தனக்கு ஆண் குழந்தை பிறக்கவுள்ளதாக எமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.
தமிழில் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் எமி ஜாக்சன். இப்படத்திற்கு பிறகு கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கிய இவர் சங்கர் இயக்கத்தில் ‘ஐ’, ‘2.0′ ஆகிய படங்களில் நடித்தார்.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் வேறு எந்த படங்களிலும் அவர் நடிக்கவில்லை. லண்டனுக்கு சென்ற அவர் ஜார்ஜ் பெனாய்டோ என்கிற தொழிலதிபரை காதலிப்பதாக சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்திருந்தார். இதனை அடுத்து அவர் திருமணத்திற்கு முன்பே கர்பமாக இருப்பதாகவும் அறிவித்தார். தன் காதலனோடு இருக்கும் புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி இருந்தார் அந்தப்புகைப்டங்கள் வைரலானது. கர்பாக இருந்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் தன் காதலருடன் இவருக்கும் திருமணம் நிச்சயம் ஆனது. குழந்தை பிறந்த பிறகு இருவரும் திருமணம் செய்துக்கொள்வதாக அதிவித்திருந்தார்.
Leave a Reply