ரேட்டிங்: 3.5/5


ரேட்டிங்: 3.5/5
நடிகர்கள்:- ஏகன், ஸ்ரீதேவி அபல்லா, பெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண், சுப்பிரமணிய சேது, அதியமான், மைம் கோபி மற்றும் பலர்
தொழில்நுட்ப குழுவினர்:-
இயக்கம்: யுவராஜ் சின்னசாமி
கூடுதல் திரைக்கதை: ஹரிஹரன் ராம்
தயாரிப்பு நிறுவனம்: விஷன் சினிமா ஹவுஸ்
தயாரிப்பாளர்கள்: டாக்டர் டி. அருளானந்து, மேத்யூ அருளானந்து
இணைத் தயாரிப்பாளர்: ஸ்ரீனிவாஸ் நிரஞ்சன்
நிர்வாகத் தயாரிப்பாளர் ஏகன்
இசையமைப்பாளர்: சித்து குமார்
ஒளிப்பதிவு: பிரியேஷ் குருசாமி
படத்தொகுப்பு: சக்தி பிரனேஷ் பி
கலை இயக்கம்: பிரேம் கருந்தாமலை
ஆடை வடிவமைப்பு: தினேஷ் மனோஹரன், கமலி கனகராஜ்
நடன இயக்கம்: அனுஷா விஸ்வநாதன்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ஏ.அப்துல் நாசர், டி ஒன்
அறிமுக இயக்குநர் யுவராஜ் சின்னசாமி 2k kids இன்றைய இளைஞர்களின் காதல் கதை நான் லீனியராக திரைக்கதையில் சொன்ன விதம் ஹைக்கூ படத்தை அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் விதமாக திரைக்கதை அமைத்து இன்றைய காதலர்களுக்கு இடையே வரும் அவநம்பிக்கை, அதனால் வரும் சண்டை, அதன்பின் ஏற்படும் பிரிவு ஆகியவற்றை திரையில் காண்பவரை ரசிக்க வைத்துள்ளது திரைக்கதைக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது .

யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில், ஏகன், ஸ்ரீதேவி அப்பல்லா மற்றும் ஃபெமினா ஜார்ஜ் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியான ஹைக்கூ திரைப்படம் 23 இன்று அக்டோபர் 2026 வெளியாகியுள்ள’ (Haiku) திரைப்படம் இளைஞர்களின் முதல் அனைத்து தரப்பு மக்களின் பேராதரோடு திரையரங்கில் மிக பெரிய வரவேற்பு பெற்று வருகிறது இளமைக் கால காதல் மற்றும் காதல் தோல்வி மற்றும் இளைஞர்களின் சுயமரியாதையை பேசும் ஒரு காதல் கதையாகும்.
ஹைக்கூ திரை கதை நாயகன் (ஏகன்) கல்லூரி மாணவனாக மனோ , என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தனது கதைக்கு தனது நடிப்பின் மூலம் கதைக்கு பலம் சேர்த்துள்ளனர், நாயகன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து செய்த குறும்பால் கல்லூரியிலிருந்து நீக்கப்படுகிறார் நாயகன் மனோ. இதனால் அவருக்கு பைனல் இயர் படிப்பை முடிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது இதனால் இறுதியாக ஒரு கல்லூரியில் ஏகனுக்கு இடம் கிடைக்கிறது. ஆனால், அங்கு சென்று பார்த்ததால்தான் தெரிகிறது அது பெண்கள் கல்லூரி என்று. இந்த வருடம்தான் அந்த கல்லூரி Co-ed-ஆக மாற்றப்பட்டது, அதில் சேர்ந்த முதல் ஆண் மாணவன் நாயகன் (மனோ)ஏகன் அந்த இருபாலர் கல்லூரியில் நாயகன் மனோ பவளக்கொடியை (ஸ்ரீதேவி) சந்திக்கிறார் ஏகன். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. இருவரும் மகிழ்ச்சியாக கல்லூரி இறுதி ஆண்டில் பயணிக்க ஏகனின் செயல்கள் நாயகிக்கு ஸ்ரீதேவிக்கு பிடிக்காமல் போக இருவரும் பிரிகிறார்கள்.
கல்லூரி காதல் ஸ்ரீதேவியின் பிரிவு மிகப்பெரிய பாதிப்பை நாயகன் மனோவுக்கு தந்தாலும், கல்லூரி படிப்பை முடித்து பின்பு வேலையில் கவனம் செலுத்தி, நல்ல இடத்திற்கு வருகிறார் ஏகன். அந்த சமயத்தில் தனது அலுவலகத்தில் பணிபுரியும் பெண் நிவேதா (ஃபெமினா ஜார்ஜ்)சந்திக்கும் நாயகன் தொடக்கத்தில் நட்பாக பழகும் நாயகன் அவரை காதலிக்கிறார் அனாலும் நாயகனின் செயல் நிவேதாவிக்கு பிடிக்காமல் போக இவர்களுக்குள் பிரிவு ஏற்படுகிறது நாயகனின் இறுதி காதல் கைகூடியாத என்பதே ஹைக்கூ திரை படத்தின் திரைக்கதை.

ஹைக்கூ திரை படத்தின் நாயகன் மனோகரன் என்கிற மனோ கதாபாத்திரத்தில் ஏகன் குடும்பத்திற்கு செல்லப் பிள்ளையாகவும், கல்லூரி மாணவனின் திருத்திருப்பான் நடிப்பிலும். பொறுப்பான ஐ.டி ஊழியராகப் தனது நடிப்பின் மூலம் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரி தனது நடிப்பை வெளிப்படுத்தி திரையில் காண்பவரை ரசிக்க வைத்துள்ளார் நாயகன் ஏகன் முதல் பாதியில் வாலிப வயதுக்கே உரிய குறும்புகளையும், காதலில் தோற்கும் போது வெளிப்படும் இயலாமையையும் தனது எதார்த்தமான உடல்மொழியால் திரையில் காண்போரை ரசிக்க வைத்துள்ளார் இளைஞர்களை சிந்திக்கவும் வைத்துள்ளதுஹைக்கூ திரைப்படம்.
நாயகன் ஏகன் தனது இளமைக்கால தவறுகளை உணர்ந்து திருந்த துடிக்கும் காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் முதிர்ச்சியான நடிப்பு, கதையின் ஆழத்தை ரசிகர்களிடம் மிகச் சரியாகக் கொண்டு சேர்க்கிறது. மேலும், கதையின் மையக் கதாபாத்திரமான மனோவாக, இளமைக்கே உரிய துடிப்பையும் காதலில் ஏற்படும் மனமாற்றங்களையும் இயல்பாக வெளிப்படுத்தி கதைக்கு நடிப்பால் உயிரூட்டி, பார்வையாளர்கள் கதையுடன் ஒன்றிப்போக செய்கிறார் நாயகன் ஏகன்.