Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது

Posted on April 26, 2026
  1. தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளதுதேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் குஷால் கங்காரியா, நிர்வாக இயக்குநர் தினேஷ் கங்காரியா மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஆகியோர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.

வணிகம் மற்றும் குடியுரிமை பொறுப்புணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் மிகவும் பாராட்டத்தக்க முயற்சியாக, பி.எம். ஜே. ஜுவெல்ஸ் நிறுவனம், ஏப்ரல் 23 – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி ஒரு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற ஊக்குவிக்கும் வகையில், “GO VOTE. GET INKED. CELEBRATE THE MOVEMENT“ எனும் ஸ்லோகன் அதாவது வாக்களியுங்கள் – விரலில் மை வைத்துக்கொள்ளுங்கள் – அந்த தருணத்தை கொண்டாடுங்கள்” என்ற வலுவான செய்தியுடன் இந்த சலுகையை அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு பிரச்சாரத்தின் கீழ், வாக்களித்ததற்கான சான்றாக தங்களது சுட்டுவிரலில் அழியாத மை குறியுடன் பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் ஷோரூமுக்கு வருகிற எந்த வாடிக்கையாளருக்கும், உடனடியாக ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாடிக்கையாளர்களை குதூகலப்படுத்தும் வகையில், இந்த சலுகை 2026 ஏப்ரல் 30ஆம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சி குறித்து பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் குஷால் கங்காரியா கூறும்போது,
வாக்களிப்பதே நமது ஜனநாயகத்தின் அடித்தளம் என்றும், தேர்தலில் ஒவ்வொரு குடிமகனின் பங்கேற்பும் நாட்டை வலுப்படுத்துகிறது என்ற நம்பிக்கையில் பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.

தங்கள் ஜனநாயகப் பொறுப்பை நிறைவேற்றும் மக்களை கௌரவிக்கும் விதமாகவே இந்த சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வாக்களித்தபின், பெருமையுடன் அந்த விரல் மை குறியுடன் தங்கள் ஷோரூமுக்கு வரும்போது, வாடிக்கையாளர்கள் நகை வாங்குவதோடு மட்டுமல்லாமல், வலுவான இந்தியாவை உருவாக்கும் தங்கள் பங்களிப்பையும் கொண்டாடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நிர்வாக இயக்குநர் தினேஷ் கங்காரியா,
இந்த திட்டம், தமிழ்நாட்டின் எந்த பகுதியில் இருந்து வாக்களித்திருந்தாலும், சென்னையில் உள்ள தங்களுடைய எந்த ஷோரூமையும் அணுகி, தங்கள் மை குறியைக் காட்டி ரூ.5,000 தள்ளுபடியைப் பெறலாம் என்று கூறினார்.

சமூக பொறுப்புணர்வு மற்றும் ஜனநாயகத்தின் மீதான அன்பு காரணமாகவே இந்த முயற்சியை மேற்கொண்டுள்தாகவும், ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்றும் தெரிவித்த அவர், மாநிலம் முழுவதும் வாக்களிப்பு பங்கேற்பை ஊக்குவிப்பதே தங்களுடைய நோக்கம் என்றார்.

இந்நிகழ்ச்சியில், சென்னையில் பிறந்து, தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் மகேஷ் பாபு, பிரத்யேக வடிவமைப்புடைய கைக்காப்பை அணிந்து, வாக்காளர்களை உற்சாகமாக வாக்களிக்க அழைத்தார். அவர் பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக உள்ளார். இந்த விளம்பரத்தில்
“வாக்களிப்பது ஒரு கடமை மட்டுமல்ல, அது பெருமை!” என்ற தமிழ் வாசகம் இடம்பிடித்து இருந்தது.

மகேஷ் பாபு தற்போது புகழ்பெற்ற இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் “வாரணாசி” என்ற மிகப்பெரிய பான்-இந்திய திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார்.

60 ஆண்டுகளாக நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாக விளங்கும் பி.எம்.ஜே ஜுவெல்ஸ், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் சிறந்த நகை சேவையை வழங்கி வருகிறது. சென்னை மற்றும் கோயம்புத்தூரில் பல கிளைகளுடன், தரம், நம்பிக்கை மற்றும் சமூகப் பங்களிப்பு ஆகியவற்றை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது.

இந்த சலுகை, 2026 ஏப்ரல் 23ஆம் தேதி வாக்களித்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். வாங்கும் நேரத்தில் விரல் மை குறியைக் காட்ட வேண்டும். இது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

  • ‘மொத ராத்திரி’ தேவியாக மனம் கவர்ந்த பானுப்பிரியா – வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ் படங்களில் அடுத்தடுத்து!
  • Banupriya Wins Hearts as Devi in ‘Motha Rathiri’; Joins Exciting Projects with Vetrimaaran, Dhanush & Mari Selvaraj
  • Goodwill Entertainments releases ‘Operation Tral’ Teaser, offering a high-impact glimpse into Jayasurya’s high-stakes NIA mission
  • குட்வில் எண்ட்ர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட ‘ஆபரேஷன் டிரால்’ டீசர் பரபரப்பான என்ஐஏ அதிகாரி ஜெயசூர்யாவின் உலகத்திற்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறது!
  • *_Avengers Fans, Assemble One More Time!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme