Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது

முன்னா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது

Posted on January 23, 2021

ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராமு முத்துசெல்வன் தயாரித்துள்ள படம் “ முன்னா ”. சங்கை குமரேசன் இயக்கி இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அதில், இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது.. “இந்த முன்னா படத்தின் இயக்குநர் நடிகர் தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தக் கொரோனா கால கட்டத்தில் 150 நாட்களுக்கு மேல் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த உதவி இயக்குநர்களுக்கு சாப்பாடு போடுவதற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தோம். அப்போது நடிகர் விக்னேஷ் எங்களுக்கு பெரிய உதவி செய்தார்.

நாம் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம். ரஷ்யாவின் புரட்சிக்கு கூட சினிமா ஒரு உதவியாக இருந்தது. நாம் இனி அறிவுப்பூர்வமான சிந்தனைகளை சினிமாவில் கொண்டு வரணும். இப்போதெல்லாம் ஓவர் பில்டப்பில் தான் படம் எடுக்குறார்கள். நேர்மையாக படம் எடுக்க வேண்டும். நேர்த்தியாக படம் எடுத்தால் எப்படி ஓடாமல் போகும்.

நம் ரசிகர்கள் சரியான படங்களை நிச்சயமாக ஓட வைப்பார்கள். உழைப்புக்கு முன்னுரிமை கொடுங்கள். இந்தப்படம் எதையும் எதிர்பார்க்காமல் எடுத்திருக்கிறார்கள். இப்படியான தைரியம் தான் நிறைய பேர்களை உருவாக்கி இருக்கிறது. அதுபோல் இந்த இயக்குநரையும் பெரிதாக உருவாக்கும்” என்றார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு
  • சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!
  • Allu Arjun Expands His Entertainment Empire with the Grand Launch of AAA Cinemas in Vizag
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!
  • குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா…அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme