*பாலன் – தி பாய்**நடிகர்கள்:**ஃபர்ஸானா பலத்திங்கல்* – அம்மா*ஆதிஷேஷன் K.R.* – இளம் பாலன்*சினான்* – வயது வந்த பாலன்*ஜீன் பால் லால்* – பவித்ரன் கே.எஸ்.*கிரிஷ் A.D.* – எஸ்.ஐ. பிரான்சிஸ் அலெக்ஸ்இயக்கம்: *சிதம்பரம்*எழுத்து: *ஜித்து மாதவன்*தயாரிப்பாளர்கள்: *வெங்கட் கே. நாராயணா (K.V.N. புரொடக்ஷன்ஸ்)* & *ஷைலஜா தேசாய் ஃபென் (தெஸ்பியன் ஃபிலிம்ஸ்)*ஒளிப்பதிவு: *ஷைஜூ காலித்*இசை: *சுஷின் ஷியாம்*படத்தொகுப்பு: *விவேக் ஹர்ஷன்*கலை இயக்கம்: *அஜயன் சாலிசேரி*

பாலன் திரைப்படத்தின் திரைக்கதை தொடக்கத்திலேயே கதையின் நாயகி பர்சானா சிறையில் இருந்து விடுதலை ஆகிறார் அவர் செய்த குற்றம் என்ன என்பதை பற்றியும் ஒரு தனிப்பட்ட பெண்ணாக சமுதாயத்தில் சந்திக்கும் பிரச்சனைகளையும் சவால்களையும் திரைக்கதையாக அமைத்து திரையில் காண்போரை பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும் சிந்திக்கவும் வைத்துள்ளது பாலன் திரை படத்தின் திரைக்கதை
.பாலன் திரைப்படத்தின் நாயகி பர்சானா ஆண் குழந்தைக்கு அம்மாவாக இருக்கிறார், சமுதாயத்தில் அன்றாடத் தேவைக்காக இருவரும் வேலை தேடி தங்கள் அடையாளங்களை அழித்துக்கொண்டு ஒவ்வொரு இடமாக வேலைக்கு செல்கின்றனர்.அன்றாட அத்தியாவசிய தேவைக்காக வேலை தேடி செல்லும் இவர்களுக்கு பிரச்சனைகள் பின்தொடர்ந்து வருகிறது அதனை இருவரும் தங்களது சூழ்நிலைக்கு ஏற்ப வேறு வேறு இடம் என செல்கின்றனர். அப்பொழுது மூதாட்டி ஒருவருக்கு உதவி தேவைப்படுவது என கேள்விப்படும் இவர்கள் அவருக்கு உதவுவதாகவும் அதன் மூலம் தங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று இருவரும் முடிவு செய்கிறார்கள் அந்த மூதாட்டியின் மகன் வெளிநாட்டில் வேலையில் இருப்பதால் அவரின் தாயாரை பார்த்துக் கொள்வதற்கான வேலையாட்களை உணர்த்தும் பணியை நாயகி தொடர்கிறார். நாயகி தனது மகனின் எதிர்கால கனவை நிறைவு செய்ய நிம்மதியான இடம் கிடைத்துள்ளதாக முடிவு செய்து தனது மகனை பள்ளிக்கு அனுப்பி சில காலம் சந்தோஷமாக வாழ, அவரை தேடி ஒரு ஆபத்து மீண்டும் வர, அதே நேரத்தில் பாட்டியும் இறக்கிறார்.நாயகியின் தன் மகனின் எதிர்கால கனவுகளும் மூதாட்டியின் இறப்பின் மூலம் முடிவுக்கு வருகிறது.
ஆதலால் நாயகி தன் மகனுடன் வேறு வேலை தேடி செல்ல நாயகி மீண்டும் ஆபத்து பின் தொடர இவர்கள் இருவர்களின் வாழ்க்கைஎன்ன ஆனது?
பாலன் திரைக்கதையின் நாயகி பர்சானா யார்?
ஒரு மகனுக்கு தாயாக பர்சானா பின்னால் இருக்கும் மர்மம்(பிரச்சனைகள்) என்ன?
தங்களைப் பின்தொடரும் மர்மத்தில் இவர்கள் இருவரும் உயிர்த்தபினார்களா? என்பதே பாலன் திரைப்படத்தின் திரைக்கதை.
