
குபேரபுரம் கிராமத்தில் தங்கம் இருப்பதாகவும் அதனை சுரங்கம் அமைத்து தங்கத்தை வெட்டி எடுக்க கார்ப்பரேட் நிறுவனம் பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறது .அதே நேரத்தில் நாயகன் தங்கம் நிறைந்த கிராமத்திற்கு பிரதாப் (அயான்) வருகிறார். அப்பொழுது பழைய தங்க சுரங்கத்தில் தங்கம் கிடைக்காததால் தங்க சுரங்கம் மூடப்பட்ட நிலையில், குபேர கிராமத்தில் வேற பகுதியில் புதிய சுரங்கத்தை வைத்து நைஜீரிய தொழிலதிபருடன் ஒப்பந்தம் போடுகிறார் ரேணு. ஆனால், அவரோ இன்னொரு பார்ட்னர் அல்லது நிலத்தின் வாரிசு வந்தால்தான் ஒப்பந்தம் செய்துகொள்வேன் என்று கூறுகிறார் அதன்படி புதிய ஒப்பந்தம் போடப்பட்டு குபேர கிராமத்தில் உள்ள மிகப்பெரிய மரத்தின் கீழ் தங்கம் அதிகாலை இருப்பதாக கார்ப்பரேட் நிறுவனம் முடிவு செய்து மரத்தை அகற்ற முடிவு செய்கிறது
நாயகி குபேரபுரத்து கிராம பெண்ணாக கௌரி சிறு வயது முதலே தன் தாய்க்கு நிகராக நேசிக்கும் மரம் இருக்கும் இடத்தில் தான் தங்கம் இருப்பதாக அதனை அடியோடு வெட்டி சாய்கிறார்கள்.அதனால் கோபமும், சோகமும் அடையும் கௌரி குபேரபுரம் மலை மீது அமைந்துள்ள குபேர கடவுளிடம் நாயகி கௌரி முறையிட, அங்குள்ள குகைக்குள் செல்கிறார். அங்கு நாயகி கௌரி மரத்தை வெட்டுவதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் சரியான தண்டனை கிடைக்க வேண்டும் என்று அங்குள்ள தெய்வத்திடம் முறையிடுகிறார் அதனைத் தொடர்ந்து குபேரபுரம் கிராம பகுதியில் உள்ள அனைத்து உயிர்களும் தங்களது வழக்கமான பேச்சை பாடலாக மாற்றி பேசுவதற்கு பதிலாக பாடுகிறார்கள் இந்த சாபத்திலிருந்து குபேரபுரம் மக்களும் அங்கு வாழும் உயிரினங்களும் விடுதலை பெற்றதா என்பது படத்தின் மீதி கதை.