Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

டிஷ் டிவி இந்த புதிய சலுகையானது தென்னிந்திய குடும்பங்களுக்கு ஏதுவான விலையில் சேவைகளை வழங்குகிறது, வழங்குகிறது !!

Posted on May 20, 2026

~சென்னை, 20 மே 2026: இந்தியாவின் மிகவும் ஈடுபாடுமிக்க மற்றும் கலாச்சார ரீதியாக பன்முகத்தன்மை வாய்ந்த பொழுதுபோக்கு சந்தைகளில் ஒன்றான தென்னிந்தியாவிற்கு டிஷ் டிவி இந்தியா லிமிடெட் இன்று அதன் மேம்படுத்தப்பட்ட சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி பிராந்திய மொழிக்கு முக்கியத்துவம் அளித்து ஏதுவான விலையில் பொழுதுபோக்கிற்கான அணுகலை வழங்கி, அங்குள்ள குடும்பங்களுக்கு தொலைக்காட்சி காணும் தினசரி அனுபவத்தை தடையின்றி வழங்கவுள்ளது. நுகர்வோரின் மாறிவரும் தொலைக்காட்சி காணும் பழக்கத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட இந்த புதிய சலுகையின் கீழ் மாதத்திற்கு வெறும் ₹149-இல் ஆரம்பமாகும் பிராந்திய மொழியை முதன்மையாகக் கொண்ட பேக்குகளை அறிமுகப்படுத்துகிறது; இது தென்னிந்திய நேயர்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு பொழுதுபோக்கு, திரைப்படங்கள், பிராந்திய நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு வலுவான கலவையாகும்.தென்னிந்தியா பிராந்தியம் மிகவும் விறுவிறுப்பான தொலைக்காட்சி சந்தைகளில் ஒன்றாக உள்ளது; அதில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை காண்பது என்பது – மொழி, சினிமா, குடும்பமாக காண்பது, மற்றும் பிராந்திய பாணியில் கதைசொல்வது என்பனவற்றுடன் ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் பேசும் குடும்பங்கள் அனைத்திலும் உள்ள நேயர்கள் -தங்களது பிராந்திய பொழுதுபோக்கு அனுபவங்களுக்கு வலுவான விசுவாசிகளாக உள்ளனர். எனவே தொலைக்காட்சி அவர்களது தினசரி வாழ்வில் வீட்டில் இன்றியமையாத ஒரு சாதனமாக உள்ளது.இந்த வளர்ந்து வரும் விருப்பங்களை உணர்ந்து செயலாற்றும் விதமாக, டிஷ் டிவி மேம்பட்ட சலுகைகளை நுகர்வோருக்காக வழங்குகிறது; அதாவது அதிக சௌகரியம், தொடர்ச்சி மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அதே நேரத்தில் அவர்களுக்கு பொருத்தமான நிகழ்ச்சிகளை எளிதாக அணுக வைக்கும் வகையில் வழங்கவுள்ளது. ஆரம்ப கட்ட பேக் மாதத்திற்கு ₹149-இல் தொடங்குகிறது மற்றும் அதில் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு சேனல்களின் வலுவான கலவையை உள்ளது. அடிப்படை சலுகையில் 36-க்கும் மேற்பட்ட தமிழ் சேனல்கள் உட்பட, 225-க்கும் மேற்பட்ட சேனல்கள் உள்ளன; அதே நேரத்தில் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் பேக்குகளில் அந்தந்த மொழிகளில் தலா 30-க்கும் மேற்பட்ட சேனல்கள் இருப்பதால் அன்றாடம் வீட்டில் விரும்பிப் பார்க்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்குகின்றது. பிராந்திய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், தினசரி நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு ஒளிபரப்புகள் என இந்த பல்வேறு சேனல்களை உள்ளடக்கிய பேக்கினை வாடிக்கையாளர் தங்கள், தேவைக்கேற்ப பிரத்தியேகமாக எளிதாக உருவாக்கிக் கொள்ளலாம்.அதன் மேம்படுத்தப்பட்ட அனுபவத்தின் ஒரு பகுதியாக, டிஷ் டிவி அதன் ‘ஸ்போர்ட்ஸ் ஆல்வேஸ்-ஆன்’ அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது; அதாவது இதன் மூலம், ரீசார்ஜ் செய்வதற்கு இடைப்பட்ட காலங்கள், அல்லது தற்காலிக சேவை தடைபாடுகள் ஏற்படும் போது கூட நேயர்கள் முக்கிய விளையாட்டு போட்டிகளுடன் தொடர்ந்து இணைந்திருப்பதை டிஷ் டிவி உறுதி செய்கிறது.பல்வேறு வாடிக்கையாளர்களின் அன்றாட தொலைக்காட்சி காணும் பழக்கத்தைத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட இந்த சலுகையின் நோக்கம் – எளிமையாக, சீரான அணுகலுடன் நேயர்கள் தாங்கள் விரும்பும் படைப்புகளை தடையின்றி தொடர்ந்து காணும் அனுபவத்தை வழங்குவதே ஆகும்.இந்த அறிவிப்பு குறித்து பேசிய டிஷ் டிவி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின், தலைமை செயல் அலுவலர், மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. மனோஜ் தோபல் அவர்கள் கூறுகையில், “தென்னிந்தியா எப்போதுமே டிஷ் டிவிக்கு மிக முக்கியமான சந்தையாக இருந்து வருகிறது; பிராந்திய மொழி நிகழ்ச்சிகளை அதிகம் விரும்புவது, ஆழமாக வேரூன்றிய பொழுதுபோக்கு கலாச்சாரம், மற்றும் அதிக ஈடுபாட்டுடன் குடும்பமாக தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தெனிந்திய பேக் வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கள் புதிய பேக்குகள் வெறும் ₹149-இல் தொடங்குவதால், தரமான பொழுதுபோக்கை எளிதில் அணுகக்கூடியதாக ஆக்குவது மட்டுமில்லாமல்; பிராந்தியம் முழுவதும் உள்ள நுகர்வோர் தொலைக்காட்சி பார்க்கும் விதத்திற்கு ஏற்பவும் இத்தொகுப்பு சீரமைக்கப்பட்டுள்ளது. ரீசார்ஜ் செய்வதில் தாமதம், அல்லது தற்காலிக தடைகள் காரணமாக தவறவிட்ட நிகழ்ச்சிகள் குறித்து கவலைப்படாமல் பொழுதுபோக்கை எளிமையாகவும், தடையற்றதாகவும் வழங்குகிறோம். மேலும், தொடர்ந்து இணைக்கப்பட்ட பொழுதுபோக்கு அனுபவத்தை அவர்களுக்கு விருப்பமான மொழியில் மாற்றி வழங்குவதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்,” என்று கூறினார். டிஷ் டிவி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை வருவாய் அதிகாரி, திரு. சுக்பிரீத் சிங் அவர்கள் கூறுகையில், “நுகர்வோர் இன்று தங்கள் மொழியில் விருப்பமானவற்றை காணவேண்டுமென நினைக்கிறார்கள். அதற்கேற்ற வகையில் சரியான நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு, மற்றும் சௌகரியமான அனுபவங்களையே தேடுகிறார்கள். எங்களது மேம்பட்ட தென்னிந்திய பேக்கினை இந்த நுண்ணறிவுகளின் அடிப்படையில் தான் வடிவமைத்துள்ளோம். இதன் மூலம்- ஏதுவான விலையில், வலுவான பிராந்திய நிகழ்ச்சிகளை தேர்வு செய்து, தடையின்றி அணுகும் வாய்ப்பை நுகர்வோர் பெறலாம். வாடிக்கையாளருக்கு முக்கித்துவம் அளிக்கும் பேக்குகள் மூலம் இதனை சாத்தியமாக்கியுள்ளோம். அன்றாட பொழுதுபோக்கை எளிமையானதாகவும், பிராந்தியம் முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு எங்கள் சேவையை அணுகக்கூடியதாகவும் வழங்குவதே எங்கள் நோக்கமாகும்,” என்றார்.இந்த மேம்பட்ட பிராந்திய யுக்தியின் மூலம், டிஷ் டிவி இந்தியா லிமிடெட் ‘தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரத்தியேகமான, மொழிக்கு முக்கியத்துவம் தரும், மற்றும் நுகர்வோரை மையமாகக் கொண்ட பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்க வேண்டும்’ என்கிற அதன் நீண்டகால உறுதிப்பாட்டிற்கு தொடர்ந்து வலுசேர்க்கிறது. அதே நேரத்தில் இந்தியாவின் மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்த தொலைக்காட்சி சந்தைகளில் ஒன்றான தென்னிந்தியாவில் அதன் ஈடுபாட்டையும் ஆழப்படுத்தியுள்ளது.

  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு
  • Kauvery Hospital Brings Multi-Speciality Robotic Surgery Under One Integrated Programme Across Its Chennai Hospitals
  • காவேரி மருத்துவமனையின் புதிய முன்னெடுப்பு:சென்னையில் பல்துறை ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கு ஒருங்கிணைந்த திட்டம்.
  • செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் அனைத்து ஏழு எபிசோடுகளும் இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரே நேரத்தில் வெளியாகும்!
  • Second Love announces weekly binge drop with all 7 episodes releasing every Monday
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme