தியில் புதிய ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு முக்கிய பங்கு இருக்கும் என்றார். பீகாரில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக அமைக்கப்பட்ட மெகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து பல்வேறு சிறு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டுள்ளன.

    இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ், மத்திய அரசை உருவாக்குவதில் உத்திரப்பிரதேசமும், பீகாரும் முக்கிய பங்கு வகிக்க போவதாக குறிப்பிட்டார்.
    கமல் மீதான தாக்குதல்.. அமைதி காக்கும் முக்கிய தலைவர்கள்.. ரஜினி இப்போதும் சைலன்ட்!
    மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சியை அகற்ற, தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் எதிர்க்கட்சிகள் இன்னும் பலமாக ஒன்றிணையும். தலைமை தாங்குவதில் ராகுல் காந்தி பக்குவம் மிகுந்தவராக உள்ளார். மோடி அரசின் கொள்கைகளை நன்றாக விமர்சிக்கிறார். எனவே மத்தியில் புதிய ஆட்சி அமைப்பதில் அவர் முக்கிய பங்காற்றுவார் என தாம் நம்புவதாக தேஜஸ்வி கூறினார்.
    நாட்டின் பழம்பெரும் கட்சியின் தலைவரான ராகுல் காந்தியின் கீழ், 5 மாநில முதல்வர்கள் உள்ளனர். மோடியையும் ராகுலையும் ஒப்பிட்டால் ராகுல் பொருத்தம் இல்லாதவராகவா உள்ளார் என கேள்வி எழுப்பினார். தேர்தல் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என கேட்டால் மத்திய அரசு வெறுப்பு அரசியலை கையில் எடுக்கிறது. கீழ்தரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிர்க்கட்சிகளை மோடி அரசு பழிவாங்குகிறது என சாடினார்.
    லாலு பிரசாத் யாதவ் போன்ற தலைவர்களுக்கு ஜாமீன் போன்ற அடிப்படை உரிமை கூட மறுக்கப்படுகிறது. கடந்த தேர்தலில் மக்களின் தீர்ப்பை அலட்சியப்படுத்தியவர்கள் நடப்பு தேர்தலில் நிச்சயம் அதே மக்களால் வீழ்த்தப்படுவார்கள்.
    மோடி அரசுக்கு எதிரான மனநிலை நாடு முழுவதும் காணப்படுவதை நன்றாக உணர முடிவதாக குறிப்பிட்டார். எனவே ராகுல் காந்தி பிரதமராக ராஷ்டிரிய ஜனதா தளம் நிச்சயம் ஆதரவு அளிக்கும் என தேஜஸ்வி கூறினார்.

  • கமல் மீதான தாக்குதல்.. அமைதி காக்கும் முக்கிய தலைவர்கள்.. ரஜினி இப்போதும் சைலன்ட்

    !

    சென்னை: நேற்று அரவக்குறிச்சியில் மநீம தலைவர் கமல்ஹாசன் தாக்கப்பட்டதற்கு முக்கிய அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் யாரும் இன்னும் கண்டனம் தெரிவிக்காமல் இருக்கிறார்கள்.
    நேற்று அரவக்குறிச்சியில் மநீம தலைவர் கமல்ஹாசன் தாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த இரண்டு பேர் இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே, என்று கமல் குறிப்பிட்டார். இதனால்தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
    கமலை குறிவைத்து எறியப்பட்ட முட்டை, கற்கள்.. கொதித்த மநீம.. அரவக்குறிச்சியில் நடந்தது என்ன?
    இல்லை
    கருத்து
    ஆனால் இந்த தாக்குதலுக்கு இதுவரை பெரிய அரசியல் தலைவர்கள் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. திமுக தலைவர் ஸ்டாலினிடம் இருந்து இது தொடர்பாக எந்த கண்டன அறிக்கையும் வெளியாகவில்லை. அதேபோல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர்களும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.

    திரையுலகினர்
    திரையுலகினர் கருத்து
    அதேபோல் திரையுலகினர் யாரும் கமல்ஹாசன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு சென்றவர்களில் கமல்ஹாசனும் ஒருவர். ஆனால் அவர் மீது நடந்து இருக்கும் இப்படி ஒரு தாக்குதலுக்கு எந்த நட்சத்திரமும் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை.

    ரஜினி அமைதி
    கமல்ஹாசனின் நண்பர் ரஜினிகாந்த் எப்போதும் போல இந்த முறையும் சைலன்ட் மோடில்தான் இருக்கிறார். கமல்ஹாசன் மீதான தாக்குதல் குறித்த அவர் வாய் திறக்கவே இல்லை. இப்படி ஒரு தாக்குதல் நடந்தது குறித்தாவது அவருக்கு தெரியுமா என்று தெரியவில்லை. ஏற்கனவே கோட்சே குறித்த கமலின் பேச்சுக்கு ரஜினி கருத்து கூற மறுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவின் முதல் தீவிரவாதி தனது வாழ்நாளை இந்த தேசத்திற்காக அர்ப்பணித்து,சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திய தேசப்பிதா மகாத்மாவைக் கொன்ற கோட்சேதான்.தீவிரவாதிகளோடு மதத்தை இணைக்கத்தேவையில்லை. கமலின் கருத்தை இன்னொரு கருத்தால் மட்டும் எதிர்கொள்வதே ஜனநாயகம்.கற்கலால் எதிர்கொள்வது வன்முறை.

    ஜோதிமணி கருத்து
    இது தொடர்பாக தற்போது வரை காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மட்டும் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜோதிமணி, இந்தியாவின் முதல் தீவிரவாதி தனது வாழ்நாளை இந்த தேசத்திற்காக அர்ப்பணித்து,சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திய தேசப்பிதா மகாத்மாவைக் கொன்ற கோட்சேதான்.தீவிரவாதிகளோடு மதத்தை இணைக்கத்தேவையில்லை. கமலின் கருத்தை இன்னொரு கருத்தால் மட்டும் எதிர்கொள்வதே ஜனநாயகம்.கற்கலால் எதிர்கொள்வது வன்முறை, என்று டிவிட் செய்துள்ளார்.

  • முன்னாள் எம்.பி-யுமான ஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது பரபரப்பு

    ஜே.கே.ரித்தீஷ், கடந்த மாதம், தீடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். ராமநாதபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.

    அவருடைய திடீர் மரணம் தமிழ் திரையுலகம் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதி, மீது ரித்தீஷ் வீட்டில் வேலை செய்த கேசவன் என்பவர், சென்னை பாண்டி பஜாரில் உள்ள காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

    கேசவன் அளித்த புகாரில், “கடந்த 10 ஆண்டுகளாக ஜே.கே.ரித்தீஷிடம் நான் பணியாற்றி வருகிறேன். அவர், அவருக்கு சொந்தமான வீட்டை தன்னையும், தனதுய் குடும்பத்தினரையும் தங்கிக்கொள்ளுமாறு கொடுத்து விட்டார். இதனால் அவரிடம் பணி செய்ததற்கான ரூ.4 லட்சம் பணத்தை நான் பெறவில்லை.

    தற்போது அவருடைய மனைவி ஜோதி, தனக்கு தர வேண்டிய தொகை ரூ.4 லட்சத்தை கொடுக்காமல், வீட்டை காலி செய்ய வேண்டும், என அடியாட்களுடன் வந்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுக்கிறார்.

    அதேபோல், பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், வேல்ஸ் பல்கலைக்கழக தலைவருமான ஐசரி கணேஷும், ஜோதியிடம் வீட்டை கொடுத்துவிட்டு ஓடிவிடு, என என்னை தொலைபேசியில் மிரட்டுகிறார்.” என்று தெரிவித்துள்ளார்.

    கேசவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணைக்கு பிறகே அவர் மீது வழக்கு பதிவு செய்வார்களா அல்லது சமரசம் செய்து வைப்பார்களா, என்பது தெரியும்.

  • சிம்பு நாலே வம்புதான் -ரசிகர்கள் அப்செட்

    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படம் தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. ஏற்கனவே, முழு திரைக்கதையை தன்னிடம் காட்டினால் தான் படப்பிடிப்புக்கு செல்ல முடியும், என்று தயாரிப்பாளர் கூற, அதற்கு வெங்கட் பிரபு, “அந்த பழக்கம் தனக்கு இல்லை” என்று கூற, படம் டிராப்பாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

    ஆனால், அதை மறுத்த படத்தின் தயாரிப்பாளர் விரைவில் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறோம், டிராப் என்பது வெறும் வதந்தி தான், என்று விளக்கம் அளித்தார்.

    இதற்கிடையே ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு, படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    என்ன பிரச்சினை என்று இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்றாலும், பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் இப்படி தள்ளி போவது, சிம்பு ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.

  • நட்புனா என்னானு தெரியுமா படம் எப்படியிருக்கு பார்ப்போம் வாங்க

     இயக்குநர் சிவா அரவிந்த் இயக்கத்தில், அறிமுக நாயகன் கவின், ரம்யா நம்பீசன், அருண்ராஜா காமராஜா, ராஜு ஆகியோர் நடித்திருக்கும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ எப்படி என்பதை பார்ப்போம்.

    சிறு வயதில் இருந்தே ஒன்றாக இருக்கும் மூன்று நண்பர்கள் வளர்ந்ததும் சேர்ந்து பிஸினஸ் செய்கிறார்கள். எப்போதும் ஒன்றாக இருக்கும் இவர்களது இளம் வயதில் ஏற்பட்ட ஏமாற்றம் காரணமாக, தங்களது வாழ்க்கையில் பெண்களே வரக்கூடாது, என்ற முடிவு எடுப்பவர்கள், காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட அறியாமல் இருக்க, ஹீரோவின் நண்பர் ராஜுவுக்கு ரம்யா நம்பீசனை கண்டதும் காதல் மலர்கிறது. அவரை பின் தொடர்ந்து காதல் வளர்ப்பவர் அதையே வேலையாக வைத்திருக்கிறார். இது குறித்து நண்பர்கள் விசாரிக்கும் போது, அவர்களிடம் தனது ஒன்சைடு காதலை பற்றி கூறும் ராஜு, தான் காதலிக்கும் ரம்யா நம்பீசனையும் அவர்களிடம் காட்ட, அவரது அழகில் மயங்கும் ஹீரோ கவினுக்கும் ரம்யா நம்பீசன் மீது காதல் மலர்கிறது. நண்பனுக்கு துரோகம் செய்கிறோமே, என்ற எண்ணமே இல்லாமல், ரம்யா நம்பீசனிடம் தனது காதலை கவின் சொல்ல, அவரும் சட்டென்று ஓகே சொல்லிவிடுகிறார்.

    இந்த விஷயம் ராஜுக்கு தெரிந்ததும் நண்பர்களுடன் மோதல் ஏற்பட்டு பிரிந்துவிடுகிறார்கள். ராஜுவும், அருண்ராஜா காமராஜாவும் பிஸினஸை கவனிக்க, ஹீரோ கவன் கழட்டிவிடப்படுகிறார். நண்பர்கள் போனால் என்ன என்று காதலியுடன் ஜாலியாக இருக்கும் கவினின் காதலில் சில பல பிரச்சினைகள் வர, அனைத்தும் முடிந்து ரம்யா நம்பீசனின் அப்பா திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட, நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்த நிலையில், திருமணமே வேண்டாம் என்று ரம்யா நம்பீசனை விட்டு கவின் பிரிகிறார். அவர் ஏன் ரம்யா நம்பீசனை பிரிகிறார், ரம்யா ஏன் அறிமுகம் இல்லாத கவினின் காதலை ஏற்றார், நட்பு மற்றும் காதல் இரண்டும் இல்லாமல் இருக்கும் கவினுக்கு இறுதியில் அது கிடைத்ததா இல்லையா, என்பது தான் ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் மீதிக்கதை.
    மூன்று நண்பர்களின் காதலும், அதை சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை. ரொம்ப எளிமையான கதை என்றாலும், இயக்குநர் சிவா அரவிந்த் அதை கையாண்ட விதமும், நடிகர்களின் பர்பாமன்ஸும், படத்தில் வரும் இயல்பான நகைச்சுவைகளும் படத்தை ரசிக்க வைக்கிறது.

    ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் கவின், அவரது நண்பர்களாக ஹீரோவுக்கு இணையான வேடத்தில் நடித்திருக்கும் ராஜு, அருண்ராஜா காமராஜா ஆகிய மூன்று பேருமே மொத்த படத்தையும் தூக்கி சுமந்திருப்பதோடு, ரசிகர்களை சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கிறார்கள்.

    நட்புக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய நல்ல உள்ளம் படைத்தவராக இருக்கும் ஹீரோ கவின், நண்பனின் காதலிக்கே ரூட்டு போடுவதும், ஐ லவ் யு சொல்வதும் என்று திடீரென்று அதிர்ச்சியை கொடுத்தாலும், தொடர்ந்து நட்புக்காக ஏங்குவது என்று அவரது இயல்பான நடிப்பு இனிப்பு போல இனிக்கிறது.

    ஹீரோவின் நண்பர் என்றாலும், ஹீரோவுக்கு இணையான வேடத்தில் நடித்திருக்கும் ராஜு மற்றும் அருண்ராஜா காமராஜா இருவரும் சோகமான காட்சிகளில் கூட தங்களது டயலாக் டெலிவரி மற்றும் பர்பாமன்ஸ் மூலம் சிரிக்க வைக்கிறார்கள். அதிலும், அருண்ராஜா காமராஜா கோபத்தில் பேசும் சில வித்தியாசமான வசனங்கள் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறது.

    கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் ரம்யா நம்பீசன், வெகுளித்தனமான நடிப்பால் நம்மை கவர்ந்துவிடுகிறார். அதிலும், பீருக்கும் பிராண்டிக்கும் வித்தியாசம் தெரியாமல், ”பெரிய பாட்டில குடிக்காதீங்க, சின்ன பாட்டில் போதும்”, என்று கூறும் அவரது அப்பாவித்தனமான நடிப்பு அடேங்கப்பா…என்று சொல்ல வைக்கிறது.

    அழகம்பெருமாள், இளவரசு உள்ளிட்டவர்கள் வழக்கம் போல தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    தரணின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார் தான் என்றாலும், சாதாரண வார்த்தைகளுக்கு மெட்டுப் போட்டு அதை பாட்டாக்கி ஒலிக்கவிட்டதற்காக பாராட்டலாம். யுவராஜின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

    உயிருக்கு உயிரான நட்பு, நண்பர்களின் பிஸினஸ் பிறகு காதலால் நட்பில் ஏற்படும் பிளவு என்று ரெகுலர் பார்மெட்டில் படம் தொடங்கினாலும், இதுபோன்ற படங்களில் இடம்பெறும், காதல் தோல்வியால் பெண்களை திட்டுவது, துரோகம் செய்த நண்பனை துரோகியாக நினைத்து பழிவாங்க துடிப்பது போன்ற புளித்துப்போன விஷயங்களை தவிர்த்துவிட்டு அடுத்தடுத்த காட்சிகள் மூலம் படத்தை வித்தியாசமாக நகர்த்தி செல்கிறார் இயக்குநர் சிவா அரவிந்த்.

    நண்பர்களுக்குள் மோதல் ஏற்பட்டாலும், அதை ஜாலியாக கையாண்டிருக்கும் இயக்குநர் இடைவேளைக்கு பிறகு காட்சிக்கு காட்சி நம்மை சிரிக்க வைத்து வயிறு வலியே ஏற்பட வைத்துவிடுகிறார். அதிலும், அருண்ராஜா காமராஜின் முட்டால்தனத்தை வைத்து கையாளப்பட்டிருக்கும் காமெடி காட்சிகளும், ஹீரோ மற்றும் அவரது காதலால் நண்பர்களுக்கு ஏற்படும் சிக்கலும் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறது. காதல் தோல்வியால் விஷம் குடிப்பதை கூட ரொம்ப நகைச்சுவையாக கையாண்டிருக்கும் இயக்குநர் சிவா அரவிந்த், இளைஞர்களுக்கான படமாக மட்டும் இன்றி குடும்பத்தோடு பார்க்க கூடிய ஒரு காதல் பிளஸ் காமெடி படமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

    மொத்தத்தில், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ இரண்டு மணி நேரம் நான் ஸ்டாப்பாக நம்மை சிரிக்க வைக்கும் ஒரு ஜாலியான பொழுதுபோக்கு படமாக உள்ளது.