Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
சூரரைப்போற்று’ படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார்-www.indiastarsnow.com

சூரரைப்போற்று படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார்

Posted on September 7, 2019

இறுதி சுற்று படம் மூலம் பிரபலமான சுதா கொங்கரா இயக்கும் ‘சூரரைப்போற்று’ படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நாயகியாக வருகிறார். ஜாக்கி ஷெராப், கருணாஸ், மோகன் பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு மதுரையை சுற்றி உள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.
மதுரைக்கு சூர்யா வந்ததை அறிந்த ரசிகர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் அவரை காண தினமும் குவிந்த வண்ணம் உள்ளனர். சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகளை சூர்யா சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று ஒரு தனியார் அரங்கில் ரசிகர்களை சூர்யா சந்தித்தார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
surya-www.indiastarsnow.comsurya-www.indiastarsnow.com

ரசிகர்கள் மத்தியில் சூர்யா பேசும்போது, “பிதாமகனுக்கு பிறகு உங்களை சந்தித்திருக்கிறேன். குறைந்த கால அவகாசத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது ஆனாலும் 800-க்கும் மேற்பட்டவர்கள் வந்தது மகிழ்ச்சி. அடுத்தமுறை உங்கள் அனைவரையும் குடும்பத்துடன் சந்திக்கிறேன். சூரரைப் போற்று படத்தின் படப்பிடிப்பு முடிய உள்ளது. இது ஒரு புதிய முயற்சி, உங்களை மகிழ்விக்கும்” என்றார்.
surya-www.indiastarsnow.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!
  • விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடியை கடந்தது – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு
  • Varshini karmegham who plays Ramya in Motha Raathiri, comes to cinema with a rather unconventional background. A Physics student from psgr krishnanmma
  • நடிகர் தனுஷ் எனக்கு இன்ஸ்பிரேஷன்”: நடிகை வர்ஷினி!
  • ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை !
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme