மதன் கார்க்கி உற்சாகப்படுத்தியுள்ளது எது !

கடினமான உழைப்பு, உறுதியான அர்ப்பணிப்பு இருந்தால் வெற்றி நிச்சயம் வரும். ஆனால் அது புதுமையான விஷயத்தை முயற்சிக்கும் போது கிடைத்தால் அது மிகப்பெரிய சாதனை. பின்பற்றுவதற்கு பாதை எதுவும் இல்லாமல், ஒரு புதிய பாதையை உருவாக்கும் முயற்சி அது. DooPaaDoo என்பது இசையில் புதிய முயற்சிகளை ஊக்கப்படுத்தும் ஒரு இடம். திறமையான இசைக்கலைஞர்களை கண்டுபிடிப்பது, அவர்களுடன் இணைந்து இசையை உருவாக்குவது தான் இவர்களின் நோக்கம். இன்று, ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் முழுமையான ஆல்பத்தை உருவாக்கி, தமிழ் இசை துறையில் DooPaaDoo தன் பெயரை பதித்திருக்கிறது. DooPaaDoo சுயாதீன இசை கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வசதியான தளத்தை உருவாக்கி கொடுக்கிறது.

பாடலாசிரியர் மற்றும் DooPaaDooவின் இணை நிறுவனருமான மதன் கார்க்கி இது குறித்து கூறும்போது, “இது என்னை மிகவும் . நான் இதை பெருமையால் சொல்லவில்லை, திறமையான சுயாதீன கலைஞர்கள் எங்கள் தளத்தின் மூலம் இசைத்துறையில் புகழ் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 2017ல் ராகவா லாரன்ஸ் மாஸ்டரை சந்தித்தபோது, ​​நாங்கள் அவருக்கு DooPaaDoo பற்றிய புதிய கருத்துகளை அறிமுகப்படுத்தினோம். புதிய முயற்சிகளை பரிசோதித்து பார்க்க எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக் கொண்ட அவர், எங்கள் ஸ்டுடியோவிற்கு வந்தார். அவரது படத்தின் கதையின் சூழ்நிலைகளை அடிப்படையாக கொண்டு பாடல்களை பட்டியலிட்டோம். நாங்கள் அவருக்கு அளித்த அனைத்து பாடல்களையும் கேட்ட அவர், ஆறு பாடல்களை தேர்ந்தெடுத்தார். மேலும் மீதமுள்ள பாடல்களை அவரது அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்துவதாக எங்களுக்கு உறுதியளித்தார். காஞ்சனா 3ல் மிகவும் தனித்தன்மையான விஷயம் என்னவென்றால், பாடலின் பின்னணியில் உள்ள எந்த பெயரையோ அல்லது கலைஞர்களின் அடையாளங்களையோ நாங்கள் வெளிப்படுத்தவில்லை. நாங்கள் நினைத்தது வெற்றியாக மாறி, DooPaaDooவை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியிருக்கிறது. கலைஞர்களின் பெயர்களை தெரிந்து கொள்ளாமலேயே காஞ்சனா 3 பாடல்களை ரசிகர்கள் ரசிப்பதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை இது விரைவில் ஒரு நடைமுறையாகவும் மாறலாம். அதாவது, ஒரு சிறந்த இசையின் வெற்றி கலைஞரின் திறமை, பாடல்களின் தரம் மற்றும் கலையின் புத்துணர்வைப் பொறுத்து இருக்குமே தவிர, அந்த இசையுடன் சம்பந்தப்பட்ட பிராண்டை ஒட்டி இருக்காது” என்றார்.

தங்களது எதிர்கால திட்டங்கள் குறித்து DooPaaDooவின் தலைவர் & CEO கவுந்தேயா கூறும்போது, “நாங்கள் இன்னும் பல இயக்குனர்களுடன் இணைந்து செயல்பட முயற்சிக்கிறோம். சுயாதீன கலைஞர்களை இன்னும் நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்கவும், அவர்களின் புகழை விரிவுபடுத்தவும் முயற்சிக்கிறோம். ராகவா லாரன்ஸ் மாஸ்டர், DooPaaDooவை அவர் படத்துக்கு முயற்சித்ததோடு நில்லாமல், மற்ற இயக்குனர்களுக்கும் பரிந்துரை செய்வதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். DooPaaDoo காஞ்சனா 3 மூலம் 6 கலைஞர்களுக்கு வாய்ப்பை பெற்று தந்ததில் மகிழ்ச்சி அடைகிறது. மேலும் இதில் இருந்து இன்னும் பலரை அறிமுகப்படுத்த விரும்புகிறோம்” என்றார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *