
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகுதியில் வசித்து வரும் செல்வி (ஸ்வாசிகா), இளம் வயதில் கணவன் இறந்த பிறகு தனது இரு மகன்களையும் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டு தனது மகன்களை கடுமையான தகவல்களுக்கு இடையே தனி பெண்ணாக நின்று வளர்த்து ஆளாக்குகிறார். பாஸ்கர் (அஜய் திஷான்) மற்றும் விவேக் (சக்தி) பிள்ளைகள் வளர்ந்து பெரிய ஆளாக ஆனவுடன் , நாயகி செல்வி தனக்கு மறுமணம் செய்ய விருப்பம் என்று தெரிவிக்கிறார் செல்வி. ஆனால், முதலில் அம்மாவின் மனநிலையை புரிந்துகொள்ளாமல் மூத்த மகன் பாஸ்கர் எதிர்த்து பேசுகிறார்.
இன்றைய காலகட்டத்தில் விதவைகளின் மறுமணத்தை சமூகம் பார்க்கும் பார்வையை இயக்குநர் சசியின் திரைக்கதை திரையில் காண்போரை சிந்திக்க வைத்துள்ளது மிகப்பெரிய பலம்.
நாயகன் விஜய் ஆண்டனி, தனது நடிப்பை கதையின் தேவைக்கேற்ப தனது நடிப்பை கொடுத்து திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளார் .
திரைக்கதைக்கு துணை நடிகர்களாக தங்களது நடிப்பின் மூலம் திரையில் காண்போரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளனர் கருணாஸ், பாலாஜி சக்திவேல், முனிஷ்காந்த், அருள்தாஸ்.
தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு நூறு சாமி படம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது குறிப்பாக தர்ஷன் கிர்லோஷின் ஒளிப்பதிவு பாலாஜி ஸ்ரீராமின் பின்னணி இசை,. ஹரிஷ் யுவராஜின் படத்தொகுப்பு, அனைத்தும் திரையில் ரசிக்க வைத்துள்ளது.