Category: News

  • பெரும் பாராட்டுகளைக் குவித்த ‘சிறை’ திரைப்படம் – ஜனவரி 23 முதல் ZEE5 தமிழில் பிரீமியர் ஆகிறது!!

    “சிறை” திரைப்படம் வரும் ஜனவரி 23 முதல் ZEE5 தமிழில் ஸ்ட்ரீமாகிறது!!

    ஜீவா மற்றும் ஆண்ட்ரியா ஜெரமையா நடித்த சமீபத்திய பொங்கல் பிராண்ட் திரைப்படம் உள்ளிட்ட பல வெற்றிகரமான ஒரிஜினல் சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்களுக்குப் பிறகு, தமிழ் ZEE5 தனது பிராந்திய ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

    அந்த வரிசையில் பெரும் பாராட்டுகளைக் குவித்த கிரைம் – நீதிமன்ற டிராமா திரைப்படமான “சிறை” திரைப்படம் ஜனவரி 23, 2026 முதல் தமிழ் ZEE5 தளத்தில் பிரீமியர் ஆகிறது. இப்படத்தை இயக்குநர் தமிழ் கதையை மையமாக வைத்து, அவருடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி. Seven Screen Studio சார்பில் S.S. லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தில், விக்ரம் பிரபு, L.K. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் மற்றும் அனந்தா தம்பிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த திரைப்படம் L.K. அக்ஷய் குமாரின் அறிமுகப் படமாகும். மேலும், தமிழ் இயக்குநராக அறிமுகமான அவரது முந்தைய ‘டாணாக்காரன்’ படத்திற்குப் பிறகு, விக்ரம் பிரபு – தமிழ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘சிறை’ திரைப்படம் ஜனவரி 23, 2026 முதல் தமிழ் ZEE5 தளத்தில் பிரீமியர் ஆகிறது.

    ஒரு கைதியை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் பணியின் போது, ஒரு காவல் அதிகாரிக்கு ஏற்படும் சிக்கல்கள், அமைப்பு ரீதியான அழுத்தங்கள், மனிதநேய உணர்வுகள் மற்றும் நெறிமுறை முரண்பாடுகள் ஆகியவற்றின் நடுவே சிக்கிக்கொள்ளும் ஒரு நேர்மையான காவல் அதிகாரியின் பயணமே இப்படத்தின் மையக் கதை. அதில் தீவிரமான நீதிமன்ற நாடகமும் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது.

    இப்படத்தின் டிஜிட்டல் வெளியீடு குறித்து விக்ரம் பிரபு கூறியதாவது:

    “‘சிறை’ என் நடிப்புப் பயணத்தில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான, மனதுக்கு நெருக்கமான திரைப்படங்களில் ஒன்று. என் கதாபாத்திரம் கடமையால் கட்டுப்பட்டவன்; அதே நேரத்தில் அவன் பணியாற்றும் அமைப்பையே கேள்வி கேட்பவன். இந்த படம் தமிழ் ZEE5 வழியாகப் பரந்த ரசிகர்களை அடையப் போவது எனக்கு மிகுந்த உற்சாகம் தருகிறது. எல்லா பிராந்தியங்களிலும் உள்ள பார்வையாளர்கள் இந்தக் கதையை அனுபவிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.”

    தன் கதாபாத்திரம் குறித்து L.K. அக்ஷய் குமார் கூறியதாவது:

    “இந்த படம் நடிகராக எனக்கு பெரும் சவாலாக இருந்தது. என் கதாபாத்திரம் முழுமையாக நல்லவன் அல்லது கெட்டவன் என வரையறுக்க முடியாதவன். சூழ்நிலைகளும் முடிவுகளும் அவனை உருவாக்குகின்றன. ‘சிறை’ படம் எனக்கு அறிமுகப்படமாக அமைந்தது எனக்குப் பெருமை. இது தமிழ் ZEE5-இல் வெளியாகிறது என்பதில் அளவில்லா மகிழ்ச்சி. வலுவான உள்ளடக்கத்தைக் கொண்ட சினிமாவை மதிக்கும் தளம் அது. இதன் மூலம் அனைவரும் இப்படத்தை ரசிப்பார்கள் என நம்புகிறேன்.”

    அழுத்தமான கதை சொல்லல், பரபரப்பான கதாபாத்திரங்கள் மற்றும் சமூக ரீதியான ஆழமான கருத்துகள் ஆகியவற்றுடன், 2026 தொடக்கத்தில் வெளியாகும் ஓடிடி வெளியீடுகளில் முக்கியமான தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாக ‘சிறை’ இருக்கும்.

    ‘சிறை’ திரைப்படம் 23 ஜனவரி 2026 அன்று, தமிழ் ZEE5 தளத்தில் பிரத்தியேகமாக பிரீமியர் ஆகிறது.

    ZEE5 பற்றி:

    ZEE5 என்பது பாரதத்தின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்படும் ZEE5, பல மொழிகளில் கதைகளை சொல்லும் தளமாக விளங்குகிறது. 4,071+ திரைப்படங்கள், 1,800+ டிவி நிகழ்ச்சிகள், 422+ வெப் ஒரிஜினல்ஸ், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கு மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களை கொண்ட விரிவான நூலகத்தை இது வழங்குகிறது. 12 மொழிகளில் – இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி – தனிப்பயன் மற்றும் ஹைப்பர்-லோக்கல் சந்தா திட்டங்களுடன் உள்ளடக்கம் வழங்கப்படுகிறது. உலகளாவிய டெக் கூட்டாளிகளுடன் உருவாக்கப்பட்ட வலுவான டீப்-டெக் கட்டமைப்பு, பல சாதனங்கள் மற்றும் இயக்க முறைமைகளில் தடையற்ற பார்வை அனுபவத்தை ZEE5 வழங்க உதவுகிறது.

    Facebook, Instagram, LinkedIn மற்றும் X-ல் ZEE5-ஐ பின்தொடருங்கள்.

  • மண்ணின் மணம்… கண்ணில் தீ… ‘சம்பரால எட்டிகட்டு’(Sambarala Yetigattu) சங்கராந்தி (Sankranti) போஸ்டரில் சாய் துர்கா தேஜின் கிராமத்து அவதாரம் !!

    மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் சங்கராந்தி கொண்டாட்டங்களை தீவிரப்படுத்தும் வகையில், அவரது பிரம்மாண்டமான பான்-இந்தியா ப்ரீயட் ஆக்‌ஷன் திரைப்படமான SYG (சம்பரால எட்டிகட்டு)-இன் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

    ரோஹித் KP இயக்கத்தில், K நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி தயாரிப்பில், ப்ரைம் ஷோ எண்டர்டெயின்மெண்ட் (Primeshow Entertainment) (ப்ளாக்பஸ்டர் ஹனுமேன் தயாரித்த நிறுவனம்) இந்த மாபெரும் படத்தை உருவாக்குகிறது.

    இந்த பிரம்மாண்டத் திரைப்படம், கிராமத்து வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு, அழுத்தமான மற்றும் தீவிரமான ப்ரீயட் ஆக்‌ஷன் களத்தில் உருவாகிறது. சமீபத்தியபோஸ்டர், சாய் துர்கா தேஜை இதுவரை காணாத ஒரு கிராமத்து அவதாரத்தில் வெளிப்படுத்தி, பார்வையாளர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுக்கிறது.

    மண் மணக்கும் கிராமத்து இளைஞனாக , சாம்பல் நிற சட்டையும் பாரம்பரிய பஞ்ச கட்டு அணிந்து, காலில் செருப்பு இல்லாமல் நடந்து செல்லும் சாய் துர்கா தேஜ்—அருகில் ஒரு மகத்தான காளை மாட்டை இழுத்து செல்கிறார். அவரது அடர்த்தியான தாடி, தீவிரமான பார்வை, நுண்ணிய புன்னகை எல்லாம் இணைந்து, கடுமையும், உள்ளார்ந்த வெப்பமும் ஒன்றாக இணைந்து அவரது கதாப்பாத்திரத்தை அழகாக பிரதிபலிக்கின்றன.

    இந்தக் கதாபாத்திரத்திற்காக, நடிகர் தனது உடல் அமைப்பையும், உடல் மொழியையும் முழுதாக மாற்றியுள்ளார். மண்ணோடு பிணைந்த மனிதனாக, தன் உலகில் உருவாகும் மோதல்களை எதிர்கொள்ளும் அவர், பல கடுமையான மற்றும் உடல் வலிமை தேவைப்படும் ஆக்‌ஷன் காட்சிகளில் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார்.

    முன்னதாக, அவரது பிறந்த நாளில் வெளியான அசுர ஆகமனம் க்ளிம்ப்ஸ், அதன் இருண்ட மனநிலை, உணர்ச்சிப் பூர்வமான காட்சிகள் மற்றும் பீரியட் கால சாயலுக்காக பெரும் பாராட்டுகளைப் பெற்றது. அந்த க்ளிம்ப்ஸ் கதையின் வன்முறை புயலை சுட்டிக்காட்டினால், சங்கராந்தி போஸ்டர்கள்—புயலுக்கு முன் நிலவும் அமைதியை அறிமுகப்படுத்துகின்றன.

    வெற்றிவேல் பழனிசாமியின் அற்புதமான ஒளிப்பதிவு, B அஜனீஷ் லோக்நாத் யின் ஆழமான இசை, மற்றும் ப்ரைம் ஷோ எண்டர்டெயின்மெண்ட்-உடைய சமரசமற்ற தயாரிப்பு தரம் SYG (சம்பரால எட்டிகட்டு) படத்தை, மண்ணின் உணர்ச்சியும், பிரம்மாண்டமான ஆக்‌ஷனும் கலந்த ஒரு சக்திவாய்ந்த படமாக உருவாக்குகின்றன.

    நடிகர்கள்:
    சாய் துர்கா தேஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜகபதி பாபு, சாய் குமார், ஸ்ரீகாந்த், அனன்யா நாகல்லா

    தொழில்நுட்ப குழு:
    கதை, இயக்கம்: ரோஹித் KP
    தயாரிப்பாளர்கள்: K. நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி
    பேனர்: ப்ரைம் ஷோ எண்டர்டெயின்மெண்ட்
    ஒளிப்பதிவு: வெற்றிவேல் பழனிசாமி
    இசை: B. அஜனீஷ் லோக்நாத்
    எடிட்டிங்: நவீன் விஜய கிருஷ்ணா
    கலை இயக்கம்: காந்தி நடிகுடிகர்
    உடை வடிவமைப்பு: ஆயிஷா மரியம்
    மக்கள் தொடர்பு : யுவராஜ்
    மார்க்கெட்டிங்: ஹாஷ்டேக் மீடியா

    Sai Durgha Tej’s Rustic Rage Unleashed: Sankranti Poster From Sambarala Yetigattu Shows Raw Power and Village Intensity

    Mega Supreme Hero Sai Durgha Tej ignites Sankranti celebrations with a stunning new poster from his ambitious Pan-India period action drama SYG (Sambarala Yetigattu), directed by Rohith KP and produced by K Niranjan Reddy and Chaitanya Reddy under Primeshow Entertainment—the banner behind the blockbuster HanuMan. This big-budget spectacle blends raw rustic roots with dark, intense mythic action, and the latest reveal showcases SDT in a never-before-seen village avatar that promises goosebumps and grounded ferocity.

    The poster showcases Sai Durgha Tej in an earthy, completely rooted village look. Wearing a a grey shirt and traditional panche kattu, SDT is seen walking barefoot through a rural backdrop, gently guiding a majestic white bull. His thick beard, intense eyes, and subtle smile capture both grit and warmth, adding layers to his rustic transformation.

    The actor has visibly reshaped his physique and body language to portray a man deeply tied to the soil and the conflicts brewing within his world. He will be seen performing several fierce, physically demanding action sequences in the film.

    Earlier, the Asura Aagamana glimpse released on his birthday received phenomenal appreciation for its dark mood, emotionally charged visuals, and the mythic tone it hinted at. While that glimpse showcased the violent storm of SYG’s narrative, the Sankranthi posters introduce the calm before the chaos.

    With Vetrivel Palanisamy’s gritty cinematography, B Ajaneesh Loknath’s immersive score, and PrimeShow Entertainment’s uncompromised production values, SYG is shaping up to be a strong mix of rooted emotion and large-scale action.

    Cast: Sai Durgha Tej, Aishwarya Lekshmi,Jagapathi Babu, Sai Kumar, Srikanth, Ananya Nagalla

    Technical Crew:
    Writer, Director: Rohith KP
    Producers: K Niranjan Reddy, Chaitanya Reddy
    Banner: Primeshow Entertainment
    DOP: Vetri Palanisamy
    Music: B Ajaneesh Loknath
    Editor: Naveen Vijaya Krishna
    Production Designer: Gandhi Nadikudikar
    Costume Designer: Ayesha Mariam
    PRO: Yuvraaj
    Marketing: Haashtag Media

  • அனந்தா திரை விமர்சனம்

    Anantha Movie – Tamil & Telugu
    Streaming Platform: Simply South (Outside India)

    ​Supported Devices / Platforms:

    ​Website : https://simplysouth.tv/

    TV​

    • Android TV
    • ⁠Apple TV
    • ⁠LG TV
    • ⁠Samsung TV
    • ⁠Amazon Fire TV
    • ⁠Roku TV

    ​Mobile / Tab

    • ⁠Android Mobile & Android Tab
    • ⁠iOS Mobile & iPad

    ​​Anantha Movie – Hindi
    Streaming Platform: Shemaroo (Outside India)

    Supported Devices / Platforms:

    Website :https://www.shemaroome.com/

    Mobile / Tab

    • ⁠Android Mobile & Android Tab
    • ⁠iOS Mobile & iPad

    TV

    • ⁠Apple TV
    • ⁠Amazon Fire TV

    The apps can be downloaded from their respective stores..

    *ANANTHA CAST & CREW DETAILS*

    *Jagapathi BabuSuhasini Mani Ratnam Y Gee Mahendra Thalaivasal VijayNizhalgal Ravi Sri RanjaniAbhirami Venkatachalam *CREW*Writted & directed by: Suresh KrissnaProduced by: Girish Krishnamurthy Dialogues & Lyrics: Pa VijayMusic: DevaCinematography: Sanjay BLEditing: S RichardProduction Design: VasudevanChoreography: Kala Costumes: Dhatsha DayalPublicity Designs: Design PointsPRO: Riaz K Ahmed, Paras Riyaz

    இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளஅனந்தா திரைப்படத்தின் திரைக்கதை புட்டபார்த்தியில் உள்ள சாய்பாபா மருத்துவமனையில்  தொடங்குகிறது சாய்பாபா  கடைசியாக தனது பக்தர்களை ஆசிரமத்திற்கு வருமாறு கூறியதாக மருத்துவமனை நிர்வாகி தெரிவிக்க, பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள் அங்கு கூடுகிறார்கள். சுஹாசினி, ஜகபதி பாபு, வை.ஜி. மகேந்திரன், தலைவாசல் விஜய் ஆகியோர் தங்களது வாழ்க்கையில் சாய்பாபா ஏற்படுத்திய அற்புதங்களை அனுபவக் கதைகளாக பகிர்ந்து கொள்கிறார்கள்.

    மனிதர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல்கள் மற்றும் அவற்றை சாய்பாபாவின் தெய்வீக அருள் எவ்வாறு மாற்றுகிறது என்பதைக் திரைக்கதையாக வடிவமைத்து சாய்பாபா பக்தர்களுக்கு புட்டபர்த்தி சாய்பாபா செய்த அற்புதங்களை ஒவ்வொரு  அத்தியாயமும் உணர்ச்சியையும் பக்தியையும் முன்னிறுத்தி ஆன்மீக அமுதமாக திரைக்கதை அமைத்து சாய்பாபாவின் அற்புதங்களையும் அவர் மகிமையின் மக்களுக்கு திரையில் பக்தர்களின் அனுபவங்களைக் கொண்டு திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது.
    அனந்தா’ சாய்பாபாவின் மகத்துவத்தையும் அவரது பக்தர்களின் நம்பிக்கையையும் பேசும் ஒரு பக்தி நாடகத் திரைப்படம். சில அத்தியாயங்கள் உணர்ச்சிகரமாக மனதை தொடினாலும், சில பகுதிகளில் போதனைத் தன்மை அதிகமாக உள்ளது. சத்ய சாய்பாபா பக்தர்களுக்கும், பக்தி கதைகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் இந்த படம் ஒரு ஆன்மீக அனுபவமாக இருக்கும்.

  • தலைவர் தம்பி தலைமையில் திரை விமர்சனம்

    தயாரிப்பு: கண்ணன் ரவி புரடக் ஷன்ஸ்
    இயக்கம்: நிதிஷ் சஹதேவ்
    நடிப்பு: ஜீவா, தம்பிராமையா, இளவரசு, ஜென்சன் திவாகர், பிரார்த்தனா
    ஒளிப்பதிவு: பப்லு அஜூ
    இசை: விஷ்ணு விஜய்
    வெளியான தேதி: ஜனவரி 15, 2026
    நேரம்: 1 மணி 55 நிமிடங்கள்
    ரேட்டிங்: 4/ 5


    மாட்டிப்புதூர் கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவரத்தினம் (ஜீவா) தனது கிராமத்தில் நடக்கும் நல்லது கெட்டது இரண்டிற்கும் முன் நின்று நடத்தும் நாயகன் ஜீவா, விரைவில் தேர்தல் வர இருப்பதால் தன் கட்சிக்கு நற்பெயர் கிடைக்க நாயகன் ஜீவா இளவரசு மகள் திருமணத்தை முன் நின்று நடத்த நாயகன் ஜீவா ஏற்பாடுகளை செய்கிறார் இதனை தடுத்து நிறுத்த மணி (தம்பி ராமையா) அப்பா இறந்து போக தினை பயன்படுத்தி இளவரசு மற்றும் மணி (தம்பி ராமையா) இருவருக்கும் முன்விரோத பகை பழித்திருக்க. பக்கத்து வீட்டில் ஏற்பாடு செய்திருக்கும் முகூர்த்த நேரம் பத்தரை மணிக்கு தனது அப்பாவின் உடலை எடுக்க வேண்டும் என்று தம்பி ராமையா அடம்பிடிக்க. ஒரு பக்கம் மார்த்தாண்டத்தில் இருந்து மாப்பிளை வீட்டார் திருமணத்துக்காக கிளம்பி வந்து கொண்டிருக்க, பெண் வீட்டில் கல்யாண ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்குகிறார் ஜீவா. இன்னொரு பக்கம் எதிர்க்கட்சியை சேர்ந்த தவிடு (ஜென்சன் திவாகர்) எப்படியாவது இதில் தானும் பெயர் சம்பாதிக்க முயற்சிக்கிறார்.
    ஊராட்சி மன்ற தலைவராக ஜீவா இரு வீட்டாரின் நிகழ்வினை ஒரே நேரத்தில் எப்படி நடத்தினார்?
    இளவரசுக்கும் மணி (தம்பி ராமையா) இருவருக்கும் இடையே பகை ஏற்பட காரணம் என்ன?
    எதிர்க்கட்சி தவிடு என்ன சதி வேலைகளை செய்கிறார்?
    அவற்றை எல்லாம் ஜீவா எப்படி சமாளிக்கிறார் என்பதெல்லாம் தான் படத்தின் மீதிக்கதை.
    ஊர்த்தலைவரான ஜீவா எந்த பிரச்சனை என்றாலும் தலையிட்டு தீர்த்து வைக்கும் செல்வாக்கு உள்ளவராக இருக்கிறார். இதனால் எந்த நல்லது கெட்டது என்றாலும் அவரது பங்களிப்பு இருக்கும் சூழலில், இளவரசுவின் மகள் சௌமியாவிற்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. அதே சமயத்தில் பக்கத்து வீட்டுக்காரர் மணி

  • நாகபந்தம்” திரைப்படத்தில் பார்வதி ஆக நடிக்கும் நபா நடேஷ் – ஃபர்ஸ்ட் லுக் வெளியானது | பான்-இந்தியா வெளியீடாக இந்த கோடையில் வெளியாகிறது !!

    “நாகபந்தம்” (Nagabandham) எனும் பிரமாண்ட புராண ஆக்ஷன் திரைப்படம், இயக்குநர் அபிஷேக் நாமாவின் கனவு முயற்சியாக உருவாகி வருகிறது. விராட் கர்ணா நாயகனாக நடிக்கும் இந்த படம், தயாரிப்பின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ‘பார்வதி’ கதாபாத்திரத்தில் தோன்றும் நாயகி நபா நடேஷின் (Nabha Natesh) ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    மகர சங்கராந்தியை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த போஸ்டரில், பாரம்பரிய உடையில் நபா நடேஷ் மிகுந்த அழகும் ஆன்மிக ஒளியும் நிறைந்த தோற்றத்தில் காட்சியளிக்கிறார். அழகிய சேலை, நுட்பமான ஆபரணங்கள், அமைதியான முகபாவனை—அனைத்தும் அவரது கதாபாத்திரத்தின் பக்தி, தூய்மை மற்றும் புராண அம்சத்துடன் உருவாக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.

    போஸ்டரில் படத்தின் தரத்தை களத்தை வெளிப்படுத்தும் வகையில், நாயகி அருகே நீல நிறப் பறவை, ஒரு பிரம்மாண்ட மயில் மற்றும் கோவில் பின்னணி இடம் பெற்றுள்ளன. ‘பார்வதி’ கதாபாத்திரத்தின் ஆன்மிக அடையாளத்தையும், படத்தின் கருப்பொருளையும் இந்த ஒரே போஸ்டர் அழகாக எடுத்துரைக்கிறது.

    இந்த படத்தில் மற்றொரு நாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். மேலும் ஜகபதி பாபு, ஜெயப்பிரகாஷ், முரளி ஷர்மா, B. S. அவினாஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்தியாவின் பழமையான விஷ்ணு கோவில்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் நாகபந்தம் திரைப்படம், நம் மரபின் புனித ரகசியங்களை மையமாக வைத்து, புராணம், சஸ்பென்ஸ் மற்றும் தெய்வீக பாரம்பரியத்தை இன்றைய காலகட்ட கதையுடன் இணைக்கும் வித்தியாசமான திரைக்கதை அமைப்பைக் கொண்டுள்ளது.

    ஒளிப்பதிவு சௌந்தர் ராஜன் S, எடிட்டிங் RC பிரணவ், கலை இயக்கம் அசோக் குமார் என முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றுவதால், படம் மிகச் சிறப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    கிஷோர் அன்னபூரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோரின் தயாரிப்பில் உருவாகும் நாகபந்தம், இந்த கோடைக்காலத்தில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய பல மொழிகளில் பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.

    நடிப்பு:
    விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, B.S.அவிநாஷ் மற்றும் பலர்

    தொழில்நுட்ப குழு

    கதை / திரைக்கதை / இயக்கம்: அபிஷேக் நாமா
    தயாரிப்பாளர்கள்: கிஷோர் அன்னபூரெட்டி, நிஷிதா நாகிரெட்டி
    ஒளிப்பதிவு: சௌந்தர் ராஜன் S
    இசை: அபே, ஜுனைத் குமார்
    கலை இயக்கம்: அசோக் குமார்
    எடிட்டிங்: RC பிரணவ்
    சிஇஓ: வாசு போதினி
    மக்கள் தொடர்பு : யுவராஜ்

    Introducing The Graceful Nabha Natesh As Parvathi From Nagabandham, Pan-India Release In Theaters This Summer

    Abhishek Nama’s ambitious mythological action drama- Nagabandham, starring Virat Karrna, continues to scale new heights as it nears the final stages of production. While the film is already making waves for its massive scale and mystical storyline, the team has now unveiled the captivating first look of lead actress Nabha Natesh as Parvathi.

    Marking the occasion of Makara Sankranthi, the poster showcases the graceful Nabha Natesh in a gorgeous and traditional avatar. Draped in an elegant saree and adorned with intricate jewellery, she radiates poise, purity, and spiritual warmth. Her soulful expression hints at a character deeply rooted in devotion and mythic grace.

    Adding to the visual richness, a vivid blue bird rests near her hand, complemented by the presence of a majestic peacock and a temple backdrop. This poster perfectly captures the essence of the character and the film’s thematic core.

    Iswarya Menon is the other heroine, with stalwarts like Jagapathi Babu, Jayaprakash, Murali Sharma, and B.S. Avinash in pivotal roles.

    Nagabandham unfolds against the backdrop of India’s ancient Vishnu temples. The storyline explores the sacred mysteries of the Nagabandham tradition, weaving mythology, suspense, and divine legacy into a gripping contemporary narrative.

    With Soundar Rajan S handling cinematography, RC Pranav overseeing editing, and Ashok Kumar taking care of production design, the film promises visual excellence. Backed by producers Kishore Annapureddy and Nishitha Nagireddy, Nagabandham is gearing up for a grand multi-language release in Telugu, Hindi, Tamil, Kannada, and Malayalam, this summer.

    Cast : Virat Karrna, Nabha Natesh, Iswarya Menon, Jagapathi Bab, Jayaprakash, Murali Sharma, B.S. Avinash, and others

    Technical Crew:
    Story, Screenplay & Director: Abhishek Nama
    Producers: Kishore Annapureddy, Nishitha Nagireddy
    Director of photography: Soundar Rajan S
    Music: Abhe, Junaid Kumar
    Production Designer: Ashok Kumar
    Editor: RC Panav
    CEO: Vasu Potini
    PRO: Yuvraaj

  • The Mummy Returns” Film Launched with a Grand Pooja !

    “The Mummy Returns” Begins Its Journey with a Grand Pooja Ceremony !

    The film “The Mummy Returns”, a delightful comedy family entertainer, officially commenced today with a grand pooja ceremony held in a festive atmosphere. The film is produced by Pepin de Raisin Productions, with P. J. Kishore as the producer, and is directed by Jai Amar Singh. The launch event was attended by the entire film crew along with several prominent personalities from the Tamil film industry, marking an auspicious beginning for the project.

    Celebrated filmmakers Vishnuvardhan and I. Ahmed graced the occasion and conveyed their heartfelt wishes to the team, adding further significance to the event.

    The story of The Mummy Returns revolves around a son who strives to save his mother after she emerges from a long coma. In an emotional yet humorous attempt to help her recover, he recreates the world of the 1990s—the era in which his mother once lived—along with the support of his friends. The amusing chaos and comic situations that arise during this journey form the core of the film. Director Jai Amar Singh is shaping the film as a wholesome family entertainer filled with rib-tickling comedy that promises to make audiences laugh their hearts out.

    The film features Krishna, Devadarshini, Swathi Muppala, Kinsley, Lollu Sabha Maaran, Bjorn, and Deepa in important roles.

    The shooting of the film is planned to be carried out in and around Chennai, across two schedules.

    Speaking about the film, director Jai Amar Singh shared that after completing his film studies in London, he worked under director I. Ahmed in the film Endrendrum Punnagai. At a time when action films dominate the screens, he believes audiences are longing for pure comedy entertainers. Being personally inclined towards comedy films, he has designed The Mummy Returns as a full-fledged laugh riot. At its heart, the film is an emotional story about a son’s efforts to save his mother, narrated in a way that makes audiences laugh till their stomachs ache.

    The film’s music is composed by leading composer Sam C. S.. Editing is handled by Manikandan Balaji, while cinematography is by Karthik Subramanian.

    The production team has also stated that announcements regarding additional cast members and technical crew will be made officially in the coming days.

  • “தி மம்மி ரிட்டர்ன்ஸ்” படம், பூஜையுடன் துவங்கியது !!

    Pepin de Raisin Productions சார்பில், P. J. கிஷோர் தயாரிப்பில், ஜெய் அமர் சிங் இயக்கத்தில் உருவாகும், அழகான காமெடி ஃபேமிலி எண்டர்டெயினர் “தி மம்மி ரிட்டர்ன்ஸ்” திரைப்படம், படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, விமரிசையான பூஜையுடன், இன்று கோலாகலமாக துவங்கியது.

    இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் இயக்குநர் I. அகமது இவ்விழாவில் கலந்துகொண்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    பல வருட கோமாவில் இருந்து மீண்டு வரும் தன் தாயை காப்பாற்ற தன் அம்மா வாழ்ந்த 1990 களின் உலகை தன் நண்பர்களுடன் இணைந்து உருவாக்குகிறான் மகன். அதில் நடக்கும் களேபரங்கள் தான் இப்படத்தின் மையம். வயிறு வலிக்க சிரித்து மகிழும் காமெடியுடன், அனைவரும் ரசிக்கும் அழகான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்குகிறார் ஜெய் அமர் சிங்.

    இந்த படத்தில் கிருஷ்ணா, தேவதர்ஷினி, ஸ்வாதி, கின்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பியோர்ன், தீபா (விஜய் டிவி) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    இப்படத்தின் படப்பிடிப்பை, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    படம் குறித்து இயக்குநர் ஜெய் அமர் சிங் கூறியதாவது..,
    நான் லண்டனில் ஃபிலிம் இண்ட்ஸ்டிடியூட்
    படித்து விட்டு சென்னையில் இயக்குநர் I. அகமது அவர்களிடம் “என்றென்றும் புன்னகை” படத்தில் பணிபுரிந்தேன். ஆக்சன் படங்கள் அதிகமாக வரும் இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் காமெடி படங்களுக்கு ஏங்குகிறார்கள். எனக்கும் காமெடி படங்கள் தான் அதிகம் பிடிக்கும். எனவே தான் இந்தப்படத்தை முழுக்க முழுக்க ரசிகர்கள் சிரித்து மகிழும் படமாக வடிவமைத்துள்ளேன். ஒரு தாயை காப்பாற்ற மகன் என்னவெல்லாம் செய்கிறான் என்பது தான் படம், எமோஷனலான கதையை, மக்கள் வயிறு வலிக்க சிரிக்கும்படி சொல்லப்போகிறோம் என்றார்.

    இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைக்ககிறார். மணிகண்ட பாலாஜி எடிட்டிங் செய்கிறார். கார்த்திக் சுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

    படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

  • பிராரம்பா 2026′ நிகழ்வில் இந்தியாவின் புதிய ஆற்றல் தளமாகத் தனது 4680 பாரத் செல் – ன் விரிவாக்கத்தை அறிவிக்கும் ஓலா எலக்ட்ரிக்

    பிராரம்பா 2026′ நிகழ்வில் இந்தியாவின் புதிய ஆற்றல் தளமாகத் தனது 4680 பாரத் செல் – ன் விரிவாக்கத்தை அறிவிக்கும் ஓலா எலக்ட்ரிக்


    4680 பாரத் செல் தளத்தை போக்குவரத்து மற்றும் குடியிருப்பு வீடுகளுக்கான ஆற்றல் சேமிப்பிற்கும் அப்பால் விரிவுபடுத்துவதாக அறிவிப்பு – வணிக நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் (புத்தொழில்) நிறுவனங்களுக்கு 4680 பாரத் செல்கள் மற்றும் 1.5kWh 4680 பாரத் செல் பேட்டரி பேக்குகளின் விற்பனையைத் தொடங்கியுள்ளது.
    4680 பாரத் செல்களால் ஆற்றல் பெறும் ஓலா சக்தி, இந்தியாவின் முதல் வீட்டு உபயோக BESS (பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு) சாதனமாகும். ஓலா நிறுவனத்தால் உள்நாட்டிலேயே முழுமையாக வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இதன் விற்பனை தொடங்கப்பட்டிருக்கிறது.
    ரோட்ஸ்டர் X+ (9.1kWh) டெலிவரி துவக்கம் – 4680 பாரத் செல்லால் இயங்கும் இது, 500 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது.
    S1 Pro+ 5.2kWh வாகனங்களின் டெலிவரி அதிகரிப்பு – 4680 பாரத் செல்லால் இயங்கும் இந்த வாகனத்தின் விநியோகம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
    பெங்களூரு, ஜனவரி 14, 2026: ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், இன்று ‘பிராரம்பா 2026’ (Prarambh 2026) நிகழ்வில் தனது 4680 பாரத் செல் தளத்தின் விரிவாக்கத்தை பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது. இந்த 4680 பாரத் செல் தளம் மூலம், வணிகங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இப்போது 4680 பாரத் செல்களையோ அல்லது 1.5kWh 4680 பாரத் செல் பேட்டரி பேக்குகளையோ நேரடியாக வாங்கலாம். இவற்றை வாகனங்கள், மனித உருவம் கொண்ட ரோபோக்கள், ட்ரோன்கள் மற்றும் கையடக்க மருத்துவ உபகரணங்கள் போன்ற பல்வேறு உபயோகங்களுக்குப் பயன்படுத்தலாம். இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட புதிய ஆற்றல் சேமிப்புத் தீர்வுகளைக் கொண்டு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் வணிகங்களும் புத்தாக்க செயல்பாடுகளில் ஈடுபடவும் மற்றும் விரைவாக தங்களது செயற்பரப்பை விரிவுபடுத்தி வளர்ச்சி காணவும் இந்த அறிவிப்பின் மூலம் ஓலா வழிவகை செய்கிறது.

    மேலும், தனது வீட்டு உபயோக பேட்டரி ஆற்றல் சேமிப்பு சாதனமான (BESS) ‘ஓலா சக்தி’ இப்போது விற்பனைக்குக் கிடைப்பதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. ‘ஓலா சக்தி’ 6kW/9.1kWh மாடலின் விநியோகம் ஜனவரி 2026 இறுதியிலும், ‘ஓலா சக்தி’ 3kW/5.2kWh மாடலின் விநியோகம் பிப்ரவரி 2026 நடுப்பகுதியிலும் தொடங்கும். இதுதவிர, 4680 பாரத் செல்லால் இயங்கும் தனது முதன்மை மோட்டார் சைக்கிளான ரோட்ஸ்டர் X+ 9.1kWh (Roadster X+) டெலிவரியையும் இந்நிறுவனம் தொடங்கியுள்ளது; இது, ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ வரை செல்லும் திறனுள்ளது. அத்துடன், S1 Pro+ 5.2kWh வாகனத்தின் விநியோகத்தையும் இந்தியா முழுவதும் ஓலா நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது.

    4680 பாரத் செல், இந்த தயாரிப்புகளின் மைய அம்சமாக திகழ்கிறது. ஓலா நிறுவனத்தால், சுயமாக அதன் தொழிலகத்திலேயே உருவாக்கப்பட்ட நிறுவனத்தின் ஆற்றல் செயல்தளமாகும். இது இப்போது நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் மற்றும் ‘ஓலா சக்தி’ ஆகிய இரண்டிற்கும் ஆற்றல் அளிக்கிறது – அதாவது ‘ஒரு செல், ஒரு செயல்தளம், இந்தியாவிற்காக உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்புத் தொகுப்பு’ (one cell, one platform, one portfolio). நவீன இந்திய வீடுகள், விவசாயப் பண்ணைகள் மற்றும் வணிகங்களுக்காக வடிவமைக்கப்பட்ட, எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு ஆதார வளமாக ‘ஓலா சக்தி’ திகழ்கிறது. ஆற்றல் ஆதாரத்தை அணுகுவது, கட்டுப்படுத்துவது மற்றும் நுகர்வது ஆகிய செயல்பாடுகளில் இந்திய மக்களுக்கு ஒரு அடிப்படையான மாற்றத்தை வழங்கும் ஒரு நவீன வளர்ச்சியை ஓலா சக்தி பிரதிபலிக்கிறது.

    ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறியதாவது: “4680 பாரத் செல் என்பது எங்களின் நிறுவனத்திலேயே உருவாக்கப்பட்ட ஆற்றல் மற்றும் போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பின் மைய அம்சமாகும். நுகர்வோர் வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோகத்திற்கான மின்ஆற்றல் என்பதையும் கடந்ததாக இந்த தளத்தை நாங்கள் இப்போது விரிவுபடுத்தி வருகிறோம். 4680 பாரத் செல் தளத்தை வணிகங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்வதன் மூலம், மனித உருவம் கொண்ட ரோபோக்கள் மற்றும் ட்ரோன்கள் முதல் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் கையடக்க மருத்துவ இயந்திரங்கள் வரை பலதரப்பட்ட பயன்பாடுகளுக்கு நாங்கள் வழிவகுத்திருக்கிறோம். வணிக நிறுவனங்கள் 4680 பாரத் செல்லை நேரடியாக வாங்கலாம் அல்லது எங்களின் 1.5kWh 4680 பாரத் செல் பேட்டரி பேக்கைப் பயன்படுத்தி தங்கள் தயாரிப்புகளை விரைவாக உருவாக்கலாம் மற்றும் விரிவுபடுத்தலாம். போக்குவரத்து, ஆற்றல் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்கு உதவும் ஒரே செல் மற்றும் அளவை உயர்த்தக்கூடிய ஒரே தளத்தை அறிமுகம் செய்திருப்பதன் மூலம் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட எதிர்காலத்திற்கு ஏற்ற ஆற்றல் அடித்தளத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம்,” என்றார்.

    ‘ஓலா சக்தி’ (Ola Shakti) இப்போது இரண்டு அளவீடுகளில் கிடைக்கிறது. 3kW/5.2kWh மாடல் ₹1,49,999 என்ற விலையிலும், 6kW/9.1kWh மாடல் ₹2,49,999 என்ற விலையிலும் கிடைக்கிறது. இந்த சாதன அமைப்பு ஏர் கண்டிஷனர்கள், ஃப்ரிட்ஜ்கள், இண்டக்‌ஷன் குக்கர்கள், விவசாய பம்புகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை இயக்கும் ஆற்றலை வழங்குகிறது. இது விரைவாக சார்ஜ் ஆகும் திறன் கொண்டது மற்றும் முழுமையான சார்ஜில் 1.5 மணிநேரம் வரை பேக்கப் ஆற்றலை வழங்கக்கூடியது. இத்தயாரிப்பை ஓலா எலக்ட்ரிக் இணையதளம் மற்றும் ஓலா எலக்ட்ரிக் ஸ்டோர்களில் வாங்கலாம். 9.1kWh மாடலின் விநியோகம் ஜனவரி 2026 இறுதியிலும், 5.2kWh மாடலின் விநியோகம் பிப்ரவரி 2026 நடுப்பகுதியிலும் தொடங்கும்.

    ₹1,89,999 விலையில் கிடைக்கும் ரோட்ஸ்டர் X+ 9.1kWh (Roadster X+), 4680 பாரத் செல்லுடன் கூடிய 9.1kWh பேட்டரி மற்றும் 11kW மோட்டாரைக் கொண்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ வரை தூரம் வரை செல்லும்; மற்றும் மணிக்கு 125 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. மேலும், இது வெறும் 2.7 வினாடிகளில் 0-40 கி.மீ வேகத்தை எட்டுகிறது.

    ₹1,90,338 விலையில் கிடைக்கும் S1 Pro+ 5.2kWh, 4680 பாரத் செல்லுடன் கூடிய 5.2kWh பேட்டரி மற்றும் 13kW மோட்டாரைக் கொண்டுள்ளது. S1 Pro+ ஒரு முறை சார்ஜ் செய்தால் 320 கி.மீ (IDC range) தூரம் வரை செல்லும் மற்றும் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் செல்லும். இது வெறும் 2.1 வினாடிகளில் 0-40 கி.மீ வேகத்தை எட்டுகிறது.

  • ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் (Icon Star Allu Arjun) × லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) கூட்டணியில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) வழங்கும் பிரம்மாண்ட மெகா திரைப்படம் !!

    இந்திய சினிமாவில் சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் பிரம்மாண்டமான திரைப்படம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்கள் ஒன்றிணையும் இந்த கனவு கூட்டணி, ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான திரையனுபவத்தை வழங்கும் என பெரும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

    பவர்ஃபுல் வீடியோவுடன் இந்தப் பிரம்மாண்டமான திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் ( Mythri Movie Makers)  நிறுவனம் பன்னி வாஸ் ( Bunny Vas )  உடன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம், அறிவிப்பு வெளியான தருணத்திலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

    ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, இப்படம்  இந்திய சினிமாவில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

    இந்தப் பிரம்மாண்ட முயற்சிக்கு தலைமையேற்கும் முன்னணி தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி ( Naveen Yerneni ) மற்றும் ரவி சங்கர் ஆகியோருடன் இணைந்து, பன்னி வாஸ் (Bunny Vas) இணைத் தயாரிப்பாளராகவும், நட்டி, சாண்டி, ஸ்வாதி ஆகியோரும் தயாரிப்பு குழுவில் இணைந்துள்ளனர்.

    அறிவிப்பு வீடியோ வெளியானதிலிருந்து, படத்தின் பிரம்மாண்டம் மற்றும் கதையின் தன்மை குறித்து ரசிகர்கள் மத்தியில் தீவிரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

    தனித்துவமான ஸ்டைல், மின்னல் வேக நடனங்கள், மாஸ் ஆக்ஷன் மற்றும் வலுவான திரை நடிப்பு என பான்-இந்தியா ஸ்டார்டம் கொண்ட அல்லு அர்ஜுன், தனித்துவமான  கதை சொல்லல் மற்றும் மாறுபட்ட மாடர்ன் மேக்கிங் மூலம் கமெர்ஷியல் சினிமாவை மறுவரையறை செய்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் — இந்த கூட்டணி தான் இப்படத்தின் மிகப்பெரிய பலம். மேலும், ராக் ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என்பதும் எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது.

    AA23 (தற்காலிக தலைப்பு) என அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 2026ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜின் வேகமான, மாறுபட்ட இயக்கத்தில், அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் இதுவரை ரசிகர்கள் காணாத ஒரு முற்றிலும் புதிய, அதிரடி தோற்றத்தில் (இதுவரை காணாத வேடத்தில்) நடிக்கவுள்ளதாக கூறப்படுவதால், இது சமீப காலத்தில்  மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்பட நிகழ்வாக உருவெடுத்துள்ளது.

    Icon Star Allu Arjun x Lokesh Kanagaraj: A Mammoth Project by Mythri Movie Makers

    The monumental project featuring Icon Star Allu Arjun in an epic collaboration with blockbuster filmmaker Lokesh Kanagaraj was announced today. This highly anticipated project brings together two of the most celebrated names in Indian cinema, promising a spectacular experience.

    The project was announced with a powerful video content and it raises hype to the next level on this project backed by the prestigious Mythri Movie Makers in association with BV works. It has already captured the imagination of fans nationwide.

    The project is spearheaded by ace producers Naveen Yerneni and Ravi Shankar, with producer Bunny Vas joining as co-producer along with Nutty, Sandy, and Swathi. The official announcement video took social media by storm, with discussions about the scale and tone of this ambitious venture.

    Allu Arjun, a phenomenon known for his unparalleled style, electrifying screen presence, and pan-India stardom with Lokesh Kanagaraj, a director celebrated for redefining commercial cinema with his gritty narratives and high-impact filmmaking. Along with them, the rockstar Anirudh joined the team.

    With sensational composer Anirudh Ravichandran scoring the music and the film scheduled to commence shooting in August 2026, the anticipation continues to soar. Tentatively titled AA23, the film is expected to present Allu Arjun in a never-seen-before avatar under Lokesh Kanagaraj’s dynamic direction, making it one of the most awaited cinematic events in recent times.

  • வா வாத்தியார் திரை விமர்சனம்


    தயாரிப்பு: ஸ்டூடியோ கீரின்
    இயக்கம்: நலன் குமரசாமி
    நடிப்பு: கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிர்த்தி ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத்
    ஒளிப்பதிவு: ஜார்ஜ்
    இசை: சந்தோஷ் நாராயணன்
    வெளியான தேதி: ஜனவரி 14, 2026
    நேரம்: 2 மணி 09 நிமிடங்கள்
    ரேட்டிங்: 3.5 / 5


    ராஜ்கிரண், தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர்  எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரை நேரில் சென்று பார்க்க முடியாது என்ற காரணத்தால் தான்  ஊரில் உள்ள திரையரங்கில் எம்ஜிஆர் படத்தை நண்பர்களுடன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது திரையரங்க உரிமையாளர்கள் மூலமாக மக்கள் திலகம் எம்ஜிஆர் இறந்த செய்தி  ராஜ்கிரனுக்கு தெரிய வர சோகத்தில் திரையரங்கு வாசலில் அமர்ந்திருக்கும் பொழுது அவருக்கு எம்ஜிஆர் இறந்த அதே நேரத்தில் அவருக்கு ஆண் பேரக்குழந்தை பிறக்கிறது அதனைத் தொடர்ந்து அந்த குழந்தை எம்ஜிஆரின் மறுபிறப்பு என்று ராஜ்கிரண் நேர்மையான வழியில் வளர்த்து வருகிறார் ராஜ்கிரண் நடிகர் கார்த்திக்கு வா வாத்தியார் படத்தின் ராமு என்ற பெயர் வைத்து சமுதாயத்தில் எம்ஜிஆர் போன்ற நேர்மையான மனிதராக வளர்த்து  கார்த்தி போலீஸ் துறையில் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார் பின்பு சமுதாயத்தில் கெட்ட மனிதர்களுடன் சேர்ந்து நம்பியாரை பார்த்து ராமு என்கிற கார்த்திக் நண்பர் ரசிகராக மாறி சமுதாயத்துக்கு எதிரான செயல்களை செய்து வருகிறார் ராமு ..

    இன்ஸ்பெக்டர் கார்த்தி  அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும்  “மஞ்சள்முகம்” என்ற ஹாக்கர் கும்பல்  பிடித்தால் நல்ல பணம் கிடைக்கும் என்று நினைத்து, கார்த்தி அந்த கும்பலை பிடிக்க முயற்சி செய்கிறார். அதே நேரத்தில், கார்த்தியின் உண்மை முகம் ராஜ்கிரணுக்கு தெரிய வருகிறது.

    எம்ஜிஆர் ரசிகரான ராஜ்கிரண் கனவை கார்த்தி நிறைவேற்றினார்?
    இன்ஸ்பெக்டர் கார்த்தி நம்பியார் ரசிகராக காரணம் என்ன?
    ராமு உடலில் எம்ஜிஆரின் ஆவி நுழைந்ததின் காரணம் என்ன?
    மக்கள் திலகம் எம்ஜிஆரின் ஆவி எவ்வாறு மக்களை காப்பாற்றுகிறது?
    இது போன்ற கேள்விக்கு பதில் வா வாத்தியார் திரை

    வா வாத்தியார் திரைப்படத்திலிருந்து வில்லனாக சத்யராஜ் எம்ஜிஆர் ரசிகனாக ராஜ்கிரன், எம்ஜிஆர் ரசிகராக ஆனந்தராஜ், கீர்த்தி செட்டி ஆகியோர் தங்களது நடிப்பினை சிறையில் ரசிக்க வைத்துள்ளனர்.

    திரைப்படத்திற்கு பக்கபலமாக ஒளிப்பதிவு மற்றும் இசை திரைக்கதையுடன் திரையில் காண்பவரை ரசிக்க வைத்துள்ளது.