Author: admin

  • பல்டி பத்திரிகையாளர் சந்திப்பு

    சாந்தனு போல ஆர்வம் கொண்ட நடிகரை பார்ப்பது அரிது – நடிகர் ஷேன் நிகம்

    தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி. இப்படத்தை இயக்கியதன் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படம் மலையாளம் மற்றும் தமிழில் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி வெளியாகிறது. அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் 19.09.2025 அன்று நடைபெற்றது. அந்த சந்திப்பில் கலந்து கொண்ட அப்படத்தின் கலைஞர்கள் பேசியதாவது

    தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா பேசும்போது,

    அனைவருக்கும் வணக்கம். இப்படத்தில் நடிக்கும் அனைத்து கலைஞர்களும் இளம் திறமையாளர்கள். ஷேன் நிகம், சாந்தனு, சாய் அபயங்கர், உன்னி ஆகியோர் மிகவும் திறமையானவர்கள். அனைவரும் இப்படத்தை வெற்றிப் படமாக ஆக்குவீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.

    தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் பேசும்போது,

    இந்த வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. இப்படம் என்னுடைய கனவை நனவாகியிருக்கிறது. சாய் அபயங்கரை விட இந்த கதாபாத்திரத்தை சிறப்பாக யாரும் செய்திருக்க முடியாது. உதயன் பாத்திரம் ஷேன் நிகம் செய்திருக்கிறார். சாந்தனு அவருடைய கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருந்தியிருக்கிறார். செல்வராகவன் கதாபாத்திரம் பயங்கரமாக இருக்கும். நான் செல்வராகவன் சாருடைய ரசிகன். இந்த பூமி கோளில் இவர் தான் மிகவும் சிறந்த மனிதர். உங்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் என்று நம்புகிறேன். உங்களுடைய ஆசிர்வாதம் வேண்டும் என்றார்.

    இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசும்போது,

    முதன்முதலாக உங்கள் அனைவரையும் பார்க்கிறேன். நான் படம் பார்த்துவிட்டேன். நன்றாக வந்திருக்கிறது. இப்படத்திற்காக இசையமைத்ததில் மகிழ்ச்சி. இன்னும் நிறைய நல்ல வாய்ப்பு வரும் என்று நம்புகிறேன். அனைவரையும் பார்க்கும் போது கதாபாத்திரங்களாகவே தோன்றுகிறது என்றார்.

    இயக்குனர் உன்னி சிவலிங்கம் பேசும்போது,

    இது என்னுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு. மலையாளத்தில் எடுத்தாலும் தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்திருக்கிறோம். நான் மலையாளி, என்னையும் இப்படத்தையும் 60 சதவிகிதம் மலையாளம் 40 சதவிகிதம் தமிழ் படமாக மலையாளத்தில் இருக்கும். தமிழ் மொழியில் மாறி வரும். அதிரடியாக படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது விளையாட்டு தளமாக இருந்தால் ஆர்வமாக இருக்கும் என்று விளையாட்டை மையப்படுத்தி இயக்கியிருக்கிறேன்.

    கச்சிசேரா ஆல்பத்தை பார்த்து தான் சாய்யை முடிவு செய்தேன். இன்று வரை என்னுடன் இருந்து பக்கபலமாக சாய் இருக்கிறார். ஷேன் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார்.

    சாந்தனு அண்ணனிடம் கதை கூறினேன். அவருக்கு கதை பிடித்திருந்தது. அவருடன் 25 நாள் தான் படப்பிடிப்பு எடுத்தோம். ஆனால், அவருடன் நிறைய கருத்து வேறுபாடுகள் வந்து சென்றாலும் படத்திற்காக நன்றாக உழைத்திருக்கிறோம்.

    ப்ரீதியிடம் அயோத்தி படம் போன்று இப்படத்தில் அழுது கொண்டே இருக்க வேண்டாம், வசனங்கள் பேச வேண்டும் என்றேன். எனக்கு மலையாளம் தெரியாது என்றார். இங்கு பலருக்கு மலையாளம் தெரியாது என்று கூறினேன். வசனங்களை இடையில் மாற்றினாலும் பயிற்சி எடுத்து சிறப்பாக பணியாற்றினார்.

    என்னுடைய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள், அவர்கள் அனைவருக்கும் நன்றி.

    தயாரிப்பாளர் என்னை 6வது புதிய இயக்குனராக அறிமுகப்படுத்தியிருக்கிறார். எனக்கு ஏதாவது கற்பனையாக வந்தால் நான் அவரிடம் தான் ஆலோசிப்பேன்.

    பல்டியில் பல புதிய ஆக்ஷன் ட்ரிக் காட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறோம். அதிலும் கபடியில் அதை எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்து செய்தோம். அல்போன்ஸ் அண்ணாவும் இப்படத்தில் இருக்கிறார். பல தமிழ் கலைஞர்கள் இப்படத்தில் இருப்பதால் டப்பிங்கிற்கு தனிகவனம் செலுத்தியிருக்கிறோம். இப்படத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்றார்.

    நடிகை ப்ரீதி பேசும்போது,

    என்னுடைய முதல் படம் அயோத்தி-யில் இருந்தே உங்களுடைய ஆதரவு எனக்கு கிடைத்திருக்கிறது. இன்று என்னுடைய கிஸ் படம் வெளியாகியிருக்கிறது. மலையாளத்தில் எனக்கு இது முதல் படம். ஆனால், தமிழ் படமும் சென்னையும் என்னுடைய தாய் வீடு போன்ற உணர்வு வரும். தயாரிப்பாளர் இறுக்கமாக இல்லாமல் அனைவருக்கும் ஆதரவாக இருந்தார். உன்னி சேட்டா இயக்குனர் என்பதை விட இப்படத்தின் மூலம் அண்ணனாகிவிட்டார். இதற்கு முன்பு நான் நடித்த படங்களைவிட இப்படம் மிகவும் புத்துணர்ச்சியோடும், வித்தியாசமாகவும் இருக்கும். செல்வராகவன் சார், பூர்ணிமா மேடம் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். முதல் படம் எப்போதும் ஸ்பெஷலாக இருக்கும். அதுபோல, எனக்கு பல்டி படம் அமையும். அதேபோல், ஜாலக்காரி பாடல் எனக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி. எங்கு சென்றாலும் என்னை ஜாலக்காரி என்று தான் அழைக்கிறார்கள்.

    பார்டரில் நடக்கும் கதை. ஆனால் அனைவரையும் கவரும் படமாக இருக்கும். இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

    நடிகர் சாந்தனு பேசும்போது,

    ப்ளு ஸ்டார் சந்திப்பிற்கு பிறகு இப்போது தான் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். என்னுடைய முதல் படம் ஆரம்பித்து இன்றுவரை நீங்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்து கொண்டிருக்கிறீர்கள். நடிகரோ, தொழில்நுட்ப கலைஞர்களோ எந்தளவிற்கு கடினமாக உழைக்கிறார்களோ அந்தளவிற்கு அவர்களுக்கு நீங்கள் ஆதரவு தந்து கொண்டிருக்கிறீர்கள்.

    நான் சாந்தனு பாக்யராஜ் ஆகத்தான் அறிமுகமானேன். ஆனால், இன்று 15 வருடங்களுக்குப் பிறகு மலையாள சினிமாவில் மீண்டும் இணைந்திருக்கிறேன். உன்னியின் நண்பர் தேவ் என்னை இப்படத்திற்காக பரிந்துரை செய்திருக்கிறார். உடனே உன்னி மற்றும் தயாரிப்பாளர்கள் என்னை அழைத்து கதை கூறி வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

    பல வருடங்களுக்குப் பிறகு பாவக்கதைகள், தங்கம் எனக்கு கிடைத்தது. திரையரங்கில் வெற்றியடைந்த படமாக ப்ளு ஸ்டார் அமைந்தது.

    பல்டி 4 பசங்களை கொண்ட கதை. ஷேனுக்கு சமமாக மலையாளத்திலோ, தமிழில் மற்றவர்களையோ கூட தேர்வு செய்திருக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட கதையில் எனக்கு அற்புதமான கதாபாத்திரம் கொடுத்ததற்கு நன்றி. இப்படம் மலையாளத்தில் ரீஎண்ட்ரியாக இருக்கும். மலையாளம் தெரியுமா என்று கேட்டதும் வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்று தெரியும் என்று கூறினேன். பிறகு நான் நடித்துவிடுவேன் ஆனால், வசனங்கள் கொஞ்சம் சிரமம் என்று கூறினேன். 1 மாதம் ஆன்லைன் டீச்சர் வைத்து பயிற்சி கொடுத்தார்கள்.

    கபடி குழுவில் ஒருவர் காணாமல் போய்விட்டால் என்ன நடக்கும் என்பதை இப்படத்தில் கூறியிருக்கிறார்கள். 3 மாதங்கள் கபடி பயிற்சி எடுத்து நடித்தோம்.

    செல்வராகவன் சாருக்கு ரசிகனாக இல்லாமல் யாரும் இருக்க முடியாது. அவரிடம் அவருடைய படங்கள் பற்றி பேசும் வாய்ப்பு கிடைத்தது. அல்போன்ஸ் சாரிடம் பிரேமம் பற்றி பேசினேன். ப்ரீதியை அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார். அப்பா எப்போதும் மற்றவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம் என்பார். ஷேனிடம் நிறைய கற்றுக் கொண்டேன். திருவிழா காட்சியில் தோன்றும்போது வேறு மாதிரி இருப்பார். நாமும் ஏன் இப்படி இருக்கக் கூடாது என்று கற்றுக் கொண்டேன்.

    சாய்க்கு முதல் மலையாளப் படம், சந்தோஷமாக இருக்கிறது. நம்மை நம்பி இங்கு வந்திருக்கிறார்கள். இப்படம் பிடித்திருந்தால் அனைவரும் ஆதரவு கொடுங்கள்.

    மலையாளத்தில் நான் தான் டப்பிங் பேசினேன். 3 நாட்களில் பேசி முடித்தேன். ஆனால், 3 நாட்களில் முடித்துவிட்டோம் என்று ஆச்சர்யப்பட்டேன். ஆனால், மறுபடியும் கேரளாவிற்கு அழைத்து இந்த ஒரு காட்சிதான் என்று கூறி முழு வசனங்களையும் பேசவைத்தார் தமிழ் படத்தில் உதடு அசைவுகளுக்கு ஏற்ப டப்பிங் பேச வேண்டும். அது சிறிதும் மாறாத அளவிற்கு பாலா சார் பணியாற்றியிருக்கிறார்.

    நடிகர் ஷேன் நிகம் பேசும்போது,

    பல்டி ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமா. 4 பசங்க, அவர்களுடைய கபடி குழு. இதில் வில்லன் வந்தால் எந்தளவிற்கு போராட்டமாக இருக்கும் என்பதே படத்தின் கதை. பினு சேட்டா, சந்தோஷ் சேட்டாவிற்கு நன்றி. செல்வராகவன் சாருக்கு நான் மிகப் பெரிய ரசிகன் அவருடைய புதுப்பேட்டை படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன்.

    சாந்தனு மாதிரி ஆர்வமுடன் நடிப்பவர்களை பார்ப்பது அரிது. சாய் நன்றாக இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு நன்றி. ப்ரீதிக்கு நன்றி மற்றும் இப்படக் குழு அனைவருக்கும் நன்றி.

    இப்படம் பிடித்திருந்தால் ஆதரவு கொடுங்கள் என்றார்.

  • கிஸ் திரை விமர்சனம்

    கிஸ் ஃபேன்டசி உறவுக் கதையை அடிப்படையாக கொண்ட படம்.காதல் என்ற வார்த்தையை கேட்டாலே எரிச்சலாகும் கிடார் கலைஞர் நெல்சன் (கவின்). எதிர்பாராத ஒரு தருணத்தில் பார்க் ஒன்றில் சந்திக்கும் கதாநாயகி ப்ரீத்தி அஸ்ரானி மூலம் கதாநாயகன் கவினுக்குக் கிடைக்கும் ஒரு விசித்திரமான(பையமையான) புத்தகம், அவர் வாழ்வில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அந்த புத்தகத்தின் மூலமாக கிடைக்கும்  சக்தியால், எவர் முத்தம் கொள்கிறார்களோ அவர்களின் எதிர்காலம் கதாநாயகனுக்குத் தெரிய ஆரம்பிக்கிறது. இதனால், காதலர்களை பிரிப்பதையே வேலையாக கொண்டு வாழும் ஹீரோ, அவரே நாயகியை காதலிக்க ஆரம்பிப்பதும், சக்தி எதிரியாகும் சூழல் ஏற்படுகிறது காதலி இறப்பதூ போன்று நாயகன் சக்தி மூலம் அறிந்து கொள்ள

  • சக்தி திருமகன் திரை விமர்சனம்

    சக்தி திருமகன் திரைப்படம் ஒரு அரசியல் ஆக்ஷன் திரில்லராக திரைப்பட கதையில், விஜய் ஆண்டனி நடிப்பில் ஒரு சாமான்ய மனிதன், அரசியலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, உச்சத்தை அடையும் போது, ஊழலுக்கு எதிராக போராடும் சாமானிய மனிதனின் வாழ்க்கை மற்றும் அரசியல் நகர்வையும் கதை பேசுகிறது. சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகள் மக்களுக்கு புரியும் படி  நேர்த்தியாக திரையில் சொல்லப்பட்டிருக்கின்றது.

    நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பம்
    விஜய் ஆண்டனி தனது இயல்பான நடிப்பால் திரை கதைக்கு உயிர் கொடுத்துள்ளார். மற்றும் துணை நடிகர் அனைவரும் தனது நடிப்பின் மூலம் மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளனர்.

    பின்னணி இசை மற்றும் கதையின் சலிப்பு இல்லாத திரை காதை மற்றும் சிறந்த நடிப்பு திரையில் ரசிக்க வைக்கிறது .

    இயக்குனர் அருண் பிரபு அரசியல் திரைக்கதை விரிவாகவும், நவீன அரசியலை உள்ளடக்கியதாகவும் திரை கதை மிக அருமை.

    மாசற்ற (மோசமான) அரசியல் ஊழல், அதிகாரத்தின் அடிமைத்தனம், மக்கள் பிரச்சினைகள் நெருக்கமாக சொல்லப்பட்டிருக்கின்றன.
    சக்தி திருமகன் திரைப்படத்தின் “பெஞ்ச் டயலாக், சண்டை காட்சி மற்றும் ஒளி பதிவு ஆகியவை ரசிகர்களை திரையில் பிடித்து வைத்துள்ளன.

  • படையாண்ட மாவீரன் திரை விமர்சனம்

    வன்னியர் குலத்தின் மற்றொரு மாவீரனாக காடுவெட்டி குருவின்  வாழ்க்கை வரலாறு மற்றும் அவரைச் சுற்றியுள்ள தலைசிறந்த நிகழ்வுகளை உணர்ச்சிகரமாகவும் வரலாற்றுப் பின்னணியில் நிஜங்கள் பேசும் காவியம்   படையாண்ட மாவீரன் திரைப்படம் .
    கதை மற்றும் நடிப்பு
    இந்த படத்தில் இயக்குநர் வ.கெளதமன் தான் கதாநாயகனாக நடித்து, காடுவெட்டி குருவின் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை உணர்ச்சிப்பூர்வமாகவே சித்தரித்துள்ளார். சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன் ஆகியோர் துணை நடிகர்களாக சிறப்பாக நடித்துள்ளனர். கதாபாத்திரங்களும், சண்டைக் காட்சிகளும், உணர்ச்சிக் காட்சிகளும் பாராட்டுகள் பெற்றுள்ளன. இதேசமயம், இந்த படத்தில் கதாநாயகிக்கு சிறப்பாக நடித்துள்ளர்.
    தொழில்நுட்பம் மற்றும் இசை
    ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை, வைரமுத்துவின் பாடல்கள், சாம் சி.எஸ்.யின் பின்னணிச் இசை – அனைத்தும் படத்திற்கு கூட்டாக இருந்தாலும், சில இடங்களில் இசை மற்றும் பின்னணி இசை சாதாரணமாகவும் பழைய படங்களை நினைவுபடுத்தும் வகையிலும் உள்ளது. ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பிலும் நல்ல வேலை செய்யப்பட்டுள்ளது திரையில் ரசிக்க வைத்தனர் .

    விமர்சனம் – சிறப்புக்கூறுகள் மற்றும் குறைகள்


    கதையின் விவரிப்பு, சமூக நோக்கு, காடுவெட்டி குருவின் நிஜமான மனிதர்போன்ற வடிவமைப்பு பாராட்டுபட்டுள்ளது.
    சண்டைக் காட்சிகள், உணர்ச்சிகள், கதையின் தன்மை சிறப்பாக இருந்தாலும், சில இடங்களில் இயல்பு தன்மை குறைவு ( வில்லன் நடு வீட்டில் 20 ரவுடிகள் மத்தியில் துண்டு போட்டு தூங்குவது என்பது) இயல்பு தன்மை மீறிய ஒன்று.
    இயக்குநரின் முயற்சி சமூக செய்தி வலியுறுத்தும் வகையில் திரையில் ரசிக்கும் படி உள்ளது.


    ‘படையாண்ட மாவீரன்’ திரைப்படம் சமூக வட்டார வாழ்க்கை, போராட்டங்கள், ஈகோ, தியாகம் ஆகியவற்றை உணர்ச்சிப் பூர்வமாக விவரிக்கும் முயற்சியில் சிறப்பும் குறையும் கலந்த ஒரு படமானது. அதே நேரம், உணர்வு தாக்கமும் எதிர்பார்ப்புக்கும் இடையில் சிக்கிய சிறந்த திரை காவியம் படையாண்ட மாவீரன் திரைப்படம் .

  • HONC Gas Pvt. Ltd. Hosts Live Demonstration of Revolutionary Green Energy Innovation:

    Today, HONC Gas Pvt. Ltd. successfully hosted a live demonstration of its groundbreaking HONC Gas Generator at the company’s factory. The event highlighted the transformative potential of HONC Gas, the world’s first direct-combustion green hydrogen fuel produced from purified water.

    The demonstration showcased how the HONC Gas Generator produces a unique fuel blend of Hydrogen and Oxygen using advanced Gyroid Electrolytic Medium (GEM) technology. Unlike conventional fossil fuels or LPG, HONC Gas is generated on demand, requires no storage cylinders, and eliminates the risk of leakage or explosion.

    Speaking at the event, Mr. Bealur Ramalingam Kaarthic, Founder and Chief Scientist of HONC Gas Pvt. Ltd., said:
    “We are proud to present this innovation from India to the world. HONC Gas has the potential to transform cooking fuel, industrial boilers, and even large-scale power generation. Our vision is to position India as a global leader in sustainable energy. This breakthrough is not just an alternative fuel—it represents a complete transformation of the energy sector. With just one litre of water and minimal electricity, we can generate clean fuel sufficient to power households for a month, while ensuring zero emissions.”

    He further emphasized:

    “The applications of HONC Gas extend far beyond households and industries. It can be harnessed for electricity generation through steam turbine systems, providing scalable power solutions. Additionally, HONC Gas has the potential to revolutionise the automotive sector by serving as a clean, efficient, and safe fuel alternative for vehicles. This makes HONC Gas a truly versatile energy source with the ability to transform multiple sectors.”

    Following the demonstration, media interactions were addressed by Mr. Bealur Ramalingam Kaarthic (Founder & Chief Scientist), Mr. Muthukumarasamy Muthurathnam (Chief Executive Officer), Mr. SenthilkumarPitchai(Managing Director), Mr. R. Sarathkumar (Executive Director, Actor), and Ms. Pooranasangeetha Chinnamuthu(Joint Managing Director).

    We are also pleased to share that the event was graced by distinguished guests, including Mr. S.R. Nagarajan (Chairman, Ramraj Cotton), Ms. Kavitha Karthik, wife of our Founder, Mr. S.K.Y. Sundarrajan (Secretary, Vanam India Foundation) and Mr. S. Sundaramurthy (Executive, Hero Fashion),along with many other dignitaries, industry experts, and energy stakeholders. The guests praised the innovation for its safety, scalability, and its potential to reduce India’s reliance on imported fossil fuels.

    HONC Gas Pvt. Ltd. is now preparing to scale up production and collaborate with government bodies, industries, and research institutions to make this clean, safe, and affordable energy widely accessible. HONC Gas represents a revolutionary leap in the global energy sector.

  • எங்களது HONC Gas Pvt. Ltd. நிறுவனத்தின் சார்பில் எங்கள் நிறுவனத்தின் ஆலையில் HONC Gas Generator குறித்து நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது

    எங்களது HONC Gas Pvt. Ltd. நிறுவனத்தின் சார்பில் எங்கள் நிறுவனத்தின் ஆலையில் HONC Gas Generator குறித்து நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், உலகிலேயே முதல் முறையாக, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் இருந்து நேரடியாக எரியூட்டக் கூடிய பசுமை ஹைட்ரஜன் எரிவாயு உற்பத்தி செய்யும் HONC Gas நிறுவனத்தின் புதிய மாற்றத்திற்கு வித்திடும் செயல்திறன் குறித்து மிகச் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மேம்பட்ட Gyroid Electrolytic Medium (GEM) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி HONC Gas Generator மூலமாக தனித்துவமான ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தி செய்வது எப்படி என்று செயல்விளக்கத்தின் போது விளக்கிக் காட்டினோம். மரபு ரீதியான புதைவடிவ எரிபொருள்கள் அல்லது LPG போல அல்லாமல் HONC Gas எரிபொருளை நமக்கான தேவையின்போது உற்பத்தி செய்து கொள்ள முடியும், இதை சேமித்து வைக்க சிலிண்டர்கள் தேவையில்லை மற்றும் எரிவாயு கசிவு அல்லது வெடிக்கும் ஆபத்து போன்றவை முற்றிலுமாக தவிர்க்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில், எங்களது HONC Gas Pvt. Ltd. நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை விஞ்ஞானியுமான திரு. பேளூர் ராமலிங்கம் கார்த்திக் பேசும்போது, “இந்த புரட்சிகர தொழில்நுட்பம் ஒரு மாற்று எரிசக்தி மட்டுமல்ல, எரிபொருள் துறையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. வெறுமனே ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் மிகக் குறைவான மின்சாரத்தைக் கொண்டு, தொழிற்சாலைகளுக்கும், வீடுகளுக்கும் முற்றிலும் மாசற்ற தூய்மையான எரிபொருளை நம்மால் உற்பத்தி செய்ய முடியும். HONC Gas பயன்பாடு என்பது வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளைக் கடந்து பல தரப்பட்ட இடங்களில் பயன் தரக் கூடியது. steam turbine generators மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், வாகனங்களுக்கான பாதுகாப்பு நிறைந்த, செயல்திறன் மிக்க, மாசற்ற எரிபொருள்களை வழங்கி ஆட்டோமொபைல் துறையில் ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய திறன் HONC Gas ஜெனரேட்டர்களுக்கு உண்டு. ஆக, வெவ்வேறு துறைகளில் பயன்படுத்தக் கூடிய எல்லாவற்றுக்கும் பொருத்தமான எரிபொருளை HONC Gas மூலமாக உற்பத்தி செய்ய இயலும்.இந்தப் புதிய கண்டுபிடிப்பை இந்தியாவில் இருந்து உலகிற்கு அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். சமையல் எரிவாயு, தொழிற்சாலைகளுக்கான பாய்லர்கள், பெரிய அளவிலான எரிசக்தி உற்பத்தி கூடங்களிலும் கூட பயன்படுத்தப்படுவதற்கான செயல்திறன் HONC Gas ஜெனரேட்டர்களில் உண்டு. நிலையான எரிசக்தி துறையில் இந்தியாவை உலகை வழிநடத்தும் நாடாக நிலைநிறுத்த வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்” என்றார்.எங்களது HONC Gas நிறுவனம் அளித்த இந்த செயல்விளக்கம் குறித்து HONC Gas நிறுவனரும், தலைமை விஞ்ஞானியுமான திரு. பேளூர் ராமலிங்கம் கார்த்திக், முதன்மை செயல் அதிகாரி திரு. முத்துக்குமாரசாமி முத்துரத்னம், மேலாண் இயக்குநர் திரு. செந்தில் குமார், நிறுவனத்தின் முதன்மை இயக்குநரும், அரசியல் தலைவர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகருமான திரு. R. சரத்குமார், நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநர் திருமதி. பூரணசங்கீதா செந்தில் குமார் பிச்சை ஆகியோர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தனர்.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் தலைவர் திரு. S.R.நாகராஜன், வனம் இந்தியா பவுண்டேஷன் செயலாளர் திரு. S.K.Y.சுந்தர்ராஜன், ஹீரோ பேஷன் நிறுவனத்தின் திரு. S.சுந்தரமூர்த்தி, HONC Gas நிறுவனர் திரு. பேளூர் ராமலிங்கம் கார்த்திக் அவர்களின் மனைவி திருமதி. கவிதா கார்த்திக் மற்றும் தொழில்துறை நிபுணர்கள், எரிசக்தி தொழில்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நம் நாட்டின் புதைவடிவ எரிபொருள்களின் இறக்குமதிக்கான தேவைகளை குறைக்கும் விதமாகவும், பாதுகாப்பானதாகவும், மேம்படுத்தக் கூடியதாகவும் இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளது என்று விருந்தினர்கள் பாராட்டு தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.தற்போது உற்பத்தியை பெருக்கவும், அரசு அமைப்புகள், தொழிற்சாலைகள், ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து எல்லோருக்கும் பலன் தரக் கூடிய பாதுகாப்பான, பசுமை எரிபொருள் உற்பத்தியை மேற்கொள்ளவும் எங்களது HONC Gas Pvt. Ltd. தற்போது தயாராகி வருகின்றது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றோம்!!

  • 7வது பதிப்பினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன், SICA – வின் தலைவர் பத்மஶ்ரீ. செஃப் தாமு மற்றும் பொதுச்செயலாளர் செஃப் சீதாராம் பிரசாத் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

    South India Chief’s Association (SICA) சார்பில் 2025 SICA Culninary Olympiad and Food Competition –

    சென்னை, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், வேர்ல்டு அசோசியேஷன் ஆஃப் செஃப்ஸ் சொசைடீஸ் – WACS ஆல் அங்கீகரிக்கப்பட்ட, இந்தியாவின் முதல்,
    SICA கலினரி ஒலிம்பியாட் 2025 மற்றும் கண்காட்சி இன்று முதல் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    தென்னிந்திய செஃப் அசோசியேஷன் (SICA) தனது 7 வது பதிப்பான தொழில்துறையின் மிக முக்கியமான சமையல் நிகழ்வான SICA கலினரி ஒலிம்பியாட் மற்றும் கண்காட்சி 2025 – இல் முதல்நாள் முக்கிய அம்சங்களாக, மூன்று அடுக்கு திருமண கேக், வெண்ணெய்/மார்கரின் சிற்பம், நறுமணப் பொருட்கள், சமையல் குழு சவால்-பஃபே போட்டி (தொகுதி 1), சமையல் குழு சவால்-பஃபே போட்டி (தொகுதி 2), நேரடி கிரியேட்டிவ் ஸ்கில்டு பரோட்டா போட்டி, உணவகம் அல்லது விருந்து மண்டபத்திற்கான தலைசிறந்த தயாரிப்பு ஏற்பாடு, மேகி கோக்கனட் மில்க் பவுடர் வழங்கும், அசல் பாரம்பரிய இந்திய உணவு வகைகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன.

    அகார் சர்வதேச உணவு கண்காட்சி 2025 இன் சென்னை மண்டல பதிப்பின் ஒரு பகுதியாக, இந்த நிகழ்ச்சிக்கு இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு (ITPO – INDIA TRADE PROMOTION ORGANIZATION) மற்றும் தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு அமைப்பு (TNTPO – TAMILNADU TRADE PROMOTION ORGANIZATION) ஆகியவை ஆதரவு வழங்கியுள்ளன.

    முதற்கட்டமாக, தொழில்முறை போட்டியை அணுகுவதற்கான தொழில்நுட்ப அறிவை ஏற்படுத்தும் வகையில் பேஸ்ட்ரி கலை மற்றும் ஹாட் பிளேட் விளக்கக்காட்சி குறித்த பட்டறைகளை SICA ஏற்கனவே நடத்தியுள்ளது. அதில், செஃப் கில்ட் ஆஃப் லங்காவைச் சேர்ந்த மாஸ்டர் சமையல் பயிற்சியாளரான செஃப் திமுத்து குமாரசிங்கே, இலங்கையைச் சேர்ந்த 4 பேரைக் கொண்ட தனது குழுவுடன் உணவு பூசும் நுட்பங்களின் கலையை நிரூபித்துள்ளார்.

    தற்போது நடைபெறும் ஏழாவது பதிப்பின் இன்னொரு முக்கிய அம்சம், இது WACS ஆல் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் தேசிய போட்டி என்பதோடு, WACS ஆல் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நடுவர் மன்றம் போட்டிகளை தீர்மானிக்கும் என்பதாகும்.

    தென்னிந்தியாவில் 3000 க்கும் மேற்பட்ட சமையல்கலைஞர்கள் மற்றும் மாலத்தீவு, மொரீஷியஸ், இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சமையல் வல்லுநர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

    மேலும்,
    சமையல் நிறுவனங்கள், ஹோட்டல்கள், பார்கள், உள்ளிட்ட நிறுவனங்களிலிருந்து மூத்த மற்றும் பயிற்சி பெற்ற சமையல் கலைஞர்கள் பங்கு கொள்ளும் இந்த ஒலிம்பியாட்டில்,
    மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கான நேரடி சமையல் சவால் போட்டிகள், எக்ஸ்க்ளூசிவ் காக்டெய்ல் மற்றும் மாக்டெய்ல் போட்டிகள், விருந்தோம்பல் தொழிலில் நிலைத்தன்மை மீது கவனம் செலுத்தும் வீட்டு பராமரிப்பு நிபுணர்களுக்கான போட்டிகள் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளன. ஒவ்வொரு நாளும் போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

  • 7th Edition of SICA Culinary Olympiad & Food Competition 2025 launched by Shri R. Rajendran, Minister For Tourism, TN alongwith Chef Damu & Chef Seetharam

    The 7th Edition of SICA Culinary Olympiad & Food Competition 2025 had a grand launch at the Chennai Trade Centre by Shri R. Rajendran Minister For Tourism, TN alongwith Chef Damu & Chef Seetharam. The Three Day event has over 3000 chefs across India & International teams from MALDIVES, MAURITIUS, SRI LANKA & AUSTRALIA participating in India’s First WACS Endorsed Culinary Competition*

    This event is on the sidelines of the regional edition of AAHAR International Food Fair 2025, Chennai. This event is supported by ITPO
    (India Trade Promotion Organization) and TNTPO (Tamil Nadu Trade Promotion
    Organization).

    As a preliminary to this, SICA has already conducted workshops on Pastry Art & Hot Plate Presentation, to impart technical knowledge to approach professional competition. Chef Dimuthu Kumarasinghe Master culinary Trainer from Chefs Guild of Lanka along with his team of 4 expat Chefs from Sri Lanka has demonstrated the art of food plating techniques .

    Senior chefs and trained chefs from Culinary establishments, hotels, bars and so on are participating in this. Besides this, there is a host of live competitions for students and chefs. There are exclusive cocktail and mocktail competitions and competitions for housekeeping too. At the end of each day winners will be awarded with gold medals.

    Below find the highlights of the First Day Live culinary Competition on 19th September 2025 .

    HIGHLIGHTS

    1)Three-tier Wedding Cake

    2)Butter/ Margarine Sculpture

    3)Plated Appetzers

    4)The Culinary Team Challenge- buffet Competition (Batch 1)

    5)The Culinary Team Challenge- buffet Competition (Batch 2)

    6)Creative Skilled Paratha -Live

    7)Best Creation for Restaurant or Banquet Hall Arrangement

    8) Authentic Indian Regional Cuisine Powered by Maggi Coconut Milk Powder

  • சமய, சமுதாயப் பணிகளைப் பாராட்டி காஞ்சி மடம் ” பாரதிய கலாச்சார சேவா மணி” என்ற விருதை ஸ்ரீ ஜெகதீஷ் கடவுள் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தது.

    தர்மத்தை நாம் காத்தால், தர்மம் நம்மை காக்கும் என்பது வேத வாக்கியம், ‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு’ என்பார் வள்ளுவர். அந்த வகையில் பாரம்பரியமான ஸ்வர்ண கலைநயமிக்க நகை வியாபாரம் செய்யும் குடும்பத்தில் பிறந்து, வறியவர்க்கு ஈதல் வேண்டும், அதனால் புகழ் ஈட்டலே சிறப்பு என்ற உயரிய நோக்குடன் செயல்பட்டுவருபவர் ஸ்ரீ ஜகதீஷ் கடவுள் அவர்கள்.

    2023-ல்சென்னையில் உலக அமைதிக்காக ஆயிரக்கணக்கான ஆன்மீக அன்பர்கள்பங்கேற்ற சத்சங்கம் ஒன்றை நடத்திய பெருமைக்குரியவர். தமிழ்க் கலாச்சார அகாடமி என்ற அமைப்பைத் தோற்றுவித்து தமிழ்ப் பணிகளையும்ஆற்றிவருபவர். பொதுமக்கள், குறிப்பாக, இளைஞர்கள் நல்வழிப்பாதையில் செல்வதற்கு வழிவகை செய்து வருபவர்.

    திருவண்ணாமலையில் செயல்பட்டுவரும் வேத ஆகம தேவார கலாச்சார அறக்கட்டளையின் டிரஸ்டியாக இருந்து, 2025 செப்டம்பர் 13, 14 தேதிகளில் மாபெரும் ஆன்மீக கலாச்சார மாநாட்டை தலைமை குருக்கள் டாக்டர் பி.டி. ரமேஷ் குருக்கள் மற்றும் பக்தகோடிகளுடன் ஒருங்கிணைந்து சிறப்புற நடத்தியதில் பெரும்பங்கு வகித்தவர்.

    அவரது சமய, சமுதாயப் பணிகளைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில்,ஸ்ரீ ஜெகதீஷ் கடவுள் அவர்களுக்கு பாரதிய கலாச்சார சேவா மணி என்னும் விருதும், இளவரசு பட்டம் பி.டி.ரமேஷ் அவர்களுக்கு ஆலய ஆகம அறப்பணி செம்மல் என்ற விருதும் திருவண்ணாமலையில் சமீபத்தில் நடைபெற்ற வேத ஆகம தேவார சமய கலாச்சார மாநாட்டில் இந்து சமய மன்றம் சார்பில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் வழங்கினார்.

  • The Kanchi Kamakoti felicitates Sri Jagadish Kadavul as “Bharatiya Kalachara Seva Mani” in honor of his religious and social activities

    The Vedic sentence,If we preseve the Dharma, the Dharma will preserve us, and No greater income in life than to live with fame That comes out of charity in Thirukkural.

    In that way, Sri. Jagadish Kadavul is the one who is born in a traditional Swarna Artistic jewellry business and a visionary Person to serve the underprivileged is the highest value of fame.

    In Chennai 2023, He is proud to hold a Satsangam for thousands of spiritual lovers for world peace. He is the founder of the Tamil Cultural Academy and preserves Tamil culture. He guides the public, especially the youth, for making a way to go on the path of goodwill.

    He is the Trustee and Chief Organiser for Veda Agama Thevara Spiritual Cultural Conference held at Thiruvannamalai on 13 th & 14th September 2025 in the presence of Ilavarasu Pattam Dr. P. T. Ramesh Gurukkal, Arulmigu Arunachaleswarar Temple, Thiruvannamalai along with them more than one lakh devotees attended the gatherings which was a huge success & appreciated by all Sivacharyars, Gurus, spiritual leaders, Sevvaadai volunteers, and representatives of all communities.

    On behalf of the Hindu Religious Forum, Sri Kanchi Kamakoti Peedathipathi Jagadguru Sri Sankara Vijayendra Saraswati Sankaracharya Swamigal presented a award to SriJagadish Kadaval as “Bharatiya Kalachara Seva Mani” in honor of his religious and social activities, and the Ilavarasu Pattam PT Ramesh awarded “Alaya Agama Arappani Semmal” at the Veda Agama Thevara Spiritual Cultural Conference held at Thiruvannamalai.