Blog

  • நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடிக்கும் “ஹாய்” (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

    Z ஸ்டூடியோஸ் (Z Studios), தி ரவுடி பிக்சர்ஸ் (The Rowdy Pictures) மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் ‘ஹாய்’ (Hi) படத்தை விஷ்ணு எடவன் (Vishnu Edavan)எழுதி இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் கதாநாயகனாக கவினும் நடிக்கிறார்கள்.

    மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குனர் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள்

    அறிமுக இயக்குனர் விஷ்ணு எடவன் இவர் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் அஸோஸியேட் டைரக்டராக பணியாற்றியவர் இவர் ஹாய் படத்தை எழுதி இயக்குகிறார்.

    இப்படத்தை பற்றி இயக்குனர் விஷ்ணு எடவன் கூறும்போது : ஹாய்’ முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்ப கதையில் உண்மையான காதலையும் கூறும் படமாக உருவாகி வருகிறது.

    இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடந்து வருகிறது. 20 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (08.10.2025) வெளியிடப்பட்டுள்ளது. இதன் பிறகு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறும். இப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளன. அதில் இரண்டு பாடல்கள் முழுமையாக காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நயன்தாராவும், கவினும் இணைந்து நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    தயாரிப்பாளர்கள்
    உமேஷ் குமார் பன்சால்
    நயன்தாரா, விக்னேஷ் சிவன்
    எஸ்.எஸ். லலித் குமார்

    இணை தயாரிப்பாளர்கள்
    அக்ஷய் கெஜ்ரிவால் & கே.எஸ். மயில்வாகனன்

    தொழில் நுட்ப கலைஞர்கள் :

    இசை – ஜென் மார்ட்டின்
    ஒளிப்பதிவாளர் – ராஜேஷ் ஷுக்லா
    எடிட்டர் – பிலோமின்ராஜ்
    கலை இயக்குனர் – சேகர்.பி
    நடனம் – பிருந்தா
    சண்டை பயிற்சி – தினேஷ் காசி
    ஆடை வடிவமைப்பாளர் – காவ்யா ஸ்ரீராம்
    விளம்பர வடிவமைப்பாளர் – வியாகி
    புகைப்படங்கள் – ஆகாஷ் பாலாஜி
    கூடுதல் திரைக்கதை & உரையாடல்கள் – சி.யூ. முத்துசெல்வன்
    இணை இயக்குனர் – டி.எஸ். வினோபாலா
    உதவி இயக்குனர்கள் – பத்மன்.எம், தங்கவேல்.எஸ்
    தயாரிப்பு நிர்வாகி – ஜி. முருகபூபதி
    தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் – எஸ். கிருஷ்ணராஜ்
    தயாரிப்பு நிர்வாகம் – டிவ்ஸ் வேணுகோபால்
    லைன் தயாரிப்பாளர் – குபேந்திரன் வி.கே
    கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – வினோத் சி.ஜே
    மக்கள் தொடர்பு – யுவராஜ்

  • கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது !!

    ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள “வா வாத்தியார்” திரைப்படம், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இப்படம் அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து வித்தியாசமான களங்களில், அழகான படைப்புகளை வழங்கி அசத்தி வரும் நடிகர் கார்த்தி மற்றும் தனித்துவமான இயக்குநரான நலன் குமாரசாமி ஆகிய இருவரும் இணைகிறார்கள் என்றவுடனே, படத்தின் மீது பலமடங்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த கூட்டணியின் மாயாஜாலத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றும் வகையில், இப்படம் வரும் 2025 டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவித்து, ஒரு அசத்தலான போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

    இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

    முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.‌ கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்.

    பெரும் பொருட்செலவில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா இந்தத் திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்.

    அறிவிப்பு போஸ்டரின் பின்னணியில் கூட்டம் ஆர்ப்பரிக்க, கார்த்தி சில்லவுட்டில் கையில் சவுக்குடன் நிற்கும், இந்த அறிவிப்பு போஸ்டரில் உலகம் முழுதும் 05.12.2025 என வெளியீட்டு தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகவுள்ளது. பெரும் ஆவலைத் தூண்டியுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • BB4 “அகண்டா 2: தாண்டவம்” , (#BB4 Akhanda 2: Thandavam) டிசம்பர் 5 முதல் திரையரங்குகளில்!

    காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா – பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு (Boyapati Sreenu), கூட்டணியில் 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் அச்சந்தா (Raam Achanta), கோபி அச்சந்தா (Gopi Achanta) ஆகியோர் தயாரிக்க, M. தேஜஸ்வினி நந்தமூரி ( M Tejaswini Nandamuri) வழங்கும் #BB4 “அகண்டா 2: தாண்டவம்” , (#BB4 Akhanda 2: Thandavam) டிசம்பர் 5 முதல் திரையரங்குகளில்!

    காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக்பஸ்டர் மேக்கர் போயாபட்டி ஸ்ரீனு நான்காவது முறையாக இணையும், அதிரடித் திரைப்படமான “அகண்டா 2: தாண்டவம்”, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

    இப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா ஆகியோர் தயாரிக்க, M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார். இந்தப் படத்தின் டீசர், பெரும் வரவேற்பை பெற்று, ரசிகர்களிடையே உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இப்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக – அகண்டா 2: தாண்டவம் உலகமெங்கும் வரும் டிசம்பர் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

    இது குறித்து வெளியான போஸ்டரில் பாலகிருஷ்ணா – நீண்ட முடி, கரடுமுரடான தாடி, புனித மாலைகள் மற்றும் நகைகள் அணிந்து, பாரம்பரிய காவி மற்றும் பழுப்பு நிற ஆடையில், அலங்கரிக்கப்பட்ட திரிசூலத்தை தாங்கியவாறு, பனிமூட்டம் சூழ்ந்த பின்னணியில் வீரமான பாவனையுடன் காட்சியளிக்கிறார். ஆன்மிகமும் அதிரடியும் கலந்த அவரது தோற்றம் ரசிகர்களை மயக்குகிறது.

    எஸ். தமனின் (S Thaman) அதிரடி பின்னணி இசை, படத்தின் அதிரடி மாஸ் காட்சிகளை பல மடங்கு உயர்த்தி, ரசிகர்கள் எதிர்பார்க்கும பிரம்மாண்ட அனுபவத்தை வழங்கப்போகிறது. ஆன்மீக ஆற்றலுடன் கூடிய பாலகிருஷ்ணாவின் தோற்றம், அவரது தீவிர ரசிகர்கள், மற்றும் திரை ஆர்வலர்களை ஏற்கனவே மெய்மறக்கச் செய்துள்ளது.

    புதிய வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டதால், படக்குழுவுக்கு வலுவான ப்ரமோஷன் பணிகளை முன்னெடுக்க போதுமான நேரம் கிடைத்துள்ளது. தொடர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் அப்டேட்களும் சஸ்பென்ஸ்களும் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன.

    படத்தில் சம்யுக்தா நாயகியாக நடிக்க, ஆதி பினிசெட்டி வலிமையான எதிர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், ஹர்ஷாலி மால்ஹோத்ரா முக்கியமான வேடத்தில் தோன்றுகிறார்.

    ஒளிப்பதிவு பணிகளை – C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே செய்துள்ளனர். எடிட்டிங் பணிகளை தம்மிராஜு (Tammiraju) மற்றும் கலை இயக்கத்தை A. S. பிரகாஷ் செய்துள்ளனர்.

    வலுவான படக்குழு மற்றும் வானளாவிய எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் “அகண்டா 2: தாண்டவம்”, ரசிகர்கள் கொண்டாடும் ஆன்மிக அதிரடி மாஸ் அனுபவமாக இருக்கும்

    நடிப்பு :

    நந்தமூரி பாலகிருஷ்ணா
    சம்யுக்தா
    ஆதிப் பினிசெட்டி
    ஹர்ஷாலி மால்ஹோத்ரா

    தொழில்நுட்பக் குழு :

    எழுத்து, இயக்கம் : போயபதி ஸ்ரீனு
    தயாரிப்பாளர்கள் : ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா
    பேனர் : 14 ரீல்ஸ் ப்ளஸ்
    வழங்குபவர் : M. தேஜஸ்வினி நந்தமூரி
    இசை : S. தமன்
    ஒளிப்பதிவு : C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே
    எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : கோடி பருசூரி
    கலை : A.S. பிரகாஷ்
    எடிட்டிங் : தம்மிராஜு
    சண்டை அமைப்பு : ராம் – லக்ஷ்மன்

    God Of Masses Nandamuri Balakrishna, Blockbuster Maker Boyapati Sreenu, Raam Achanta, Gopi Achanta, 14 Reels Plus, M Tejaswini Nandamuri Presents #BB4 Akhanda 2: Thandavam, Theatrical Release On December 5th

    God Of Masses Nandamuri Balakrishna and blockbuster maker Boyapati Sreenu’s much-anticipated fourth collaboration for the high-octane sequel, Akhanda 2: Thaandavam, is in the final phase of post-production. Produced on an ambitious scale by Raam Achanta and Gopichand Achanta under the 14 Reels Plus banner, the project is proudly presented by M Tejaswini Nandamuri, Akhanda 2 created a massive buzz and sent fans into a frenzy with its teaser.

    Riding high on the overwhelming response, the makers have now officially announced a new release date. Akhanda 2: Thaandavam will hit the big screens on December 5th, 2025. This sequel is set to be a grand cinematic spectacle, with Boyapati Sreenu crafting a larger-than-life narrative on an even more expansive canvas.

    In the release date poster, Balakrishna is seen with long hair and a rugged beard, adorned with multiple sacred beads and jewelry. He wields a massive trident decorated elaborately, and his attire includes traditional saffron and brown robes that enhance the mythological and divine imagery. The snowy and vibrant backdrop, along with his dynamic pose, accentuates the intensity and grandeur of the character.

    S Thaman’s rousing background score is expected to elevate the film’s high-voltage scenes, delivering the signature adrenaline rush fans anticipate. Balakrishna’s fierce and spiritually charged avatar has already impressed fans, masses, and movie buffs alike.

    With the new release date, the team now has ample time to roll out a strong promotional campaign. Expect regular updates and surprises that will further amp up the excitement leading to the release.

    The film features Samyuktha as the female lead, with Aadhi Pinisetty playing a powerful role, and Harshali Malhotra in a key character.

    C. Ramprasad and Santoshh D Detakae are handling cinematography, with Tammiraju in charge of editing, and AS Prakash serving as the art director.

    With a powerful team and soaring expectations, Akhanda 2: Thaandavam is going to be a spiritual action extravaganza that fans won’t want to miss.

    Cast : God Of Masses Nandamuri Balakrishna, Samyuktha, Aadhi Pinisetty, Harshali Malhotra

    Technical Crew:

    Writer, Director: Boyapati Sreenu
    Producers: Raam Achanta, Gopi Achanta
    Banner: 14 Reels Plus
    Presents: M Tejaswini Nandamuri
    Music: Thaman S
    DOP: C Ramprasad, Santoshh D Detakae
    Ex-Producer: Koti Paruchuri
    Art: AS Prakash
    Editor: Tammiraju
    Fights: Ram-Lakshman

  • In a First for South India, SIMS Hospital Treats the Region’s Youngest Patient with Porcelain (Calcified) Aorta and Aortic Valve Block

    • This combination of porcelain (calcified) aorta and aortic valve block is extremely rare in patients under 30 years of age.

    Chennai, 7th October , 2025: In a remarkable medical feat, doctors at SIMS Hospital successfully saved the life of a 28-year-old engineering student from Kerala, who was suffering from a rare and life-threatening heart condition.

    The young man had been experiencing severe breathing difficulties for two months. After visting several hospital in Kerala, he was diagnosed with a rare combination of two serious heart issues – a “porcelain aorta” (a severely hardened and fragile main artery) and “aortic valve stenosis” (a narrowing of the valve that controls blood flow from the heart). Due to the complexity and high risk of surgery, local hospitals advised against surgery.

    Not giving up hope, the patient travelled to Aortic aneurysm Centre at SIMS Hospital in Chennai, where a team of expert heart surgeons took on the challenge. The surgical team performed a mechanical aortic valve replacement, navigating the extraordinary challenge of suturing the heavily calcified aorta, the very structure on which the aortic valve sits. The complexity of the case posed a high risk, given that a porcelain aorta is brittle and difficult to operate on, making the surgery extremely challenging.

    The complex surgery, lasting over five hours, was performed by Dr. V V Bashi, Director & Senior Consultant, Institute of Cardiac & Advanced Aortic Diseases, and Dr. Mohammed Idhrees, Consultant Cardiothoracic Surgeon, with the support from anesthetists: Dr. Aju Jacob, Senior Consultant, Cardiac Anaesthesia, and Dr. Arun Kumar A, Consultant, Anaesthesia and team of nurses and perfusionists

    In his comments, Dr. Bashi said, “The aorta, the body’s largest artery, carries oxygen-rich blood from the heart, while the aortic valve ensures smooth blood flow and prevents backflow. In this patient, the valve was severely narrowed and the aorta heavily calcified. This was a highly complex case because of the dual risk posed by a stenotic aortic valve and a porcelain aorta, both of which are extremely rare in young people. Aortic valve stenosis is common in older adults, usually developing gradually due to calcium buildup over many years. However, it is extremely rare in someone under 30. Likewise, a porcelain aorta is very uncommon in young patients. Our team meticulously planned and executed the procedure carefully managing the risks to ensure the patient’s safety while restoring normal heart function. If we also had refused surgery for him, he would not survived for long due to his serious condition.”

    Dr. Mohammed Idhrees, Consultant Cardiothoracic Surgeon , said, “In this case, we needed to perform a mechanical valve replacement, which involves suturing both the valve and the aorta. However, the porcelain aorta is so heavily calcified that its walls are as fragile as an eggshell. Cutting or suturing such calcified tissue carries significant risks: small fragments of calcium can break off and enter the bloodstream, potentially causing a stroke or other serious complications, and even if suturing is technically successful, there is a high risk of blood leakage. Because of these challenges, two major hospitals in Kerala had deferred the surgery, considering it too risky. Our team, after careful planning and preparation, executed the procedure with precision, taking every precaution to minimise risks. The patient is now recovering well and is expected to lead a normal life with appropriate post-operative care.”

    Commenting on this achievement Dr. Ravi Pachamuthu, Chairman, SIMS Hospital, said, “The achievement of our surgical team is nothing short of a medical milestone. Because of the tremendous skill required, successfully treating a 28-year-old patient with an extraordinary combination of almost ‘eggshell’ calcified aortic valve and a porcelain aorta is a medical triumph. The surgical staff’s expertise, tenacity, and creativity in highly complex cardiac situations not only saved a life but also created a new standard in the field. This accomplishment brings new meaning to the commitment in patient care at SIMS Hospital”

    For media queries please contact Mahesh @ 98845 45000

  • தென்னிந்தியாவில் முதன் முறையாக பளிங்கு (கால்சியம் படிந்த) பெருந்தமனி மற்றும் பெருந்தமனி வால்வில் அடைப்பிருந்த இளைஞருக்கு சிம்ஸ் மருத்துவமனையில் வெற்றிகர சிகிச்சை

    • 30 வயதிற்கு கீழ்ப்பட்ட நோயாளிகளில் பளிங்கு (கால்சியம் படிந்த) பெருந்தமனி மற்றும் பெருந்தமனி வால்வில் அடைப்பு ஆகியவற்றின் கலவை கண்டறியப்படுவது மிகவும் அரிதாகும்

    • ஏறக்குறைய ஒரு முட்டைப்போல எளிதில் உடையக்கூடிய அதிக கால்சியம் படிந்த வால்வில் ஒட்டுவதும், தையலிடுவதும் மிக கடினமானது; அதிக ஆபத்து வாய்ந்ததும் கூட.

    சென்னை, அக்டோபர் 07, 2025 : ஒரு அரிதான, உயிருக்கு அதிக ஆபத்தான இதய பாதிப்பால் அவதிப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 28 வயதான பொறியியல் துறை மாணவரின் உயிரை ஒரு குறிப்பிடத்தக்க மருத்துவ சாதனையாக சிம்ஸ் மருத்துவமனையின் நிபுணத்துவம் மிக்க மருத்துவர்கள் காப்பாற்றியிருக்கின்றனர்.

    இரு மாதங்களாக கடுமையான சுவாசப் பிரச்சனைகள் இந்த இளைஞருக்கு இருந்திருக்கின்றன. கேரளாவில் பல மருத்துவமனைகளுக்கு சென்றபோது பளிங்கு பெருந்தமனி (கடுமையாக இறுகி, கடினமான மற்றும் எளிதில் நொறுங்கக்கூடிய முக்கிய இரத்தக்குழாய்) மற்றும் “ஒடுங்கிய பெருந்தமனி வால்வு” (இதயத்திலிருந்து இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகின்ற வால்வு குறுகியிருப்பது) என்ற இரண்டு கடுமையான இதயப் பிரச்சனைகள் அரிதாக ஒருங்கிணைந்திருப்பது பரிசோதனைகளில் கண்டறியப்பட்டன. இதற்கான அறுவைசிகிச்சையின் சிக்கலான தன்மை மற்றும் உயிருக்கு அதிக ஆபத்துக்கான வாய்ப்பின் காரணமாக, கேரளாவின் உள்ளூர் மருத்துவமனைகள் அறுவைசிகிச்சையை தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கியிருந்தன.

    இருப்பினும் நம்பிக்கையை கைவிடாத இந்த இளம் நோயாளி, சென்னையின் சிம்ஸ் மருத்துவமனையில் பெருந்தமனியில் இரத்தநாள அழற்சிக்கான சிகிச்சை மையத்திற்கு வருகை தந்தார். இங்கு பணியாற்றும் நிபுணத்துவம் மிக்க இதய அறுவைசிகிச்சை மருத்துவர்களின் குழு, நம்பிக்கையோடும், தைரியத்தோடும் இந்த சவாலை எதிர்கொள்ள முடிவு செய்தது. மிக அதிகமாக கால்சியம் படிந்த பெருந்தமனி மீது தான், பெருந்தமனி வால்வு இருக்கிறது. கால்சியம் படிந்த கடினமான பெருந்தமனியில் தையலிடும் அசாதாரண சவாலை எதிர்கொண்ட நிபுணர்களின் குழு ஒரு மெக்கானிக்கல் பெருந்தமனி வால்வு மாற்றும் செயல்முறையை திறம்பட மேற்கொண்டது. பளிங்கு பெருந்தமனி என்ற நிலையானது, தூளாக நொறுங்கக்கூடியதால், அதில் அறுவைசிகிச்சை செய்வது சிரமமானதாகவும், அதிக சவாலானதாகவும் இருப்பதால் இந்த இளைஞருக்கான சிகிச்சை அதிக ஆபத்தானதாகவே இருந்தது.

    ஐந்து மணி நேரங்களுக்கும் அதிகமாக நீடித்த இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை, இதய மற்றும் பெருந்தமனி நோய்களுக்கான சிகிச்சை மையத்தின் இயக்குனரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். வி.வி. பாஷி மற்றும் இதய மார்பறை அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர். முகமது இத்ரீஸ் ஆகியோர் வெற்றிகரமாக மேற்கொண்டனர். உணர்விழப்பு மருந்தியல் நிபுணர்களான இதய மயக்கவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். அஜு ஜேக்கப், மயக்கவியல் துறை நிபுணர் டாக்டர். ஏ. அருண்குமார் ஆகியோரின் சிறப்பான ஆதரவோடு செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்கள் குழுவின் பங்களிப்பும் இந்த சிகிச்சையின் வெற்றிக்கு காரணமாக அமைந்தன.

    டாக்டர். பாஷி இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “உடலின் மிகப்பெரிய தமனியான பெருந்தமனி, இதயத்திலிருந்து ஆக்சிஜன் செறிவான இரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்கிறது. பெருந்தமனி வால்வு, சீரான இரத்த ஓட்டத்தையும் உறுதி செய்வதுடன், இரத்தம் பின்னோக்கிப் பாய்வதை தடுக்கிறது. இந்த இளம் நோயாளிக்கு இந்த வால்வு மிக கடுமையாக சுருங்கி ஒடுங்கியிருந்தது; பெருந்தமனியும், அதிக கால்சியம் படிந்து பளிங்கு போல ஆகியிருந்தது. ஒடுங்கிய பெருந்தமனி வால்வு மற்றும் பளிங்குபோல் கால்சியம் படிந்த பெருந்தமனி ஆகியவற்றின் இரட்டை இடர்வாய்ப்பின் காரணமாக, இது அதிக சிக்கலான பாதிப்பாக இருந்தது. இளவயது நபர்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுவது மிகவும் அரிதானது. பெருந்தமனி வால்வு ஒடுக்கம் என்பது, வயது முதிர்ந்த நபர்களில் பொதுவானது. பல ஆண்டுகளாக கால்சியம் படிப்படியாக படிவதன் காரணமாக இந்த பாதிப்பு வழக்கமாக உருவாகும். ஆனால், 30 வயதிற்கு கீழ்ப்பட்ட ஒரு நபருக்கு இது இருப்பது உண்மையிலேயே மிக அரிது. அதைப் போலவே, பளிங்கு பெருந்தமனி என்பதும், இளவயது நோயாளிகளிடம் கண்டறியப்படுவது மிக அசாதாரணமானது. இயல்பான இதய இயக்கத்தை திரும்ப கொண்டு வரும் அதே வேளையில், நோயாளியின் உயிர் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக எமது குழுவினர், ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்துகளை மிக கவனமாக மதிப்பாய்வு செய்து சிகிச்சை திட்டத்தை துல்லியமாக வகுத்து அதனை செயல்படுத்தினர்.” என்று கூறினார்.

    இதய மார்பறை அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர். முகமது இத்ரீஸ் பேசுகையில், “இந்நோயாளிக்கு ஒரு மெக்கானிக்கல் வால்வு மாற்றும் செயல்முறையை செய்வது அவசியமாக இருந்தது. இதில் பெருந்தமனி வால்வு மற்றும் பெருந்தமனி ஆகிய இரண்டிலும் தையல் போடுவது தேவைப்படும். இருப்பினும், பளிங்கு போன்ற பெருந்தமனியானது, அதிக கால்சியம் படிந்திருந்ததால் அதன் சுவர்கள் ஒரு முட்டை ஓடு போல எளிதில் உடையக்கூடியதாக இருந்தன. கால்சியம் படிந்த இத்தகைய திசுவை வெட்டுவது அல்லது தையல் போடுவதில் கணிசமான ஆபத்துகள் இருக்கின்றன. கால்சியத்தின் சிறு துகள்கள் உடைந்து வெளியே இரத்த ஓட்டத்திற்குள் நுழையுமானால், பக்கவாதம் அல்லது பிற கடுமையான சிக்கல்கள் ஏற்பட்டு விடும். தையலிடும் செயல்முறை தொழில்நுட்ப ரீதியாக வெற்றிகரமாக இருந்தால் கூட, இரத்தக்கசிவு ஏற்படுவதற்கு அதிக இடர்வாய்ப்பு இருக்கும். இந்த நுட்பமான சவால்களின் காரணமாக, இந்த அறுவைசிகிச்சை அதிக ஆபத்தானது என்று கருதிய கேரளாவின் இரண்டு முக்கிய மருத்துவமனைகள் இந்த அறுவைசிகிச்சையை தவிர்த்தன. சிம்ஸ் மருத்துவமனையில் உள்ள எமது குழு, கவனமாக திட்டமிடல் மற்றும் தயாரிப்பு நடவடிக்கைக்குப் பிறகு இடர்வாய்ப்புகளை குறைப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்த பிறகு மிக துல்லியமாக இந்த மருத்துவ செயல்முறையை மேற்கொண்டது. சிகிச்சைக்குப் பிறகு இந்த இளம் நோயாளி இப்போது நன்றாக மீண்டு குணமடைந்து வருகிறார். அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய முறையான பராமரிப்போடு, இயல்பான வாழ்க்கையை இவர் வாழ்வாரென்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்படுகிறது,” என்று கூறினார்.

    சிம்ஸ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். ரவி பச்சமுத்து , இச்சாதனை நிகழ்வு குறித்து கருத்து தெரிவிக்கையில், “எமது அறுவைசிகிச்சை நிபுணர்களது குழுவின் இச்சாதனை, மருத்துவ செயல்தளத்தில் ஒரு முக்கிய மைல்கல் என்றே கருதப்படுகிறது. இந்த சிக்கலான சவால் நிறைந்த அறுவைசிகிச்சைக்கு மிக அதிக திறன் தேவையாக இருந்தது. ஏறக்குறைய ஒரு ‘முட்டை ஓடு’ போன்று கால்சியம் படிந்த பெருந்தமனி வால்வு மற்றும் பளிங்கு போன்று மாறிய பெருந்தமனி ஆகிய மிக அரிதான இரு ஆபத்தான நிலைகளின் கலவையை கொண்டிருந்த 28 வயதான இந்த நோயாளிக்கு வெற்றிகர அறுவைசிகிச்சையை செய்திருப்பது, நிச்சயமாக பெருமிதம் அடையக்கூடிய சிறந்த சாதனையாகும். அதிக சிக்கலான இதய பாதிப்பு சூழல்களில் , எமது அறுவைசிகிச்சை நிபுணர்களின் நிபுணத்துவம், விடாமுயற்சி மற்றும் சமயோஜித திறன் ஆகியவை இந்த இளம் நோயாளியின் உயிரை காப்பாற்றியிருக்கிறது; அதே வேளையில், இதய சிகிச்சை உத்திகளின் ஒரு புதிய தர அளவுகோலை உருவாக்கியிருக்கிறது. சிம்ஸ் மருத்துவமனையின் நோயாளிகளின் நலவாழ்வு மீது நாங்கள் கொண்டிருக்கின்ற அர்ப்பணிப்பிற்கும், நிபுணத்துவம் மிக்க உயர் சிகிச்சைக்கும் ஒரு புதிய அர்த்தத்தை இந்த மருத்துவ சாதனை தந்திருக்கிறது.” என்று கூறினார்.

    ஊடக தொடர்புக்கு: மகேஷ் @ 9884545000

  • காந்தாரா சாப்டர் 1 திரை விமர்சனம்


    ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து கன்னடத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது காந்தாரா சாப்டர் 1. காந்தாரா படத்தின் முன்கதையாக இப்படம் உருவாகியுள்ளது. ருக்மினி வசந்த் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இன்று அக்டோபர் 2 ஆம் தேதி பான் இந்திய அளவில் வெளியாகியுள்ள காந்தாரா படத்தின்
    காந்தாரா சாப்டர் 1 முழுக்க முழுக்க புராண கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் மிக நேர்த்தியாக அமைந்துள்ளன. முக்கியமாக படத்தின் இரண்டு ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளன. இந்த இரண்டு காட்சிகளும் வி.எஃப்.எக்ஸ் தரத்தில் வியக்கவைக்கின்றன.

    முதல் பாதி பெரும்பாலும் நகைச்சுவையாக செல்கிறது . நாயகி ருக்மினி வசந்த் கதாபாத்திரம் மிகச் சிறப்பாக உள்ளது . படம் தொடக்க முதல் இறுதி வரை திரையில் ரசிக்கும் படி  படத்தில் காட்சிகளை எழுதியுள்ளார் இயக்குநர் ரிஷப் ஷெட்டி. படத்தின் இறுதி 30 மணி நேரம் மெய் சிலிர்க்க வைக்கும்(VFX) வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் அனைத்து நடிகர்களின் நடிப்பு திரையில் மிகவும் சிறப்பு.

  • மரியா திரை விமர்சனம்

    கிறிஸ்தவ குடும்பத்தின் எல்லைக்குள் அமைக்கப்பட்டிருக்கும் இது, கன்னியாஸ்திரியாக மாற விதிக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணின் கதையைச் சொல்கிறது, ஆனால் அவளுடைய சொந்த விருப்பப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கையின் சாத்தியக்கூறுகளால் ஈர்க்கப்படுகிறது. இந்த மோதல் கதையின் உணர்ச்சி மையத்தை உருவாக்குகிறது, நம்பிக்கை, அடையாளம் மற்றும் தனிப்பட்ட தேர்வு ஆகியவற்றின் கருப்பொருள்களை அழகாக ஒன்றாக இணைக்கிறது.மரியா என்ற பெண் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அவரது இயல்புக்கு மாறான எண்ணம் தோன்றுகிறது. அதை மற்றவர்களிடம் (தனது தாயிடம்) சொல்லும்போது, அவரைச் சுற்றி இருக்கிறவர்களும் குடும்பத்தினரும் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள், அதனால் அவருக்கு ஏற்படும் பிரச்சினைகள் என்ன என்பது தான் திரைக்கதை.


    மரியா வெறும் திரைப்படம் மட்டுமல்ல, சிந்தனையைத் தூண்டும் பயணம் – நம்பிக்கை, சுதந்திரம் மற்றும் ஒருவரின் சொந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் தைரியம் பற்றிய துணிச்சலான, ஊக்கமளிக்கும் வகையில் நடிப்பு திரைக்கதை அனைத்தும் திரையில் (சிந்திக்க)ரசிக்க வைத்துள்ளது.
    மரியா திரைப்படம் சர்வதேச தளங்களில் ஏற்கனவே அங்கீகாரத்தைப் பெற்று வரும் இந்தப் படம், எல்லைகளை உடைக்கும் அதன் விருப்பத்திற்காக இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்லைக் தனித்து திரையில் ஜொலிக்கும்.

  • இட்லி கடை விமர்சனம்

    சிறிய கிராமத்தில் மூன்று தலைமுறையாக சிவனேசன் அம்மா மற்றும் இட்லி கடை நடத்துபவர் சிவநேசன்(ராஜ்கிரண்). அவரின் மகன் சமையல் கலைஞரான முருகன்(தனுஷ்). சொந்த ஊரில் வாழ்வதை சந்தோஷமாக நினைக்கிறார் சிவநேசன் அப்பாவின் இட்லி கடையை விட்டு விட்டு  மகனோ தனது படிப்புக்கு ஏற்ற வேலையைத் தேடி பேங்காக் (வெளிநாட்டிற்கு) பைவ் ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்கிறார் முருகன் .பேங்காக்கில் விஷ்ணுவர்தனிடம்(சத்யராஜ்)வேலைக்கு சேர்கிறார் முருகனின்  திறமைக்கு பாராட்டுகளும், பதவி உயர்வு கிடைக்கின்றன.விஷ்ணுவர்தனின் மகள் மீராவுக்கு(ஷாலினி பாண்டே)முருகன் மீது காதல் ஏற்பட அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையையும் விதிக்கிறார். எனினும் ஒரு மரணத்தால் ஹீரோ எடுக்கும் முடிவு அஸ்வினுக்கு முருகனின் மீது பகையை ஏற்படுத்துகிறது..


    அஸ்வின்(அருண் விஜய்)  முருகன் தனுசை. பைத்தியத்தாரா?


    பைவ் ஸ்டார் ஹோட்டல் உரிமையாளர் விஷ்ணுவரதன் மகளை தனுஷ் மணமுடித்தாரா?


    தனது பரம்பரை இட்லி கடையை தனுஷ் வெற்றிகரமாக நடத்தி முடித்தாரா?


    தனுஷின்  இளமைக்கால காதல் நிறைவேறியதா? இது போன்ற கேள்விக்கு பதில் ,’இட்லி கடை’ படத்தின் திரைக்கதை.

  • A Milestone in Tamil Independent Music Preview Launch: Navneeth Sundar’s Oru Maalai Nerathil Unites Human-Made Music with AI-Generated Visuals

    First multilingual romantic single with groundbreaking AI-powered video to release October 2nd

    Composer and innovator Navneeth Sundar, known for his pioneering work in integrating technology with music and for bringing Carnatic music to the iPad, has unveiled his latest single, Oru Maalai Nerathil. A breezy romantic track, the release marks a new chapter in Tamil independent music.

    The song itself is 100% human-made, composed and performed by Navneeth. What sets this release apart is its pioneering AI-generated visuals — for the first time, AI has produced music video imagery with consistent characters, vivid expressions, and a striking resemblance to the artist himself.

    This achievement sets a new benchmark in the creative fusion of art and technology, demonstrating how human artistry and AI innovation can come together to create a fresh, boundary-pushing experience. The song releases in four languages simultaneously: Tamil, Telugu, Kannada, and Hindi.

    About Navneeth Sundar

    Navneeth Sundar is a composer, keyboardist, and music innovator who has performed over 3,000 shows worldwide. He is widely recognized for his forward-thinking approaches, including his celebrated performances of Carnatic music on the iPad using the app GeoShred. He also holds a Limca Book of Records recognition for the first-ever Carnatic music played on an iPad.

    Navneeth’s diverse body of work as composer includes:
    • “Tamizh Mann” – the audio-visual spectacle of the Chess Olympiad 2022, featuring Kamal Haasan and directed by Vignesh Shivan.
    • Background score for the Musical Fountain of the Kalaignar Centenary Park, commissioned by the Tamil Nadu Government.
    • Film music across industries: Guppedantha Prema (Telugu), Buddy (Malayalam), Pattampoochi (Tamil).
    • Evergreen hit “Chandrachooda” from the Malayalam film Karmayogi (2012), which has surpassed 36 million views on YouTube and continues to be performed worldwide by dancers and musicians.
    • Web series: Paani Puri (Tamil).
    • Upcoming projects: Background score for the Tamil film Lucky, and songs and score for the Tamil film Knock Knock.

    Release Information

    Oru Maalai Nerathil (Tamil), its Telugu version Chiru Gaali VeLalo, its Kannada version Hani Moda Baanali, and its Hindi version Ek Shaam Ki Raah Mein will be available on Spotify, Apple Music, YouTube Music, Amazon Music, and all major streaming platforms from October 2nd.

    The lyrics were written by:
    • Navneeth Sundar – Tamil & Hindi
    • Kranthi Vadluri – Telugu
    • Deepti Natarajan – Kannada

    The groundbreaking AI-powered visuals will premiere on YouTube.

  • ஏ ஐ தொழில் நுட்பத்தில் உருவான ‘ஒரு மாலை நேரத்தில்’ காதல் பாடல் ஆல்பம் வெளியீட்டு விழா!

    ஏ ஐ தொழில் நுட்பத்தில் உருவான ‘ஒரு மாலை நேரத்தில்’ காதல் பாடல் ஆல்பம் வெளியீட்டு விழா!
    தமிழில் பல முன்னணி  இசையமைப்பாளர்களோடு பணியாற்றியவரும், மலையாளம்,  தமிழ்  உட்பட பல திரைப்படங்களுக்கும் பல ஆல்பம் பாடல்களுக்கும்  இசையமைத்தவருமான புகழ்பெற்ற இசையமைப்பாளர் நவீனீத் சுந்தர், தற்போது முழுக்க முழுக்க ஏ ஐ தொழில் நுட்பத்தில் விஷுவல்களை உருவாக்கி, இசையமைத்துள்ள  சுயாதீன ஆல்பம்  பாடல் “ஒரு மாலை நேரத்தில்”.

    புதுமையான முறையில் இன்றைய தலைமுறை ரசிகர்களைக் கவரும் வகையில், உருவாகியிருக்கும் இந்த ஆல்பம் பாடலின் வெளியீட்டு விழா இன்று திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

    முடியும் எனத் தெரியவில்லை. அவர் இந்த வீடியோ செய்து காட்டிய போது, ஏன் ரோஹித் சர்மா வைத்து எடுத்துள்ளாய் எனக்கேட்டேன், இல்லை அது நான் தான் என்றார். அங்கீகாரத்துக்குப் போராடும் ஒரு கலைஞன்  அவனுக்கான தளத்தை அவனே உருவாக்கியதாகத் தான் பார்க்கிறேன். அவர் கூட மியூசிக் செய்வது மிக அற்புதமான அனுபவமாக இருக்கும். அவர் இன்னும் பல உயரத்திற்குச் செல்ல வேண்டும். குமார சம்பவத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. அதே ஆதரவை நவனீதிற்கும் தாருங்கள். நன்றி.இயக்குநர் நடிகர் ராகவ் பேசியதாவது:-நவனீத் சார்பாக வந்துள்ள அனைவருக்கும் நன்றி. எல்லோரும் நவனீத்தை அறிமுகப்படுத்தியது பாலாஜி என்றார்கள், பாலாஜுக்கு இவரோடு வேலை செய் என சொன்னது நான் தான். அதற்கு  நவனீத் உடைய திறமை தான் காரணம். நாக் நாக் என நான் ஒரு படம் செய்தேன், அதற்கு நவனீத் செய்த மியூசிக் கேட்டு அசந்துவிட்டேன். நானே மியூசிக் போடுவதால் அவருடன் சொட்டாகுமா என நினைத்தேன் ஆனால் அவர் திறமையில் அசந்துவிட்டேன். அவர் நாம் என்ன கேட்கிறோமோ அதை மிகச்சிறப்பாகத் தருவார். நாமே போதுமென்றாலும் இசை சிறப்பாக வரும் வரை வேலை பார்ப்பார். ஏ ஐ யில் செய்துள்ளார் என்றவுடன் மிக ஆவலாகக் கேட்டேன். ஏ ஐ எல்லோரின் திறமைக்கு ஒரு வரப்பிரசாதம். நவனீத் மிகத்திறமையானவர், நிறைய வெற்றிக்குத் தகுதியானவர். அவரின் இந்த முயற்சி பெரிய வெற்றி பெறட்டும் வாழ்த்துக்கள்.  நன்றி.இசையமைப்பாளரும் புதுமையை உருவாக்குபவருமான நவ்நீத் சுந்தர், தொழில்நுட்பத்தை இசையுடன் ஒருங்கிணைப்பதிலும், கர்நாடக இசையை ஐபாடில் கொண்டு வருவதிலும் தனது முயற்சிகளால் பிரபலமானவர். இவர் தனது புதிய சிங்கிள் ‘ஒரு மாலை நேரத்தில்’ என்ற காதல் பாடலை எழுதி, இசையமைத்து, அதற்கான AI காட்சிகளை உருவாக்கி மிகப் பிரமாண்டமாக வெளியிட்டுள்ளார். இந்த இளமையும் இனிமையும் நிறைந்த காதல் பாடல் வெளியீடு, தமிழ் தனிச்சிறப்பு இசை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.இந்தப் பாடல் நவ்நீத் சுந்தரின் இனிமையான இசையமைப்பில் உருவாக்கப்பட்டாலும், இதன் தனிச்சிறப்பு காட்சியமைப்பில் பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஆகும். அதாவது 100% மனிதனால் உருவாக்கப்பட்ட இசையில், 100% காட்சியமைப்புகள் AI தொழில்நுட்பத்தில் செய்யப்பட்டுள்ளன. முதல் முறையாக, AI மூலம் நிலையான கதாபாத்திரங்கள், தெளிவான முகபாவனைகள், மேலும் கலைஞருடன் striking-ஆக ஒத்த தோற்றமளிக்கும் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.இந்த சாதனை கலை மற்றும் தொழில்நுட்பத்தின் ஆக்கபூர்வமான இணைப்பில் ஒரு புதிய அளவுகோலை அமைக்கிறது. இது மனித கலைத்திறனும் செயற்கை நுண்ணறிவும் எவ்வாறு ஒன்றிணைந்து ஒரு புதிய அனுபவத்தை உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது. இந்தப் பாடல் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டது. பாடல் வரிகள்: நவ்நீத் சுந்தர் (தமிழ், இந்தி), கிராந்தி வட்லூரி (தெலுங்கு), தீப்தி நடராஜன் (கன்னடம்).

    வெளியீட்டு தகவல்:-ஒரு மாலை நேரத்தில் (தமிழ்), சிரு காலி வேளலோ (தெலுங்கு), ஹனி மோட பானலி (கன்னடம்), ஏக்‌ ஷாம் கீ ராஹ் மே (இந்தி) ஆகியவை அக்டோபர் 2ஆம் தேதி முதல் ஸ்பாட்டிஃபை, ஆப்பில் மியூசிக், யூடியூப் மியூசிக், ஆமேசான் மியூசிக் மற்றும் அனைத்து முக்கிய ஸ்ட்ரீமிங் தளங்களிலும் வெளியாகின்றன. அற்புதமான AI-இயங்கும் காட்சிகள் யூடியூபில் வெளியாகின்றன.நவ்நீத் சுந்தர் பற்றிநவ்நீத் சுந்தர் ஒரு இசையமைப்பாளர், சிறந்த கீபோர்டு கலைஞர் மற்றும் இசையில் புதுமைகளை உருவாக்குவதில் கைதேர்ந்தவர். சர்வதேச அளவில் 3,000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். ஜியோஷ்ரெட் (GeoShred) செயலி மூலம் கர்நாடக இசையை ஐபாடில் வாசித்த முதல் கலைஞர் என்ற பெருமையுடன், லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனையையும் பெற்றுள்ளார். அவரது நிகழ்ச்சிகளில் ஒன்றை ஏ. ஆர். ரஹ்மான் சமூக ஊடகங்களில் பகிர்ந்து பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.நவ்நீத் சுந்தரின் இசைப்பணிகளில்:-•கமல்ஹாசன் குரலால் விவரிக்கப்பட்டு, விக்னேஷ் சிவன் இயக்கிய செஸ் ஒலிம்பியாட் 2022 ‘தமிழ் மண்’ ஒலி-ஒளி கண்கவர்காட்சிக்கான இசை.•தமிழ்நாடு அரசின் கலைஞர் நூற்றாண்டு பூங்காவின் இசை நீரூற்றுக்கான பின்னணி இசை.•கலைஞர் கருணாநிதியின் சொற்களுக்கு இசையமைக்கப்பட்ட பாடல், நடனக் கலைஞர்களால் கலைஞர் 102வது பிறந்தநாள் விழாவில் மேடையேறியது.•திரைப்படங்கள்: பட்டாம்பூச்சி, நாக் தாக் (தமிழ்), குப்பெடந்த ப்ரேமா (தெலுங்கு), படி (மலையாளம்).•வெப் சீரிஸ்: பாணிபூரி (தமிழ்).•வரவிருக்கும் படம்: லக்கி (தமிழ்).•எவர்கிரீன் ஹிட் “சந்திரசூட” – மலையாள திரைப்படம் கர்மயோகி (2012), 36 மில்லியன் யூடியூப் பார்வைகளைத் தாண்டி, இன்றும் உலகம் முழுவதும் நடனக் கலைஞர்களால் நிகழ்த்தப்படுகிறது