தேனிசைத் தென்றல் தேவா 30 Live Show பாண்டிச்சேரியில் 19.9.2019
தேனிசைத் தென்றல் ” தேவா ” – முதன் முறையாக 
Live Show – பண்ணுகிறார்
400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள தேனிசை தென்றல் தேவா இதுவரை
இந்தியாவில் Live Show நடத்தியதில்லை – முதன் முறையாக பாண்டிச்சேரியில்
மிகப் பிரம்மாண்டமான இசைவிழா நடத்த உள்ளார் . தன்னுடன் திரைப்படங்களுக்கு
பணியாற்றிய சகோதரர்கள் சபேஷ் முரளி , சிவா சம்பத் , மகன் ஸ்ரீகாந்த் தேவா
ஆகியோருடன் ஆட்டம் , பாட்டம் , கொண்டாட்டம் என விருந்து படைக்க உள்ளார் .
இதுவரை Live Show பண்ண ஒத்துக்காத தேனிசை தென்றல் தேவா – Show பண்ண
ஒத்துக்கொண்ட தன் காரணம் SRBS Entertainment – தான் .
யார் இந்த SRBS Entertainment ?
சுரேஷ் மற்றும் அவரது சகோதரர்கள் இந்த SRBS Entertainment – ஐ நடத்தி
வருகிறார்கள் .
சுரேஷ் திரைப்பட ஸ்டில்போட்டோகிராபர் – நிறைய படங்களில் பணியாற்றி
உள்ளார் . சினிமாக்காரர்களுக்கு இவர் தெரிந்த முகம் – SRBS Modeling
Studio நடத்தி வந்தவர் SRBS Entertainment என்ற பெயரில் கடந்த மூன்று
வருடங்களாக பண்ருட்டி , விழுப்புரம் , கடலூர் போன்ற ஊர்களில் நடிகர் ,
நடிகைகள் மற்றும் சினிமா கலைஞர்களை வைத்து பிரமாண்டமாய் கலைநிகழ்ச்சிகளை
நடத்தி உள்ளார் . –
தேனிசை தென்றல் தேவாவை Live Show பண்ண இவர்கள் அணுகிய போது முதலில்
யோசித்த தேவா அவர்கள் , இவர்கள் நடத்தியுள்ள பண்ருட்டி , விழுப்புரம் ,
கடலூர் நிகழ்ச்சிகளை பார்த்து ஆச்சரியப்பட்டு உடனே கூப்பிட்டு சம்மதம்
தெரிவித்தார் .
தேவா OK சொன்ன வுடன் SRBS Entertainment வுடன் Preniss International Pvt
Ltd என்ற கம்பெனியும் இணைந்து இந்த Show – வை நடத்த முன் வந்துள்ளது .
தேவா * Live show – வின் அறிமுகவிழா வடபழனி சிகரம் ஹாலில் மிக சிறப்பாக
நடைப்பெற்றது . அதில் பேசிய தேவா , பாண்டிச்சேரி ரசிகர்களின் மத்தியில்
முதன் முதலில் Live Show பண்ணுவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன் . அவர்கள்
வாழ்வில் மறக்கமுடியாத இசை விழாவாக இந்த Deva Live Show நிச்சயமாக
இருக்கும் என்றார் .
SRBS சுரேஷ் கூறும் போது ஒண்ணு நம்ம சாதிக்கணும் இல்ல சாதிச்சவங்களை
வச்சி சாதிக்கணும் . இதுதான் என்னோட கொள்கை அந்த வகையில் தேனிசை தென்றல்
தேவா சாரை கமிட் பண்ணி Live show நடத்துறதே ஒரு சாதனைதான்னு நான்
நினைக்கிறேன் . இதெல்லாம் என் ஒருத்தனால நடக்கல – எனக்கு பின்னாடி என்
Brothers , Friends என்று பலபேர் இருக்காங்க . அதுல யோகராஜ்ங்கிற நண்பர்
இதுக்கெல்லாம் ஒரு பில்லர் மாதிரி பேர் சொல்ல முடியாத எத்தனையோ பேர் என்
பின்னாடி இருக்காங்க . எல்லார்க்கும் இந்த நேரத்துல Thanks
சொல்லிக்கிறேன் .
SRBS Entertainment and preniss International Pvt Ltd ரெண்டும்
சேர்ந்ததுதான் இந்த Deva 301 ” Live Show வை நடத்துகிறோம் . – Preniss
International Pvt Ltd திரு . பிரேம்நாத் சிதம்பரம் சாருக்கும் , திரு .
வெள்ளை சேது சார் அவர்களுக்கும் இந்த நேரத்துல நன்றியை
தெரிவித்துக்கொள்கிறேன் .
டிசம்பர் 21 – ம் தேதி பாண்டிச்சேரியில் நடத்தப்போற Deva 30 | Live Show
– ல தேவாசார் Team வோட , அனுரதா ஸ்ரீராம் , பிரசன்னான்னு ஏகப்பட்ட
பிண்ணனி பாடகர் பாடகிகள் , இசைக்கலைஞர்கள் பங்கேற்கிற இந்த நிகழ்ச்சி
மிகப்பெரிய வரவேற்பு பெரும்ன்னு நான் உறுதி சொல்லுவேன் . . என்று
கூறினார் .
Preniss International Pvt Ltd திரு . பிரேம்நாத் சிதம்பரம் மற்றும்
வெள்ளை சேது கூறுகையில் எங்களின் Preniss கம்பெனி பல்வேறு துறைகளில்
பல்வேறு நாடுகளில் சாதித்துக் கொண்டிருக்கிறது . சினிமா , தொலைக்காட்சி ,
குறும்படங்கள் என மக்களின் பொழுதுபோக்கு துறையிலும் Preniss
கால்பதித்துள்ளது . குறிப்பாக Director திரு சேரன் அவர்களின் திருமணம்
திரைப்படம் எங்கள் நிறுவனம் தயாரித்ததுதான் . சாதிக்க வரும்
இளைஞர்களுக்கு எங்கள் நிறுவனம் என்றும் கைகொடுக்க தயாராக உள்ளது .
இப்போது தேவா 30 1 * Live Show – வை SRBS Entertainment வுடன் சேர்ந்து
நடத்துகிறோம் . முதன் முதலில் பாண்டிச்சேரியில் ஆரம்பிக்கும் எங்களின்
Event இனி உலகெங்கும் நடத்த வழிவகுக்கும் பத்திரிக்கை , மீடியா , இணையதள
நண்பர்கள் , ரசிகர்கள் அனைவரும் எங்களின் முயற்சிக்கு ஆதரவு தருமாறு
அன்போடு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறினார்கள் .
Deva Sir Is Live Showவின் அறிமுக விழாவையே இவ்வளவு சிறப்பா நடத்துனத
பார்க்கிறப்போ . . . பாண்டிச்சேரியில Function பெரிய அளவுல சக்ஸஸ்
ஆகும்ங்கிறதுல எந்த சந்தேகமும் கிடையாது .










