ஏழு திரைப்படம் – ஒரு பிரபஞ்சம் – எல்லையற்ற புராணக் கதைகள் – கொண்ட ‘மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது

Mega Slate Announcement 7 Epic Films, Mahavatar’s Cinematic Universe Unveiled*
Mega Slate Announcement 7 Epic Films, Mahavatar’s Cinematic Universe Unveiled*

*மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் படைப்பான ‘ மகாவதார் நரசிம்மா’ 2025 ஜூலை 25ஆம் தேதியன்று வெளியாகிறது*

ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும் க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிமேஷன் படைப்பான மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன. பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தத் தொடர் 2025 ஆம் ஆண்டு மகாவதார் நரசிம்மாவுடன் தொடங்கி, 2037 ஆம் ஆண்டின் மகாவதார் கல்கி பார்ட் 2 உடன் நிறைவடைகிறது. மகாவிஷ்ணுவின் பத்து தெய்வீக அவதாரங்களை விவரிக்கும் வகையில் இந்த படைப்புகள் தயாராகி இருக்கின்றன.

இந்த திரைப்படங்களின் வெளியீட்டு தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில்
* மகாவதார் நரசிம்மா (2025 )
* மகாவதார் பரசுராம் (2027 )
* மகாவதார் ரகுநந்தன் (2029 )
* மகாவதார் துவாரகாதீஷ் (2031 )
* மகாவதார் கோகுல நந்தா (2033 )
* மகாவதார் கல்கி பார்ட் ஒன் (2035 )
* மகாவதார் கல்கி பார்ட் 2 (2037)
ஆகிய வரிசையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக இயக்குநர் அஷ்வின் குமார் பேசுகையில், ” க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம், ஆற்றல்மிக்க ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, பாரதத்தின் பாரம்பரியத்தை இதுவரை அனுபவித்திராத வகையில் பெரிய திரைக்கு கொண்டு வந்து, சினிமா அனுபவத்தை தருவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் மூலம் தசாவதாரத்தின் வித்தியாசமான அனுபவம் தொடங்குகிறது. இனி பாரதம் கர்ஜிக்கும் ” என்றார்.

இது தொடர்பாக தயாரிப்பாளர் ஷில்பா தவான் பேசுகையில், ” சாத்தியங்கள் முடிவற்றவை. எங்கள் கதைகள் திரையில் உயிர்பெற்று கர்ஜிப்பதை காண நான் ஆவலாக இருக்கிறேன். மேலும் ஒரு காவிய சினிமா அனுபவத்திற்கும் தயாராகுங்கள் ” என்றார்.

தொடர்ந்து ஹோம்பாலே பிலிம்சின் செய்தி தொடர்பாளர் பேசுகையில், ” ஹோம்பாலே பிலிம்சில், நாங்கள் காலத்தையும், எல்லைகளையும் கடந்த கதை சொல்லலை நம்புகிறோம். மகாவதார் உடன் விஷ்ணுவின் புனித அவதாரங்களை வியக்க வைக்கும் அனிமேஷன் மூலம் உயிர்ப்பிக்கும் ஒரு சினிமாடிக் யுனிவர்சல் வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது ஒரு திரைப்பட தொடரை விட அதிகம். மேலும் இது இந்தியாவின் ஆன்மீக மரபிற்கான எங்கள் அஞ்சலி ” என்றும் குறிப்பிட்டார்.

மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ் திரைப்படத்திற்காக மட்டும் அல்லாமல் இது பல தள கலாச்சார நிகழ்வாக கருதப்படுகிறது. காமிக்ஸ் – வீடியோ கேம்ஸ் – டிஜிட்டல் முறையிலான கதை சொல்லல் – சேகரிக்க கூடிய அனுபவங்களாக விரிவடைந்து… இந்த சினிமாடிக் யுனிவர்ஸ் – ரசிகர்களுக்கு காவியத்துடன் கூடிய பல வழிகளை வழங்கும். கிராபிக் நாவல்களும், தழுவல்கள் முதல் ஊடாடும் சாகசங்கள் வரை… மகாவதார் பண்டைய கதைகளை ஊடகங்கள் மூலம் முழுவதும் உயிர்ப்பிக்கும். இன்றைய பார்வையாளர்களுடன் வயது மற்றும் பல்வேறு தளங்களில் எதிரொலிக்கும் ஒரு வளமான உலகத்தையும் உருவாக்கும்.

‘மகாவதார் நரசிம்மா’வை இயக்குநர் அஸ்வின் குமார் இயக்கியுள்ளார். இதனை க்ளீம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஷில்பா தவான் -குஷால் தேசாய் மற்றும் சைதன்யா தேசாய் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இதனுடன் திரையுலகில் நற்பெயரை பெற்றுள்ள ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இந்த கூட்டணி பல்வேறு பொழுதுபோக்கு தளங்களில் அற்புதமான ஒரு சினிமா அனுபவத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இதன் ஒப்பிட இயலாத காட்சி பிரம்மாண்டம் – கலாச்சார செழுமை – திறமையான கலைஞர்கள் – மற்றும் ஆழமாக கதை சொல்லும் ஆற்றல் – ஆகியவற்றுடன் இந்த திரைப்படம் 3 D எனப்படும் முப்பரிமான தொழில்நுட்பத்துடன் ஐந்து இந்திய மொழிகளிலும், ஜூலை 25 ஆம் தேதியன்று வெளியாகிறது.