
பிரதீப் ரங்கநாதன் இந்தப் படத்தை இயக்கி, நடித்திருக்கிறார். புதுமுக நடிகராக அவரது நடிப்பு எந்த துருத்தலையும் ஏற்படுத்தவில்லை என்றபோதும் சில இடங்களில் ஓவர் ஆக்டிங் எட்டிப் பார்க்கிறது. நாயகி இவானா தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை பிசிறின்றி நடித்துக் கொடுத்திருக்கிறார்.
காதலில் நம்பிக்கைதான் ஆதாரம் என்பதை ஒன்லைனாக கொண்டு, அதனை இக்கால இளைஞர்களுக்கு சொல்ல முனைந்திருக்கிறார் இயக்குநர். அதற்காக அவர் தனது கடந்த பட ஆயுதமான ஸ்மார்ட்போனையே இந்தப் படத்திலும் மையப்பொருளாக கையிலெடுத்துள்ளார். படத்தின் முதல் பாதி க்ளிஷேவான காதல் காட்சிகள், காதல் பாடல்கள் என தொடங்குகிறது. க்ளிஷே காட்சிகள் கடந்து ஸ்மார்ட்போன்கள் கைமாறுகையில் திரைக்கதை வேகமெடுக்கிறது.