Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

காவேரி மருத்துவமனையின் புதிய முன்னெடுப்பு:சென்னையில் பல்துறை ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கு ஒருங்கிணைந்த திட்டம்.

Posted on July 22, 2026
  • நான்காம் தலைமுறை ரோபோட்டிக் அறுவைசிகிச்சை, பல்துறை நிபுணத்துவம் மற்றும் சீரான உயர்தர சிகிச்சை முறைகளை சென்னையில் உள்ள தனது மூன்று மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தும் ‘காவேரி 3X சென்னை’ செயல்திட்டம் அறிமுகம்:
  • இச்செயல்திட்டத்தில் குடல் இரைப்பை அறுவைசிகிச்சை, அறுவைசிகிச்சை புற்றுநோயியல், சிறுநீர் பாதையியல், மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் மற்றும் சிறுநீரக உறுப்புமாற்று அறுவைசிகிச்சை உள்ளிட்ட பல மருத்துவத் துறைகளை உள்ளடக்கியதாகும்.

சென்னை, ஜூலை 22, 2026: உயர் சிகிச்சைக்கு இந்நாட்டில் புகழ்பெற்ற காவேரி மருத்துவமனை குழுமம், ‘காவேரி 3X சென்னை’ என்ற பெயரில் ஒருங்கிணைந்த ரோபோட்டிக் அறுவைசிகிச்சை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் மேம்பட்ட ரோபோட்டிக் தொழில்நுட்பம், விரிவான அறுவைசிகிச்சை நிபுணத்துவம் மற்றும் அதிக திறன் கொண்ட பல்துறை மருத்துவக் குழுக்களை சென்னையில் உள்ள அதன் மூன்று மருத்துவமனைகளிலும் சீரான உயர்தர சிகிச்சை வழிகாட்டுதல்களின் கீழ் ஒன்றிணைக்கிறது.

இந்த ரோபோட்டிக் அறுவைசிகிச்சை திட்டங்கள், உலகின் மிக மேம்பட்ட தொழில்நுட்பங்களில் ஒன்றான 4-ஆம் தலைமுறை டா வின்சி ரோபோட்டிக் அறுவைசிகிச்சை சாதனத்தின் அடிப்படையில் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் இரையக குடலியல், புற்றுநோயியல், சிறுநீர்பாதையியல், மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல், மற்றும் சிறுநீரக மருத்துவவியல் உள்ளிட்ட பல மருத்துவத் துறைகளில் ரோபோட்டிக் சாதன உதவியுடன் சிகிச்சையளிக்கப்படும்.

குடல் இரைப்பை புற்றுநோய்கள், பெருங்குடல் புற்றுநோய்கள், மகளிர் நோயியல் புற்றுநோய்கள், மார்பகப் புற்றுநோய்கள், சிறுநீரகப் புற்றுநோய்கள், ஃபைப்ராய்டு அறுவைசிகிச்சை, கர்ப்பப்பை நீக்கம், கருப்பைஉள்வரிச்சவ்வு சிகிச்சை, கருப்பை சார்ந்த செயல்முறைகள், புரோஸ்டேட் அறுவைசிகிச்சை, சிறுநீரக அறுவைசிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை, சிறுநீர்ப்பை சிகிச்சைகள், மறுசீரமைப்பு சிறுநீரக அறுவைசிகிச்சைகள், தைராய்டு சுரப்பி அகற்றம், குடலிறக்கத்திற்கான சிகிச்சை, பித்தப்பை அறுவைசிகிச்சை, பெருங்குடல் அறுவைசிகிச்சை மற்றும் மேற்புற இரைப்பை குடலியல் சிகிச்சைகள் போன்ற பல்வேறு சிக்கலான மருத்துவ நிலைகளுக்கு ரோபோட்டிக் அறுவைசிகிச்சையில் உள்ள தனது நிபுணத்துவத்தை காவேரி மருத்துவமனை பயன்படுத்தவுள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, ரோபோட்டிக் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையில் காவேரி மருத்துவமனை கொண்டுள்ள அபார நிபுணத்துவமாகும். குறைந்தபட்ச ஊடுருவல் துளை அறுவைசிகிச்சையின் எல்லைகளை விரிவுபடுத்துவதிலும், மிகவும் சிக்கலான அறுவைசிகிச்சைகளுக்கு மேம்பட்ட தீர்வுகளை வழங்குவதிலும் இம்மருத்துவமனை கொண்டுள்ள அர்ப்பணிப்பை இத்திட்டம் பிரதிபலிக்கிறது.

இந்நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனரும், செயல் இயக்குநருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் அவர்கள் பேசுகையில், “‘காவேரி 3X சென்னை’ திட்டத்தின் மூலம், மேம்பட்ட தொழில்நுட்பம், பல்துறை நிபுணத்துவம் மற்றும் சீரான உயர்தர சிகிச்சை ஆகியவற்றை சென்னையில் உள்ள எங்களது மூன்று மருத்துவமனைகளிலும் ஒன்றிணைத்து, ஒரு முழுமையான ரோபோட்டிக் அறுவைசிகிச்சை சூழல் அமைப்பை நாங்கள் உருவாக்கி செயல்படுத்துகிறோம். காவேரி மருத்துவமனைக்கே உரித்தான உயர்தரம் மற்றும் நிலைத்தன்மையுடன், நோயாளிகள் இனி தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே அமைந்திருக்கும் எங்களது மூன்று மருத்துவமனைகளில் ஏதாவதொன்றில் சிறப்பான பலன்களை வழங்கும் விரிவான ரோபோட்டிக் சிகிச்சையைப் பெறலாம்.

மிக நேர்த்தியான சிகிச்சை, அறுவைசிகிச்சையில் புதிய உத்திகளின் பயன்பாடு மற்றும் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்போடு பராமரிப்பு ஆகியவற்றில் பல ஆண்டுகளாக நாங்கள் செய்து வந்திருக்கும் முதலீட்டையும், அக்கறையையும் இந்த முன்னெடுப்பு திட்டம் பிரதிபலிக்கிறது. எங்களைப் பொறுத்தவரை, மேம்பட்ட மருத்துவ சேவை என்பது நாங்கள் வைத்திருக்கும் நவீன தொழில்நுட்பத்தால் மட்டும் அளவிடப்படுவதில்லை; மாறாக அது நோயாளிகளின் உடல்நிலையை எந்த அளவிற்கு மேம்படுத்துகிறது, அவர்களின் குணமடையும் வேகத்தை எப்படி அதிகரிக்கிறது மற்றும் சிகிச்சைக்கான சாத்தியக்கூறுகளை எவ்வாறு விரிவுபடுத்துகிறது என்பதைப் பொறுத்தே அமைகிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். சிறப்பான மருத்துவ சேவையை நாங்கள் வழங்கி வருகிறோம். சென்னை மாநகர மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த ரோபோட்டிக் அறுவைசிகிச்சையை எளிதாக கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற எங்களது பயணத்தில் ‘காவேரி 3X சென்னை’ திட்டம் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகும்,” என்று கூறினார்.


Media Contact: Mahesh Kumar @ 98845 45000

  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு
  • Kauvery Hospital Brings Multi-Speciality Robotic Surgery Under One Integrated Programme Across Its Chennai Hospitals
  • காவேரி மருத்துவமனையின் புதிய முன்னெடுப்பு:சென்னையில் பல்துறை ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கு ஒருங்கிணைந்த திட்டம்.
  • செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் அனைத்து ஏழு எபிசோடுகளும் இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரே நேரத்தில் வெளியாகும்!
  • Second Love announces weekly binge drop with all 7 episodes releasing every Monday
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme