Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
லாக்கப் திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது-indiastarsnow.com

லாக்கப் திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று ZEE5 வெளியாகிறது!!!

Posted on July 25, 2020

லாக்கப் திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது.

நடிகர் நித்தின்சத்யா தயாரிக்கும் இரண்டாவது படமான ‘லாக்கப்’ படத்தின் சிலிர்க்க வைக்கும் டீஸர் வெளியானது முதலே எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியுள்ளது. தற்போது இப்படம் ஆக்ஸ்ட் 14 அன்று ZEE5 தளத்தில் வெளியாக தயாராகவுள்ளது.

மிகப்பெரிய கான்டெக் நிறுவனமான ZEE5, பல்வேறு மொழிகளைச் சேர்ந்த, பல வகையான சிறந்த படைப்புகளை தொடர்ச்சியாக பார்வையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ZEE5-ன் சமீபத்திய ஒரிஜினல் திரைப்படமான ‘லாக்கப்’ மிகச்சிறந்த, சிலிர்க்க வைக்கும் திரில்லருடன் சீட்டின் நுனிக்கு பார்வையாளர்களை கொண்டுவரும் அனுபவங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

இந்த த்ரில்லர் படத்தில் இதற்கு முன் பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு நடிக்கிறார் என்ற செய்தி வெளியானது முதலே இப்படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறிவிட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

அறிமுக இயக்குனரான S.G.சார்லஸ் இயக்கியுள்ள இப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிகர் வைபவ் மற்றும் வாணி போஜன் நடித்துள்ளனர். அவர்களை தவிர்த்து, இப்படத்தில் பூர்ணா மற்றும் ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பல பிரபலமான நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை நித்தின்சத்யாவின் ஸ்வேத் – எ நித்தின்சத்யா புரோடக்‌ஷன் ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. முன்னணி இசையமைப்பாளரான அரோல் கொரேலி இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

திறன்மிகு ஒளிப்பதிவாளரான சந்தானம் சேகரின் ஒளிப்பதிவில் படமாகியுள்ள ‘லாக்கப்’ திரைப்படத்தை ஆனந்த் ஜெரால்ட் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் ஆனந்த மணி கலை இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.லாக்கப் திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது-indiastarsnow.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Students deserve Justice,accountability and a Level playing field in NEET… says Deepshika
  • “நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியானது!
  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme