Author: admin

  • 71 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் தமிழ் சினிமா கெளரவப்படுத்தப்பட்டுள்ளது

    !

    வெவ்வேறு கலைகள், வெவ்வேறு மொழிகள், ஒரே பெயர் சினிமா!

    71 ஆவது தேசிய விருதுகள் விழாவில் நடிகர்கள், தொழில்நுட்பக்குழுவினர்கள் எனப் பல பிரிவுகளில் உள்ள பலரும் தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தும் விதமாக அங்கு ஒன்றிணைந்து விருதுகள் பெற்றனர்.

    தேசிய விருதுகள் விழாவில் தமிழ் சினிமாவில் இருந்து அங்கீகாரம் பெற்றவர்கள்:

    • ஜிவி பிரகாஷ் குமார்- ‘வாத்தி’ படத்திற்காக (தெகுங்கு),
    • கே. எஸ். சினீஷ்- சிறந்த பிராந்திய மொழி தயாரிப்பாளர் ‘பார்க்கிங்’ படத்திற்காக (தமிழ்),
    • எம்.எஸ். பாஸ்கர் – சிறந்த துணை நடிகர் ‘பார்க்கிங்’ படத்திற்காக,
    • ராம்குமார் பாலகிருஷ்ணன்- சிறந்த ஒரிஜினல் திரைக்கதை ‘பார்க்கிங்’ படத்திற்காக,
    • ராஜகிருஷ்ணன்- சிறந்த ஆடியோகிராஃபி (ரீ-ரெக்கார்டிங்) ‘அனிமல்’ படத்திற்காக,
    • சச்சின் சுதாகரன், ஹரிஹரன் முரளிதரன் – சிறந்த ஒலி வடிவமைப்பு ‘அனிமல்’ படத்திற்காக,

    இந்தப் பட்டியல் தமிழ் சினிமாவின் வளர்ச்சியையும் இந்திய சினிமாவில் தமிழ் சினிமா கலைஞர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. மேலும், தமிழ் சினிமா வெற்றியாளர்கள் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்து பகிர்ந்திருப்பதும் அவர்கள் ஒற்றுமையை காட்டுகிறது. தங்களின் சினிமா பயணத்தில் இதனை பெருமைமிகு தருணமாக கொண்டாடுகிறார்கள்.

    அதுமட்டுமல்லாது, ‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்ற நடிகர் மோகன்லால் அவர்களுக்கும் தமிழ் சினிமா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

  • எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘கார்மேனி’ இன்று வெளியீடு

    பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் ‘கார்மேனி செல்வம்’ குடும்பத் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று (செப்டம்பர் 24) மாலை 5.55 மணிக்கு வெளியானது. நாயகன் செல்வத்தின் மனதை பிரதிபலிக்கும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது.

    உணர்ச்சிப்பூர்வமான ‘கார்மேனி’ பாடல் செல்வத்தின் வாழ்க்கையின் சாரத்தையும் அவரது ஆசைகளையும் உள்ளடக்கிய ஒரு நெகிழ்ச்சியான பாடலாகும். செல்வத்தின் பார்வையில் இருந்து எழுதப்பட்டுள்ள‌ பாடல் வரிகள், ஒரு டாக்ஸி ஓட்டுநராக அவரது நேர்மையான போராட்டங்கள், அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் பாலுவுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்கான அவரது கனவுகள் மற்றும் “நேர்மை EMI-களுக்கு பணம் செலுத்தாது” என்ற அனுபவம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்துகிறது. அவரது வாழ்க்கையின் அன்றாட சூழ்நிலையை பிரதிபலிக்கும் வகையில் பாடல் அமைந்துள்ளது.

    “பேராசை பட்டா தன் இறைவன் தருவான்” என்ற வரி இந்தப் பாடலின் மையக் கருவோடு ஒன்றியுள்ளது. தனது கொள்கைகளைக் கைவிட்டு, செல்வத்தை மாற்றுப் பாதையில் செல்லத் தூண்டும் தார்மீக சங்கடத்தை இது படம்பிடிக்கிறது. ‘எப்போ வருவாயோ’ என்ற‌ ஏக்கம் மிக்க வரி, குடும்பத்திற்காக தனது கணவர் எல்லாவற்றையும் விட்டுக்கொடுப்பதைப் பார்க்கும் ஒவ்வொரு மனைவியின் சொல்லப்படாத வலியைப் படம்பிடிக்கிறது.

    படம் பற்றி: கார்மேனி செல்வம் என்பது ஒரு ஆழமான சமூகத் திரைப்படம் ஆகும். கடமைக்கும் ஆசைக்கும் இடையிலான இடைவெளியை, நேர்மை மற்றும் விரக்திக்கு இடையிலான இடைவெளியை இது ஆராய்கிறது. செல்வம் என்ற நேர்மையான‌ கொள்கைமிக்க‌ கார் ஓட்டுநரை பற்றிய இந்த படம், திடீர் குடும்ப அவசரநிலை அவரை எந்த எல்லைக்கு தள்ளுகிறது என்பதை திரையில் காட்டும். காதல் மற்றும் உயிர்வாழ்தலில் உண்மையான அர்த்தத்தை செல்வமும் அவரது மனைவையும் எவ்வாறு புரிந்து கொண்டனர் என்பதை இது விவரிக்கிறது.

    சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியா சந்திரமௌலியும் கௌதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி பாராட்டுதல்களை பெற்றது.

    இயக்குந‌ர் ராம் சக்ரி கூறுகையில், “நேர்மையான, உண்மையான மற்றும் உலகளவில் தொடர்புபடுத்தக்கூடிய ஒரு கதையை ‘கார்மேனி செல்வம்’ படத்தின் மூலமாக‌ சொல்வதே எங்கள் நோக்கம் ஆகும். சாதாரண மக்களின் ஆசைகள் மற்றும் போராட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் டீசரில் உள்ள ஒவ்வொரு ஃபிரேமும், ஒவ்வொரு வசனமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘கார்மேனி’ பாடல் படத்தின் ஆன்மாவாக அமைந்துள்ளது. பார்வையாளர்கள் இதை வரவேற்பார்கள் என நம்புகிறோம்,” என்றார்.

    பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசர் ஶ்ரீ சரவணன் ஆவார், யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் இசையை மியூசிக் கிளவுட் ஸ்டூடியோ & டெக்னாலஜி எனும் நிறுவனம் அமைத்துள்ளது. ஜெகன் ஆர்.வி. மற்றும் தினேஷ் எஸ் படத்தொகுப்பை கையாண்டுள்ளனர். தயாரிப்பு வடிவமைப்பை ஷங்கர் கவனிக்க, மணி அமுதவன் பாடல்களை எழுத, ராகவ் ரமேஷ் ஆடியோகிரபியையும், ராகவ் ரமேஷ் மற்றும் ஹரி பிரசாத் எம்.ஏ ஒலி வடிவமைப்பையும் கையாண்டுள்ளனர். நிர்வாக மேலாளர்: மணி தாமோதரன், தயாரிப்பு மேலாளர்: வி.ஆர். ராம்பரத்.

    பாடல் விவரங்கள்:

    • பாடலின் பெயர்: கார்மெனி
    • பாடகர்கள்: குல்ஸ், ஸ்ரேயா ஸ்ரீரங்கா
    • ராப் பாடல் வரிகள்: குல்ஸ்
    • எப்போ வருவாயோ: மணி அமுதவானன்
    • சிதார்: பூர்பயன் சாட்டர்ஜி
    • இசையமைப்பாளர்: ராமானுஜன் எம்.கே
    • இசை புரோகிராமிங்க்: ஜீவன் டி ஜாய்
    • மியூசிக் அரேஞ்ச்மென்ட்ஸ்: ஜீவன் டி ஜாய், ஹிருதய் கோஸ்வாமி & ராமானுஜன் எம்.கே
    • மிக்ஸ் & மாஸ்டரிங்: ஹிருதய் கோஸ்வாமி, எக்ஸ்-நாய்ஸ் ஸ்டுடியோ, கவுகாத்தி
    • ரெக்கார்டிங் ஸ்டுடியோக்கள்: 20டிபி சவுண்ட் ஸ்டுடியோஸ் & மியூசிக்லவுட்ஸ்டுடியோ & டெக்னாலஜி,
    • ஒலி பொறியாளர்கள்: ஹரிஹரன், மணிகண்டன் என்

    “கார்மெனி” பாடல் இன்று, செப்டம்பர் 24, 2025 அன்று மாலை 5:55 மணி முதல் ஸ்பாட்டிஃபை, ஆப்பிள் மியூசிக், யூடியூப் மியூசிக், ஜியோசாவன் மற்றும் அமேசான் மியூசிக் உள்ளிட்ட அனைத்து முக்கிய இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் கிடைக்கும்.

    Spotify
    https://open.spotify.com/track/095OrgkIpAm6Gjem3jNZLr?si=r24IiFYcRGOI_gXpjBbPtw&nd=1&dlsi=e4bfd849439e451b
    Jio Saavan
    https://www.jiosaavn.com/p/song/search/Carmeni-Selvam/Carmeni/AxkBRDFgfnY?referrer=utm_medium=whatsapp&utm_source=whatsapp
    Youtube Music https://music.youtube.com/watch?v=qMc4ImWskQM&si=sZQ84FZFDE5NMoCI
    Apple Music – https://music.apple.com/in/album/carmeni-selvam-single/1841244776
    Gaana – https://gaana.com/song/carmeni

    Follow Carmeni Selvam on Social Media:
    Instagram: @pathwaycinematics
    Facebook: @pathwaycinematics
    Twitter: @pathwaycinemas

  • KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

    KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைந்து தயாரிக்க, கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் “Production No.5” அதிகாரப்பூர்வமாக இன்று தொடங்கியது. இப்படத்தை அறிமுக இயக்குனர் சின்னசாமி பொன்னையா இயக்குகிறார்,யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் துவங்கி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி மற்றும் காஷ்மீர் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

    தொடர்ந்து தனது நிறுவனத்தின் மூலம், பல திறமையாளர்களுக்கு வாய்பளித்து, வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் Production No.5 திரைப்படமான இப்படம் மிகப் பிரமாண்டமான பொருட்ச் செலவில் தயாரிக்கப்படுகிறது.

    மேலும், இதற்கு முன்னதாக பிரபுதேவா – வடிவேலு – யுவன் சங்கர் ராஜா கூட்டணியை அறிவித்து பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    படம் குறித்த விரிவான அறிவிப்புகள் – கதாநாயகி, முக்கிய நடிகர்கள் பட்டியல், தொழில்நுட்பக் குழுவின் முழுமையான விவரங்கள் மற்றும் கதை தொடர்பான சுவாரஸ்யங்கள் – விரைவில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது

    Grand New Film from Producer KRG Kannan Ravi Featuring Gautham Ram Karthik Officially Launched

    Producer KRG Kannan Ravi, who has consistently made headlines with his prestigious & promising ventures , has now embarked upon his latest project.

    Tentatively titled “Production No.5”, the film is produced on a lavish scale in association with Deepak Ravi and features Gautham Ram Karthik in the lead. The project marks the directorial debut of Chinnasamy Ponnaiya, with music composed by the musical icon Yuvan Shankar Raja.

    Filming commenced in Kovilpatti and will unfold across an array of exotic landscapes, including Thoothukudi, Tirunelveli, Tenkasi, Theni, Pollachi, and Kashmir.

    True to his vision of nurturing fresh talent and presenting distinctive narratives, Kannan Ravi, together with Deepak Ravi, mounts this production with exceptional scale and high artistic values.

    It is worth noting that the production house recently created considerable anticipation by announcing another compelling collaboration, bringing together Prabhudheva – Vadivelu – Yuvan Shankar Raja.

    Further announcements regarding the female lead, star cast, technical crew, and Interesting facts about the projects will be unveiled in due course.

  • ஹொம்பாலே பிலிம்ஸ் வழங்கும், ரிஷப் ஷெட்டி நடிப்பில் ‘காந்தாரா: சேப்டர் 1’ டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார் ! !

    இந்த வருடத்தின் மிகப்பெரிய அறிவிப்பு இதோ வந்துவிட்டது! ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கும், காந்தாரா: சேப்டர் 1 திரைப்படத்தின் டிரெய்லர், தற்போது வெளிவந்துள்ளது!.

    இப்படத்தின் தமிழ் டிரெய்லரை முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    2022-ல் வெளியான காந்தாரா திரைப்படம் பெரும் வெற்றியடைந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவாகும் காந்தாரா: சேப்டர் 1 படத்தின் மீது பொதுவாகவே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், தயாரிப்பாளர்கள் மக்களை மகிழ்விக்கும் வகையில், படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர், இது 2025-இல் திரைத்துறையின் முக்கிய தருணங்களில் ஒன்றாகும்.

    ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் காந்தாரா: சேப்டர் 1, இந்த வருடத்தின் மிக எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். இது ஒரு பான்-இந்தியா திரைப்படமாக பரவலாக பேசப்படுகின்றது, இப்படம் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்கள் படத்திற்காக பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். அவர்களை மகிழ்விக்கும் விதமாக டிரெய்லர் தற்போது வெளிவந்துவிட்டது.

    இப்படத்தின் தமிழ் பதிப்பின் டிரெய்லரை முன்னனி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன்
    தனது டிவிட்டர் பக்கத்தில் டிரெய்லரை பகிர்ந்து…

    ஒரு நாட்டுப்புறக் கதையும், நம்பிக்கையின் பேரொளியும் – தீவும் வேகமும் சங்கமிக்கும் அற்புதம்.

    KantaraChapter1 தமிழ் டிரைலரை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன்

    சினிமா ரசிகர்களுக்கு இயற்கையோடு இணைந்த தனித்துவமான அனுபவம்.

    @shetty_rishab, @rukminitweets மற்றும் @hombalefilms குழுவிற்கு மிகப்பெரிய வெற்றிக்காக வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.

    டிரெய்லரில் திரைப்படம் பற்றிய பல விஷயங்களை தெரியப்படுத்தவில்லை, ஆனால் அதில் ஒரு விதமான மர்மம் மற்றும் சுவாரஸ்யமும் கலந்துள்ளது. முந்தைய படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் கதை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

    காந்தாரா: சேப்டர் 1 ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றாகும். இசையமைப்பாளர் B. அஜனீஷ் லோக்நாத், ஒளிப்பதிவாளர் அரவிந்த் காஷ்யப், தயாரிப்பு வடிவமைப்பாளர் வினேஷ் பங்க்லன் ஆகியோரின் கலைநயமான திறமையில் திரைப்படத்தின் காட்சி மற்றும் உணர்ச்சி அனுபவம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

    ஹொம்பாலே பிலிம்ஸ் முன்னெடுப்பில் 2022 படத்தின் பாரம்பரியத்தை தொடரும் வகையில் காந்தாரா: சேப்டர் 1-ல் ஒரு மிகப்பெரிய போர் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள், 500க்கும் மேற்பட்ட திறமையான போர் கலைஞர்கள் மற்றும் 3,000 துணை நடிகர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த காட்சி 25 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு நகரில் 45–50 நாட்களுக்கு படமாக்கப்பட்டது. இது இந்திய சினிமாவின் வரலாற்றில் மிகப்பெரிய காட்சிகளில் ஒன்றாகும்.

    இப்படம் அக்டோபர் 2 அன்று உலகளாவிய வெளியீடாக, கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ், பெங்காலி மற்றும் ஆங்கிலத்தில் என, அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை கவரும் முயற்சியுடன் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

    காந்தாரா: சேப்டர் 1 மூலம் ஹொம்பாலே பிலிம்ஸ் இந்திய சினிமாவின் எல்லைகளை மேலும் விரிவுபடுத்துகிறது, பாரம்பரியக் கதை, நம்பிக்கை மற்றும் கலைப்பூர்வமான அனுபவங்களை கொண்டுவரும் ஒரு ஆழமான காட்சி அனுபவத்தை இப்படத்தில் வழங்கவுள்ளது.

    link : https://www.youtube.com/watch?v=gKJMgeEvSyE

  • “ஜவான்” படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றார் நடிகர் ஷாரூக்கான்!!

    “ஜவான்” படத்தில் நடித்ததற்காக தேசிய விருதில், சிறந்த நடிகர் விருது பெற்றார் நடிகர் ஷாரூக் கான்!!

    30 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரை வாழ்க்கையில், முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !!

    பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், தனது 2023 வெளியீடான “ஜவான்” திரைப்படத்திற்காக, நாட்டின் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றான தேசிய விருதில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக திரை உலகில் சாதனை படைத்துவரும் ஷாரூக், தனது முதலாவது தேசிய விருதை இப்போது வென்றிருப்பது, அவரது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக, மிகப்பெரும் கௌரமாக அமைந்துள்ளது.

    “ஜவான்” படத்தில் தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 71வது தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ஷாரூக்கான், ஜவான் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். ஆக்சன் காட்சிகளிலிருந்து உணர்ச்சிபூர்வமான நடிப்புவரை, பல்வேறு விதமான வேடங்களில் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்திய ஷாரூக், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் மனதையும் கவர்ந்திழுத்துள்ளார். இவ்விருது அவரது திரைப்பயணத்திற்கு மிக உரிய பெருமையாகும்.

    சமீபத்தில், தனது மகன் ஆர்யன் கானின் இயக்கிய அறிமுகப்படைப்பு The Ba***ds of Bollywood சீரிஸில், சிறப்பு தோற்றத்தில் நடித்தார் ஷாரூக்கான். அடுத்ததாக, சித்தார்த் ஆனந்த் இயக்கும் King திரைப்படத்தில் மகள் சுஹானாகானுடன் இணைந்து நடிக்க உள்ளார். 2026-இல் வெளியாகவுள்ள இந்தப் படத்தில், ஷாரூக்கான் மற்றும் தீபிகா படுகோனே இணையும் காட்சிகளும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் தேசியவிருது பெற்றதை, ரசிகர்கள் மிக உற்சாகமான கொண்டாடி வருகின்றனர்.

    Shah Rukh Khan Receives National Award for Best Actor in Jawan from the President of India, Droupadi Murmu

    Shah Rukh Khan Collects Best Actor National Award for His Performance in Jawan

    After More Than 30 Years of his Career, Shah Rukh Receives First National Award for Best Actor in Jawan

    Bollywood superstar Shah Rukh Khan has won the nation’s most prestigious National Award in the best actor category for his 2023 release Jawan. With a career spanning more than thirty years, Shah Rukh has finally achieved a long-awaited milestone by winning his first National Award for Jawan, also starring Deepika Padukone, Vijay Sethupathi, and Nayanthara in pivotal roles.

    Shah Rukh Khan attended the 71st National Awards in New Delhi to receive the Best Actor award, marking a historic moment in his illustrious career. His performance in Jawan was widely appreciated by audiences and critics. From performing breathtaking stunts to showcasing his impeccable acting range and mesmerizing charm, Shah Rukh delivered a performance that captivated millions. This recognition stands as a truly well-deserved honor for the superstar.

    Talking about his recent work, Shah Rukh Khan made a special appearance in his son Aryan Khan’s debut directorial, The Ba***ds of Bollywood, which created much buzz among fans. Up next, the superstar is gearing up for his highly anticipated film King, directed by Siddharth Anand. King also stars his daughter Suhana Khan, and is slated for a 2026 release. The film will also mark yet another exciting reunion between Shah Rukh Khan and Deepika Padukone. Currently shooting with Deepika, Shah Rukh’s upcoming project has already built massive anticipation.

  • காந்தாரா” படத்தின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில், தபால் துறை அஞ்சல் அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது!!

    இந்திய தபால் துறை மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு கவர், பட அஞ்சல் அட்டைகள் & கேன்சலேஷன் ஸ்டாம்ப் வெளியிட்டு கௌரவித்துள்ளன!!

    இந்தியா தபால்துறை, கர்நாடக அஞ்சல் வட்டாரம், ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து, கர்நாடகாவின் செழுமையான பாரம்பரிய கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில், ஒரு சிறப்பு கவர், இரண்டு பட அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்பை வெளியிட்டுள்ளது. தேசிய விருது பெற்ற காந்தாரா திரைப்படத்தில் வலிமையாக வெளிப்பட்ட புனிதமான பூதகோலா மரபை, இந்த வெளியீடு சிறப்பித்துள்ளது.

    செப்டம்பர் 22-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊடகத்தினரும் கர்நாடக அஞ்சல் வட்டார பிரதிநிதிகளும் பங்கேற்றனர். காந்தாரா படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி, கர்நாடக அஞ்சல் வட்டாரத்தின் இயக்குநர் (முகாம்) ஸ்ரீ சந்தேஷ் மகாதேவப்பா, பெங்களூரு GPO முதன்மை அஞ்சல் மாஸ்டர் ஸ்ரீ H.M. மஞ்சேஷா, ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பாளர் விஜய் கிராகந்தூர் ஆகியோர் இணைந்து இந்த சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டனர்.

    பூதகோலா காட்சியுடன் வடிவமைக்கப்பட்ட கேன்சலேஷன் ஸ்டாம்ப், சேகரிப்பதற்குரிய அரிய வெளியீடாகவும், கர்நாடகாவின் வாழும் மரபுகளை பிரதிபலிக்கும் பெருமையான நினைவுச் சின்னமாகவும் அமைந்துள்ளது.

    இந்நிகழ்வில் பேசிய ரிஷப் ஷெட்டி, “காந்தாரா எங்கள் மரபின் வேர்களையும் வழிபாடுகளையும் கொண்டாடும் விதமாக உருவாக்கப்பட்டது. இந்திய தபால் துறை இந்த பயணத்தை சிறப்பு கவர் மற்றும் அஞ்சல் அட்டைகள் மூலம் கௌரப்படுத்தியுள்ளது என்பது பெருமை. இது படத்திற்கான அங்கீகாரம் மட்டுமல்ல, நம் மண்ணின் கலாச்சாரம் மற்றும் மக்களுக்கான அங்கீகாரமும் ஆகும்” என்றார்.

    சிறப்பு அங்கீகாரமாக, “காயகவே கைலாச” என்ற சொற்றொடரை ரிஷப் ஷெட்டி ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி கையெழுத்திட்டார். உழைப்பின் புனிதத்தையும் பக்தியையும் பிரதிபலிக்கும் இந்த நிலையான தத்துவம் காந்தாரா படத்தின் கதையிலும் பிரதிபலிக்கிறது.

    தயாரிப்பாளர் விஜய் கிராகந்தூர், “இந்திய தபால் துறையில் இந்த அங்கீகாரம் படத்திற்கும் மட்டுமல்ல, கர்நாடகாவின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்திற்கும் ஒரு பெரிய கௌரவம். இது எங்களுக்கெல்லாம் மிகவும் பெருமையான தருணம். இப்படியான முயற்சிகள் எங்கள் பாரம்பரியத்தைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல உதவும். காந்தாரா எங்கள் வேர்களை இவ்வளவு பெருமைக்குரிய மேடையில் வெளிப்படுத்தும் ஊடகமாக மாறியது எங்களை மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது” என்றார்.

    சிறப்பு கவர், அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்ப் ஆகியவை, மனிதன், இயற்கை மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் ஆழ்ந்த ஆன்மீக இணைப்பை வெளிப்படுத்திய காந்தாரா படத்திற்கான ஒரு அஞ்சலியாகும். இந்த முயற்சியின் மூலம், இந்தியா தபால் துறை மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ், கர்நாடகாவின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தவும், ஒற்றுமை, நம்பிக்கை, கலாச்சார மரியாதை போன்ற காலத்தால் அழியாத மதிப்புகளை மக்களிடம் நினைவூட்டவும் முன்னெடுத்து சிறப்பித்துள்ளன.

    இந்த வெளியீடு, இந்தியா தபால் துறை பாரம்பரியத்தையும், காந்தாரா படத்தின் சினிமா பாரம்பரியத்தையும் இணைக்கும் பெருமையான தருணமாகும். கலாச்சாரத்தையும் சமூகத்தையும் இணைக்கும் காலத்தால் அழிக்க முடியாத நம் வேர்களை கௌரவிக்கும் அடையாள முயற்சியாக இது திகழ்கிறது.

    India Post and Hombale Films Honour the Legacy of Kantara with Special Cover, Picture Postcards & Cancellation Stamp

    Bengaluru, 23rd September 2025 – India Post, Karnataka Postal Circle, in association with Hombale Films, proudly released a Special Cover, a set of two Picture Postcards, and a Cancellation Stamp celebrating the vibrant cultural heritage of Karnataka. The release highlights the sacred Bootha Kola ritual, as powerfully depicted in the National Award-winning film Kantara.

    The event, held in Bengaluru on 22nd September, was graced by members of the media and representatives of the Karnataka Circle. The unveiling was done by Kantara’s writer, director and actor Rishab Shetty, Sri Sandesh Mahadevappa, Director Postal Services (HQ), Karnataka Postal Circle,Sri H M Manjesha, Chief Postmaster, Bengaluru GPO and Producer Vijay Kiragandur of Hombale Films.

    The specially designed Cancellation Stamp, featuring the image of Bootha Kola, added another layer of honour to the release, making it a true collector’s edition that reflects Karnataka’s living traditions.

    Speaking on the occasion, Rishab Shetty shared, “Kantara was created as a celebration of our roots and rituals. To see India Post immortalize this journey through a Special Cover and postcards is truly an honour. It is a recognition not just for the film, but for the culture and the people who inspired it.”

    As a special gesture, Rishab Shetty also autographed one of the Picture Postcards with the words ‘Kayakave Kailasa’ – a timeless philosophy that echoes through Kantara’s narrative, symbolising the sanctity of labour and devotion.
    Producer Vijay Kiragandur said, “This recognition from India Post is a great honour, not only for the film but also for Karnataka’s rich cultural traditions. It is a proud moment for all of us at Hombale Films. Such initiatives help preserve our heritage and pass it on to future generations. We are humbled that Kantara has become a medium to showcase our roots on such a prestigious platform.”

    The Special Cover, Picture Postcards, and Cancellation Stamp together stand as a tribute to Kantara’s portrayal of the deep spiritual connection between man, nature, and tradition. Through this initiative, India Post and Hombale Films aim to preserve and showcase Karnataka’s heritage, reminding us of timeless values of harmony, faith, and reverence for culture.

    The release is a proud moment for the Karnataka Postal Circle and Hombale Films, blending the legacy of India Post with the cinematic legacy of Kantara. It stands as a symbolic gesture of honouring tradition, art, and the eternal bond between culture and community.

  • சினிமா துறையின் மக்கள் தொடர்பாளர் “நிகில் முருகன்”தமிழ்நாடு அரசின் பெருமைமிகு விருதான கலைமாமணி விருது!!!!

    தமிழ்நாடு அரசின் பெருமைமிகு விருதான கலைமாமணி விருதுக்கு என்னை “சினிமா துறையின் மக்கள் தொடர்பாளர் (நிகில் முருகன்) ”

    தேர்வு செய்ததற்காக மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு மு.பெ. சாமிநாதன் அவர்களுக்கும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகிகள் மற்றும் தேர்வு குழு உறுப்பினர்களுக்கும், எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், என் குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட திரையுலகினருக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கலைமாமணி விருது அளிக்கும் ஊக்கத்துடன் உங்கள் அனைவருடனும் இணைந்து தொடர்ந்து பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    நன்றி…
    வணக்கம்
    நிகில் முருகன்

  • நேதாஜி புரொடக்சன்ஸ் சோழ சக்ரவர்த்தி & ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் வழங்கும், இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் ‘திரெளபதி 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

    நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டம் சிறப்பாக நடைபெறும் வேளையில், சினிமா ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு ‘திரெளபதி2’ காரணமாக அமைந்துள்ளது. மும்பையில் தொடங்கிய படப்பிடிப்பு அரியலூர் ஷெட்யூலுடன் வெற்றிகரமாக முடிந்துள்ளது. விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் அறிவிப்பில் இருந்து முதல் பார்வை போஸ்டர் வரை பிரம்மாண்டமான காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான ஹிஸ்டாரிக்கல் ஆக்‌ஷன் கதையாக படம் அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் சினிமா வட்டாரத்திலும் எழுந்துள்ளது.

    படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து மோகன் ஜி மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டதாவது, “படப்பிடிப்பு பற்றி எவ்வளவு துல்லியமாக இயக்குநர் திட்டமிட்டாலும், தயாரிப்பாளரின் ஆதரவு வலுவாக இருக்கும்போதுதான் படம் சரியாக வரும். இதற்கு தயாரிப்பாளர் சோழ சக்ரவர்த்தி சாருக்கு நன்றி. சினிமா மீதான ஆர்வம், நல்ல படங்களை ஆர்வமுடன் பார்ப்பது, சினிமா உருவாகும் முறையை புரிந்து கொள்வது என எங்களுக்குத் தேவையான அனைத்தை விஷயங்களை செய்து கொடுத்து, முழு சுதந்திரம் அளித்ததோடு, உயர்தரத்தில் படம் வரவேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார்” என்றார்.

    தயாரிப்பாளர் சோழ சக்ரவர்த்தி பகிர்ந்து கொண்டதாவது, “தொழில்முனைவராக நான் சினிமாத்துறைக்குள் நுழைந்தாலும் அதன் ஏற்ற இறக்கங்கள் பற்றியும் தெரியும். மோகன் ஜி உடன் பணிபுரிந்தது எனக்கு சிறப்பான அனுபவம். எந்தவொரு குழப்பமோ சந்தேகமோ இல்லாமல் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நிறைவடைந்தது தயாரிப்பாளராக எனக்கு பெருமகிழ்ச்சி. சினிமா மீதான நம்பிக்கையும் இன்னும் அதிகரித்துள்ளது. நடிகர் ரிச்சர்ட் ரிஷி மற்றும் ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி. இவர்கள் கொடுத்த ஆதரவு என்னை இன்னும் அதிக படங்கள் தயாரிக்க ஊக்கமளித்துள்ளது” என்றார்.

    தமிழ்- தெலுங்கு என இரு மொழிகளில் ஹிஸ்டாரிக்கல் ஆக்‌ஷன் கதையாக உருவாகியுள்ள ‘திரெளபதி 2’ படத்தை ஜி.எம். ஃபிலிம் கார்பரேஷனுடன் இணைந்து நேதாஜி புரொடக்சன்ஸ், சோழ சக்ரவர்த்தி தயாரித்துள்ளார்.

    14 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் கதையை பிரம்மாண்ட காட்சிகளுடனும் திறமையான நடிகர்களுடனும் அந்த காலத்திற்கே பார்வையாளர்களை அழைத்து செல்ல இருக்கிறது இந்தத் திரைப்படம். போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், டிசம்பர் மாதம் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளை படக்குழு விரைவில் தொடங்க உள்ளது.

    நடிகர்கள்: ரிச்சர்ட் ரிஷி, ரக்‌ஷனா இந்துசுதன், நட்டி நடராஜ், Y.G. மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கெளராங், திவி, தேவயாணி ஷர்மா மற்றும் அருணோதயன்.

    தொழில்நுட்பக்குழு விவரம்:

    எழுத்து, இயக்கம்: மோகன் ஜி,
    வசனம்: பத்மா சந்திரசேகர் மற்றும் மோகன் ஜி,
    இசை: ஜிப்ரான் வைபோதா,
    ஒளிப்பதிவு: பிலிப் ஆர். சுந்தர்,
    நடனம்: தனிகா டோனி,
    சண்டைப்பயிற்சி: ஆக்‌ஷன் சந்தோஷ்,
    படத்தொகுப்பு: தேவராஜ்,
    கலை இயக்கம்: கமலநாதன்.

  • Netaji Productions Chola Shakkaravarthi & G.M. Film Corporation present

    Filmmaker Mohan G Directorial

    Richard Rishi starrer “Draupathi 2” shooting wrapped up!|

    As the nation celebrates Navaratri, fans of historical cinema have reason to rejoice: the makers of much-anticipated Draupathi 2, the title based on the religiously celebrated and worshipped entity, have a good news to share. The team that kick-started the shooting in Mumbai has successfully wrapped up the entire filming with Ariyallur schedule. The film is directed by critically-acclaimed filmmaker Mohan G, featuring Richard Rishi in the lead role. Right from the film’s announcement and dashing the first look poster that gave a promising impression about this film being created as a visually grand and emotionally compelling historical drama, the expectations sky-rocketed among the cinephiles and industry.

    Sharing the good news on completing the shoot, Director Mohan G states, “No matter how meticulously a director plans, the execution ultimately depends on the strong support of the producer, particularly for logistical challenges. Although this marks the maiden production of Chola Shakkaravarthi sir, his insatiable passion for cinema and prior experience of watching more films, and understanding the art and the creation process, ensured that we upheld the highest standards of quality and creative freedom throughout.”

    Producer Chola Shakkaravarthi says, ”As an entrepreneur entering the film industry, I was conscious of its unpredictable nature of showbiz. However, working alongside Mohan G and his meticulously structured approach impressed me greatly. The shooting was completed ahead of schedule, and he has been a producer’s delight in clearing off my doubts of cloudiness and dilemma, by assuring that cinema industry is a good place to stay back and explore the dreams. My humble thanks to actor Richard Rishi and the whole team for being an immense support. Their unconditional support has reinvigorated my enthusiasm and strengthened my resolve to produce more films of this calibre.”

    Draupathi 2, a Tamil-Telugu bilingual historical action drama, is being produced by Chola Shakkaravarthi of Netaji Productions in association with G.M Film Corporation.

    While Rakshana Indusudan plays the female lead, Natti Natraj plays a significant role. The film also features Y. G. Mahendran, Nadodigal Barani, Saravana Subbiah, Vel Ramamoorthy, Siraj Johnny, Dinesh Lamba, Ganesh Gaurang, Divi, Devayani Sharma, and Arunodayan.

    The dialogues for the film are jointly written by writer Padma Chandrasekhar and Mohan G. Music is composed by Ghibran Vaibodha. Cinematography is handled by Philip R. Sundar, choreography by Thanika Tony, stunt coordination by Action Santosh, editing by Devaraj, and art direction by Kamalnathan.

    The project’s completion marks a significant milestone, heralding a film that promises to transport audiences to the grandeur of 14th-century South India with compelling storytelling, striking visuals, and a stellar ensemble cast. With the postproduction work briskly progressing, the makers will be soon releasing the promotional posters that could head the film towards the December release.

  • திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழா என்கிற அளவுக்கு மாபெரும் வெற்றி படைப்பாக படையாண்ட மாவீரா,

    மக்களையும் திரைப்பட ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருக்கிற படையாண்ட மாவீரா திரைப்படத்தின் விமர்சனங்கள் திறனாய்வுகள் அனைத்திலும் எனது வசனத்தை குறிப்பிட்டு பாராட்டுகிற உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி

    திரையரங்குகளில் எல்லாம் மக்கள் பேராதரவை தந்து கொண்டிருக்கிறார்கள்..

    பல இடங்களில் உற்சாகமாக கைத்தட்டி ஆரவாரம் செய்து வரவேற்று வாழ்த்துகிறார்கள்.

    தமிழர்கள்,மற்றும்
    திரைக்கலை ரசிகர்கள் அனைவருக்குமான
    இந்த திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த மகத்தான பணியை செய்யும் உங்கள் அனைவருக்கும் படையாண்ட மாவீரா வசனகர்த்தா ஆகிய எனது சார்பிலும் படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரின் சார்பிலும் மனம் நிறைந்த நன்றி.

    அன்புடன்
    பாலமுரளி வர்மன்