Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
துடிக்கும் கரங்கள் திரை விமர்சனம்

துடிக்கும் கரங்கள் திரை விமர்சனம்

Posted on September 9, 2023

யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார் விமல். இவர் மக்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை தன் வீடியோவில் பதிவிட்டு நியாயம் கேட்டு வருகிறார்.

சென்னையில் படிக்க வந்த இராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த சமீரை தேடி அவர் அப்பா சங்கிலி முருகன், சென்னைக்கு வருகிறார். அதே சமயம் போலீஸ் அதிகாரி சுரேஷ் மேனனின் மகள் கடத்தப்பட்டு கொல்லப்படுகிறார். இதில் சங்கிலி முருகன் மகனுக்கு தொடர்பு இருப்பதாக போலீஸ் சவுந்தரராஜா சந்தேகிக்கிறார்.

அந்த இளைஞர் பற்றிய தகவல்களை தனது யூடியுப் சேனலில் விமல் வெளியிடுகிறார். அதை தொடர்ந்து அந்த இளைஞர் பற்றி விமலுக்கு தெரிய வரும் சில தகவல்களை வைத்து அவரை தேடும் போது, மர்மமான முறையில் இறந்த ஐஜி-மகளுக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வர, இருவர் பற்றியும் தொடர்ந்து விசாரிக்கும் போது ஐஜி மகளின் மரணம் கொலை என்ற உண்மையை விமல் கண்டுபிடிக்கிறார். இதனால் விமலை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்த, ஐஜி மகள் கொலை மற்றும் காணாமல் போன இளைஞர் பற்றிய உண்மைகளையும், இதன் பின்னணியில் இருப்பவர்களையும் விமல் எப்படி கண்டுபிடிக்கிறார்?, என்பதை ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் துடிக்கும் கரங்கள் திரை கதை .

ஐஜி-மகளின் கொலையில் தொடங்கும் படம் ஆரம்பத்திலேயே நம்மை கதைக்குள் பயணிக்க வைத்து விடுகிறது. அதை தொடர்ந்து பிரியாணி பிரச்னையை மையமாக வைத்து திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார் இயக்குநர் வேலுதாஸ்.

முதல் முறையாக ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானர் படத்தில் விமல் ஆக்‌ஷன் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்,போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் செளந்தரராஜனின் நடிப்பு திரையில் கவனம் ஈர்க்கிறார், ஆனந்த் நாக் மற்றும் சுபிக்‌ஷா ,சங்கிலி முருகனின் நடிப்பும், திரைக்கதைக்கு கவனம் ஈர்க்கிறார்.

ஒளிப்பதிவாளர் ராமி, கதைக்கு ஏற்றபடி பயணித்திருப்பதோடு, பாடல் காட்சிகளையும், விமலையும் கலர்புல்லாக காட்டியிருக்கிறார்.

  • ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்கமல்ஹாசன்பெருமையுடன் வழங்கும்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்”தர்மன்”இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து
  • சிங் கீதம் திரை விமர்சனம்
  • அந்தரன் திரை விமர்சனம்
  • அனந்தன் காடு திரை விமர்சனம்
  • *கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme