Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கு தமிழக அரசு கட்டணம் ஏதுமின்றி பயிற்சி

Posted on August 29, 2019

சென்னை,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் பணிகளில் சேர மத்திய தேர்வாணைய குழு முதல்நிலை தேர்வை அடுத்த ஆண்டு மே மாதம் 31-ந்தேதி நடத்த இருக்கிறது. இந்த தேர்வுகளில் வெற்றி பெற தமிழ்நாட்டை சேர்ந்த பட்டதாரி, முதுநிலை பட்டதாரிகளுக்கு தமிழக அரசு கட்டணம் ஏதுமின்றி 6 மாத கால உண்டு உறைவிட பயிற்சியை அளிக்கிறது.
இந்த பயிற்சி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் அளிக்கப்படும். ஆர்வமும், தகுதியும் உள்ள தமிழக இளைஞர்கள் இப்பயிற்சியினை பெற்று, வெற்றிபெற அன்போடு அழைக்கப்படுகிறார்கள். இந்த பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு அக்டோபர் 13-ந்தேதி தமிழகத்தில் 30 மையங்களில் நடைபெறும்.

இதற்கு இணையதள வழியாக விண்ணப்பிக்க அடுத்த மாதம் (செப்டம்பர்) 16-ந்தேதி கடைசி நாள் ஆகும். கூடுதல் தகவல்களை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • *பப்புவா நியூ கினியா நாட்டின் வர்த்தக ஆணையர் டாக்டர்.ஆர்.சி.எம். விஷ்ணுபிரபு, தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற திரு.C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
  • கான் சிட்டி” இரண்டாவது சிங்கிள் வெளியீடு…, மாஸாக கவரும் “நான் தான் கிங்கு” பாடல்!
  • சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா – விஜய் சில்லா – சசி தேவி ரெட்டி கூட்டணியில் உருவாகும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது !!
  • Tube Light Productions PresentFilmmaker M.R. Bharathi’s DirectorialNawaz & Sherry Agarwal Starrer “CYCLE GAP”
  • டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம்’சைக்கிள் கேப்’!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme