Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு அசுரன் படத்தை பார்த்து ரசித்த பாராட்டியுள்ளார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு அசுரன் படத்தை பார்த்து ரசித்த பாராட்டியுள்ளார்

Posted on October 17, 2019

பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் உருவாக்கிய படம் அசுரன். தனுஷ் நடித்த இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர், அபிராமி, பசுபதி, பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கருணாஸ் மகன் கென், ‘ஆடுகளம்’ நரேன், டி.ஜே, பவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அசுரன் படம் கடந்த அக்டோபர் 4ந் தேதி வெளியானது. தீண்டாமை உள்ளிட்ட அடக்குமுறைக்கு எதிராக பேசிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அசுரன் படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடியில் உள்ள திரையரங்கில்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ”அசுரன்- படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும், சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதைகளம், வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும், வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷூக்கும் பாராட்டுகள்” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme