கெழப்பய திரை விமர்சனம்!!
நடிகர்கள் : கதிரேசகுமார், கிருஷ்ணகுமார், விஜய ரனதீரா, கே.என்.ராஜேஷ், பேக்கரி முருகன், அனுதியா, உறியடி ஆனந்தராஜ்
இசை : கெபி
ஒளிப்பதிவு : அஜித்குமார்
இயக்கம் : யாழ் குணசேகரன்
தயாரிப்பு : சீசன் சினிமா – யாழ் குணசேகரன்
திரைக்கதையின் முதல் பாதியில் கதிரேசகுமார் (கெழப்பய) முதியவர் கிராமத்தில் இருக்கும் குறுகிய பாதையில் சைக்கிளில் தனிமையாக சென்றுக் கொண்டிருக்கும் போது அவர் பின்னாடி ஒரு கார் வருகிறது. அந்த காரில், கர்ப்பிணி பெண் மற்றும் ஐந்து ஆண்கள் பயணிக்கிறார்கள். ஆனால், அந்த காருக்கு வழிவிடாமல் கதிரேசகுமார் (கெழப்பய) சைக்கிளில் சென்றுக் கொண்டிருக்க, காரில் இருப்பவர்கள் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்து வழி விட மறுக்கும் முதியவரை அடிக்கிறார்கள். ஆரம்பத்தில் பின்வாங்கினாலும், காரின் பாதையைத் தடுத்து, அசைய மறுத்து, உறுதியுடன் தனது சைக்கிளுக்குத் திரும்புகிறார் அந்த சைக்கிளை நடுரோட்டில் நிறுத்தி தனது உறுதியானா தனது எதிர்பை தெரிவிக்கிரறார் .இதனால், அந்த இடத்தில் பரபரப்பு ஏற்படுவதோடு, ஊர் மக்களும், திரைக்கதையின் நாயகன் கதிரேசகுமார் (கெழப்பய) போலீஸ்க்கு தகவல் கொடுத்து வரவைக்கிறார் அவர்களும் வந்து விடுகிறார்கள். அதன் பிறகு என்ன நடந்தது?என்பதை சொல்வது தான் ‘கெழப்பய’.
“திரைக்கதையின் நாயகன் கதிரேசகுமார் (கெழப்பய) இரண்டாம்பாதியில் சொல்லும் தெனாலிராமன் கதை இந்த திரைக்கதைக்கு தொடர்பு படுத்துவது திரைக்கதைக்கு பலம் “ஒரு ஊர்ல தெனாலிராமன் தனது குடும்பத்துடன் வைந்துவந்தான் அப்போது இரவு உணவு முடித்து கைகழுவ வெளியில் வந்தான் அப்போது தினாலிராமனைவிட பலசாலியான திருடன் ஒளிந்து இருப்பதை கவனித்த அவர் தனது மனைவியையிடம் தண்ணீர் கொடுவாரா சொல்கிறார் கைகழுவதற்கு பின்பு குடம் குடமாக தண்ணிரில் தெனாலிராமன் கை கழுவ அவர் மனைவி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை தனது கணவருக்கு பைத்தியம் புடித்துள்ளதாக கூறி ஊர் மக்களை ஓன்று திரட்ட அப்போது தெனாலிராமன் அந்த திருடனை ஊர் மக்களோடு பிடிக்கிறார் தெனாலிராமன் அதுபோல இந்த திரைக்கதையின் நாயகன் கதிரேசகுமார் (கெழப்பய) போதைப்பொருள் கடத்தும் கும்பலை கிராமமக்கள் துணையோடு போலீஸ்க்கு தகவல் கொடுத்து கடத்தல் கும்பலை போலீசிடம் பேடித்துக்கொடுக்கிறராற் நாயகன் கதிரேசகுமார் (கெழப்பய) .
கதையின் நாயகனாக நடித்திருக்கும் கதிரேசகுமார், கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். காருக்கு வழிவிடாமல் தனது முடிவில் உறுதியாக இருக்கும் அவர், அடி வாங்கிய பிறகும் தனது நிலையை மாற்றிக்கொள்ளாமல் இருக்கும் போதே, காரின் பின்னணியில் ஏதோ ஒரு பெரிய விசயம் இருப்பதை நமக்கு உணர்த்தி விடுகிறார்.
கிருஷ்ணகுமார், விஜய ரனதீரா, கே.என்.ராஜேஷ், பேக்கரி முருகன், அனுதியா, உறியடி ஆனந்தராஜ் ஆகியோர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர்களாக இருப்பதோடு, இயல்பாக நடித்து கவனம் ஈர்க்கிறார்கள்.
குறைந்த செலவில் தரமான கதையும் மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார் கதாபாத்திரங்களின் உணர்வுகளை கதிரேசகுமார் (கெழப்பய) நடிப்பை திரையில் உணர்வுப்பூர்வமாக காட்சிகளை படமாக்கியிருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்.
இசையமைப்பாளர் கெபியின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. பெரும்பாலான இடங்களில் இசையை தவிர்த்துவிட்டு கதிரேசகுமார் (கெழப்பய) நடிப்பு காட்சிகளின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்கிறது.
சிறு சம்பவத்தை வைத்து மிக சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் யாழ் குணசேகரன், முதல் பாதியை படு சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார். பெரியவர் விடாப்பிடியாக இருக்கும் போதே காரில் என்ன இருக்கிறது?, என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படம் விறுவிறுப்பாகவும் நகர்கிறது.
திரைக்கதை மற்றும் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தும் இயக்குநர் யாழ் குணசேகரன், காரில் இருக்கும் மர்ம முடிச்சை அவிழ்க்கும் போது கொஞ்சம் விளக்கமாக சொல்லியிருப்பதோடு,, சிறிய பட்ஜெட்டில், சிறிய நிகழ்வு ஒன்றை வைத்து இப்படி ஒரு படத்தை கொடுத்ததற்காக இயக்குநர் யாழ் குணசேகரனை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.