Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Boom-Boom-Kaalai-movie-review-indiastarsnow.com

பூம் பூம் காளை திரைவிமர்சனம்

Posted on March 15, 2021

Boom-Boom-Kaalai-movie-review-indiastarsnow.comயகன் கெவின் – நாயகி சாரா இருவருக்கும் திருமணம் ஆகிறது. இருவரும் தேனிலவிற்காக ஊட்டி செல்கிறார்கள். அங்கு முதலிரவிற்காக தயாராகிறார் கெவின். ஆனால், சாராவோ நமக்குள் நல்ல புரிதல் வந்த பிறகு முதலிரவு வைத்துக் கொள்ளலாம் என்று தடை போடுகிறார்.

தன் ஆசைகளை கட்டுப்படுத்த முடியாத கெவின், சாராவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், சாரா, கெவினின் ஆசைக்கு அடங்க மறுக்கிறார். இதனால் இவர்களுக்குள் விரிசல் ஏற்படுகிறது. இறுதியில் இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் கெவின், அடங்காத காளை போல், இவரின் நடிப்பை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. நாயகி சாரா, கொடுத்த வேலையை செய்திருக்கிறார். இருவரும் புதுமுகங்கள் என்பது திரையில் தெளிவாக தெரிகிறது. இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது.

போலீஸ் அதிகாரியாக வரும் அபிநயஸ்ரீ நடிப்பில் பளிச்சிடுகிறார். அப்புக்குட்டியின் காமெடி திரைக்கதை ஓட்டத்திற்கு ஆங்காங்கே கை கொடுத்திருக்கிறது.

கணவன், மனைவிக்குள் நடக்கும் ஈகோவை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆர்.டி.குஷால் குமார். இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே திரையில் அதிக நேரம் காண்பித்து, அவர்களை சுற்றியே அதிக நேரம் திரைக்கதை நகர்வது அதிக சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கிறது. ஆர்.சுந்தராஜன், சச்சு ஜோடியை வைத்து இளைய தலைமுறைக்கு அறிவுரை சொல்லி இருக்கிறார். இதை ஓரளவிற்கு ஏற்க முடிகிறது.

கே.பி.வேல்முருகனின் ஒளிப்பதிவு, ஊட்டியை அழகாக காண்பிக்கிறது. ஸ்ரீநாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ரிஷா ஆடும் குத்தாடம் தாளம் போட வைக்கிறது.
Boom-Boom-Kaalai-movie-review-indiastarsnow.com

Boom-Boom-Kaalai-movie-review-indiastarsnow.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • “‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!
  • ‘Aegan’s Haiku’ Producers Celebrate Positive Early Response! Highlight Healthy Theatrical Climate in Tamil Cinema
  • ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
  • “‘Aegan’s Haiku’ Gave Me the Scope to Make Music a Silent Character in the Story” – Music Director Siddhu Kumar
  • ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ’ஹைக்கூ’ திரைப்படத்தில் மெளனமான ஒரு கதாபாத்திரமாக இசையை கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தது!” – இசையமைப்பாளர் சித்து குமார்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme