Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
நாவலை படமாக இயக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

நாவலை படமாக இயக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

Posted on January 28, 2021

நாவலை படமாக இயக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிநாவலை படமாக இயக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ ஆகிய படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. இதில் ‘மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்ததுடன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் வெற்றி பெற்றார்..

இந்தநிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் TR நடிக்கும் ‘மாநாடு’ என்கிற படத்தைத் தயாரித்து வருகிறார் சுரேஷ் காமாட்சி. அரசியல் கதைக்கள பின்னணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.. இதைத் தொடர்ந்து தனது தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தை தானே இயக்கவுள்ளார் சுரேஷ் காமாட்சி.

ஒரு இளம் பெண் காவலர் தனது பணியில் அன்றாடம் சந்திக்கும் அவலங்களை நெற்றிப்பொட்டில் அறைந்தது போல ‘மிக மிக அவசரம்’ படத்தை இயக்கிய, சுரேஷ் காமாட்சி, தனது அடுத்த படத்திலும் அதேபோன்ற யதார்த்த வாழ்வியல் ஒன்றையே படமாக்க இருக்கிறார்.

கிராமத்துப் பின்னணியில், வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வியலை மையமாக வைத்து, உணர்வுப்பூர்வமான கதைகளை எழுதிவருபவர் பிரபல எழுத்தாளர் மா.காமுத்துரை. இவர் எழுதிய ‘முற்றாத இரவொன்றில்’ என்கிற நாவலை தழுவி இப்படம் உருவாக இருக்கிறது. இந் நாவலைப் படமாக்கும் உரிமையை மா.காமுத்துரையிடம் இருந்து முறைப்படி பெற்றுள்ளார் சுரேஷ் காமட்சி..விரைவில் தொழில் நுட்பக் கலைஞர்கள் விபரம் தெரிவிக்கப்படும்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு
  • சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!
  • Allu Arjun Expands His Entertainment Empire with the Grand Launch of AAA Cinemas in Vizag
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!
  • குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா…அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme