


ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படம் மற்றும் குறுப்படம் கண்டுகளிக்க இணைந்திடுங்கள்
https://www.ottplus.in இல்
facebook மூலம் பெண் கவிஞர் ஏஞ்சலினா வின் கதை, கவிதை என அவளது படைப்புகளால் ஈர்க்கப்படும் இளைஞன் மதியழகன் அவளை facebook மூலம் பின்தொடர்கிறான். இருவரும் கவிதை வெளியீடு நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் சந்திக்கிறார்கள்.. பேசுகிறார்கள். அறிமுகம், நட்பாகிறது.
இருவரும் சந்தித்த பொது அன்று அரசு கொரோனா பரவல்காரணமாக, முழு அடைப்பு அறிவிக்கப்படுகிறது கதாநாயகன் நாயகிக்கு ஊருக்குச் செல்ல டிக்கெட் ஏற்பாடு செய்ய அது முடியாத நிலையில் அந்த பெண் நாயகன் வீட்டில் தங்குகிறாள் . கவிஞர் – ரசிகன் என்கிற உறவும், நட்பும் உடலால் ஒன்றிணைகின்றனர். திருணம் செய்துகொள்ளாமல் சேர்ந்ந்து வாழலாம் (லிவிங் டு கெதர்) என தீர்மானிக்கின்றனர்.
காதல், ஊடல் என மகிழ்ச்சியாகவே நாட்கள் நகர்கின்றன. ஆனால் நாளடைவில் இருவருக்குமிடையே மனஸ்தாபம் ஏற்படுகிறது.
“நீ பெமினிஸ்ட்.. உனக்கு பலருடன் நெருக்கம்” என வார்த்தையில் திட்ட இருவருக்கும் வாக்குவாதம் முற்றுகிறது…கொரோனா முழு அடைப்பு என்பதால் இருவரும் ஒரே வீட்டில் பிரிந்து இருக்கின்றனர் 2k kids லவ் என்னவானது ? இணையதள சமூக ஊடக நண்பர்கலின் வாழ்வியல் என்ன ? பெண் கவிஞர்- கவிதை ரசிகன் உறவு திருமணத்தில் முடிந்ததா ? “பெமினிஸ்ட் என்றால் என்ன ” போன்ற கேள்விக்கு பதில் தான் இந்த பெமினிஸ்ட் குறும்படம் .
மதியழகன், ஏஞ்சலினா இருவருமே சிறப்பாக நடித்து உள்ளனர். இந்தக் கால இளைஞர்களை கண் முன் நிறுத்துகின்றனர். இரண்டு கதாபாத்திரங்களை மட்டும் வைத்து அற்புதமான உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் கேபிள் சங்கர்.
பெண்ணியவாதி என்பதை ஒரு ஆணின் பார்வையிலும், பெண்ணின் பார்வையிலும் அருமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறது படம்.
ஷமந்த் நாக் இசை, முரளி ஸ்ரீதரின் கேமரா, அபிஷேக் க்ரீம் எடிட்டிங் அனைத்தும் படத்துக்கு பலம்.
இது போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படம் மற்றும் குறுப்படம் கண்டுகளிக்க https://www.ottplus.in இல் இணைந்து அனைவரும் குறைந்த செலவில் மனம் நிறைந்த திரை விருந்து .
