

கதாநாயகன் (அருளானந்தம்) நட்டி நட்ராஜ், பாமர மக்களை ஏமாற்றி அதில் சொகுசாக வாழ்ந்து வருகிறார் அப்போது அரசியல்வாதியிடம் பழமை வாய்ந்த பல கோடி மதிப்புள்ள வைரம் ஒன்றை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஆனால், அந்த வைரத்தை பதுக்கி வைத்திருந்த இடத்தில் அரசியல்வாதி ஒருவர் கோவில் ஒன்றை அமைத்து வழிபட்டு வருகிறார். நாயகன் வைரத்தை கைப்பற்றுவதற்காக சாமியார் வேடமிட்டு கோவிலுக்குள் நுழையும் நட்டி நட்ராஜ்(அருளானந்தம்), அந்த கோவிலை தனது ஆசிரமமாக மாற்றிக் கொண்டு சாமியாராக வாழ்ந்துக் கொண்டே வைரத்தை தேடுகிறார். அந்த வைரம் அவருக்கு கிடைத்ததா? இல்லையா ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.