Casting : Vasanth Ravi, Vimala Raman, Saraswathi Menon, Muralidaran, Udhayadeep, Simran Pareek
Directed By : Tarun Teja
Music By : Vijay Siddharth
Produced By : Bapineedu.B, BVSN Prasad
ரேட்டிங் : “நடிப்புக்கு -1.5 ” “பின்னணி இசைக்கு -2” “ஒலிப்பதிவுக்கு -1.5” = 5/5
லண்டனில் உள்ள தீவில் ஆடம்பரமான பங்களா ஒன்று இருக்கிறது. அதில் வாழ்ந்த பிரபல தொல்பொருள் ஆராய்ச்சியாளரான பிரியா ராமன், அங்கிருந்த 15 ஊழியர்களை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துக்கொண்டதாகவும், கைப்பற்றப்பட்ட அவருடைய சடலம் திடீரென்று மாயமாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவரது சடலம் எப்படி மாயமானது, எங்கிருக்கிறது என்பது இதுவரை புரியாத புதிராக இருப்பதோடு, அந்த பங்களாவில் பல அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதாகவும் திரைக்கதை தொடங்குகிறது .
இந்த ஆடம்பரமான பங்களாவில் நாடாகும் அமானுசத்தை வீடியோ படமாக எடுத்துக் கொடுக்க கூடிய வேலைக்காக நாயகன் வசந்த் ரவி, சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகிய ஐந்து பேரும் இந்தியாவில் இருந்து லண்டன் செல்கிறார்கள். அப்போது அவர்கள் எதிர்கொள்ளும் அமானுஷ்ய விஷயங்களும், அதன் பின்னணியையும் சுவாரஸ்யமாக மட்டும் இன்றி நொடிக்கு நொடி திகிலடைய செய்யும் (பின்னணி இசை கலந்து)சொல்வது தான் ‘அஸ்வின்ஸ்’.புராணத்தில் உள்ள அஸ்வின் கடவுளர்கள் பற்றிய சிறு கதையை மையமாக எடுத்துக்கொண்டு, திரையில் மிரட்டும் வகையிலான திரைக்கதையை, ரசிகர்கள் காட்சிக்கு காட்சி திக் திக் திகில் படமாக ரசிகர்களுக்கு திரையில் விருந்து படைத்துள்ளார் படத்தின் குழு என்றால் மிகையாகாது ..
நாயகனாக நடித்திருக்கும் வசந்த் ரவி, அமானுஷ்ய பங்களாவில் நடக்கும் பயங்கரமான சம்பவங்களை தனது நடிப்பு மூலம் நேர்த்தியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறார். அவருடைய ஒவ்வொரு அசைவும், பயம் கலந்த கண்களும் படம் பார்ப்பவர்களை பதற வைக்கிறது. வசனம் அதிகம் இல்லை என்றாலும், நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கும் வசந்த் ரவி, படத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறார்.
சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகியோர் சிறப்பான நடிப்பின் மூலம் திரையில் மிரட்டியுள்ளார். பங்களாவுக்குள் மாட்டிக்கொண்டு சிக்கி தவிக்கும் அவர்களது அலறல் குரல் மிரட்டுகிறது , படம் முடிந்த பின்பும் நம் இயல்புநிலையைக்கு வருவது கடினமாக உள்ளது பின்னணி இசையும் மிரட்டுகிறது
தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வேடத்தில் நடித்திருக்கும் விமலா ராமன், தனது கதாபாத்திரத்திற்கு சதவீதம் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். கருப்பாக வந்து இருட்டில் மிரட்டுவதும், தீய சக்தியின் கட்டுப்பாட்டில் ஆக்ரோசமாக பயணிப்பதும் என்று அசத்துபவர், இறுதிக் காட்சியில் தனது நடிப்பு மூலம் படம் பார்ப்பவர்களின் இதய துடிப்பை எகிற வைத்துவிடுகிறார்.நடிகர்களின் நடிப்பு கதைக்களத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்வது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களும் நாயகர்களாக ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஏ.எம்.எட்வின் சகே, படம் முழுவதையும் இருட்டில் படமாக்கினாலும், மிக நேர்த்தியாக காட்சிகளை அமைத்து. படம் பார்ப்பவர்களையும் மிரள வைக்கும் அந்த பயங்கர பங்களா அமைந்திருக்கும் தீவையும், அந்த தீவின் அதிசயத்தையும் நம் கண்களைவிட்டு மறையாத வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.இசையமைப்பாளர் விஜய் சித்தார்த்தின் பின்னணி இசையும், சச்சின் மற்றும் ஹரி ஆகியோரது ஒலிக்கலவையும் மாய வித்தை செய்துள்ளது
‘அஸ்வின்ஸ்’ திரைப்படம் வரும் ஜூன் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
