
மெஸன்ஜர் திரைப்படம் இது வரை யாரும் திரையில் பார்க்க காதல் ,திகில் மற்றும் பேண்டஸி நிறைந்த திரைப்படம் திரையில் ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் ரமேஷ் இளங்காமணி.
மெஸன்ஜர் திரை பட நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் காதல் தோல்வியால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். அப்போது அவரது ஃபேஸ்புக் மெஸன்ஜருக்கு மெசஜ் வந்துக் கொண்டிருக்கிறது. அதில், “தற்கொலை செய்து கொள்ள வேண்டாம், உங்களை நேசிக்க இந்த உலகில் பலர் இருப்பார்கள்” என்ற செய்தி இருக்கிறது. இதை பார்த்து தற்கொலை முயற்சியை கைவிடுகிறார் நாயகன் ஶ்ரீ ராம் கார்த்திக்.
தனக்கு மெசேஜ் அனுப்பியா அந்த பெண் யார் என்பதை தேடுகிறார். அப்போது செய்தியை அனுப்பிய பெண் இரண்டு மாதங்களுக்கு முன்பு லாரி மோதி இறந்துவிட்டார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார்.
இறந்தவர் எப்படி மெசேஜ் அனுப்பு முடியும், அவர் உண்மையில் இறந்து விட்டாரா? இல்லையா? மெசேஜ் அனுப்பியது யார்? இது போன்ற கேவிக்கு பதில் தான் மெஸன்ஜர் திரை படத்தின் கதை.

நாயகனாக ஶ்ரீராம் கார்த்திக், மெசேஜ் அனுப்பிய அந்த பெண் யார் என்ற தேடுதலும், காதலிப்பதும் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மனிஷா ஸ்ரீ, தனது நடிப்பின் மூலம் கதைக்கு உயிர் கொடுத்துள்ளார் தன் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்.
பாத்திமாவின் தோழியாக நடித்திருக்கும் வைசாலி ரவிச்சந்திரன் . ஜீவா ரவி, லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ஆகியோர் நடிப்பில் திரையில் ரசிக்க வைத்தனர்.