ஆகாயத்தில் ஒரு தாரகை’ (AOT – Aakasamlo Oka Tara) திரைப்படம் வழக்கமான மசாலா படங்களைப் போல் இல்லாமல், ஒரு பெண்ணின் லட்சியத்தையும், கணவன்-மனைவி இடையிலான புரிதலை திரை கதையாக அமைத்து திரையில் காண்போரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது இந்த ஆகாயத்தில் ஒரு தாரகை திரை படம்.
பவன் சாதினேனி இயக்கத்தில் துல்கர் சல்மான், அறிமுக நாயகி சாத்விகா வீராவள்ளி மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடித்துள்ள ஆகாயத்தில் ஒரு தாரகை’ படத்தின் கதை சாதாரண கிராமத்தைச் சேர்ந்த கல்பனா என்ற பெண்ணுக்கு விண்வெளி வீராங்கனையாக (Astronaut) வேண்டும் என்பது சிறுவயது கனவு. அந்தக் கனவை நனவாக்க, அவளது கணவர்கிருஷ்ணா (துல்கர் சல்மான்) எத்தகைய தியாகங்களையும் போராட்டங்களையும் சந்திக்கிறார் என்பதே இப்படத்தின் மையக்கரு.
கிருஷ்ணா கதாபாத்திரத்தில் துல்கர் சல்மானின் எதார்த்தமான மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பு படத்திற்குப் பெரிய பலம் அமைந்துள்ளது.
அறிமுக நாயகி சாத்விகா வீராவள்ளி கல்பனாவாகத் தனது முத்திரையைப் பதித்துள்ளார்; இரண்டாம் பாதியில் வரும் ஸ்ருதி ஹாசனின் கதாபாத்திரமும் கவனம் ஈர்க்கிறது.
ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசையும் பாடல்களும் படத்தின் உணர்வுபூர்வமான காட்சிகளுக்குப் பெரும் பலம் சேர்த்துள்ளன.