ஜீ5 தனது வித்தியாசமான படைப்புகளால், தொடர்ந்து ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறது

ZEE5 in Anantham” and “Kaarmegam” become widely spoken web series in Tamil.

ஜீ5 அதன் தனித்துவமான கவர்ச்சிமிகு ஒரிஜினல்கள் மூலம் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. கச்சிதமான உருவாக்கத்தில், சிறந்த உள்ளடக்கத்துடன் கூடிய தரமான படைப்புகளை தொடர்ந்து வழங்குவதில் சிறந்த தளமாக ஜீ5 இயங்கி வருகிறது. தர்புகா சிவாவின் ‘முதல் நீ முடிவும் நீ’ மற்றும் IMDb இன் ‘டாப் தமிழ் வெப் சீரிஸ்’ பட்டியலில் இடம் பெற்ற 7-எபிசோட் கொண்ட தொடரான, நடிகர் விமல் நடித்த “விலங்கு” ஆகியவற்றின் மாபெரும் வெற்றிகளுடன், ஓடிடி இயங்குதளத்தின் இலக்கணமாக, அடையாளமாக ஜீ5 புகழ் பெற்றுள்ளது. இத்தளத்தின் சமீபத்திய வெளியீடுகளான ஏப்ரல் 2022 இல் பிரீமியர் செய்யப்பட்ட ‘அனந்தம்’ மற்றும் ‘கார்மேகம்’ வெளியான நாளிலிருந்தே பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இயக்குனர் ப்ரியாவின் அனந்தம் அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் விருப்பமிகு தொடராக மாறியுள்ளது, பார்வையாளர்கள் இதன் சென்டிமென்ட் கலந்த உணர்வுபூர்வமான கதையினை கொண்டாடி வருகிறார்கள். உண்மையில், எண்ணற்ற நினைவுகளை, ஞாபகங்களை ஒருங்கிணைக்கும் ஒவ்வொரு வீட்டையும் போற்றும் ஒரு அஞ்சலியாகப் இத்தொடர் பாராட்டப்பட்டு வருகிறது. நன்கு எழுதப்பட்ட கதாபாத்திரங்கள், வித்தியாசமான உணர்வுகளுடன் கதைசொல்லலில் யதார்த்தமான அணுகுமுறை, நடிகர்களின் அட்டகாசமான நடிப்பு என இத்தொடரின் அனைத்து அம்சங்களும் அபரிமிதமான வெற்றியைப் பெற்றுள்ளன. பிரகாஷ் ராஜ், சம்பத், ஜான் விஜய், சம்யுக்தா, லட்சுமி கோபாலசாமி மற்றும் பிற நடிகர்களின் அட்டகாசமான இதயத்தை கவர்ந்திழுக்கும் நடிப்பு, இந்த ஒரிஜினல் தொடருக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

இத்தொடர் தவிர, ‘கார்மேகம்’ தொடர், ராதிகா சரத்குமாரின் அசத்தலான நடிப்பு, ரசிகர்களை ஈர்க்கும் உணர்வுப்பூர்வமான கதை, பரபர திரைக்கதை, பிரமாதமான உருவாக்கம் என பல காரணங்களுக்காக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

ஜீ5 இந்த இணையத் தொடர்களின் வெற்றியின் மூலம் ஹாட்ரிக் சாதனையைப் படைத்துள்ளது, இது தமிழ் இணைய தொடர்களின் களத்தில் இதுவரை கண்டிராத காட்சியாகும். ரசிகர்களின் இத்தகைய நம்பமுடியாத அற்புதமான வரவேற்பை தொடர்ந்து, ஜீ5 அதன் பார்வையாளர்களுக்கு உண்மையான மற்றும் ஈர்க்கும் உள்ளடக்கத்தை, தொடர்ந்து வழங்குவதாக உறுதியத்துள்ளது. ஜீ5 தளத்தின் அடுத்த கட்ட புதிய வரவுகள் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.