Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
நடிகர் சந்தானம் ஜி (ZI ) கிளினிக்கின் 3-வது கிளை திறந்துவைத்தார்-indiastarsnow.com

நடிகர் சந்தானம் ஜி (ZI ) கிளினிக்கின் 3-வது கிளை திறந்துவைத்தார்

Posted on October 29, 2020

பிரம்மாண்ட திறப்புவிழா கண்ட ஜி (ZI ) கிளினிக்கின் 3-வது கிளை: நடிகர் சந்தானம் திறந்துவைத்தார் (FINAL)

மறைந்த மருத்துவர் சேதுராமனின் ஜி (ZI ) கிளினிக்கின் ஈசிஆர் கிளையை அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான சந்தானம் திறந்துவைத்தார்.
ஜி (ZI ) சரும, கேச மற்றும் லேசர் சிகிச்சை மருத்துவமனை முதன்முதலாக 2016-ல் செயல்படத் தொடங்கியது. ஏற்கெனவே போயஸ் கார்டன், அண்ணா நகரில் கிளைகள் உள்ளன. இந்நிலையில், இன்று அதன் மூன்றாவது கிளை ஈசிஆரில் தொடங்கப்பட்டது.
புதிய கிளையை நடிகரும், மருத்துவர் சேதுராமனின் நண்பருமான சந்தானம் திறந்துவைத்தார். திறப்புவிழாவில், நடிகர்கள் வெங்கட் பிரபு, பாபி சிம்மா, பூர்ணிமா பாக்யராஜ், சதீஷ், ஆரவ், தர்ஷன், சன்சிதா ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
ஜி (ZI ) கிளினிக்கின் சிஇஓ மற்றும் மருத்துவர் சேதுராமனின் மனைவிக்கு அனைவரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நாளை (அக்டோபர் 30) முதல் மருத்துவமனை செயல்படத் தொடங்குகிறது.
நிகழ்ச்சியில் பேசிய உமா சேதுராமன், “ஈசிஆரி-ல் ஜி (ZI ) கிளினிக்கின் கிளையைத் திறக்க வேண்டும் என்பது எனது கணவர் மருத்துவர் சேதுராமனின் கனவுத் திட்டம். அவருடைய பிறந்தநாளான இந்த நன்நாளில் அதை நனவாக்கியதில் மிகப்பெரிய மகிழ்ச்சி. நோயாளிகளை அணுகுவதிலும், அவர்களுக்கு சிகிச்சையளிப்பதிலும் மருத்துவர் சேதுராமன் கொண்டிருந்த தொலைநோக்குப் பார்வையையும் கனிவையும் சற்றும் குறையாமல் அளிக்கும்வகையில் இந்த புதிய கிளையும் செயல்படும்” என நெகிழ்ச்சி பொங்க நம்பிக்கை தெரிவித்தார்.
நடிகர் சந்தானம்   ஜி (ZI ) கிளினிக்கின் 3-வது கிளை திறந்துவைத்தார்-indiastarsnow.com
நடிகர் சந்தானம்   ஜி (ZI ) கிளினிக்கின் 3-வது கிளை திறந்துவைத்தார்-indiastarsnow.comநடிகர் சந்தானம்   ஜி (ZI ) கிளினிக்கின் 3-வது கிளை திறந்துவைத்தார்-indiastarsnow.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • கேப்டன் சினி கிரியேஷன்ஸ் ஒன்பதாவது படத்தை சமர்,தீராத விளையாட்டுப் பிள்ளை!!?
  • *“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!*முதல் வார வெளியீட்டிலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின் வெற்றி விழா
  • ‘ஈவில் டெட் பர்ன்’ திரை விமர்சனம்
  • ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘காளிதாஸ் 2’ – தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமை !
  • அப்பாவை இழந்த பின் செய்வதறியாதுதிகைத்து நிற்கும் நான், முறையாக ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் தேடி எழுதுகிறேனே நடிகர் சாந்தனு!!!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme