Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
ஏலே’ படத்தின் வெளியீட்டுப் பிரச்சினையை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்

ஏலே படத்தின் வெளியீட்டுப் பிரச்சினையை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்

Posted on February 10, 2021

“ஏலே’ படத்தின் வெளியீட்டுப் பிரச்சினையை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்” – பாரதிராஜா கோரிக்கை
ஏலே படம் வெளியாவதில் சிக்கல்

சில்லுகருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் தற்போது சமுத்திரக்கனியை வைத்து ‘ஏலே’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் மூலம் இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் தயாரிப்பாளர்களாக அறிமுகமாகி இருக்கிறார்கள்.

இப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை 12 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. மேலும் 27ம் தேதி ஓடிடி-யில் ரிலீஸாக ஒப்பந்தமும் செய்து இருந்தார்கள்.

மாஸ்டர் சர்ச்சையால் தியேட்டரில் ரிலீஸாகி குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு பிறகுதான் ஓடிடி-யில் ரிலீஸ் செய்வோம் என்று தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால்தான் தியேட்டரில் வெளியிடவே அனுமதி அளித்துள்ளார்கள்.

இந்த திடீர் சிக்கலால் ஏலே நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

‘ஏலே’ படத்திற்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினால் விதிக்கப்பட்டிருக்கும் தடைக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

“ஏலே’ பட பிரச்சினையில் பேச்சுவார்த்தைக்கு முன் வராமல் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்திருப்பதாக தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தற்போது அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் அந்தச் சங்கத்தின் தலைவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, “யார் தடுத்தாலும் ‘ஏலே’ படம் வெளியாகும். மக்களைச் சென்றடையும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பேச்சுவார்த்தை நடத்திதான் முடிவெடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

bharathiraja

bharathiraja

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme