ஜான்விகா, ஜெய் பாலா, கிரண் பிரதீப், சுதாகர் போன்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் அறிமுகமான நடிகர்களான ஆடுகளம் நரேன், மனோபாலா, சென்ட்ராயன், சச்சு, அஞ்சலி தேவி, சின்னப் பொண்ணு ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்தப் ‘பரிசு’ திரைப்படத்தை கலா அல்லூரி எழுதி, இயக்கியுள்ளார். இவர் திரைப்படக் கல்லூரியில் படித்தவர்.
ஒளிப்பதிவு – சங்கர் செல்வராஜ், இசை – ராஜீஷ், பின்னணி இசை – சி.வி. ஹமரா, பாடல்கள் – கே.ராஜேந்திர சோழன், படத்தொகுப்பு – சி.எஸ்.பிரேம்குமார், ராம் கோபி, நடனம் – சுரேஷ்சித், சண்டைக் காட்சிகள் கோட்டி – இளங்கோ. தயாரிப்பு – ஸ்ரீகலா கிரியேஷன்ஸ்.
ஜான்வி பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவி. படிப்பிலும், விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவள். அவளது தந்தை ஒரு ராணுவ வீரர். ஜானகியின் அழகையும், அறிவையும் பார்த்துவிட்டு அவள் படிக்கும் கல்லூரியில் சில மாணவர்கள் பின் தொடர்கிறார்கள். நெருங்கிப் பழகவும், அன்பளிப்பு கொடுக்கவும், பூங்கொத்து பரிசளிக்கவும் என்று சுற்றிச் சுற்றி வருகிறார்கள். அவள் மீது ஆசையுடன் காதலைச் சொல்ல ஏங்குகிறார்கள்.
ஜான்வி தனது இலட்சியத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறாள். விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் அவள், தந்தையிடம் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெறுகிறாள். ஒரு நவீனப் பெண்ணாகத் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றாலும் பாரம்பரியத்தை மறக்காமல் இயற்கை விவசாயத்தில் ஈடுபாடு கொண்டவளாக இருக்கிறாள். அவளைத் தோழிகள் ஜான்வி லேடி நம்மாழ்வார் என்கிறார்கள். சமூக சேவையிலும் ஆர்வம் உண்டு. கல்லூரி மாணவர்களை இணைத்துக் கொண்டு கிராமங்களைச் சுத்தம் செய்கிறாள் மற்றும் முறையான பயிற்சிக்குப் பின் குறி பார்த்துச் சுடும் திறமையை வளர்த்துக் கொள்கிறாள். எகிப்தில், கெய்ரோவில் நடக்கும் ஆசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் முதல் பரிசு பெற்று பெற்று பெண்களுக்கு முன் உதாரணமாக தேடுகிறார்.