Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் அனைத்து ஏழு எபிசோடுகளும் இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரே நேரத்தில் வெளியாகும்!

Posted on July 21, 2026

சென்னை, ஜூலை 2026: ஜியோஹாட்ஸ்டார் தமிழின் ரியாலிட்டி காதல் நிகழ்ச்சியான ‘செகண்ட் லவ்’, முதல் வார வெளியீட்டுக்கு ரசிகர்களிடமிருந்து கிடைத்த உற்சாகமான வரவேற்பைத் தொடர்ந்து, பார்வையாளர்களுக்காக புதிய வெளியீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும், அந்த வாரத்திற்கான அனைத்து 7 எபிசோடுகளும் ஒரே நேரத்தில் வெளியாகும். இதன் மூலம், காதல், உணர்வுகள், உறவுகள் மற்றும் வில்லா வாழ்க்கையில் நடைபெறும் பரபரப்பான சம்பவங்களை ரசிகர்கள் தங்களது வசதிக்கேற்ப தொடர்ச்சியாக கண்டு ரசிக்கலாம்.

மனதைத் தொடும் கதை சொல்லல், இயல்பான உணர்வுகள் என ‘செகண்ட் லவ்’ கான்செப்ட் முதல் வாரத்திலேயே ரசிகர்களை ஈர்த்துள்ளது. மனம் திறந்த உரையாடல்கள், எதிர்பாராத காதல் தொடக்கங்கள், மற்றும் மனதை உருக்கும் தருணங்கள் என காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் காதலைத் தேடும் பயணத்தை வித்தியாசமாக வெளிப்படுத்தி இந்த நிகழ்ச்சி தனித்துவமான வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நேர்மறையான வரவேற்பைத் தொடர்ந்து, பார்வையாளர்களின் அனுபவத்தை மேலும் சுவாரஸ்யமாக மாற்றும் வகையில் இந்த புதிய வெளியீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் ஒரு எபிசோடிற்காக காத்திருக்க வேண்டிய அவசியமின்றி, இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் முழு வாரத்தின் எபிசோடுகளையும் ஒரே அமர்வில் பார்த்து ரசிக்கலாம். வலுவடையும் உறவுகள், ஆழமடையும் உணர்வுகள் மற்றும் ஒவ்வொரு வாரமும் காத்திருக்கும் புதிய திருப்பங்களுடன், ‘செகண்ட் லவ்’ வரும் வாரங்களில் இன்னும் விறுவிறுப்பான காதல் பயணத்தை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது.

‘செகண்ட் லவ்’ தொடர்பான மேலும் பல சுவாரஸ்யமான அப்டேட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் தமிழ் சமூக வலைதளப் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

பனிஜே ஆசியா புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ‘செகண்ட் லவ்’ தமிழில் ஒளிபரப்பாகிறது.

ஜியோஹாட்ஸ்டார் பற்றி:

ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதைக்களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

  • எல்.கே.சுதீஷ் MP ராஜ்யசபா- பூர்ண ஜோதி சுதீஷ் மூத்த மகள் திருமண விழா
  • சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’! (Sambarala Yeti Gattu)  160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு
  • Paatu, Samayal, Cinema, Cricket! Sony VIZHA unveils its Power Packed Content into ‘Ithu Namma Vibe’
  • பாட்டு, சமையல், சினிமா, கிரிக்கெட்!’ – ‘இது நம்ம வைப்ஸ்’ என்ற புதிய அடையாளத்துடன் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தும் சோனி விழா!
  • Sony VIZHA premieres Thala Ajith Kumar’s ‘Good Bad Ugly’ this Vijayadashami
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme