

ஐசரி கணேஷ் சார்பாக வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்னேஷனல் நிறுவனம் பிடிசார் படத்தை தயாரித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க மனிதராக இருக்கும் தியாகராஜன் கல்லூரி மற்றும் பள்ளிகளை நடத்தி வருகிறார். அவரது பள்ளியில் P.T வாத்தியாராக பணியாற்றும் நாயகன் ஹிப் ஹாப் ஆதி,சிறுவயதில் இருந்தே அவரது அம்மா தேவதர்ஷினி ஹிப்ஹாப் ஆதியை எந்த ஒரு பிரச்சனைக்கும் போகவிடாமல் பத்திரமாக பார்த்து வருகிறார் அதற்கு கரணம் திருமணம் ஆவதற்குள் அவருக்கு ஒரு கண்டம் உள்ளது ஆகையால் அவருக்கு திருமணம் ஆகும்வரை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று குடும்ப ஜோசியர் சொல்ல . அவருக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று குறிக்கோளுடன் இருக்கிறார். இந்த சமயத்தில் அவரது எதிர் வீட்டில் குடியிருக்கும் அனிகா சுரேந்திரன் மர்மமான முறையில் இறந்து விடுகிறார். அனிகா இறந்ததற்கு உண்மையில் யார் காரணம் ? பிடிசார் இந்த சமுதாயத்தில் பெண்களின் நிலை என்ன போன்ற கேள்விக்கு பதில் தான் இந்த பிடிசார் படத்தின் கதை.
பள்ளியில் நடக்கும் காட்சிகள் நம்மை கதைக்குள் கொண்டு செல்கிறது. பள்ளியின் சுவரை வைத்து வரும் காட்சிகள் திரையில் சிந்தித்தாக வைத்துள்ளது மாணவர்களின் மனநிலை பள்ளியிலும் ,வீட்டிலும் எப்படி அவர்களை பாதிக்கிறது என்பதை நேசிக்கு நெருக்கமாக திரையில் காண்பது தனி சிறப்பு .
பெண்கள் இந்த சமுதாயத்தில் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டோர் மீது சமூகம் நிகழ்த்தும் தாக்குதல்களையும் திரையில் அனைவரும் கண்டு சிந்திக்கும் படி திரைக்கதை அமைத்துளர் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன்.
அன்றாடம் பெண்களும் சந்திக்கும் பிரச்சனையைப் பேச படக்குழுவினர் முயற்சி செய்துள்ளனர். முதல் பாதியில் காமெடிகள் மிக நன்றாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.
இரண்டாம் பாதி திரைக்கதையில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் மிகவும் சுவாரசியமான காட்சிகளை அமைத்து இயக்கி இருக்கிறார்.
ஹிப் ஹாப் ஆதி தமிழா வழக்கம் போல தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கதாநாயகி காஷ்மிரா நடிப்பின் மூலம் திரையில் ரசிக்கவைக்கிறார் . கதாநாயகி காஷ்மிரா அப்பாவாக வரும் பிரபு வக்கீல் கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார். தியாகராஜன் வில்லத்தனத்தில் நடித்து கவனத்தை ஈர்க்கிறார். மேலும் நீதிபதியாக பாக்கியராஜ் சிறப்பாக நடித்துள்ளார் , இளவரசு, முனிஷ் காந்த், தேவதர்ஷினி ஆகியோரும் திரை கதைக்கு நடிப்பின் மூலம் கூடுதல் பலம் சேர்க்கின்றனர்.
