Category: News

  • DNA’ படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா

    DNA' படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழாDNA' படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழாமுஃபாசா: தி லயன் கிங்' திரைப்படம்DNA' படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா
    ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் S. அம்பேத்குமார் வழங்க, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி – நிமிஷா சஜயன் முன்னணி வேடத்தில் நடித்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ஊடாக கடந்த இருபதாம் தேதியன்று வெளியான ‘DNA’ திரைப்படம் – விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி பயணிக்கிறது.

    இதை தொடர்ந்து படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் நன்றி அறிவிப்பு விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் பட தொகுப்பாளர் சபு ஜோசப் பேசுகையில், ” இந்த ஒரு தருணத்திற்காக நாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கஷ்டப்பட்டு உழைத்தோம். இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான நான்கு படங்களுக்கும் நான் தான் படத் தொகுப்பாளராக பணியாற்றினேன். இதற்கு முன்னரான படங்களில் பணியாற்றும்போது வணிகரீதியான வெற்றியை பெறும் படைப்பை வழங்க வேண்டும் என இயக்குநர் என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். அவருடைய கனவு இந்த டி என் ஏ படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

    ஒளிப்பதிவாளர் பார்த்திபன் பேசுகையில், ” இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘ஒரு நாள் கூத்து’ படத்திலிருந்து அவரை பின் தொடர்கிறேன் அவர் இயக்கத்தில் வெளியான ‘ஃபர்கானா ‘படத்தின் படப்பிடிப்பின் போது இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எங்கள் இருவருக்கும் இடையே நல்லதொரு புரிதலும், நட்பும் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து’ டிஎன்ஏ ‘ படத்திற்கான வாய்ப்பை வழங்கினார் அவர் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கின்றேன் என நினைக்கிறேன்.

    இந்தப் படத்தில் பணியாற்றியதற்காக அனைவரும் பாராட்டுகிறார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நான் பணியாற்றிய ‘பேச்சி’ எனும் முதல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    இந்தப் படத்தின் உணர்வை சிதைக்காமல் ஒளிப்பதிவு செய்திருப்பதாக நம்புகிறேன். இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. ” என்றார்.

    இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா பேசுகையில், ” இது என்னுடைய இருபது ஆண்டுகால கனவு பயணம். இந்த தருணத்திற்காக மகிழ்ச்சியுடன் காத்திருந்தேன்.‌ இதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த கதையில் இடம்பெறும் விசயங்கள் அனைத்தும் உண்மையானவை தான். கடந்த பதினைந்து ஆண்டு கால இதழியல் துறையில் பணியாற்றிய அனுபவம் தான் இந்த கதையை எழுதுவதற்கு உதவியாக இருந்தது. ‘ புனைவுகளில் உண்மைத் தன்மை அதிகம் இருந்தால்.. அந்த புனைவு வெற்றி பெறும்’ என என்னுடைய குரு சொல்லி இருக்கிறார். அந்த வகையில் இந்த கதையில் 90 சதவீதம் உண்மைத் தன்மை இருக்கிறது. பத்து சதவீதம் தான் கற்பனை கலந்திருக்கிறது.

    இந்தப் படத்தில் இடம்பெறும் பாட்டி கதாபாத்திரத்தில் சாத்தூர் ஜெயலட்சுமி என்பவர் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரமும் என்னுடைய வாழ்வில் சந்தித்த பெண்மணியை முன்னுதாரணமாக கொண்டு எழுதினேன். எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை – கோஷா ஆஸ்பத்திரி – ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் – என உண்மை சம்பவங்களை தழுவித்தான் இப்படத்தின் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு அமைந்திருக்கும். இப்படத்தின் வெற்றிக்கு இத்தகைய உண்மைக்கு நெருக்கமான விசயங்களும் காரணம் என கருதுகிறேன். இதனால் எழுத்தாளர்களையும், அனுபவம் மிக்க பத்திரிக்கையாளர்களையும் இயக்குநர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

    இயக்குநர் நெல்சன் தான் என்னை தேடி கண்டுபிடித்து எழுத அழைப்பு விடுத்தார்.

    நான் மனதிற்கு நெருக்கமாக உணர்ந்து எழுதிய பல காட்சிகளை திரையில் அற்புதமான நடிப்பால் அதர்வாவும் , நிமிஷாவும் வெளிப்படுத்தி இருந்தார்கள். இதற்காக அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தப் படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை ஏதேனும் ஒரு கதாபாத்திரம் ..மற்றொரு கதாபாத்திரத்திற்கு உதவும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருப்போம். இந்த உதவி செய்யும் மனப்பான்மை எப்போது வணிகத்தனம் மிக்கதாக மாறுகிறதோ..! அங்கு குற்ற சம்பவம் நிகழ்கிறது.

    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது. கடந்த தசாப்தங்களில் வாகனத்தில் பயணிக்கும் போது ‘லிஃப்ட் ‘ கேட்பார்கள். இன்று ‘லிஃப்ட்’ என்பது ‘பைக் டாக்சி’யாக மாறிவிட்டது.

    உதவி என்பது ஆத்மார்த்தமாகவும் , நேர்மையாகவும் இருக்க வேண்டும்.‌ இந்த மனிதநேயத்தை முன்னிறுத்திய இந்த திரைப்படம் ரசிகர்களிடம் சரியான முறையில் சென்றடைந்திருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு துணையாக நின்ற ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

    நடிகர் போஸ் வெங்கட் பேசுகையில், ” கேரளாவில் ஒரு படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றால்.. அங்கு ஐந்து கேரவன் இருந்தால், அதில் ஒரு கேரவன் ரைட்டர்ஸ் -காக இருக்கும். அந்த அளவில் கதாசிரியர்களுக்கு அங்கு மதிப்பு இருக்கிறது. அந்த வகையில் இந்தப் படத்தில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றிய அதிஷாவை மேடையேற்றி, பாராட்டு தெரிவித்ததற்காக இயக்குநர் நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.‌ இது ஆரோக்கியமான பயணம். என்னை பொறுத்தவரை கதாசிரியர் – வசனகர்த்தா என்பது தனி பிரிவு. அந்த பிரிவு வலிமையாக இருந்தால் ..எந்த படமும் தோற்காது. இது என்னுடைய கருத்து.

    இந்தப் படத்தில் நடித்த வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் , உடன் பணியாற்றிய அனைத்து நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

    இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசுகையில், ” தமிழ் சினிமாவின் தற்போதைய சூழலில் ஒரு படத்தின் வெற்றி என்பது ஒரு இயக்குநர் நல்ல படத்தை இயக்குவதில் மட்டுமில்லை. அந்தத் திரைப்படம் சரியான தேதியில் வெளியாக வேண்டும். இது இயக்குநர்களின் கைகளில் கிடையாது. அந்தத் திரைப்படத்திற்கு சரியான விளம்பரம் கிடைக்கப் பெற வேண்டும். அதுவும் இயக்குநர்களின் கைகளில் கிடையாது. அந்தத் திரைப்படம் விநியோகஸ்தர்களின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் . அதுவும் அந்த இயக்குநரின் கைகளில் கிடையாது. அதனைத் தொடர்ந்து அந்தப் படத்திற்காக போஸ்டர் ஒட்டுவது முதல் விளம்பரப்படுத்துவது வரை உழைப்புதான் வெற்றியை தீர்மானிக்கிறது. அந்த வகையில் ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் பலர் ஒன்று கூட வேண்டியதிருக்கிறது. பலரின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்க வேண்டும். அந்த வகையில் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றிக்கு பின்னணியில் உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தப் படம் உருவாகுவதற்கு காரணமாக இருந்த இரண்டு, மூன்று இதயங்களுக்கு இந்த தருணத்தில் என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆனந்துக்கும், திவ்யாவுக்கும் இடையேயான கதை 2009 ஆம் ஆண்டிலிருந்து என்னிடம் இருக்கிறது. ஆனந்தும், திவ்யாவும் பெயர்தான் வேறு வேறு. ஆனால் இந்த கதாபாத்திரங்களை நான் என்னுடைய வாழ்வில் சந்தித்திருக்கிறேன். அவர்களின் வலியை இதில் பதிவு செய்திருக்கிறேன். இவர்களின் வாழ்வில் திருமணம் என்பது நடைபெறுமா? என என்னுடைய மனதில் எழுந்த கேள்விதான் இந்தப் படத்தின் கதையை எழுத தூண்டியது. இதன் மூலம் ஒரு வலிமையான கதை… ஒரு வலிமையான உணர்வுடன் இணைந்து சொல்லும்போது அதற்கு வெற்றி கிடைக்கிறது. இதனை இன்னும் நான் பத்து ஆண்டுகள் கழித்த பின்னர் சொன்னாலும் வெற்றியைப் பெறும். அதற்கான வரவேற்பும் , அன்பும் மக்கள் அளிப்பார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.

    அந்த உண்மையான ஆனந்திற்கும், அந்த உண்மையான திவ்யாவிற்கும் இந்த திரைப்படத்தின் வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.

    இந்த படத்தில் தான் முதன்முதலாக என்னுடைய கதையை தயாரிப்பாளர் அம்பேத்குமார் ..என் முன்னிலையில் மற்றவரிடம் நான் எப்படி சொன்னேனோ…எப்படி சொல்வேனோ.. அதேபோல் சொன்னார். அவருடைய கதை சொல்லும் திறமையை கண்டு வியந்தேன். அப்போது என் கதை பிடித்திருக்கிறது. புரிந்திருக்கிறது.. என்ற சந்தோஷமும் மனதில் எழுந்தது. அந்தத் தருணம் என்னால் மறக்க இயலாது.

    இந்தப் படம் உருவானதற்கு காரணமாக இருந்த சுரேஷ் சந்திரா, சந்தோஷ், ஒளிப்பதிவாளர் பார்த்திபன், படத் தொகுப்பாளர் சபு ஜோசப், எழுத்தாளர் அதிஷா, இசையமைப்பாளர்கள், பின்னணி இசையமைத்த ஜிப்ரான், ஒலி கலவை பொறியாளர் தபஸ் நாயக், இணை இயக்குநர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், விஜி சந்திரசேகர், போஸ் வெங்கட், இயக்குநர் சுப்பிரமணிய சிவா, இயக்குநர் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், அதர்வா முரளி, நிமிஷா சஜயன் என நடிகர் , நடிகைகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இன்றைய சூழலில் ஒரு திரைப்படத்தை காண மக்களையும், ரசிகர்களையும் திரையரங்கத்திற்கு வரவழைக்க வேண்டும் என்றால்.. பல தரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் இருக்கிறது. இதன் மூலம் நிறைய நல்ல சினிமாக்கள் வரவேண்டும் . ஆரோக்கியமான சினிமா சூழல் உருவாக வேண்டும் என்ற இலக்குடன் தான் பயணிக்கிறோம்.

    சினிமா மூலம் மக்களும் பயனடைய வேண்டும். அதில் பணியாற்றிய கலைஞர்களும் பயனடைய வேண்டும். அந்த வகையில் ஒரு திரைப்படத்தின் விமர்சனமும் , பார்வையும் அமைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் படைப்பாளிகளும் , விமர்சகர்களும் கைக்குலுக்கி , ஆரோக்கியமான சினிமா சூழலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்பது குறித்து மனம் திறந்து விவாதிக்க விரும்புகிறேன். என்னுடைய திரை பயணத்தில் தொடர்ந்து ஆதரித்து வரும் ஊடகத்தினருக்கும் , ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

    நடிகை நிமிஷா சஜயன் பேசுகையில், ” பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாகும் போது இந்த படம் ஹிட் ஆகுமா? ஹிட்டாகாதா? என்ற பதட்டம் இருந்து கொண்டிருக்கும். ஆனால் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி திரையிட்ட பிறகு கிடைத்த விமர்சனத்தால் படம் வெளியான தருணத்தில் நான் எந்த வித பதட்டமும் இல்லாமல் நிம்மதியாக உறங்கினேன்.
    இருந்தாலும் இரண்டு மணி அளவில் இயக்குநர் நெல்சன் போன் செய்து படம் வெற்றி என சொன்ன போது மகிழ்ச்சி அடைந்தேன். இதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தப் படத்தில் என்னுடைய நடிப்பு சிறந்ததாக இருக்கிறது என்று பாராட்டினால்.. அது இயக்குநரைத் தான் சாரும். அவர் சொல்லிக் கொடுத்ததை தான் நான் செய்திருக்கிறேன்.‌ நான் எப்போதும் போல் இயக்குநரின் கலைஞராகத்தான் இருக்க விரும்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து திவ்யா கதாபாத்திரத்தை அளித்ததற்காக நன்றி.

    ஒவ்வொரு படத்தில் இருந்தும் ஏதேனும் ஒரு விசயத்தை கற்றுக் கொள்கிறேன். இந்த படத்தில் நான் இரண்டு விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். ஒன்று இயக்குநர். மற்றொன்று அதர்வா.

    படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய போது மனதிற்கு நெருக்கமாக இருந்த படங்களில் இதுவும் ஒன்று.‌ சக நடிகரான அதர்வா மிகுந்த திறமைசாலி. அர்ப்பணிப்பு உள்ளவர். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் சொன்னதை கச்சிதமாக செய்தார். அவருடைய ஒத்துழைப்பு மறக்க முடியாது. அவரின் ஆதரவு இல்லை என்றால் திவ்யா இல்லை.

    இந்தப் படத்தில் பிறந்து நாற்பது நாட்களான குழந்தையை நடிப்பதற்காக மனமுவந்து வழங்கிய அந்தக் குழந்தையின் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும் , ஊடகத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

    நடிகர் அதர்வா முரளி பேசுகையில், ” ‌ டி என் ஏ படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு விழாவில் கலந்து கொண்ட உணர்வே மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தப் படத்திற்காக உழைத்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் இந்த ஒரு தருணத்திற்காக தான்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல படத்தில் நடிக்கிறோம் என்ற உணர்வுடன் தான் கலந்து கொண்டேன். இந்தப் படம் எந்த அளவிற்கு வெற்றி பெறும்… எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் … யாருக்கு பிடிக்கும்… என்றெல்லாம் யோசிக்கவில்லை.

    படப்பிடிப்பு நிறைவடையும்போது நல்ல படத்தில் நடித்து விட்டோம் என்ற உணர்வு தான் ஏற்பட்டது. இந்த படத்திற்கான பத்திரிக்கையாளர்கள் காட்சி திரையிட்ட போது..‌ படம் நிறைவடைந்த பிறகு சில நிமிடங்கள் கழித்து அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்பை தெரிவித்த போது.. உண்மையில் நெகிழ்ச்சி அடைந்தேன். ஊடகத்தினர் அனைவரும் ஊக்கமளிக்கும் வகையில் பாராட்டு தெரிவித்தனர். அது எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தது. ‘வேர்ட் ஆஃப் மவுத்’ என்று சொல்வதை இந்தப் படத்தின் வெற்றி மூலம் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.

    படம் வெளியான பிறகு ரசிகர்களின் வரவேற்பை நேரில் காண்பதற்காக திரையரங்கத்திற்கு சென்றோம். அப்போது வயதான பெண்மணி ஒருவர் என்னை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு படத்தை பாராட்டினார். இந்த படத்தின் வெற்றி எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது எனச் சொன்னார். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தின் வெற்றியை அவர்கள் தங்களின் வெற்றியாக கொண்டாடினார்கள். இதை காணும் போது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது.

    இந்தத் தருணத்தில் உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக என்னை நான் உணர்கிறேன்.

    இயக்குநர் நெல்சன் என்னை சந்தித்து இப்படத்தை பற்றி சொன்னபோது, ‘உங்களுடைய திரையுலக பயணத்தில் நல்லதொரு திரைப்படத்தை அளிப்பேன்’ என நம்பிக்கையுடன் சொன்னார். அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றி இருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தப் படத்தின் தயாரிப்பாளர்- ஒளிப்பதிவாளர் -இசையமைப்பாளர்கள் – பின்னணி இசையமைப்பாளர் – என தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர், நடிகைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

  • ஏழு திரைப்படம் – ஒரு பிரபஞ்சம் – எல்லையற்ற புராணக் கதைகள் – கொண்ட ‘மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது

    Mega Slate Announcement 7 Epic Films, Mahavatar’s Cinematic Universe Unveiled*
    Mega Slate Announcement 7 Epic Films, Mahavatar’s Cinematic Universe Unveiled*

    *மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் படைப்பான ‘ மகாவதார் நரசிம்மா’ 2025 ஜூலை 25ஆம் தேதியன்று வெளியாகிறது*

    ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும் க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிமேஷன் படைப்பான மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன. பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தத் தொடர் 2025 ஆம் ஆண்டு மகாவதார் நரசிம்மாவுடன் தொடங்கி, 2037 ஆம் ஆண்டின் மகாவதார் கல்கி பார்ட் 2 உடன் நிறைவடைகிறது. மகாவிஷ்ணுவின் பத்து தெய்வீக அவதாரங்களை விவரிக்கும் வகையில் இந்த படைப்புகள் தயாராகி இருக்கின்றன.

    இந்த திரைப்படங்களின் வெளியீட்டு தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதில்
    * மகாவதார் நரசிம்மா (2025 )
    * மகாவதார் பரசுராம் (2027 )
    * மகாவதார் ரகுநந்தன் (2029 )
    * மகாவதார் துவாரகாதீஷ் (2031 )
    * மகாவதார் கோகுல நந்தா (2033 )
    * மகாவதார் கல்கி பார்ட் ஒன் (2035 )
    * மகாவதார் கல்கி பார்ட் 2 (2037)
    ஆகிய வரிசையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.

    இது தொடர்பாக இயக்குநர் அஷ்வின் குமார் பேசுகையில், ” க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம், ஆற்றல்மிக்க ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, பாரதத்தின் பாரம்பரியத்தை இதுவரை அனுபவித்திராத வகையில் பெரிய திரைக்கு கொண்டு வந்து, சினிமா அனுபவத்தை தருவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் மூலம் தசாவதாரத்தின் வித்தியாசமான அனுபவம் தொடங்குகிறது. இனி பாரதம் கர்ஜிக்கும் ” என்றார்.

    இது தொடர்பாக தயாரிப்பாளர் ஷில்பா தவான் பேசுகையில், ” சாத்தியங்கள் முடிவற்றவை. எங்கள் கதைகள் திரையில் உயிர்பெற்று கர்ஜிப்பதை காண நான் ஆவலாக இருக்கிறேன். மேலும் ஒரு காவிய சினிமா அனுபவத்திற்கும் தயாராகுங்கள் ” என்றார்.

    தொடர்ந்து ஹோம்பாலே பிலிம்சின் செய்தி தொடர்பாளர் பேசுகையில், ” ஹோம்பாலே பிலிம்சில், நாங்கள் காலத்தையும், எல்லைகளையும் கடந்த கதை சொல்லலை நம்புகிறோம். மகாவதார் உடன் விஷ்ணுவின் புனித அவதாரங்களை வியக்க வைக்கும் அனிமேஷன் மூலம் உயிர்ப்பிக்கும் ஒரு சினிமாடிக் யுனிவர்சல் வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது ஒரு திரைப்பட தொடரை விட அதிகம். மேலும் இது இந்தியாவின் ஆன்மீக மரபிற்கான எங்கள் அஞ்சலி ” என்றும் குறிப்பிட்டார்.

    மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ் திரைப்படத்திற்காக மட்டும் அல்லாமல் இது பல தள கலாச்சார நிகழ்வாக கருதப்படுகிறது. காமிக்ஸ் – வீடியோ கேம்ஸ் – டிஜிட்டல் முறையிலான கதை சொல்லல் – சேகரிக்க கூடிய அனுபவங்களாக விரிவடைந்து… இந்த சினிமாடிக் யுனிவர்ஸ் – ரசிகர்களுக்கு காவியத்துடன் கூடிய பல வழிகளை வழங்கும். கிராபிக் நாவல்களும், தழுவல்கள் முதல் ஊடாடும் சாகசங்கள் வரை… மகாவதார் பண்டைய கதைகளை ஊடகங்கள் மூலம் முழுவதும் உயிர்ப்பிக்கும். இன்றைய பார்வையாளர்களுடன் வயது மற்றும் பல்வேறு தளங்களில் எதிரொலிக்கும் ஒரு வளமான உலகத்தையும் உருவாக்கும்.

    ‘மகாவதார் நரசிம்மா’வை இயக்குநர் அஸ்வின் குமார் இயக்கியுள்ளார். இதனை க்ளீம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஷில்பா தவான் -குஷால் தேசாய் மற்றும் சைதன்யா தேசாய் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இதனுடன் திரையுலகில் நற்பெயரை பெற்றுள்ள ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இந்த கூட்டணி பல்வேறு பொழுதுபோக்கு தளங்களில் அற்புதமான ஒரு சினிமா அனுபவத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இதன் ஒப்பிட இயலாத காட்சி பிரம்மாண்டம் – கலாச்சார செழுமை – திறமையான கலைஞர்கள் – மற்றும் ஆழமாக கதை சொல்லும் ஆற்றல் – ஆகியவற்றுடன் இந்த திரைப்படம் 3 D எனப்படும் முப்பரிமான தொழில்நுட்பத்துடன் ஐந்து இந்திய மொழிகளிலும், ஜூலை 25 ஆம் தேதியன்று வெளியாகிறது.

  • 7 Films. 1 Universe. Infinite Legends — Mahavatar Universe Announced

    Mega Slate Announcement 7 Epic Films, Mahavatar’s Cinematic Universe Unveiled*
    Mega Slate Announcement 7 Epic Films, Mahavatar’s Cinematic Universe Unveiled*

    Hombale Films presents and Kleem Productions have officially unveiled the lineup for their ambitious animated franchise,  the Mahavatar Cinematic Universe. Spanning over a decade, the series will chronicle the ten divine avatars of Lord Vishnu, starting with Mahavatar Narsimha in 2025 and culminating with Mahavatar Kalki Part 2 in 2037.

    The official release calendar includes:

    * Mahavatar Narsimha (2025)

    * Mahavatar Parshuram (2027)

    * Mahavatar Raghunandan (2029)

    * Mahavatar Dwarkadhish (2031)

    * Mahavatar Gokulananda (2033)

    * Mahavatar Kalki Part 1 (2035)

    * Mahavatar Kalki Part 2 (2037)

    Director Ashwin Kumar added, “We here at Kleem Productions, along with the powerhouse Hombale Films, are excited to bring the heritage of Bharat to the big screen in a never-before-experienced cinematic scale. The transcendental experience begins through the MAHAVATAR universe of Dasha Avatar… Now Bharat will Roar!”

    Producer Shilpaa Dhawan echoed the enthusiasm, stating, “The possibilities are ENDLESS, and I’m PUMPED to see our stories ROAR to life on screen! Buckle up for an EPIC cinematic ride!”

    An official quote from Hombale Films read, “At Hombale Films, we believe in storytelling that transcends time and borders,” said a spokesperson from Hombale Films. “With Mahavatar, we are proud to present a cinematic universe that brings the sacred avatars of Vishnu to life through breathtaking animation. This is more than a film series — it is our tribute to India’s spiritual legacy.”

    The Mahavatar Cinematic Universe isn’t limited to film alone; it is envisioned as a multi-platform cultural phenomenon. Expanding into comics, immersive video games, digital storytelling, and collectible experiences, the universe will offer fans multiple ways to engage with the epic saga. From graphic novel adaptations to interactive adventures, Mahavatar will bring ancient stories to life across mediums, building a rich world that resonates with today’s audiences across age groups and platforms.

    Mahavatar Narsimha is directed by Ashwin Kumar and produced by Shilpaa Dhawan, Kushal Desai, and Chaitanya Desai under the banner of Kleem Productions. And presented by Hombale Films, known for their compelling content, this dynamic partnership aims to deliver a cinematic marvel across various entertainment platforms. With its unmatched visual grandeur, cultural richness, cinematic excellence, and storytelling depth, the film will also be released in 3D and in five Indian languages. Releasing on 25th July 2025.

    Link – https://youtu.be/q-PcxXv_miE

  • Pyaar, Takraar and Family Drama: Netflix Drops The Trailer For ‘Aap Jaisa Koi’ — a Melodic and Visual Masterpiece

    Pyaar, Takraar and Family Drama: Netflix Drops The Trailer For ‘Aap Jaisa Koi’ — a Melodic and Visual Masterpiece
    ~ Directed by Vivek Soni and produced by Dharmatic Entertainment, Aap Jaisa Koi is a soulful, layered story about courage, connection, and rewriting the rules of family and love. ~

    *கன்னட திரைப்படத்துறையில் கலைப்புலி S தாணுவை வரவேற்ற கிச்சா சுதீப்*
    *ஆர். மாதவன் நடிப்பில், குடும்ப பார்வையாளர்களைக் கவரும் வகையில் உருவாகியுள்ள ‘ஆப் ஜெய்சா கோய்’ படத்தின் டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது!*
    *கன்னட திரைப்படத்துறையில் கலைப்புலி S தாணுவை வரவேற்ற கிச்சா சுதீப்*
    *ஆர். மாதவன் நடிப்பில், குடும்ப பார்வையாளர்களைக் கவரும் வகையில் உருவாகியுள்ள ‘ஆப் ஜெய்சா கோய்’ படத்தின் டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது!*

    Mumbai, 25th June 2025: What happens when a quiet 42-year-old man unlocks a part of himself he never knew existed — and begins to rewrite the rules of his own life? Netflix has dropped the trailer for Aap Jaisa Koi (loosely translated as “Someone Like You”), starring R. Madhavan as Shrirenu Tripathi and Fatima Sana Shaikh as Madhu Bose, bringing audiences a heartwarming family drama that celebrates connection, companionship, and the beauty of discovering ‘Barabari Wala Pyaar’ in the most unexpected circumstances.
    Set across the distinct worlds of Jamshedpur and Kolkata, the film follows Shrirenu, a man shaped by habit and tradition, as he begins to re-examine long-held beliefs about masculinity, companionship, and emotional expression. In Madhu, a spirited woman who refuses to shrink herself to fit societal moulds, he finds not just a romantic partner, but a mirror to his own conditioning. As the two navigate family expectations, emotional baggage, and the weight of societal conditioning, Aap Jaisa Koi becomes a story not just about romance, but about reclaiming a woman’s agency.
    Marking Madhavan’s much-awaited return to the romance genre, Aap Jaisa Koi pairs him with Fatima Sana Shaikh in a story that defines what inner liberation and “barabari wala pyaar” (equal love) truly mean. Directed by Vivek Soni (Meenakshi Sundareshwar) and produced by Dharmatic Entertainment, the film is brought to life by a powerhouse ensemble cast including Ayesha Raza, Manish Chaudhari and Namit Das, each adding nuance to this honest, heartfelt exploration of family, identity, patriarchy, and the emotional truths we often hide — even from ourselves.
    Speaking about the role, R. Madhavan shares, “Aap Jaisa Koi is unlike any love story I’ve done before — it’s quiet, awkward, and deeply human. Shrirenu is one of the most complex characters I’ve played — someone who longs for companionship and closeness, but doesn’t quite know how to ask for it, yet he is rich with emotion underneath. This film isn’t loud or dramatic — it’s patient, gentle, and deeply affecting. I was drawn to how it speaks to all the people who’ve felt overlooked in life or love. Aap Jaisa Koi is a reminder that it’s never too late to start living on your own terms. It’s a story about vulnerability, rediscovery, and the idea that it’s never too late to open your heart.”
    Fatima Sana Shaikh adds, “I feel truly blessed to be a part of Aap Jaisa Koi. I’ve been a huge fan of Madhavan, and getting the chance to share the screen with him was such a joy. Playing Madhu was incredibly special. We often associate strength and confidence with masculinity, but Madhu embodies these qualities with such softness and femininity… Through this film, I got to dive into different shades of love, and oddly enough, it felt quite therapeutic. I also really enjoyed working with Vivek.. he has a very unique voice as a filmmaker, and it was a pleasure to be a part of his beautiful world. I’m just grateful I had the opportunity to collaborate with Netflix and Dharmatic Entertainment, along with Vivek, and Maddy on a story that’s so honest and special.”
    While announcing the film’s release date, Ruchikaa Kapoor Sheikh, Director of Original Films, Netflix India, had shared, “Aap Jaisa Koi is a romance drama about love that sprouts amidst fallen hopes and gated traditions. With Vivek Soni’s captivating visuals, it boasts beautiful performances by R. Madhavan, Fatima Sana Shaikh, Ayesha Raza, along with a stellar ensemble. The film attends to the complexities of love with tender strokes. Dharmatic Entertainment, the masters of romance on film, have told this classic tale in a contemporary fashion. It is part of a strong slate of films we’re bringing to Netflix this year, each with a unique voice and perspective.”
    Fresh off his critically acclaimed performance in Netflix’s TEST, R. Madhavan returns to the genre that made an entire generation fall in love with him — romance. In Aap Jaisa Koi, he sheds his recent intense avatars to embrace a tender, emotionally layered character that brings back his iconic chocolate-boy charm. As Shrirenu, Madhavan delivers a performance filled with restraint, warmth, and quiet courage, marking a poignant comeback to the kind of love story that’s both timeless and deeply contemporary.

    Get ready for a romance that speaks to the heart and defies convention. Watch the trailer for Aap Jaisa Koi and discover a romance that’s tender, grown-up, and refreshingly real — streaming on July 11, only on Netflix.
    CREDITS
    Cast: R. Madhavan, Fatima Sana Shaikh
    Production: Dharmatic Entertainment
    Producers: Karan Johar, Adar Poonawalla, Apoorva Mehta, Somen Mishra
    Director: Vivek Soni

    About Netflix:
    Netflix is one of the world’s leading entertainment services, with over 300 million paid memberships in over 190 countries enjoying TV series, films and games across a wide variety of genres and languages. Members can play, pause and resume watching as much as they want, anytime, anywhere, and can change their plans at any time.

    Dharmatic Entertainment
    Dharmatic Entertainment is a content studio with a focus on delivering distinctive stories across
    fiction and non-fiction formats. It’s the digital extension of Dharma Productions, one of India’s top
    film production-houses, known for their blockbuster hits and setting new benchmarks across Indian
    cinema. It is led by multi-faceted director and producer Karan Johar.

  • *ஆர். மாதவன் நடிப்பில், குடும்ப பார்வையாளர்களைக் கவரும் வகையில் உருவாகியுள்ள ‘ஆப் ஜெய்சா கோய்’ படத்தின் டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது!*

    *கன்னட திரைப்படத்துறையில் கலைப்புலி S தாணுவை வரவேற்ற கிச்சா சுதீப்*
    *ஆர். மாதவன் நடிப்பில், குடும்ப பார்வையாளர்களைக் கவரும் வகையில் உருவாகியுள்ள ‘ஆப் ஜெய்சா கோய்’ படத்தின் டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது!*
    *கன்னட திரைப்படத்துறையில் கலைப்புலி S தாணுவை வரவேற்ற கிச்சா சுதீப்*
    *ஆர். மாதவன் நடிப்பில், குடும்ப பார்வையாளர்களைக் கவரும் வகையில் உருவாகியுள்ள ‘ஆப் ஜெய்சா கோய்’ படத்தின் டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது!*
    *ஆர். மாதவன் நடிப்பில், குடும்ப பார்வையாளர்களைக் கவரும் வகையில் உருவாகியுள்ள ‘ஆப் ஜெய்சா  கோய்’ படத்தின் டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது!*

    *மும்பை, 25 ஜூன் 2025*: 42 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தனது சொந்த வாழ்க்கையின் விதிகளை மீண்டும் எழுதத் தொடங்கினால் என்ன ஆகும்? ஸ்ரீரேணு திரிபாதியாக ஆர். மாதவனும், மது போஸாக பாத்திமா சனா ஷேக்கும் நடித்திருக்கும் ’ஆப் ஜெய்சா கோய்’ (’உன்னைப் போல் ஒருவர்’) படத்தின் டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது. எதிர்பாராத சூழ்நிலைகளில் நமக்கு கிடைக்கும் துணை, காதல் மற்றும் தோழமை ஆகியவற்றைக் கொண்டாடும் ஃபேமிலி டிராமாவாக இது உருவாகி இருக்கிறது.

    ஜாம்ஷெட்பூர் மற்றும் கொல்கத்தாவில் இது படமாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய பழக்கவழக்கங்களை பின்பற்றி வளர்ந்த ஸ்ரீரேணு திரிபாதி ஆண்மை, தோழமை மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு பற்றிய நீண்டகாலமாக தனது நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்குகிறார். சமூக கட்டுப்பாடுகளுக்கு ஏற்றவாறு தன்னை சுருக்கிக் கொள்ள மறுக்கும் ஒரு உற்சாகமான பெண்ணான மது தனக்கு வரும் வாழ்க்கைத் துணை காதலுடன் மட்டுமல்லாது தன் குணாதிசியத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் இருக்க வேண்டும் எனவும் விரும்புகிறாள். இவர்கள் இருவரின் பாதையை உள்ளடக்கிய கதையாக ‘ஆப் ஜெய்சா கோய்’ உருவாகி இருக்கிறது. இது காதல் கதையாக மட்டுமல்லாமல், ஒரு பெண்ணின் சுயத்தை மீட்டெடுப்பது பற்றிய கதையாகவும் மாறுகிறது.

    நடிகர் மாதவனை காதல் ஜானரில் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்தனர். ’ஆப் ஜெய்சா கோய்’ திரைப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். இதில் பாத்திமா சனா ஷேக் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். விவேக் சோனி (மீனாட்சி சுந்தரேஷ்வர்) இயக்கியுள்ள இந்தப் படத்தை தர்மாடிக் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. மேலும் ஆயிஷா ராசா, மணீஷ் சவுத்ரி மற்றும் நமித் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

    தனது கதாபாத்திரம் குறித்து நடிகர் மாதவன் பகிர்ந்து கொண்டதாவது, “நான் இதற்கு முன்பு நடித்த எந்தவொரு காதல் கதையையும் போல ‘ஆப் ஜெய்சா கோய்’ இல்லாமல் முழுக்க முழுக்க மனித மனங்களைச் சார்ந்தது. நான் நடித்த மிகவும் சிக்கலான கதாபாத்திரங்களில் ஸ்ரீரேணுவும் ஒருவர். கம்பேனியன்ஷிப்பிற்காக ஏங்கும் ஒருவர். ஆனால், அதை எப்படிக் கேட்பது என்று கூட தெரியாத உள்ளுக்குள் அதிக உணர்ச்சிவசப்பட்டவர். இந்தப் படம் அதிரடியாக இருக்காது. ஆனால் பொறுமையாகவும், மென்மையாகவும் பார்ப்பவர்களை ஆழமாகப் பாதிக்கும் வகையிலும் இருக்கும். வாழ்க்கையிலோ அல்லது காதலிலோ புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்தவர்களிடம் இது எவ்வாறு பேசுகிறது என்ற கருவால் நான் ஈர்க்கப்பட்டேன். ’ஆப் ஜெய்சா கோய்’ உங்கள் சொந்த விதிமுறைகளின்படி வாழத் தொடங்குவதற்கு வயது ஒரு தடையில்லை, நீங்கள் எப்போது வேண்டுமானலும் வாழத் தொடங்கலாம் என்பதை அழுத்தமாக பேசும் கதை” என்றார்.

    பாத்திமா சனா ஷேக் பகிர்ந்து கொண்டதாவது, “ஆப் ஜெய்சா கோயி’ படத்தில் நடித்திருப்பது உண்மையிலேயே எனக்கு பாக்கியம். நான் மாதவனின் மிகப்பெரிய ரசிகை! அவருடன் மது கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி. நாம் பெரும்பாலும் வலிமை, நம்பிக்கையை ஆண்மையுடன் தொடர்புபடுத்துகிறோம், ஆனால், மது இந்த குணங்களை மென்மை மற்றும் பெண்மையுடன் வெளிப்படுத்துகிறார். இந்தப் படத்தின் மூலம், நான் அன்பின் வெவ்வேறு வடிவங்களை உணர முடிந்தது. எனக்கும் அது தெரபியாக அமைந்தது. தனித்துவமான இயக்குநர் விவேக்குடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. நேர்மையான இந்த கதையில் விவேக், மேடி, நெட்ஃபிலிக்ஸ் மற்றும் தர்மாடிக் என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருப்பது எனது கரியரில் முக்கியமான தருணம்” என்றார்.

    படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி ருச்சிகா கபூர் ஷேக், டைரக்டர் ஆஃப் ஒரிஜினல் ஃபிலிம்ஸ், நெட்ஃபிலிக்ஸ் இந்தியா பகிர்ந்து கொண்டதாவது, “’ஆப் ஜெய்சா கோய்’ வீழ்ந்த நம்பிக்கைகள் மற்றும் வரையறுக்கப்பட்ட மரபுகளுக்கு மத்தியில் துளிர்விடும் காதலைப் பற்றி பேசுகிறது. விவேக் சோனியின் வசீகரிக்கும் காட்சிகளுடன், ஆர். மாதவன், பாத்திமா சனா ஷேக், ஆயிஷா ராசா மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழுவும் இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளனர். காதல் திரைப்படங்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற தர்மாடிக் என்டர்டெயின்மென்ட் படத்தை தரத்துடன் தயாரித்துள்ளது” என்றார்.

    நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியான ‘டெஸ்ட்’ படம் மூலம் வித்தியாசமான நடிப்பைக் கொடுத்த நடிகர் மாதவன் தற்போது காதல் ஜானருக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார். ’ஆப் ஜெய்சா கோய்’ படத்தில் மென்மையான, உணர்ச்சிபூர்வமான என பல அடுக்குகளைக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மனதைத் தொடும், மரபுகளை மீறும் ஒரு காதல் கதையை பார்க்கத் தயாராகுங்கள் என்பதையே தற்போது வெளியாகியுள்ள டிரைய்லர் உணர்த்துகிறார். நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 11, 2025 அன்று ஸ்ட்ரீம் ஆகிறது.

    *தொழில்நுட்பக் குழு:*
    நடிகர்கள்: ஆர்.மாதவன், பாத்திமா சனா ஷேக்,.
    தயாரிப்பு: தர்மாடிக் என்டர்டெயின்மென்ட்,
    தயாரிப்பாளர்கள்: கரண் ஜோஹர், ஆதார் பூனவல்லா, அபூர்வா மேத்தா, சோமன் மிஸ்ரா,
    இயக்குநர்: விவேக் சோனி

    *நெட்ஃபிலிக்ஸ் பற்றி:*
    நெட்ஃபிலிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்று. 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் 300 மில்லியனுக்கும் அதிகமான கட்டண உறுப்பினர்களைக் கொண்டு, பல்வேறு ஜானர் மற்றும் மொழிகளில் தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளை பார்வையாளர்களுக்குக் கொடுத்து வருகிறது. உறுப்பினர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எவ்வளவு வேண்டுமானாலும் விளையாடலாம், இடைநிறுத்தலாம் மற்றும் மீண்டும் பார்க்கலாம், எந்த நேரத்திலும் தங்கள் திட்டங்களை மாற்றலாம்.

    *தர்மாடிக் என்டர்டெயின்மென்ட் பற்றி:*
    ஃபிக்‌ஷன் மற்றும் நான்- ஃபிக்‌ஷன் கதைகளை தயாரிப்பதில் பெயர் பெற்ற இந்தியாவின் சிறந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான தர்மா புரொடக்ஷன்ஸ் தற்போது நெட்ஃபிலிக்ஸில் படம் தயாரிப்பதன் மூலம் டிஜிட்டலிலும் அடியெடுத்து வைக்கிறது. சினிமாவில் பல பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இந்த நிறுவனத்தை பன்முகத் திறமையாளரான இயக்குநர் மற்றும் கரண் ஜோஹர் நடத்தி வருகிறார்.

  • *சூரஜ் பார்தி: கடந்த 2016 முதல் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கலைப்படைப்பை (Everday) உருவாக்கி வரும் சென்னையைச் சேர்ந்த நியூயார்க் கலைஞர்!*

    *சூரஜ் பார்தி: கடந்த 2016 முதல் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கலைப்படைப்பை (Everday) உருவாக்கி வரும் சென்னையைச் சேர்ந்த நியூயார்க் கலைஞர்!**சூரஜ் பார்தி: கடந்த 2016 முதல் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கலைப்படைப்பை (Everday) உருவாக்கி வரும் சென்னையைச் சேர்ந்த நியூயார்க் கலைஞர்!*

    *சென்னை:* வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத அசல் கலைப்படைப்பை கடந்த 3,000+ நாட்களாக சூரஜ் பார்தி உருவாக்கியுள்ளார். தொடர்ச்சியாக இதை செய்ததன் மூலம் ஒழுக்கம், ஆர்வம், பாரம்பரியம் மற்றும் பரிசோதனை ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் சாத்தியமாக்கியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு தனிப்பட்ட முறையில் ஆரம்பித்த இந்த விஷயம் ஒரு தசாப்தம் கடந்து இப்போது அவரது கலை, தத்துவம் மற்றும் உலகளாவிய அங்கீகாரத்திற்கான அடையாளமாக மாறியுள்ளது. “இது அவுட்புட் சார்ந்தது மட்டுமல்ல! நம் இருப்பை நிலைநாட்டுவதும், மன ஒருமைப்பாடும் சேர்த்ததுதான்” என்றார்.

    தலைசிறந்த புடவை வடிவமைப்பாளர்களின் குடும்பத்தில் பிறந்தவர் சூரஜ். நெசவாளர் சேவை மையத்தின் முன்னாள் இயக்குநராக இருந்தவர் அவரது தாத்தா என். வீரப்பன். சில நொடிகளிலேயே கடினமான ஓவியங்களையும் எளிதில் வரையக் கூடியவர். ராணி எலிசபெத், இந்திரா காந்தி மற்றும் ஜாக்குலின் கென்னடி ஓனாசிஸ் ஆகியோருக்கு புடவைகள் உருவாக்கித் தந்த பெருமையைப் பெற்றவர். இதுகுறித்து சூரஜ் பகிர்ந்து கொண்டதாவது, “என் தாத்தா மற்றும் மாமா இருவரும் நெசவுக்காக தேசிய விருதுகளைப் பெற்றவர்கள். தறி மற்றும் ஜாக்கார்டு அட்டைகளுடன் தான் நான் வளர்ந்தேன். அந்த ரிதம் எனக்கு அத்துப்படி. இப்போது, நான் பிக்சல்கள் மற்றும் சென்சார்களுடன் வேலை செய்கிறேன். ஆனால், நெசவு என்னை விட்டு ஒருபோதும் நீங்காது” என்கிறார்.

    மோஷன் கிராபிக்ஸ் முதல் இயற்பியல் கணினி வரையிலும் சூரஜ் பல படைப்புகளைக் கொடுத்துள்ளார். பழைய காலத்தின் நெய்தல் துணிகள் மற்றும் தற்போதைய டிஜிட்டல் டிரெண்ட் என இரண்டிலும் பயணிக்கிறார் சூரஜ். இந்த படைப்புகள், ஸ்டேரிங் ஃபேசஸ் போன்ற சிற்பங்களுடன் நம் கலாச்சாரத்துடன் நிலைத்து நிற்கிறது.

    மூகாம்பிகை தேவி சுவரோவியம்: அவரது மிகவும் பிரபலமான படைப்புகளில் ஒன்று, இசையமைப்பாளர் இளையராஜாவின் சென்னை ஸ்டுடியோவிற்காக கொடுக்கப்பட்ட மூகாம்பிகை தேவி சுவரோவியம். இதற்காக சக கலைஞர் விபா குல்கர்னியுடன் இணைந்த சூரஜ், பல்வேறு தொழில்நுட்பங்களை இணைத்து, தெய்வீகத்தின் அடையாளமாக இந்த ஓவியத்தினை உருவாக்கினார்.

    *சென்னையிலிருந்து நியூயார்க் வரை:*

    சுராஜின் பயணம் அவரை சென்னையிலிருந்து நியூயார்க்கிற்கு அழைத்து வந்தது. அங்கு அவர் சமீபத்தில் NYU டிஷ்சின் இண்டர் ஆக்டிவ் டெலிகம்யூனிகேஷன்ஸ் புரொகிராமில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். அவர் இப்போது Quit With Jones-ல் முன்னணி வடிவமைப்பாளராகப் பணியாற்றுகிறார். இதுமட்டுமல்லாது, ஹெல்த் டூல்ஸ் வடிவமைத்தல், கற்பித்தல், வழிகாட்டுதல் மற்றும் கலை உருவாக்குதல் ஆகியவற்றையும் செய்து வருகிறார்.

    அவர் ஸ்பெகுலேட்டிவ் AI உருவாக்குபவராக இருந்தாலும் சரி, படைப்புத் துறைகள் மூலம் மாணவர்களை வழிநடத்துபவராக இருந்தாலும் சரி, நெசவு சார்ந்த தரவுகளை பரிசோதனை செய்தாலும் சரி, அல்லது லாரி ஆண்டர்சன் போன்ற உலகளாவிய கலைஞர்களுடன் பணிபுரிபவராக இருந்தாலும் சரி, தினசரி தனது ஓவியப் பயிற்சியை அவர் தவற விடுவதில்லை.

    *தற்போது மற்றும் எதிர்காலத் திட்டங்கள்:*

    சுராஜ் எவ்ரிடேஸின் (Everydays) 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான ஒரு தளமாக வளர்ந்துள்ளது.

    • தனது அன்றாட படைப்புகளில் AI தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி,
    • பாரம்பரிய நெய்தல் மரபுடன் தற்கால இயந்திர தொழில்நுட்பத்தை இணைப்பது,
    • அவரது அன்றாட பணி சார்ந்த முக்கிய விஷயங்களை ஒருங்கிணைப்பது,

    “தறிதான் முதல் கணினி. இப்போதும் எப்போது எனது பாரம்பரியத்தைத் தொடர்வேன்” என்கிறார்.

    *சூரஜ் பார்தி பற்றி:*

    சூரஜ் பார்தி செல்வபாரதி புரூக்ளினை தளமாகக் கொண்ட கலைஞர் மற்றும் படைப்பு தொழில்நுட்பவியலாளர். ஜவுளி, குறியீடு மற்றும் இண்டர் ஆக்‌ஷன் டிசைன் மூலம் நேரம், நினைவகம் மற்றும் நிலைத்தன்மையை ஆராய்பவர். அவர் NYU டிஷ்ஷில் முன்னாள் முதுகலை பட்டதாரி. மேலும் தற்போது Quit With Jones இல் தயாரிப்பு வடிவமைப்பை வழிநடத்துகிறார். அவரது பணி சர்வதேச அளவில் Currents Festival, NYCxDesign, DEMO Festival மற்றும் Laurie Anderson’s ARK ஆகியவற்றில் காட்டப்பட்டுள்ளது.

    *Key Projects*
    • Everydays (2016–present): 3,000+ daily explorations in 3D, code, and visual systems [Link]
    • Mookambika Mural (2021): For Isaignani Ilayaraaja’s studio [Link]
    • Chase (2024): A kinetic sculpture where midnight never arrives [Link]
    • Fabric of Time (2023): Interactive loom installation [Link]
    • Staring Faces, Us (2023): Networked sculptures and temporal interactions [Link]

    *Exhibitions & Recognition*
    • Open Hardware Summit, Edinburgh, UK (2025)
    • CultureHub Re-Fest, New York, NY (2025)
    • NYCxDESIGN Festival, NY (2024)
    • Laurie Anderson’s ARK, Manchester, UK (2024)
    • DEMO Festival, Netherlands (2022)
    • Downloadable Assets
    • Document Pictures [Link]
    • Everydays Assets [Link]
    • Headshots [Link]
    • Portfolio → www.surajbarthy.com
    • Instagram → https://www.instagram.com/surajbarthy/

  • *’Dude’ படத்தில் நடிகை மமிதா பைஜூவின் கதாபாத்திரப் பெயர் *குறள்!*

    *’Dude' படத்தில் நடிகை மமிதா பைஜூவின் கதாபாத்திரப் பெயர் *குறள்!*
*’Dude' படத்தில் நடிகை மமிதா பைஜூவின் கதாபாத்திரப் பெயர் *குறள்!*

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘Dude’. இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. நடிகை மமிதா பைஜூவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் அவரது கதாபாத்திரப் பெயர் ‘குறள்’ என்பதை படக்குழு வெளியிட்டுள்ளது.

    யங் சென்சேஷன் நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தப் பிறகு ’புஷ்பா’, ‘குட் பேட் அக்லி’ போன்ற பல பிரம்மாண்டமான வெற்றிப் படங்களைக் கொடுத்த பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் உடன் பான் இந்தியன் படமான ‘Dude’-ல் இணைந்துள்ளார். அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் படத்தை இயக்கியுள்ளார். ‘பிரேமலு’ படப்புகழ் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்க, சீனியர் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    படத்தில் நடித்திருப்பது பற்றி நடிகை மமிதா பைஜூ பகிர்ந்து கொண்டதாவது, “மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் ‘Dude’ படத்தில் பணிபுரிந்திருப்பது மகிழ்ச்சி. பிரதீப் மிகவும் எனர்ஜிடிக்கான நடிகர். எங்கள் காம்பினேஷனும் கதையும் நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும். இந்தப் படத்தில் எனது கதாபாத்திரப் பெயர் குரல். ‘Dude’ படத்துடன் இந்த வருட தீபாவளியைக் கொண்டாட ஆவலுடன் உள்ளேன்” என்றார்.

    இந்தப் படத்தில் பல திறமையாளர்களை மைத்ரி மூவி மேக்கர்ஸ் கொண்டு வந்துள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்திருக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளராக லதா நாயுடுவும் படத்தொகுப்பாளராக பரத் விக்ரமனும் பணியாற்றியுள்ளனர்.

  • AKB Pavilion IIT Enclave On Vandalur Kelambakam Road Opposit to IIT at half price of VK road

    AKB Pavilion IIT Enclave On Vandalur Kelambakam Road Opposit to IIT at half price of VK road
AKB Pavilion IIT Enclave On Vandalur Kelambakam Road Opposit to IIT at half price of VK road

    AKB Pavilion IIT Enclave On Vandalur Kelambakam Road Opposit to IIT at half price of VK road
    AKB Pavilion IIT Enclave On Vandalur Kelambakam Road Opposit to IIT at half price of VK road

    AKB Developers & Promoters proudly presents AKB Pavilion IIT Enclave, a premium gated community spread across 6.20 acres in Thaiyur, Kelambakkam—right opposite the IIT Madras Research Campus. As AKB’s 93rd project, this development stands out for its strategic location, thoughtful planning, and investment potential.

    Priced between ₹17 lakhs and ₹34 lakhs, the project offers well-laid plots from 600-1200sqft within a secure, fully developed layout featuring a 19,000+ sq. ft. exclusive park, blacktop roads, street lighting, and green spaces—designed to provide residents with a peaceful and self-contained environment.

    Thaiyur has quickly emerged as an investor hotspot, driven by the IIT campus development and rapid growth along the Vandalur–Kelambakkam Road, which is considered one of South Chennai’s fastest-growing corridors. Remarkably, AKB Pavilion is priced at nearly half the rate of plots along this stretch, offering unmatched value just 5 minutes from PudupakkamAanjaneyarKoil.

    With expected returns of up to 200% in the next 5–7 years, this project is poised to become one of the most sought-after residential hubs near OMR. Backed by AKB’s 36-year legacy and known for legal transparency and development quality, Pavilion IIT Enclave is not just a plot—it’s a smart investment in Chennai’s future.

  • *நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2’ திரைப்படம் அதிகம் பார்வையாளர்களைக் கவர்ந்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது!*

    *நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2’ திரைப்படம் அதிகம் பார்வையாளர்களைக் கவர்ந்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது!*
    *நடிகர் அல்லு அர்ஜூனின் 'புஷ்பா2' திரைப்படம் அதிகம் பார்வையாளர்களைக் கவர்ந்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது!*
    *நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2’ திரைப்படம் அதிகம் பார்வையாளர்களைக் கவர்ந்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது!*

    *நடிகர் அல்லு அர்ஜூனின் 'புஷ்பா2' திரைப்படம் அதிகம் பார்வையாளர்களைக் கவர்ந்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது!*
    *நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2’ திரைப்படம் அதிகம் பார்வையாளர்களைக் கவர்ந்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது!*
    *நடிகர் அல்லு அர்ஜூனின் 'புஷ்பா2' திரைப்படம் அதிகம் பார்வையாளர்களைக் கவர்ந்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது!*
    *நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2’ திரைப்படம் அதிகம் பார்வையாளர்களைக் கவர்ந்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது!*

    ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார். இந்த எபிக் கதாபாத்திரம் இன்னும் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாததாக மாறி உள்ளது. ‘புஷ்பா 2’ திரைப்படம் ரூ. 1800 கோடி பாக்ஸ் ஆபீஸில் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் இந்தி வெர்ஷன் சமீபத்தில் தொலைக்காட்சியில் பிரீமியர் ஆனது.

    நடிகர் அல்லு அர்ஜூனின் இந்த மாஸிவ் கதாபாத்திரத்தை இந்தி பேசும் ரசிகர்களும் கொண்டாடினர். இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘புஷ்பா2’ திரைப்படம், 5.1 TVR ரேட்டிங் மற்றும் 5.4 கோடி பார்வைகளைப் பெற்று, இந்த வருடத்தின் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ‘ஸ்ட்ரீ 2’, ‘பதான்’, ‘அனிமல்’ மற்றும் பல பிளாக் பஸ்டர் படங்களின் ரெக்கார்டையும் இது உடைத்துள்ளது.

    இந்த நம்பரையும் தாண்டி, படத்தின் எமோஷனல் தருணங்கள்தான் ஆடியன்ஸை கனெக்ட் செய்திருக்கிறது. பாலிவுட் ஜெயண்ட்ஸை தாண்டி புஷ்பா ராஜாக அல்லு அர்ஜூனை பெரிய திரையிலும் சின்னத்திரையிலும் கொண்டாடி வருகின்றனர்.

    இந்த சாதனை நடிகர் அல்லு அர்ஜூனின் சினிமா பயணத்தில் மற்றொரு மைல்கல். தேசிய விருது பெற்றதில் இருந்து பான் இந்தியா ஸ்டாராக உருவானது என தன்னுடைய ஒவ்வொரு வெற்றியிலும் அடுத்தடுத்து உயரத்தை அடைந்து வருகிறார் நடிகர் அல்லு அர்ஜூன்.

  • *”வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி” எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜோனாதன் பெய்லி ஜுராசிக் தொடருடனான தனது தனிப்பட்ட தொடர்பையும் அது தன்னை எவ்வாறு கவர்ந்தது என்பதையும் பகிர்ந்து கொள்கிறார்!*

    நேஷனல், 18 ஜூன் 2025: யுனிவர்சல் பிக்சர்ஸ் (வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி விநியோகம்) ஜுராசிக் உலகத்தில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அடுத்த அத்தியாயமான ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த் ஜூலை 4, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

    மூச்சடைக்க வைக்கும் பிர்மமாண்டமான காட்சிகள் மற்றும் கதைக்களம் என இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இது உள்ளது.

    எம்மி விருது வென்ற கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள இந்த ஆக்‌ஷன் அட்வென்ச்சர் படத்தில் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்கார்லெட் ஜோஹன்சன், எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்றும் ஆலிவர் விருது வென்ற ஜொனாதன் பெய்லி, மஹெர்ஷாலா அலி மற்றும் லூனா பிளேஸ் மற்றும் ரூபர்ட் ஃப்ரெண்ட் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்தின் கதை ஜுராசிக் வேர்ல்ட் டொமினியனுக்குப் பிறகு வருகிறது. அங்கு மீதமுள்ள டைனோசர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அங்கு தன் இனத்தைப் பெருக்கி இருக்கிறது. அந்தச் சூழலில் இருக்கிற மிகப் பிரம்மாண்டமான மூன்று டைனோசர்கள், மனித இனத்துக்கு அதிசயிக்கத்தக்க உயிர்காக்கும் நன்மைகளைக் கொண்டுவரப்போகும் ஒரு மருந்தின் திறவுகோலைக் கொண்டிருக்கின்றன. இதில் நடிகர் ஜொனாதன் பெய்லி தொல்லுயிரியலாளர் டாக்டர் ஹென்றி லூமிஸாகவும் நடிகர் ஸ்கார்லெட் ஜோஹன்சன் திறமையான இரகசிய செயல்பாட்டு நிபுணர் ஜோரா பென்னட்டாகவும் நடித்துள்ளார்கள். அவர் உலகின் மூன்று மிகப் பெரிய டைனோசர்களிடமிருந்து மரபணுப் பொருளைப் பாதுகாப்பதற்கான ஒரு உயர் ரகசிய பணியில் திறமையான குழுவை வழிநடத்துகிறார். இது ஒரு குடும்பத்தை பாதிக்கிறது. அந்த குடும்பம் எதிர்பாராத விதமாக ஒரு தீவில் சிக்கித் தவிக்கிறார்கள். அங்கு அவர்கள் பல தசாப்தங்களாக உலகத்திலிருந்து மறைக்கப்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.

    ஜுராசிக் தொடரின் மீதான தனது காதலையும், அது தனது குழந்தைப் பருவத்தில் எவ்வாறு பெரும் பங்கு வகித்தது என்பதையும் பற்றி வரவிருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்’தில் டாக்டர் ஹென்றி லூமிஸாக நடித்திருக்கும் எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜொனாதன் பெய்லி பகிர்ந்து கொள்கிறார். “எனக்கு ஐந்து வயதாகும் போது, என் குடும்பத்தினர் என்னை ஜுராசிக் பார்க் படத்திற்கு அழைத்து சென்றனர். இது ஒருவித ஆன்மீக உணர்வைக் கொடுக்கும். ஏனெனில், இது கற்பனை மட்டுமல்ல. நவீன உலகின் கடந்த காலத்துக்கும் இயற்கைக்கும் உள்ள உறவைப் பற்றி பேசியது” என்றார்.

    மேலும், “கதாபாத்திரங்கள் மிகவும் வலுவானது. ஸ்பீல்பெர்க் மற்றும் ஜான் வில்லியம்ஸின் இசை என்பதால் என் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தையே இல்லை” என்றார்.

    ஜுராசிக் வேர்ல்ட் – புதிய உலகம் வரும் ஜூலை 4, 2025 அன்று வெளியாகிறது!

    Jurassic World: Rebirth | Official Trailer 2

    JURASSIC WORLD: REBIRTH | Official Hindi Trailer 2

    JURASSIC WORLD: REBIRTH | Official Tamil Trailer 2

    JURASSIC WORLD: REBIRTH | Official Telugu Trailer 2